Home Blog Page 11

தஞ்சை பெரியகோயிலில் வெடித்த புரட்சி தமிழகம் எங்கும் பரவட்டும்?

தமிழில் குடமுழுக்கு செய்ய முடியாது. பாரம்பரியப்படி சமச்கிரிதத்தில்தான் செய்வோம் என்று  அடம் பிடித்தவர்கள் இன்று தமிழிலும் சமஸ்கிரிததிலும் செய்வோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.

உயர்நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் அரசு தவறான தகவல்களை சொல்லி இருக்கிறது.

” பூஜை நேரங்களில் திருமுறை ஓதுவதற்காக ஓதுவார்கள் நிரந்தரமாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். எல்லா பூஜையின் போதும் திருமுறை ஓதப்படுகிறது.” என்று தேவஸ்தான உதவி கமிஷனர் கூறுகிறார். இது உண்மையா? பெரிய கோயிலுக்கு போகும் எத்தனை பேர் ஓதுவார்கள் பாடுவதை கேட்டிருக்கிறார்கள்.?   ஒருவேளை கணக்கில் எழுதி வைத்திருக்கிரார்களோ என்னவோ?

நிரந்தர ஓதுவார்கள் யார் யார் ? அவர்கள் எப்போது பணி அமர்த்தப்பட்டார்கள்?  அவர்களது சம்பளம் என்ன? எல்லா சன்னிதிகளிலும் ஓதுவார்கள் பணி அமர்த்தப் பட்டிருக்கிறார்களா ?

யாகசாலையில் திருமுறைகள் படிக்கப்படும் என்றும் அதற்கு 13 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறும் உதவி கமிஷனர் ராஜராஜன் நியமித்த 48 ஓதுவார்கள் எங்கே என்று கூறுவாரா?

கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். அதையும் பூணூல் போட்ட அர்ச்சகரோடு சேர்ந்து பூணூல் போடாத அர்ச்சகரும் தமிழ் மறை ஓதி அர்ச்சனை செய்ய  வேண்டும். அந்த நாளே இறைவனுக்கு உகந்த நாள்.

தமிழில் அர்ச்சனை செய் என்று கேட்காமலே செய்ய வேண்டும். வேண்டும் என்பவர்கள் சமஸ்க்ரிதத்தில் வேண்டும் என்று கேட்கட்டும்.

இங்கு சமஸ்கிரிததிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று வேண்டுமானால் விளம்பரம் வைக்கலாம்.

குடமுழுக்கை தமிழில் நடத்தினால் போதாது. நாள் தோறும் அர்ச்சனை தமிழில் நடக்க வேண்டும்.

தஞ்சையில் எழுந்திருக்கும் இந்த புரட்சி நாடெங்கும் வெடிக்கட்டும்.

அண்ணாவோடும் கலைஞரோடும் ரசினியை ஒப்பிட்டதால் இனி மணியன் பெயர் மாங்கா மணியன்?

அண்ணா ராசாசியோடு கூட்டணி  வைத்தாலும் அண்ணா வலதுசாரி ஆகிடவில்லை கலைஞர் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் மதவாதி ஆகிடவில்லை எனவே ரசினி பாஜகவோடு சேர்ந்தாlலும் மதவாதி ஆகிட மாட்டார் – இதுதான் தமிழருவி மணியனின் கண்டுபிடிப்பு.

கொஞ்சம்கூட வெட்கமும் தயக்கமும் இல்லாமல் எப்படி  இந்த மணியனால் அவர்களோடு இவரை ஒப்பிட முடிந்தது? காலம் போன கடைசியில் என்ன உனக்கு கிடைத்து விடப் போகிறது?

அண்ணாவும் கலைஞரும் ஒரு மாபெரும் தத்துவத்தின் பிரதிநிதிகள். சமூக நீதிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்களின் அரசியல் அனுபவத்தை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரசினி இதுவரை தான் எந்த தத்துவத்தின் பிரதிநிதி என்பதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயல்கிறவர்.

சோவோடு உறவாடி சுசாமியோடும் குருமூர்த்தியோடும் ஆலோசித்து அரசியல் செய்ய திட்டமிடுகிறவர்.

தமிழகத்தில் நடப்பது ஆரிய திராவிட அதிகாரப் போட்டி தான். இதில் ரசினி எந்தப் பக்கம்?

காட்டிக் கொடுப்பதில் தமிழர்களுக்கு இணை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மணியன். மற்றவர்கள் தெரியாமல் ஏமாறலாம். ஆனால் மணியன் தெரிந்தே ஏமாற்ற துணை போகும் கோடரிக்காம்பு.

இன்னும் எத்தனை கோடரிக் காம்புகள் வரிசை கட்டி வந்தாலும் அத்தனையையும் துவம்சமாக்கும் சக்தியை  தமிழ் சமூகம் இன்று பெற்று விட்டது.

தமிழன் முன்பிருந்த ஏமாந்த நிலையில் இருப்பதாக மணியன் கனவு காண்கிறார்.

கடைசியில் வெகு காலமாக கட்டிக் காத்த  தமிழருவி மணியன்  என்ற பெயரை  இழந்து மாங்கா மணியன் என்ற பெயரை சம்பாதித்ததுதான் மிச்சமாக இருக்கப் போகிறது மணியனின் ரசினிக்கு பல்லக்கு தூக்கிய வேலை.

திமுக வெற்றி பெற்றால் நிதி இல்லை; அமைச்சர் கருப்பணன் நீக்கப்பட வேண்டியர்?

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கருப்பணன் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் போதுமா. நாங்கள்தானே நிதி ஒதுக்க வேண்டும். திமுகவுக்கு நாங்கள் எப்படி நிதி ஒதுக்குவோம் என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.

அதிமுக அமைச்சர்கள் ஆளுக்காள் தாறுமாறாக பேசி வருகிறார்கள்.

இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் பழனிசாமி தடுமாறி வருவது தெரிகிறது.

அரசியல் சட்டபடி உறுதிமொழி எடுத்துக் கொண்ட அமைச்சர் அதை மீறலாமா?

நொய்யல் ஆற்றில் நுரை வந்ததற்கு பொதுமக்கள் பயன்படுத்திய சோப்பு தான் காரணம் என்றும் சாய ஆலைக்கழிவுகள் அல்ல என்றும் சொன்னவர் தான் இவர்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்த மிரட்டல் பாதிக்கும் என்பதில் உண்மை இருக்கிறது.  வெளிப்படையாக மிரட்டும் அளவு அதிமுக சென்று விட்டது.

மக்கள் மன்றத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அமைச்சர்கள் பேசியே கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல.

அக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்?

நாம் நினைத்ததை விட ஆழமான சதியின் வெளிப்பாடுதான் அக்ரகாரத்து  மருமானின் பெரியார் சீண்டல் என்று தெரிகிறது.

இதுவரை ஏதோ சோவின் பெருமைகளை பேசத்தான் சேலம் சம்பவத்தையும் அவசர நிலை பிரகடனத்தையும் பேசினார் என்று நம்பினோம்.

ஆனால் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும் மறக்க வேண்டிய சம்பவம் என்றும் விளக்கம் சொல்ல வரும்போதுதான் ஏம்ப்பா மறக்க வேண்டியதை நினைவுபடுத்தினாய் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

ஒன்றை எல்லாரும் மறந்து விட்டார்கள். 1971 சம்பவம் தொடர்பாக வழக்குகள் எல்லாம் நடந்து அதில் சோவும் சாட்சி சொல்லி வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் தூசு தட்டி எடுத்து மறுவிசாரணை நடத்த இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?  

மருமானை தூண்டி விட்டது யார்? நீ அவ்வளவு பெரிய அறிவாளியா?

பதில் சொல்ல பெரியார் எழுந்து வர மாட்டார் என்ற துணிவா?

மருமானுக்கு துணிச்சல் இருந்தால் பெரியாரின் வாழ்க்கை முழுதும் அவர் நடத்திய போராட்டங்கள் அத்தனையையும் பற்றி விமர்சிக்க தயாரா? 

அவர் பிறந்த காலத்தில் பார்ப்பார் அல்லாதார் இருந்த பொருளாதார சமூக  நிலைமைகளை பற்றி விரிவாக விவாதிக்க தயாரா?

எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்கள் 95% ஆக்கிரமித்து அடக்கி ஆண்ட புள்ளி விபரங்களை வைத்து விவாதிக்க தயாரா?

கல்வி மறுக்கப்பட்ட நிலையில் இருந்த பார்ப்பனர் அல்லாதோருக்கு திராவிடர் இயக்கம் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையையும் பற்றி விவாதிக்க தயாரா?

அடிப்படையில் பெரியார் சாதி ஒழிப்பு  கிளர்ச்சிக்காரர் என்பதையும் ஒழிக்க வேண்டிய சாதிக்கு சனாதன மதமே அடிப்படை என்பதால்தான் அவர் நாத்திகம் பேசினார் என்பதையும் மருமான் அறிவாரா?

இன்று வரை பெரியார் கொள்கைகள் பற்றியோ திராவிடர் இயக்க கொள்கைகள் பற்றியோ  மருமான் வாய் திறக்கவில்லை. திறக்கட்டும் பார்ப்போம்?

5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்?

மத்திய அரசு புதிய கல்வி திட்டத்தை இன்னும் அமுல்படுத்தவே இல்லை.

அதற்கு முன்பாகவே அதில் கண்ட அம்சங்களை அமுல்படுத்த அதீத ஆர்வம காட்டுகிறது அதிமுக அரசு.

செங்கோட்டையன் ஓரளவு நியாயமனவர் என்ற பிம்பத்தை உடைத்து எறிந்துவிட்டார்.  எல்லாரையும் விட அடக்கி வாசிக்கும் அடிமையாக இருக்கிறார்.

புதிய கல்வி  திட்டம் என்பதே பிற்பட்டோரையும் தாழ்த்தப்பட்டவர்களையும் கல்வியில் இருந்து முடிந்த வரை துரத்தி விரட்டி அடிப்பது என்பதாகத்தான் இருக்கிறது.

தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் ஏன் இந்த பொதுத்தேர்வு?

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி கல்வியே வேண்டாம் என்று வேறு வேலை பார்க்க போக வேண்டும் என்பதே அரசின் திட்டமாக இருக்கிறது. 

வேண்டாத தேர்வுக்கு கட்டணம் வேறு. இதில் கட்டணம் ரத்து என்ற சலுகை வேறு. அதுவும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மட்டும்  .

ஐந்தாம் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசு அறிவிக்கும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பாமகவும் இந்த பொதுத் தேர்வை எதிர்க்கிறது. என்ன பதில் சொல்லப் போகிறது அரசு?

பாஜக வின் அடிமை அரசு என்ற முத்திரையை அதிமுகவுக்கு பெற்றுத்தரும் இந்த பொதுத் தேர்வை கைவிட்டு தன்மானம் காத்துக் கொள்ளுமா அரசு?

தேர்வாணையத்தில் நடந்த அதிர்ச்சி தரும் மோசடிகள்?!

இப்படியுமா செய்வார்கள் என்று மிரள வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் நடத்திய நான்காம் பிரிவு அலுவலர்களுக்கு ஆன தேர்வில் நடந்த ஊழல்கள்.

பிற மாவட்டங்களில்  இருந்து கீழக்கரை ராமநாதபுரம் இரண்டு மையங்களில் மட்டும் தேர்வு எழுத தேர்ந்தெடுத்து  எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சுமார் 99 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதில் பெரும்பாலானோரை நிரந்தர தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டு  இரண்டு வட்டாட்சியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து இருக்கிறார்கள்.

மூன்று மணி நேரத்தில் மறைந்து விடும் மையை பயன்படுத்தி எழுதிவிட்டு பின்ப அதில் சரியான பதில்களை பதிவிட்டு ஊழல் செய்திருக்கிறார்கள். அதற்காக  ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ஒன்பது லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்கள். 

பிற மையங்களில் இந்த முறைகேடு நடக்கவில்லை என்று தேர்வாணையம் கூறுகிறது.

சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது.   அவற்றை நிறைவேற்றுவதில் கடுமை இல்லா விட்டால் முறைகேடுகளை ஒழிக்கவே முடியாது.

பெரியாருக்கு எதிராக ரஜினியை கூர் சீவி விடும் பார்ப்பனீயம் ?

சுய சிந்தனை இல்லாத ஒருவனை உச்சத்தில் ஏற்றி வைத்தால் என்ன ஆகும் என்பதை ரஜினிகாந்த் வடிவத்தில் இன்று தமிழ் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

துக்ளக் விழாவில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்பித்து தனது தற்குறித் தனத்தை வெளிக்காட்டி இருக்கிறார் ரஜினி.

துக்ளக் சோவை பாராட்ட வேண்டுமென்றால் அது அவரது விருப்பம். ஆனால் அதற்காக பெரியாரை நிந்தித்து திமுகவை வம்பிழுக்க வேண்டுமா?

பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும்வரை சனாதன தர்மத்தை இங்கு நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வரும் சூழ்ச்சியின் விளைவுதான் ரஜினியின் பேச்சு.

1971ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டார் பெரியார் என்றும் அதை  துக்ளக் பிரசுரித்தது என்றும் ரஜினி பேசியிருக்கிறார்.

அதை 2017 ல் வெளியான அவுட்லுக் இதழில் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டி அதில் வெளியானதைத் தான் பேசினேன் என்கிறார் ரஜினி.

ரஜினி அந்த அளவு படிப்பாளரா? யாரோ எடுத்துக் கொடுத்ததை ஒப்பித்திருக்கிறார் என்பது தெளிவு. ஏன் என்றால் துக்ளக் சோ அவசர நிலை பிரகடனம், தமிழ் எழுத்து சீர்திருத்தம், மூடநம்பிக்கையா பக்தியா, இட ஒதுக்கீடு, பார்ப்பனீயம், என்று பல பிரச்னைகளில் ஏறு மாறான கருத்துக்களை கொண்டிருந்தவர்.

அவரது சிறப்பு நையாண்டி. சரியான வழியை சொல்வது தான் கடினம். எதையும் நகைச்சுவையாக நக்கல் அடிக்கலாம். அதில்தான் சோ கைதேர்ந்தவர். பார்ப்பனீயத்தின் பிரதிநிதி.

முரசொலி வைத்திருந்தால் அவர் திமுகவாம். துக்ளக் வைத்திருந்தால் அவர் புத்திசாலியாம். எல்லாம் அவரவர் கண்ணோட்டம். இரண்டின் செல்வாக்கு என்ன? ஒப்பிட முடியுமா? முரசொலி ஒரு தத்துவத்தின் அடையாளம். துக்ளக் அடிமைகளின் அடையாளம். இப்படியும் சொல்லலாம் அல்லவா? 

எதிர்ப்பு அதிகமானதால் அது மறுக்க வேண்டிய விடயமல்ல. மறக்க வேண்டிய ஒன்று என்கிறார்.    மன்னிப்பு கேட்க மாட்டாராம். பெரியாரை அவமத்தவரை எப்படி மன்னிக்க முடியும்?

பார்ப்பனீயம் எதை எதிர்பார்க்கிறது என்றால் ரஜினி பெரியாருக்கு எதிராக பேச வேண்டும். யாராவது எதிர்த்தால் அவர்களை ரஜினி ரசிகர்கள் எதிர்க்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்ல அவர்கள் பெரியாருக்கு எதிராகவும் பேசவேண்டும். இப்படியாக பெரியாருக்கு எதிரான குரல்கள் ஒலிக்க வைக்க வேண்டும் என்பதுதான்.  தமிழர்கள் பார்ப்பனீயத்தின் இந்த சதியை புரிந்து கொண்டு ரஜினியை  பேசியதை பெரிது படுத்தாமல் சட்ட பூர்வ நடடிக்கை மட்டும் தொடர்ந்தால் போதும்.

அதிமுகவின் ஜெயக்குமாரும் ஒபிஎஸ்ம்  மறைமுகமாக ரஜினியை கண்டிக்கிறார்களே  தவிர நேரடியாக சொல்ல வேண்டாமா?

திரையில் ரசித்தொமோ பொழுது போக்கினோமா என்று விட்டு விடாமல் அவர்களுக்கு அரசியல் மரியாதை கொடுக்க துவங்கிய வரலாற்று தவறுகளை தமிழர்கள் தொடர்ந்து செய்து  கொண்டிருக்கிறார்கள்.

அந்த தவறு ரஜினி விடயத்தில் தொடரக் கூடாது.

அதுவும் ரஜினி என்ற அம்பை யார் எய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் அந்த தவறு நிகழாது.

விளைவு தெரியாமலா அறிக்கை வெளியிட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி?!

திமுக காங்கிரஸ் கூட்டணி பதினேழு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்னைகள் வரத்தான் செய்யும்.

அதை பேசித் தீர்த்துக் கொண்டதால்தான் இத்தனை வருடங்கள் கூட்டணி நீடித்தது.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் எல்லாம் கலந்ததுதான் கூட்டணி. தனிக் கட்சிகள் ஆயிற்றே!

ஆனால் உள்ளாட்சி சமயத்தில் மாவட்டங்களில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவ உ செய்து தேர்தலை எதிர் கொண்ட பிறகு ஒரு மாநிலத் தலைவர் அடுத்த கட்சியின் தலைவரை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியாதா.

கூட்டணி தர்மத்தை திமுக தலைமை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி விட்டு எப்படி தலைமையிடம் பேச முடியும்?

சோனியா இவரை டெல்லிக்கு அழைத்து கண்டிக்கும் வரை அழகிரி வருத்தம் தெரிவிக்கவில்லை. திரும்பி வந்ததும் ஒன்றுமே இல்லை என்கிறார். எல்லாம் தீர்ந்து விட்டது என்கிறார். நேற்றைய அறிக்கை நேற்றோடு போச்சு என்கிறார். இதெல்லாம் பொறுப்புள்ள ஒரு மாநில தலைவர் பேசும் பேச்சா?

ஆனாலும் துரைமுருகன் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்க வேண்டாம் என்று சிலர் கருத்து சொல்கிறார்கள். தொண்டர்களிடையே கசப்பு உணர்வு வளர்த்தால் அந்த கூட்டணி எப்படி உருப்படும்?

பிரிந்தால் யாருக்கு நட்டம் என்பதை விட யாருக்கு லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். நிச்சயமாக பாஜக அதிமுகவுக்குத்தான் லாபம். அதற்கு இருவரும் இடம் தராமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற  எதிர்ப்பார்ப்பு இருந்தாலும் யார் மனதில் என்ன இருக்கிறது என்பதை தேர்தல் வரும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்!

பார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம்! பிரபு பாதா சொன்னது இதுதான்!

பார்ப்பனீயம் இந்தியாவில் செய்த நால்வர்ண அயோக்கியத் தனத்தை இங்கே இனி இது செல்லுபடியாகாது என்று தெரிந்து கொண்டு உலக முழுவதும் அதே கொள்கையை வேறு விதமாக பரப்ப தோன்றியதுதான் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்.

அதன் தலைவர் பிரபு பாதர் தனது இயக்க கோட்பாடுகளை விளக்கி சொன்னதை அந்த இயக்கம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறுகிறார்.

“ தற்போது பிராமணர்கள் ( ஆன்ம வழிகாட்டிகள் ) சத்திரியர்கள் ( ஆட்சியாளர்கள் ) மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளபடியலும் உலகம் முழுவதும் சூத்திரர்கள் அதாவது கையால் தொழில் செய்யும் வர்க்கத்தினரால் ஆளப்படுவதாலும் சமுதாயத்தில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த முரண்பாடுகளை எல்லாம் களைவதற் காகவே  நாம் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை துவக்கி உள்ளோம். பிராம்மணத் தன்மையினர் மீண்டும் ஏற்படுத்த பட்டால் மற்ற சமுதாய நலன்கள் தாமாகவே ஏற்படும். இது மூளை சரியாக இருந்தால் உடலின் மற்றப பகுதிகளான கை கால் வயிறு போன்ற உறுப்புகள் சரியாக இயங்குவதை போன்றது.“

மேலும் இந்த இயக்கம் இந்து மத பிரச்சாரத்திற்காக ஏற்பட்டதல்ல என்றும் வாழ்வின் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கக் கூடிய ஆன்மிகப் பண்பை நாம் வழங்குகிறோம் என்பதால்தான் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்.

அடப்பாவிகளா ஏன் இந்த ப்ரசாரத்தை இங்கே செய்யக் கூடாது. உலகம் முழுவதும் பிறப்பால் அல்லாமல் பிராமணத் தன்மை உடையவர்களை உருவாக்கலாம் இங்கே மட்டும் கூடாது என்றால் அது என்ன நியாயம்?

கையால் தொழில் செய்யும் வர்க்கத்தினர் ஆளக்கூடாது என்பதும் இவர்களின் கொள்கையாக இருக்கிறது என்பதும் தெரிகிறது. அதனால் பல முரண்பாடுகள் ஏற்படுமாம். இப்படி பிறப்பின் வழி பேதம் கற்பிக்கிற வர்களை அயோக்கியர்கள் என்று சொல்வது எப்படி தவறாகும். ?

பார்ப்பான் தன் தொழில் நன்றாக நடக்க எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடுவான் என்பதற்கு இந்த இயக்கமே நல்ல உதாரணம். தலைமை பீடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அமர்வது தகுதியின் அடிப்படையிலா? சாதி அடிப்படையிலா ? இதை மட்டும் விரிவாக பேசமாட்டார்கள். அதிக பட்சம் தங்கள் கைப்பாவையாக ஆடும் சிலரை அடையாளம் காட்டி இல்லையே நாங்களும் பிறருக்கு இடம் கொடுத் திருக்கிறோமே என்று ஏமாற்றப் பார்ப்பார்கள்.

ஏமாறுவதற்கு போட்டி போடும் சமுதாயத்தில் மட்டுமே இவர்களின் புரட்டுகள் எடுபடும்.

வள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக

வள்ளுவர் தினம் என்பதால் திருவள்ளுவருக்கு வாழ்த்து தெரிவித்த குடி அரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் காவி விபூதியுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை பதிவிட்டிருந்தார்.

இதற்கு நாடெங்கும்  பலத்த கண்டனம் எழுந்தது. அவர் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்பதால் உடனே அந்த காவி படத்தை அகற்றி விட்டு வழக்கமான படத்தை பதிவிட்டார்.

உடனே பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் அவ்வையார் மோடி படங்களுக்கு காவி திருநீறு அணிவித்து வெளியிட்டிருக்கிறது.

மோடிக்கு காவி அணிவிப்பது உங்கள் விருப்பம்.

வள்ளுவரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?!

இவர்கள் திருந்த மாட்டார்களா ?

இதற்கெல்லாமா வழக்கு போட முடியும்

மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதில் போட்டி போடுகிறது தமிழக பாஜக!