Home Blog Page 112

இசைப்பரியா படுகொலை தொடர்பான சினிமா ஐ நா வில் திரையிடப்பட்டது. இந்தியாவில் தடை ஏன்?


               
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச்சேர்ந்த
 இசைப்ரியா என்ற இளம்பெண் இறுதிகட்ட போரின்போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச்  செல்லப் பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்ட இந்த சினிமா படத்தை ஐ நா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ” போர்களத்தில் ஒரு பூ ” என்று திரையிடப்பட்டது.   
             இந்தியாவின் இரட்டை வேடம்  காட்டப் பட்டு விட்டது. 
     
         இந்தியாவில் இந்த சினிமாவுக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது.  அவ்வளவு பயமா?   அல்லது நட்பு நாட்டை காட்டிக் கொடுக்க தயக்கமா?  போரில் தானும கூட்டாளி என்பது தெரிந்து விடுமே என்ற நாணமா?  

அமெரிக்காவின் துரோகத்துக்கு துணை போகிறதா இந்தியா? ஐ.நா. மதிப்பிழந்து போகிறது. !!! ஈழத்தின் அவலம் தொடரப் போகிறதா?

0
       போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. குழு துவங்கி  இலங்கையீன் ஒத்துழைப்பு இல்லாமலேயே அதன் தலைவர்  அல் ஹுசைன் இறுதி அறிக்கை தாக்கல் செய்து விட்டார்.    
      அதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் கருத்து தெளிவானது. ஒன்று போர்க்குற்றம் குறித்து சர்வதேசிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.  இரண்டு, போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை உகந்தது அல்ல. 
         ஆனால் இலங்கை இதை ஒப்புக்கொள்ள முடியாது என்ற பிறகு அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு உள்நாட்டு விசாரணையில் காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் ஆலோசனை சொல்லலாம் என்று புதிய தீர்மானத்தை வடிவமைத்து அது வருகிற  
30  ம் தேதி விவாதத்துக்கு வருகிறது.  
             இதைவிட பச்சைத் துரோகம் இருக்க முடியாது.   இலங்கை நாட்டிலேயே விசாரணை நடத்துவதற்கு விசாரணையே தேவை இல்லை என்ற முடிவுக்கு தமிழர்கள் வரலாம்.    ஏனெனில் எந்த நியாயமும் உள்நாட்டு விசாரணையில் கிடைக்கப் போவதில்லை. 
              கலைஞர் சர்வதேச விசாரணையை உறுதி படுத்த கோரி மத்திய அரசை வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் எல்லா கட்சிகளும் சர்வதேச விசாரணை வேண்டு;ம் என்றும் கோருகிறார்கள்.   அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கும் உடன்பாடானது.   ஆனால் தமிழர்கள்  எதிர் பார்க்கும் எதையும் செய்ய இலங்கை ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. 
             காங்கிரஸ் கொண்ட கொள்கையை விட மிக மோசமான கொள்கையை பா.ஜ. க அரசு கொண்டிருக்கிறது.    தன் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழர்களுக்கு இலங்கை பகை நாடு. ஆனால் இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற  முரண்பட்டு நிற்பதை இந்தியா உணரவில்லை. 
             தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சாலை அமைக்கும் திட்டம் எதற்காக?   சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தும் உபாயம் தானே? 
            போர்க்குற்ற விசாரணை நடந்தால் சிங்களர்களுக்கு உலக சமுதாயம் மீது அச்சம் வரும்.   தமிழர்களுக்கு  உரிய அரசியல் தீர்வை அளிப்பது பற்றி சிந்திப்பார்கள்..  
            தண்டணை இல்லை என்றால் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பது பற்றி  சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களர்களுக்கு எழாது.  
             ஐ நா வும் அநியாயத்துக்கு துணை போனால் எப்படி நீதி நிலை  பெறும்?  
              அநியாயம் நிலைக்காது!!!!!

வழக்கறிஞர்களை மிரட்டுகிறார்களா நீதிபதிகள்? எல்லை மீறி போராடுகிரார்களா வக்கீல்கள்? உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை தடுக்கும் சக்தி எது?

0
நீதித்துறையே இன்று முகம் வெளிறிப் போய் கிடக்கிறது. 
          ஊழல் நீதிபதிகளை பட்டியலிட்ட வக்கீல்கள் செய்தது சரியா ? அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகள் மீது எந்த விசாரணையும் இல்லையே என்பது சரியா;?
              போராடுகிறோம் என்று நீதிமன்றத்துக்குள் நுழைந்தது தவறு என்றால் அவர்கள் குறையை கேட்பதற்கு கூட நீதிபதிகள் தயாராக இல்லையே ஏன்?  
             சங்க அறையை காலி செய்யுங்கள் என்றும் பனிரெண்டு பேரை சஸ்பெண்டு செய்கிறோம் என்றும் நீதிபதிகளும் பார் கவுன்சிலும் முண்டா  தட்டுகின்றன.   
              நீதிமன்ற புறக்கணிப்பு தவறு என்றால் எப்படி கவனத்தை ஈர்ப்பது ?    எது செய்தாலும்  விளக்கம் தர மாட்டோம் என்றால் எப்படி பிரச்சினை தீரும்? 
             எல்லாம் போகட்டும்!    அரசியல் சட்ட பிரிவு  348 ( 1 )   ன் படி உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றதிலும் நீதிமன்ற மொழி ஆங்கிலம்.   பிரிவு  348 ( 2 ) ன் படி குடியரசுத் தலைவரின் முன் அனுமதியோடு ஆளுநர்  அந்தந்த மாநில மொழிகளை நீதிமன்ற  மொழியாக அனுமதிக்கலாம் . 
             இந்த பிரிவின் படி உத்தரபிரதேசம் மத்தியபிரதேசம் பீகார் , ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற்று உயர்நீதி மன்ற மொழியாக இந்தி பயன்பாட்டுக்கு வந்து விட்டது. 
             இதே உரிமை தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளுக்கு உண்டா இல்லையா?    
               இந்த வேறுபாட்டை களைய வேண்டிய கடமை தமிழக அமைச்சரவைக்கும் உண்டல்லவா?   
               ஆனால் அமைச்சர் வேலுமணி உச்ச நீதி மன்ற இசைவை பெறுவதற்காக நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் வைக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம்  08.09.2015  தேதிய கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாக  சட்ட மன்றத்தில் கூறினார். 
             ஆனால் அரசியல் சட்டம் அதிகாரத்தை குடி அரசுத் தலைவருக்குதான் கொடுத்திருக்கிறது.   இதில் உச்ச நீதிமன்றம் முழு அமர்வில் கூடி மாற்று கருத்தை தெரிவித்தால் அது சட்ட பூரவமாக இருக்குமா?  
               இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு  மாநில அரசு  ஆளுநரிடம் பேசி குடியரசு தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் இல்லையேல் வெளியேறவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 
              நீதித்துறை தன்னை சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது. 
             மாநில அரசு மத்திய அரசிடம் பாரத்தை போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ள முடியாது. 
              உயர் நீதி மன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக ஆகும் நாளே   கூட்டாட்சி  உண்மையாக மலரும் நாள். !!!!

புனிதப் பயண விபத்துகள் சாத்தானின் வேலைகளா? இறைவன் பக்தர்களை சோதிக்கிறானா? அல்லது இறந்தவர்கள் பாவம் செய்தவர்களா? மெக்கா விபத்து ஏற்படுத்தும் கேள்விகள்??

0

       இரண்டு வாரத்தில் மெக்காவில் இரண்டு விபத்துகள்.    முதலில் கிரேன் விழுந்து  107 பேர் இறந்தனர்.  அதுவும் வழிபாட்டு தலத்திலேயே!   இப்போது சாத்தானின் மீது கல் எரியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 220   பேர் இறந்தும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இழப்பு  நேரிட்டிருக்கிறது.    
         மெக்காவில் விபத்து புதிதல்ல.   1999 ல்   –  1426 பேர் பலி ;   1994 ல்  – 270;   1998ல் -118 ‘ 2001ல் -35 ; 2003ல்  – 14    என தொடர்ந்து இழப்புகள்  பலிகள். 
              இறையில்லத்திலேயே  நடக்கும் இத்தகைய இழப்புகள் இஸ்லாத்தில் மட்டுமல்ல.    எல்லா மத சடங்குகளிலும் விபத்துகள் நடக்கின்றன.   
              இந்த ஆண்டிலேயே காட்மண்டுவில் வழிபாடு நடத்திவிட்டு திரும்பிய   குஜராத்  பக்தர்கள் 17  பேர்   விபத்தில்  இறந்தனர்   
 கோதாவரியில்  புனித குளியல் நடத்தி திரும்பிய 18  பேர் தர்மபுரியில் இறந்தனர்.   ஜார்கண்டில்   11  பேர்   அமர்நாத் யாத்திரையில்   16  பேர்  பலி என்று தொடர்கிறது. 
               கிறிஸ்தவ , ஜைன சமண , சீக்கிய  என்று விபத்தில்  பக்தர்கள் பலியாகாத  மத திருவிழாக்கள் இல்லை. 
             இந்த மதங்களின் சுவாமிகள் எல்லாம் தங்கள் பக்தர்களை காக்க தவறுவது ஏன்?   அங்கு அவர்கள் புண்ணியம் செய்து இறந்தார்களா?  அங்குதான் மோட்சம் அளிக்க வேண்டுமா?  அதுதான் விதி என்றால் இறைவன் பேரால் இவை ஏன் நடக்கின்றன?    இவைகளை பற்றி பக்தர்கள் கவலைப் படாத போது மற்றவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்?   
               ஆனாலும் பாமரன் சந்தேகம் கொள்கிறானே?  அவைகளை தீர்க்க அந்தந்த மதங்களின்  குருமார்களுக்கு கடமை இல்லையா?   
விளக்கம் சொல்லுங்கள் அனைத்து  மத  குருமார்களே?   

பசும்பொன் தேவர் -இமானுவேல் சேகரன் குருபூஜை விழாக்கள் – 144 தடையுத்தரவு தமிழர்களுக்கு அவமானமில்லையா?? அமைதி ஏற்படுத்த தகுதியில்லாதவர்கள் தலைவர்களா???

0
          செப்டம்பர்  11  ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அமைதியாக கழிந்தது.   வரும் அக்டோபர்  30 ம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையும் நல்லபடியாக அசம்பாவிதம் ஏதுமில்லாமல் நடந்தேற வேண்டுமே என்ற கவலை தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்படுவது இயற்கை. 
               ஒருகாலத்தில் தேவர்-பள்ளர் இடையே ஏதோ ஒரு காரணத்தால் பகை உணர்வு ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால் இன்றும் அது ஏதோ ஒரு வகையில் தொடர்கிறது  என்பது உண்மைதானே? 
              இருவரும் தமிழ்ச்சாதியினர்.   ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள். . 
               இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்கள் படித்தவர்கள் பண்புள்ளவர்கள் தலைவர்கள் இரு தரப்பிலும் இல்லையா???
                அரசு தலையிட்டு சமரசப் பேச்சு வார்த்தை நடத்திய போது நிகழ்ந்த சம்பவங்கள்தான் பல்வேறு சம்பவங்களுக்கு காரணம் என்று சொல்கிறார்கள். 
                  இருக்கட்டும். அவைகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அறிவுஜீவிகள் யாரும் இல்லையா?  தமிழ்ச் சாதிகளுக்குள் வேற்றுமைகளை களைய வேண்டும் என்று பாடுபடுகிற சாதித் தலைவர்கள் யார்? 
                 அவரவர்  தங்கள் சாதி மீதான பிடிப்பை உறுதி செய்து கொள்வதில்தானே அக்கறை காட்டுகிறார்கள். 
                 ஆயிரம் சொன்னாலும் கலைஞர் தனது மூத்த மருமகளை பள்ளர் சாதியில் தேர்ந்தெடுத்த முன்னுதாரணத்தை வேறு எந்த தலைவர்கள் செய்து  காட்டியிருக்கிறார்கள் ?
                      விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இயக்கத்தில் விதவைத் திருமணத்தையும் சாதி மறுப்பு திருமணத்தையும் நடத்திக் காட்டிய தீர்க்க தரிசனத்தை தமிழகத்தில் எத்தனை  தலைவர்கள்  சிந்தித்திருக்கிறார்கள்.
                   இன்று தமிழர் ஒற்றுமைக்கு சாதிகள் தானே தடைகளாக இருந்து வருகின்றன.     மருத்துவர் ராமதாஸ் நல்ல பல கருத்துகளை சொல்லி வந்தாலும் பரிமளிக்காமல் போவது எதனால்?    திருமாவளவன் மீது கொட்டும் நெருப்பு விமர்சனங்கள் ஆதி திராவிடர் சமூகத்தின்மீது பிரதி பலிக்கிறதா  இல்லையா?    அவர்களை  ஒதுக்கி வைத்து விட்டு தலித் அல்லாதவர் வாக்குகளை மட்டும் ஒருங்கிணைத்து வெற்றி பெற துடிக்கிறீர்களே தவிர இதனால் பலியாகும் தமிழர் ஒற்றுமையை பற்றிய கவலை உண்டா? 
                  டாக்டர் கிருஷ்ணசாமி தன் பங்குக்கு ஒற்றுமையை ஏற்படுத்த என்ன செய்திருக்கிறார் ? 
                 முக்குலத்தோர் சமூக தலைவர்கள்  என்று சொல்லிகொள்ளும் டாக்டர் சேதுராமன்  ஸ்ரீதர் வாண்டையார் போன்றோர் இமானுவேல் சேகரன் குருபூஜையிலும் டாக்டர் கிருஷ்ணசாமி , திருமாவளவன் , ஜான் பாண்டியன் , செ..கு.தமிழரசன்  போன்றோர் தேவர் குருபூஜையிலும் கலந்து கொண்டால் பகைமை மறையாதா? 
                போனால் தங்கள் பிடி தளர்ந்து விடும் என்ற அவர்களின் பயம் நியாயமானதா? 
                 ஆதிக்க சிந்தனை மேலோங்கி நிற்பவர்களிடம் சமத்துவம் பேச முடியாது என்பது நிதர்சனமாக இருக்கலாம் .  ஆனால் அதை அப்படியே விட்டுவிட இவர்கள் ஏன்?    
                    ஆட்சியில் இருப்பவர்கள் யார் பகைமையும் வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள் . யாருமே எவரையும் பகைத்துக் கொள்ள தயாராக இல்லை. 
                      தகுதி வாய்ந்த தலைவர்கள் இந்த பிற்பட்டோர்- தலித் மக்களிடையே உருவாகாததுதான் மோதல்கள் அதிகரிக்க காரணம்.!!!
                     இனியாவது சிந்திப்பார்களா???
                    

முதலீட்டாளர்கள் மாநாடு- 100 கோடி ருபாய் செலவில் விளம்பரம் தேடிய ஜெயலலிதா!!! அந்திம ஆட்சிகாலத்தில் செய்த தந்திரம் !! அரசியல் ஆதாயம் மட்டுமே மிச்சமிருக்கும்!!! பலன் கிடைப்பது கேள்விக்குறி???

0

     தமிழக முதலீட்டாளர்கள் சாம்ராஜ் நகரில்  12  ஆயிரம் கோடியை முதலீடு செய்ய விட்டு விட்ட அரசு தமிழக அரசு. 
       2014 , 2015  மே என்று இரண்டு முறை மாநாட்டு தேதியை மாற்றிய காரணம் இதுவரை விளக்கப்படவில்லை . 
        நான்கு ஆண்டுகளில் 46,602 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அரசு அறிவித்தது.   இதில் எத்தனை தொடங்கப் பட்டது, வேலை வாய்ப்பு எத்தனை பேருக்கு என்ற விபரங்களை அரசு தெரிவிக்காதது ஏன்?   
             அ தி மு க ஆட்சியில்  2011 முதல்   2015  வரை செயலாக்கத்துக்கு  வந்த முதலீடு வெறும் 5.64 சத வீதம் தான் . அதாவது அறிவிக்கப் பட்டதற்கும் அமுலுக்கு வந்ததற்கும் உள்ள இடைவெளி.  அப்படியென்றால் இப்போது ஜெயலலிதா அறிவித்த  2.42  லட்சம் கோடி முதலீடு அமுல்படுத்தப் படும்போது எத்தனை சதமாக இருக்கும் என்பதை அனுமானிக்கலாம். 
            vision 2023  ‘ திட்டப்படி  15   லட்சம்  கோடியில் உள்கட்டமைப்பு என்ற திட்டப்படி  4  லட்சம் கோடி செலவிடப் பட்டிருக்க வேண்டும். 
அதேபோல் அதில் கண்ட அறிவிப்புகள் எல்லாம் அமுல்படுத்த வில்லையே காரணம் என்ன???
             மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் முடக்கப் பட்டது ஏன்? 
             ஹூண்டாய் விரிவாக்கம் ராஜஸ்தான் செல்கிறது. இசுசு நிறுவனம் ஆந்திராவுக்கு போய் விட்டது. செயின்ட் கோபைன் விரிவாக்கம் 1000  கோடியில் ராஜஸ்தான் செல்கிறது. ராம்கோ சிமெண்டு கர்நூலுக்கு செல்ல அனுமதி வாங்கியிருக்கிறது. பாக்ஸ்கான்  30000  கோடி முதலீடு மராட்டியம் போகிறது. அ தி மு க ஆட்சிக்கு வந்தபின் 50000  கோடி முதலீடு இங்கிருந்து வெளியே போயிருக்கிறது.     யார் பொறுப்பு?    
             மின்வெட்டுபிரசினையால்  12000  கோடி முதலீடுகள் கர்நாடகாவிற்கு போய்விட்டது. இப்போது கூட 2016 ல் மின்மிகை மாநிலம் ஆகும் என்றுதான் அறிவிப்பு சொல்கிறது. 
              42,000   ஏக்கர் நிலம் தயார் என்கிறது அரசு அறிவிப்பு .  எங்கே அது என்ற விபரங்கள்   தெரிவிக்கப் பட வில்லை. 
             85  லட்சம்  இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அரசுத்துறையில் 5  லட்சம் பணியிடங்கள் காலியாம் .    4 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது. ? 
             30   நாளில் தொழில் அனுமதி என்பது கேட்க நன்றுதான். அமுல்படுத்தப் பட்டால் தான் அதற்கு பொருள் உண்டு. 
             குத்தாட்டம், தொண்டர் ஆட்டம் என்று களை கட்டிய நிகழ்ச்சிகள் யாருக்காக என்பது யாருக்கும் புரியவில்லை. 
            கருணாநிதி அவர்கள் கூறியிருப்பதைபோல் அடிப்படை கட்டமைப்பு தேவையான அளவுக்கும் தரத்துக்கும் இல்லாததும் அரசின் தொழிற்கொள்கையும், அதிகார அமைப்பும் தொழில் முதலீட்டாளர்களுக்கு அனுசரணையான அணுகுமுறையை கையாளததும்தான் நான்காண்டு கால திட்டங்களின் தோல்விக்கு காரணம்.  
             ஆறு மாதத்தில் தேர்தலை சந்திக்கப் போகும் ஆட்சியால் என்ன சாதிக்க முடியும் என்று முதலீட்டாளர்கள் சிந்திக்க மாட்டார்களா?
               அரசு என்பது நிலையானதுதான் .   ஆனால் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள். 
              இது தேறுமா என்ற சந்தேகம் தீர வேண்டும் என்றால் அரசு எல்லா தகவல்களையும்  உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் அப்போதுதான் அரசின் மீது நம்பிக்கை வரும் என்று தி மு க  பொருளாளர் மு க ஸ்டாலின் கேட்டிருந்தார்.  
மொத்தம  98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ  2,42,160  கோடி முதலீடு செய்து  4,70,065  பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது . 
               குறிப்பாக தொழில் துறையும் எரிசக்தி துறையும்தான்  65 ஒப்பந்தங்களோடும்  2 லட்சத்துக்கும் மேலான முதலீடுகளோடும் முன்னிலை வகிக்கிறது.  சிறு ,குறு,நடுத்தர தொழில்களும் தகவல் தொழில் நுட்ப துறையும் கைத்தறி ஜவுளிதுறையும், கல்ல்நடை பராமரிப்பு ,வேளாண துறையும் 33 ஒப்பந்தங்களை பெற்றிருக்கின்றன.  
                விமர்சிப்பவர்களை எல்லாம் எதிரிகளாக பார்க்காமல் மக்களுக்கும் வெளிப்படையாக தகவல் தெரிவிக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது என்று உணர்ந்து செயல்பட்டால் எல்லாரும் வெளிப்படுத்திய  அவநம்பிக்கைக்கு  அவசியம் இருந்திருக்காது. 
              அடுத்த மாநாடு 2017 ல் நடைபெறுமாம்.   அப்போது யார் ஆட்சியில் இருப்பார்களோ?   மக்கள் இருப்பார்களே மதிப்பீடு செய்ய!!!!

தமிழ் உள்பட எல்லா மொழிகளையும் இந்திக்குள் திணிக்க வேண்டுமாம்!!! மொழிப்பிரச்சினையில் மோடியின் குதர்க்க வாதம்!!! இந்தியை வளர்க்கவா- ஏனைய மொழிகளை அழிக்கவா???

0
                      10  வது இந்தி மொழி மாநாட்டில் போபாலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு இந்தியாவின் மற்ற மொழிக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.   
                       இந்தியை பரப்பட்டும்.    கோடிகளை கொட்டட்டும்.   இந்தி பிரசார் சபைதான் நாடு முழுதும் இயங்கி வருகிறதே?
                      இந்தியை காப்பாற்றுகிற வேலையில் அதே அக்கறை இந்தியாவின் மற்ற மொழிகளை காப்பாற்றும் கடைமையும் தனக்கு இருக்கிறது என்பதை மறந்து விட்டார். 
                       மற்ற மொழிகளை இந்தியில் புகுத்தி அதை வளப்படுத்துவது என்பது மட்டும்தான் நோக்கம் என்றால் அதில் குறை காண ஏதுமில்லை.     எல்லா மொழிகளும் பிற மொழிகளை தன் மொழியில் புகுத்தி வளப்படுத்திகொள்ள உரிமை உண்டே?
                       ஆங்கிலத்தில் பிற மொழிகள் பல கலக்கப்பட்டு வளப்படுத்தப் பட்டு வருகிறதே!.
                   ஆட்சேபணைக்கு உரிய பல கருத்துகளை மோடி பேசியிருக்கிறார்.   வரும் நாட்களில் சீனம், ஆங்கிலம்  இந்தி மூன்றும்தான் டிஜிட்டல் உலகில் செல்வாக்குடன் விளங்குமாம்.  
தமிழுக்கு அந்த வல்லமை இல்லை என்கிறாரா மோடி?   6   ஆயிரம் மொழிகளில்  90  சத விகித மொழிகள் காணாமல் போய் விடும் என்று மொழி அறிஞர்கள் எச்சரித்திருக்கிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்.  
                     மொழியை பாதுகாக்கா விட்டால் அழிந்து போய் விடும் என்றவர் அது எல்லா மொழிகளுக்கும் தானே பொருந்தும் என்பதை உணர்ந்தாரா ?
                தமிழ் வங்காளம் போன்ற பிராந்திய மொழிகளை இந்தியில் இறக்குமதி செய்ய வேண்டுமாம்? 
                ENGLISH EVER , HINDI NEVER- என்பதே தமிழர்களின் மொழிக்கொள்கை    தேவைபடுவோர் விரும்புவோர் இந்தியை கற்றுக் கொள்ளட்டும் பிரசார சபை மூலம்.  அவரவர் தேவைக்கேற்ப எந்த மொழிகளையும் தாங்களாகவே கற்றுக் கொள்வார்கள்..
               அரசு முயற்சிஎடுத்தால் அது எல்லா இந்திய மொழிகளுக்கும்தான் இருக்க வேண்டும்.     மத்திய அரசு இந்திக்கு மட்டும் செலவ்ழிப்பதே தவறு.  .  
               எட்டாவது அட்டவணையில் கண்ட எல்லா மொழிகளுக்கும் உரிய மரியாதையை தருவதன் மூலமாக மட்டும்தான் இந்திய ஒற்றுமையை  பாதுகாக்க  முடியும் என்பதை பிரதமர் மோடி உணர்வாரா?
                  தான் இந்தி கற்றுக்கொண்டதை பற்றிப் பேசும் மோடி என்ன சொல்ல வருகிறார்?   நீங்களும் என்னைப்போல ஆக வேண்டும் என்றால் இந்தியை கற்றுக் கொள்ளுங்கள்!!!   இந்தியை கற்றுக் கொள்ளாதவர்கள் பிரதமர் ஆக முடியாது என்றுதானே பொருள்???
                  இந்தி பேசாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ முடியும் என்பதை தெளிவாகவே கூறியிருக்கிறார் மோடி. 
               ஒரு பிரதமரின் வேலை நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதா?    பிரிவினை சிந்தனையை தூண்டுவதா???   
                     ஒரே ஒரு வார்த்தை!!!   எந்த இந்திய மொழிகளையும் அழிய விட மட்டும் என்று பேசியிருந்தால் எல்லா மொழிகளுக்கும் மத்திய அரசு பாதுகாப்பு தரும் என்று பேசியிருந்தால் இந்த அச்சம் வந்திருக்காது. 
                      உயர் நீதி மன்றங்களில் அந்தந்த மாநிலமொழிகள் அலுவல் மொழிகளாகட்டும்!!!   எல்லா மட்டத்திலும் மொழிபெயர்ப்பு வசதிகள் பெருகட்டும்!!   இந்திய ஒற்றுமை காக்கப் படும்!      மாறாக பிற  மொழிகள் ஒதுக்கப் பட்டால்  அவர்கள் உங்களை விட்டு ஒதுங்கி விடுவார்கள்!!!   எச்சரிக்கை!!!!!

தீண்டாமை கொடுமைகளை திராவிட இயக்கங்கள் எதிர்க்கவில்லையா ? பிருந்தா காரத்தின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?

0

               மக்கள் நல கூட்டியக்கம் என்று வலது இடது கம்யுனிச்டுகளும்  மனித நேய மக்கள் கட்சியும்  திருமாவளவனும் வைகோவும் கை
 கோர்த்திருக்கிறார்கள். .    
               தி மு க- அ தி மு க  விற்கு மாற்றாக மூன்றாம் சக்தியை கொண்டு வர வேண்டும் என்ற கூச்சலில் தே மு தி கவும் சேர்ந்து கொண்டது. அதில் ஜி  கே வாசனும் சேர்ந்து கொண்டால் வலுவான கூட்டணியாக உரு மாறுமா?  
             இந்த சூழலில் பிருந்தா தி மு க – அ தி மு க ஆகிய இரண்டு கட்சிகளையும் கட்சி கொள்கைகளை வாக்கு வங்கிக்காக புதிது விட்டதாக கோவையில் தீண்டாமை வன் கொடுமைகளுக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கில் பேசினார். 
               தி மு க -அ தி மு க ஆகிய இரண்டையும் சம நிலையில் வைத்து பார்ப்பது எந்த வகையில் யாருக்கு லாபம். ? 
      ஆளும் கட்சியாக பண பலம மாற்று;ம் ஆட்சி பலத்தோடு அ தி மு கவும் தி மு க வும்  ஒன்றா?   
             வர்ண தர்ம சமூகம் அமைய விடாமல் தடுப்போம் என்ற நிலைப்பாட்டில் எந்த கட்சியையும் விட தி மு க உறுதியானது. 
              எனவே அ தி மு க விற்கு   எதிரான வாக்குகளை பிரிப்பதற்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.    அந்த சூழ்ச்சி வலையில்ஐந்து கூட்டணி கட்சிக்காரர்கள் வீழ்ந்து விட்டார்களா? 
               கருணாநிதி தலித்தை சம்பந்தியாக ஏற்றுக்கொண்டவர். 
அவர் தலைமையில் உள்ள தி மு க தலித்துகளுக்கு  எதிராக செயல்படாது .   
               ஏன் இந்தக் கலப்பு திருமணத்தை வலது இடதுகள் தங்களுக்குள் கட்டாய மாக்கக்கூடாது.? 
             கேரளாவிலும் மே வங்கத்திலும் சாதி ஒழிந்து விட்டதா? 
 கொடுமைகளுக்கு ஊற்றாக இருக்கிற சாதி பிறந்த இடம் எது?  
             சாதி ஒழிப்பில் இலட்சியத்தோடு செயல்படுகிற தி மு க வை குற்றம் சுமத்துவது அரசியல்.  
             இட ஒதுக்கீட்டை மீறி பொது தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைப்பீர்களா என்கிறார்கள்.    தலித்துகள் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதி செய்து விட்ட பிறகு மீதமுள்ள இடங்களில் பிற்பட்டவர் போட்டியிடுவது எவ்விதம் தலித்துகளின் உரிமையை பாதிக்கும்?    அவர்கள் போட்டியிட தடை ஏதும் இல்லை.  நிச்சயம் உரிமை உண்டு.   
ஆனால் வெற்றி வாய்ப்பு தானே அரசியல் கட்சிகளின் இலக்காக உள்ளது.? 
              கம்யுனிச்டுகள்  குழம்பிப் போயிருக்கிறார்களா ?   அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே குழப்புகி றார்களா???!!!!

போர்க்குற்ற சர்வதேச விசாரணையை தவிர்க்க சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியா? அமெரிக்காவின் துரோகம்??!! உள்நாட்டு விசாரணை போதுமாம்??

               தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒருபோதும் சிங்களர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 
               போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவரும் இனப்பிரச்சினைக்கு முடிவு கட்ட முயற்சி எடுக்கவில்லை. 
               இன அழிப்பு நடத்திய போர்க்குற்ற விசாரணை நடத்த யாரும் தயாராக  இல்லை. மீள குடியேற்றம் என்ற பெயரில் ஒரு சில பேரை குடியமர்த்தி உலகை ஏமாற்றுகிறார்கள்.
            கடந்த ஆண்டு ஐ நா மானிட உரிமை கவுன்சிலில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய  அமெரிக்கா  இன்று உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என பல்டி அடித்ததை  ஏற்க முடியாது என்று இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானம் இயற்றியிருக் கிறது .
              எதிரிகளே இல்லாத நாடான இலங்கைக்கு  இந்தியா இரண்டு போர்க்கப்பல்களை இனாமாக வழங்குகிறது. யாரை தாக்க?   தமிழர்களைத்தானே??? அவர்களது மீன்பிடி உரிமைகளை நசுக்கதானே?   
                 .  இந்நிலையில்  38  ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தமிழரை , சம்பந்தன் அவர்களை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்து எடுக் கிறார்கள் .  1977 ல் எதிர்க்கட்சி தலைவரான அமிர்தலிங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க மறுத்து ராஜினாமா செய்தார். 
              அரசை எதிர்த்து எதுவும் செய்ய இயலா நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது உலகை ஏமாற்றத்தான். .
              அதோடு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆக இருக்கும்போது உள்நாட்டு விசாரணை ஏன் முறையாக நடக்காது என்ற கேள்வியையும் எழுப்புவார்கள். 
             இரண்டு சிங்களக் கட்சிகளும் சேர்ந்து தேசிய அரசு அமைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் புரிதல் இருக்கிறது.. 
            காலங்காலமாக கொஞ்சம் கொடுப்பது பின்பு பிடிங்கிக் கொள்வது என்ற நாடகத்தை தவறாது நடத்தியவர்கள். 
             இதுவரை எத்தனை ஒப்பந்தங்களை அமுல்படுத்தாமல் கிழித்து எறிந்திருக்கிறார்கள்  என்ற பட்டியலை நினைத்துப் பார்த்தால் மட்டும்தான் அவர்களின் உண்மை முகம் தெரியும்.
                நடக்கட்டும் நாடகம்!!!              எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா?   அது வராமலா போய்விடும்?!!!

ஐ நாவில் இந்தியை அலுவல் மொழியாக ஆக்க இந்தியா முயற்சிப்பது சரியா? இந்தியாவின் முகம் இந்தியா? கருணாநிதியின் கண்டனம் ஏற்புடையதா?

முதலில் சாதாரண பெரும்பன்மையிலும் இறுதியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் தீர்மானம்  நிறைவேற்றபட்டால் ஐ நா வில் ஒரு மொழி  அதிகாரபூர்வ மொழியாகும். இப்போது  ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ், ரஷியன், சைனீஸ் அரபு மொழிகள்  அதிகாரபூர்வ மொழிகள்.. முக்கியமான விடயம் அந்தந்த  நாடுகளில் அவைகள் மட்டுமே   அதிகாரபூர்வ  மொழிகள்.

அதாவது உலக மக்கள் தொகையில் பாதிபேர் பேசும் மொழிகள்தான் ஐ நா வின்  அதிகாரபூர்வ  மொழிகள். .

இந்தியாவில் அரசியல் சட்டம் பிரிவு 343 ன் படி இந்தி மட்டுமே அதிகாரபூர்வ மொழி. .   ஆங்கிலம் நீடிக்கலாம் என்ற நேருவின் உறுதிமொழி எழுதப் படாத சட்டமாக அமுலில் உள்ளது.

 

வேடிக்கை என்னவென்றால்   348   பிரிவின்படி ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் சட்டமொழி.   உச்சநீதிமன்றதிலும் உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடித்து வருகிறது. இதை மாற்ற முடியுமா? மாநில மொழிகளில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வர ஆரம்பித்தால் உச்சநீதி மன்றம் திணறிப் போகும்.

 

எட்டாவது அட்டவணையில்  22  மொழிகள் இருந்தாலும் அனைத்தும் மத்திய அளவில்  அலுவல் மொழிகளாக இல்லை. இந்த நிலையில்தான் சுஷ்மா சுவராஜ்  129  நாடுகளின் ஆதரவைப் பெற்று  270 கோடி செலவு செய்து பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் அதன் பிறகு இந்தியை அதிகாரவ பூர்வ மொழியாக அங்கீகரிப் பதற்கும் தீவிர முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த முயற்சியைத்தான் கருணாநிதி கண்டித்துள்ளார்.
1.   இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்துவிடும் ஆபத்து இதில் இருக்கிறது.
2.      இந்தியே இந்தியாவின் அடையாளம் என்று சித்தரிப்பது வேண்டாத வேலை.
3.    மத்திய அரசின் உதவியோடு இம்மாதம் 10, 12  தேதிகளில்
போபாலில் உலக இந்தி மாநாடு நடக்க இருக்கிறது.
4.     மற்ற மொழி பேசுபவர்கள் இரண்டாம் தர குடிமகள் ஆக்கப் படுவார்கள்.

 

முதலில் இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதையை கொடுங்கள்.    யார் வேண்டுமானாலும் தங்கள் தாய்மொழியில் பாராளுமன்றத்தில் பேசலாம் என்ற நிலை வர வேண்டும்.   அதற்கான மொழிபெயர்ப்பு ஏற்பாடுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா நிலைப்படும். அதற்கப்புறம் இந்தியை உலகளாவிய அளவில் கொண்டு செல்லலாம். ,   ஏனைய இந்திய மொழிகளோடு.