Home Blog Page 10

முஸ்லிம்களை பிரிவினை கேட்க தூண்டுகிறதா பாஜக?!

முஸ்லிம்கள் ஆசாதி கோஷம் எழுப்ப வேண்டும்  என்று பாஜக ஏன் விரும்புகிறது?

அப்போதுதான் இந்துக்கள்  முஸ்லிம்கள்  மீது கோபம் கொள்வார்கள் . அதை வைத்து இருவரும் எப்போதும் சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.  இந்துக்கள் வாக்குகளை வாங்கி ஆட்சிக் கட்டிலில் நிரந்தரமாக உட்காரலாம்.

ஆசாதி என்றால் விடுதலை.  யாரிடமிருந்து எதனிடம் இருந்து என்றெல்லாம் குழப்பம் அடையத்  தேவையில்லை.  ஜின்னா வழியில் ஆசாதி என்றால் பிரிவினை மூலம் விடுதலை என்று பொருள்.  அதாவது நாட்டுப்பிரிவினை.

முன்பே இந்து முஸ்லிம் அடிப்படையில்தானே நாடு பிளவுண்டது.  இரண்டாவது பிரிவினை என்றால் எந்த நிலத்தை பிரித்துக் கொள்வது?  பிரிவினை கோருவது தடை செய்யப் பட்டுள்ளது.  எனவே பிரிவினை கோரினால் அவர்கள் தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப் படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே முஸ்லிம்கள் கோருவது  நாட்டுப் பிரிவினை அல்ல. அடக்கு முறையில்  இருந்து விடுதலை.

குடிஉரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் மோடி.

பின் எப்படித்தான் இந்த பிரச்னை முடிவுக்கு வரப் போகிறது?

போராட்டம் ஒயப்போவதாக தெரியவில்லை. அரசும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

என்னதான் முடிவு?  ஆறேழு மாநிலங்கள் குடிஉரிமை திருத்த  சட்டத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அமுல்படுத்தப் போவதில்லை என்றும் தீர்மானம் போட்டுள்ளன.    அவர்களை கலைத்து விடுவீர்களா?  அங்கெல்லாம் இந்த சட்டத்தை எப்படி அமுல் படுத்துவீர்கள்.?

போராடும் முஸ்லிம்கள் எந்த முகாந்திரத்தில் போராட்டத்தை திரும்ப பெறுவார்கள்?  ஏதாவது உத்தரவாதத்தை மத்திய அரசு தந்தால் மட்டுமே இது சாத்தியம்.

நாட்டை பிரளயத்தில் ஆழ்த்தி  விட்ட  இந்த சட்டங்களை ஆதரித்து வாக்களித்த அதிமுக-பாமக இரண்டும்தான் இந்த சூழ்நிலை உருவாக காரணம்.

போராடும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களில்  யாராவது ஒருவர் கல் எறிந்தால் அதுதான் கலவரம் உருவாக காரணமாக இருக்கும்.

சட்டம் உருவாக வாக்களித்து விட்டு அதிமுக அரசு எப்படி இதை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்>?

எனவே இந்த பிரச்னை தீர மத்திய அரசு மனம் வைத்தால் தான் முடியும்? போராட்டம் தொடர்ந்தால் இந்த பிரச்னை தொடர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்றுதான் பொருள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குற்றவாளிக் கூண்டில் நிற்கிறதா நீதித்துறை?

இப்படிக் கேட்பதே ஒரு குற்றமாகக் கூட கருதப் படலாம்.

நீதிமன்றத்தின் மாண்பை காக்காத எந்த நாடும் சட்டத்தின் படி ஆளப்படும் நாடாக இருக்க முடியாது.

ஆனால் இன்றைக்கு  நீதிமன்றங்கள்  தீர்ப்பு  தருவதில் காட்டும் தாமதம் எப்படியெல்லாம் அரசியலின் போக்கை மாற்றி அமைக்கிறது என்பதை நினைத்தால் இந்தக் கேள்வியில் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.

ஜெயலலிதா வழக்கில் வாதங்கள் முடிவடைந்து உடனே தீர்ப்பு வந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் மாறியிருக்கும். அவர் மறைந்து சசிகலா முதல்வர் ஆக முனைந்தவுடன் வந்தது உடனே தீர்ப்பு.  சிறைக்குப் போகிறார் சசிகலா. முன்பே வந்திருந்தால் ஜெயலலிதாவும் சேர்ந்து சிறைக்குப் போயிருப்பார். அரசியல் மாற்றம் அப்போதே வந்திருக்கும். யார் கையில் அதிகாரம் வந்திருக்கும் என்பதெல்லாம் இப்போது சொன்னால் அவை ஊகங்களே.

தினகரனின் அதிமுக  18  பேர் ஆட்சிக்கு எதிராக வாக்கு அளிக்க அளிக்கவில்லை.  அவர்கள்  தகுதி நீக்கம் செய்யப்  படுகிறார்கள்.  எதிராக வாக்களித்த 11 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.  பாமரனுக்கு இந்த கணக்கு புரியவில்லை.

மூன்றாண்டு களுக்குப் பின் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் தீர்ப்பு சொல்லட்டும் என்று வழக்கை  முடித்து வைக்கிறது.  சபாநாயகர்  இன்னும் ஆறு மாதத்தில் தீர்ப்பு  சொல்லி அதற்கு மேன்முறையீடு உச்சநீதி மன்றம் சென்றால் அதற்குள் இந்த ஆட்சியின் ஆயுள் முடிந்து விடும்.

மக்கள் பிரதிநிதிகளின்  வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்தும் விரைந்து முடிவுகள் வர வில்லையே?

அப்பாவு வழக்கில் வாக்குகள் எண்ணி முடித்து  அதை வெளியிட உச்சநீதி மன்றம் எடுத்துக்  கொள்ளும் நேரம் முடிவதற்குள் ஆட்சியின் ஆயுள் முடிந்து விடும்.

குடிஉரிமை திருத்த சட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு  சட்டம் தொடர்பாக விசாரிக்கவே உச்சநீதி மன்றம் தயங்கு கிறது.  முதலில் போராட்டங்கள் ஓயட்டும்  பின்பு  விசாரிக்கிறோம் என்கிறார்கள்.   எப்போது  போராட்டம் முடிவது எப்போது நாட்டு மக்களுக்கு சட்ட நிலைமை  தெரிவது?

நீதித்துறையின் மாண்பை காக்க விரைந்து செயல்படுவது ஒன்றே வழி? அது  நீதித்துறையின் கையில்தான் இருக்கிறது.

பாண்டியராஜனின் உளறல்?! கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய முடியுமா?

குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு கோடி கையெழுத்து வாங்க இயக்கம் ஒரு வாரம் நடத்துகின்றனர்.

சட்டமான பிறகும் அதை எதிர்த்து இயக்கம் நடத்துவது ஒன்றும் குற்றமல்ல.  அதுவும் ஒரு ஜனநாயகத்தில் வேறு எப்படித்தான் எதிர்ப்பை பதிவு செய்வது?

சட்டம் கட்டுப் படுத்தும் என்றாலும் அதை திரும்ப பெற எதிர்கட்சிகள் வலியுறுத்துமானால் அதற்கு மக்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஆளும் கட்சியே மறுபரிசீலனை செய்யலாம் அல்லவா?

 கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகள்  குடிஉரிமை திருத்த  சட்டத்துக்கு எதிராக அமைச்சரவையில்  தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன. அமுல் படுத்த மாட்டோம் என்கிறார்கள். எல்லாரையும் டிஸ்மிஸ் செய்து விடுவீர்களா? 

அமைச்சர் பாண்டியராஜன் அமைச்சராக இருக்கிறார். அவருக்கு ஜனநாயக உரிமைகள் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது.

தெரிந்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது என்று கேட்பாரேயானால் அவர் சர்வாதிகாரத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார் என்றுதான் பொருள். அதிமுகவை முழுவதும்  மண்டியிட வைக்க முயல்கிறார் பாண்டியராஜன்.

மௌனமாக இருந்தால் அதற்கு இபிஎஸ் -ஒபிஎஸ்  பச்சை கொடி காட்டி விட்டார்கள் என்றுதான் பொருள்.

அழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா?!

கௌரவக் கொலைகள் நடப்பது உண்மை. அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பொழுதுபோக்காக ஒரு அழுத்தமான செய்தியை உரக்க சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி.

அதுதான் சாதியற்ற மதமற்ற சமுதாயம் படைப்போம் என்ற செய்தி.

தமிழர் என்ற போர்வையில் ஒன்றிணைவதை தடுப்பது சாதி. சாதியின் மூலம் எவரும் கண்டிராத காரணம். மூவேந்தர் காலத்தில் இன்று இருக்கும் சாதிகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை.

பல்வேறு தொழில் கள் செய்பவர்கள் இருந்திருக்கிறார்களே தவிர அவர்கள்  இன்றைய சாதி பெயர்களை கொண்டிருக்க வில்லை.

எந்தக்  கோணத்தில் பார்த்தாலும் சாதியை தூக்கி வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில் தமிழகம் இல்லை.

நாட்டிலேயே சாதிப் பெயர்களை ஒழித்து அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை தமிழ் நாட்டில் தான் இருக்கிறது.

ஆனால் நல்ல படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பார்க்கலாம். நல்ல செய்தியை சொன்ன சமுத்திரகனி – சசிகுமார் கூட்டணி வெற்றி பெறுகிறதா என்பதை.

ரசினிக்கு ஊக்க மருந்தும் விஜய்க்கு பேதி மருந்தும் தரும் வருமான வரித்துறை?!

ரசினிக்கு விதிக்கப் பட்ட வரியை  கட்டத் தவறினாலும் அவர் மீது போடப்பட்ட மேன்முறையீட்டை வாபஸ் பெறுகிறது வருமான வரித்துறை.

சமீபத்தில் ரசினி தர்பார் படத்துக்கு நூறு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கினார் என்று ஊடகங்கள் எழுதின.  அதை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வரித்துறை தயாராக இல்லை.

அவர்தான் பாஜக அரசுக்கு ஆதரவாக  வாய்ஸ் கொடுத்து விட்டாரே?

எதற்கும் மாட்ட மாட்டேன், காவி சாயம் பூச மாட்டேன் என்று விரதம் இருந்து வந்த சைவ கொக்கு எந்த கெண்டை மீனைக் கண்டு விரதத்தை  கைவிட்டது என்பது  தெரியத்தானே போகிறது. 

அடுத்து அரசியலில் நுழையப் போகிறேன் என்பவர் வந்து எந்த சட்டையைப் போடப் போகிறார் என்பது தெரிந்து விட்டது. எனவே அவருக்கு சலுகைகள் தாராளம் நிச்சயம்.

ஆனால் விஜய் காவி சாயம் பூச மாட்டார். முன்பே அவரை ஜோசப் விஜய் என்று முத்திரை குத்தி எச் ராஜா கறை படுத்த முயல ஆமாம் நான் ஜோசப்தான் என்று விஜய் பதிலடி கொடுக்க வெளுத்துப் போனது பாஜகவின் சாயம்.

விஜய் ரசினிக்கு போட்டியாக வரக்கூடும் என்று பாஜக அச்சப் படலாம். அவர் எதிர் முனைக்கு போய் விடாமல் தடுக்க நினைத்துதான் அவர் மீது  திடீர் என்று பாய்ந்து மிரட்டுகிறது வருமான வரித்துறை என்றுதான் அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏனென்றால் படப்பிடிப்பில் இருந்தவரை அறிவிப்பு கொடுக்காமல் 20  மணி நேரம் தனியே அழைத்து சென்று விசாரிக்க வேண்டிய அளவு கொடிய குற்றத்தை விஜய் செய்து விட்டார் என்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

வரி கட்டி விட்டால் குற்றம் எல்லாம் மன்னிக்கப் பட்டு விடும் என்பதுதானே இன்றைய கொள்கையாக  இருக்கிறது. அதற்கு ஏன் இத்தனை கெடுபிடி?!

தெரியாமல் செய்பவர்களை தடுக்கலாம். தெரிந்தே செய்பவர்களை?!

பார்க்கலாம் பேதி மருந்து  வேலை செய்கிறதா ஊக்க மருந்து வேலை செய்கிறதா என்பதை?

பசுத்தோலில் செய்த மிருதங்கத்தை பார்ப்பனர்கள் இனி வாசிக்க மாட்டார்களா?

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா புகழ் பெற்றவர்.

பார்ப்பனரில் திறமையுடன் மனசாட்சியும் உள்ளவர்.

கர்நாடக சங்கீதத்தில் ஏசுவையும் ஏன் பாடக் கூடாது என்று கேட்டு பாடியவர். அதனால் எதிர்ப்புகளை சம்பாதித்தவர்.

அவர் எழுதிய செபஸ்டியன் அண்ட் சன்ஸ் என்ற புத்தகத்தை தனது அரங்கில் வெளியிட முதலில் அனுமதி அளித்த கலாஷேத்ரா என்ற அமைப்பு தனது அனுமதியை திரும்ப பெற்றுக்கொண்டது. காரணம் அந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் தொழிலாளிகளின் வாழ்க்கையை அலசுகிறதாம்.

மிருதங்கம் பசுத்தோலில் செய்யப்படுகிறது. அந்த பசுத்தோல் மிருதங்கத்தை உற்பத்தி செய்யும் தலித் குடும்பங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறார் கிருஷ்ணா. அவர்கள் அந்த வாத்தியத்தை உற்பத்தி செய்யாவிட்டால் எங்கே புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்கள் உருவாகி இருப்பார்கள்?

சிலவற்றை உலகத்துக்கு வெளியே சொல்வதில் பார்ப்பனரில் பலருக்கு உடன்பாடு இருக்காது.

இத்தனைக்கும் அது மத்திய அரசின் உதவியில் நடக்கும் நிறுவனம். அதை ஆக்ரமித்துக் கொண்டு தங்கள் சாதி செல்வாக்கை காத்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் அதே தேதியில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருக்கிறார் கிருஷ்ணா. தொல். திருமாவளவன் புத்தகத்தை வெளியிடுகிறார். அணி திரண்டு சென்று  வாழ்த்துவோம்.

நல்லவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் சூது மதியாளர்களையும் திருத்தும் என்ற நம்பிக்கை உண்மைதானே.

மராட்டியர் பெரியகோயில் அறங்காவலராக நீடிப்பது தமிழர்களுக்கு அவமானம்..

பெரியகோயில் மட்டுமல்ல இன்னும் அதனுடன் இணைந்த ஏறத்தாழ 90  கோயில்களுக்கு மராட்டிய சரபோஜி வாரிசாக போன்ஸ்லே என்பவர் அறங்காவலர் ஆக தொடர்கிறார்.

அவர்கள் தஞ்சை அரண்மனையில் வாழ்கிறார்கள். எந்தப் பிரச்னைகளிலும் தலையிடாமல் கௌரவமாக ஒதுங்கி வாழ்கிறார்கள்.

ஒரு காலத்தில் மராட்டியர் மட்டுமல்ல முஸ்லிம் நவாப்புகள், தெலுங்கு  நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பல பேர் தமிழகத்தை வாள்முனையில் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளில் களப்பிரர் காலம் தவிர்த்த ஏனைய காலங்களில்  தமிழர்களை மற்றவர் ஆண்டு வந்ததால் தமிழர்கள் மீண்டும் ஒன்று கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதே நிலை நீடித்திருந்தால் தமிழர்கள் மீண்டும் ஒன்று கூடி அவர்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கக் கூடும். அந்த தேவை இல்லாமல் போய்விட்டது.

மக்களாட்சி மலர்ந்து விட்டது.

 இனி எதற்கு மன்னராட்சியின் எச்சம். அதுவும் நம்மவரல்ல. ஆக்ரமித்து ஆட்சி செய்தவர். அவர்களுக்கு உரிய மரியாதை அரசு கொடுக்கட்டும். வசதிகள் செய்து தரட்டும். ஆனால் அவர்கள்தான் நிரந்தர ஆட்சியாளர்கள் போல பாவித்து அவர்களின் வாரிசுகளுக்கு உரிமை வழங்குவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது மக்களாட்சிக்கு உகந்ததும் அல்ல.

சோழர்கள் வாரிசுகளுக்கு உரிய  உரிமையை மராட்டியர் களவாட அனுமதிப்பது சோழர்களுக்கு இழைக்கப்டும் அநீதி. வாரிசுகளை தேடினால்  அதற்கு போட்டி ஏராளம். இது மக்களாட்சி. எனவே மக்களின் பிரதிநிதிகளே அறங்காவலர்கள் ஆக வேண்டும்.   

எனவே அரசு உடனடியாக தஞ்சை கோவில்களுக்கு மராட்டியர் போன்ஸ்லே அறங்காவலராக நீடிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கெல்லாம் மக்கள் போராடித்தான் ஆக வேண்டும் என்பதே ஒரு இழுக்கு.

பெருந்தன்மை வேறு. இழுக்கை அகற்றல் வேறு.

எந்தக் கட்சி ஆண்டாலும் அவர்கள் தமிழர்கள் தானே.

அவர்களுக்கு இந்த இழுக்கு  கண்ணுக்கு பட வில்லையா?

எடப்பாடியை மிரட்டும் திவாகரன்!

தஞ்சையில் நடந்த திருமணத்தில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் நாளைய முதல்வர் ஸ்டாலின்தான் என்று பேசினார். உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற 85 % வெற்றியை ஆளும் கட்சி தட்டி பறித்து விட்டதாகவும் கூறினார். திராவிட தலைவர்கள் மறைந்து விட்டதால் இன்று கன்னடத்தில் இருந்து ஒருவர் வந்து பெரியாரை பற்றி பேசும் அளவுக்கு வந்து விட்டது . அதை தடுக்கும் ஆற்றல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் உள்ளது என்றும் பேசியிருக்கிறார்.

திவாகரன் திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சு உடனே கிளம்பிவிட்டது. ஆனால் அதில் துளி அளவு கூட உண்மை இல்லை.

ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் எடப்பாடியை எல்லோரும் மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அமைச்சர்கள் பலரும் ஆளாளுக்கு ஏதேதோ பேசி எடப்படிக்கு சங்கடத்தை உண்டாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வரும்போது என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை பற்றி எடப்பாடி உறுதியாக எதையும் சொல்ல மறுக்கிறாராம்.

பாவம்! பாஜகவின் நெருக்குதல் ஒருபுறம், சசிகலா வரவால் அதிமுக உடையும் அபாயம் மறுபுறம் என தத்தளித்து நிற்கிறார் எடப்பாடி.

அதோடு திவாகரன் சொல்லும் எதையும் செய்து கொடுக்கும் மனநிலையிலும் இல்லையாம் எடப்பாடி.

எனவே எடப்பாடிக்கு திவாகரன் விடுத்த மறைமுகமான எச்சரிக்கை யாகத்தான் இந்த பேச்சு பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஸ்டாலினிடம் எடுபடுமா?

கொடியவன் கோட்சேவை தேச பக்தன் என்னும் வஞ்சகர்களை மறவோம்?

கொடியவன்  கோட்சே மகாத்மா காந்தியை கொன்ற நாள்.

கோட்சேவை விட கொடியவர்கள் அவனை தேசபக்தன் என்று சொல்பவர்கள்.

அவனது  சகோதரன் கோபால் கோட்சே குற்றவாளி என்று தண்டிக்கப் பட்டு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டு 14 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டான் காங்கிரஸ் அரசால்.

கோட்சேவின் சித்தாந்தத்தை மோடியும் பகிர்ந்து கொள்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் இன்று கோட்சேவின்  சித்தாந்தம் கோலோச்சுகிறது.  ஆனால் பிரதமர் மோடி கோட்சேவை பாராட்டிய தனது கட்சி  எம் பி சாத்வி மகராஜை மன்னிக்க மாட்டேன் என்றார். நடைமுறையில் ஒரு நடவடிக்கையும் இல்லை.

கோட்சேக்கள் எண்ணிக்கை வளர்கிறது. இது ஆபத்தானது.

இந்துக்கள் என்ற போர்வையில் பார்ப்பனீயம் ஆள்கிறது. வன்முறையில் நாட்டம் கொண்டது பார்ப்பனீயம். அதிகாரம் கிடைத்தால் ஆட்டம் போடும். இல்லாத போது வாலை சுருட்டிக் கொண்டு காத்திருக்கும்.

கமல்ஹாசனை கோட்சே ஆதரவாளர் என்று அடையாளம் காட்டியவர் ரஜினிகாந்த்.

கமலை பாராட்டும் சாக்கில் அவர் எடுத்த ஹே ராம் படத்தை நினைவுபடுத்தி எச்சரித்தார். ரஜினி தான் ஓய்வாக இருக்கும்போது மூன்று படங்களை பார்ப்பதாகவும் அவை மார்லன் பிராண்டோ நடித்த காட் பாதர், சிவாஜி நடித்த திருவிளையாடல் அடுத்து கமல் நடித்த ஹேராம் என்றார். அதாவது கமல் அடிப்படையில் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று பொருள். அந்த படத்தில் கமலின் மனைவியை முஸ்லிம்கள் கற்பழித்து கொலை செய்வார்கள். இந்து முஸ்லிம்கள் கொடூரமாக வன்முறையில்  ஈடுபடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கமலின் நண்பர் கூறுவார். அவர் காந்தியை  கொல்ல ஒரு துப்பாக்கியையும் கொடுப்பார். கமல் அதை வாங்கிக் கொண்டு காந்தி வரும்போது கையில் வைத்திருப்பார். அதற்குள் கோட்சே காந்தியை கொன்று விடுவான். இதுதான்  கதை..

இப்படி கமலை அடையாளப்படுத்திய கடுப்பில் தான் கமல் ரஜினி ஒரு கன்னடக்காரர் என்றும் ரஜினி தனது  முதலீடுகளை தமிழகத்தில் செய்ய வேண்டும் என்று கூறி ரஜினி கர்நாடகத்தில் முதலீடு செய்திருப்பதை காட்டிக் கொடுத்தார்.

காந்தி நினைவு நாளில் கோட்சேக்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருப்போம்.

செங்கோட்டையனை மீறி பள்ளிக்கல்வித் துறையை ஆட்டுவிக்கும் சக்தி எது?

பலமுறை பள்ளிக்கல்வித் துறையின் அறிவுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்திருக்கிறார்.

இப்போது ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் எட்டாம் வகுப்பு மானவர் களுக்கு  தினந்தோறும் பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப் படும் என்று அறிவிக்கிறார். அது தவறு என்று பின்னால் விளக்கம்  கொடுக்கின்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன் இல்லையில்லை பள்ளிக் கல்வி  நேரத்தில் தான் சிறப்பு வகுப்பு நடத்தப் படும் அதுவும் மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்று சொல்கிறார். ஏன்  இந்த தடுமாற்றம்.?

அமைச்சருக்கு தெரியாமலேயே என்னென்ன்னவோ நடக்கிறது என்ற புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை கல்வித் துறைதான் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு தனது திட்டங்களை அமுல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது.    அதற்கு மாநில  அரசு ஒத்து ஊத வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.   மாநில அரசின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றன.

மாணவர்களுக்கு தேவையில்லாத மனச்சுமையை திணித்து அவர்களை கல்வியை தொடர்வதில் இருந்து விரட்ட வேண்டும்  என்ற ரீதியில் தான்  மத்திய அரசின் புதிய கல்வி திட்டம் வர இருக்கிறது.

அதை முன்கூட்டியே அமுல்படுத்தி நாங்கள் உங்கள் அடிமைகள் என்பதை சொல்லாமல் சொல்கிறதா அதிமுக அரசு?

இன்று எல்லாருக்கும் மடிக்கணினி வழங்க நிதி நிலை இடங்கொடுக்க வில்லை என்ற சாக்கில் நான்கு பேருக்கு ஒரு கணினி தான் தர முடியும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையான காரணம் நிதி  நிலையா ? திட்டத்துக்கு மூடு விழா நடத்த முன்னோட்டமா?

ஏழை மாணவர்கள் மடிக்கணினி பெற்று அறிவு வளர்ச்சி பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திட்டதையே கைவிடுகிறார்கள் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.    ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி  நடத்துபவர்கள் அவரது திட்டங்கள் ஒவ்வொன்றாக கைவிடப் படுவதை ஏற்கிறார்களா?

செங்கோட்டையனை சுதந்திரமாக செயல்பட விடாமல் மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மறைமுகமாக மத்திய அரசின் திட்டங்களை செயல் படுத்த முனைகிறார் என்ற குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது.