Home Blog Page 113

சிவாஜி சிலை விவகாரம் – கருணாநிதி வைத்த சிலையை அகற்றி ,ஈடாக மணிமண்டபம் அறிவித்து ஜெயலலிதா செய்த அரசியல்???!!!

                         2002 ல்  நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட  12  கிரவுண்ட் நிலம் அடையாரில் ஒதுக்கினர் ஜெயலலிதா.

                           நடிகர் சங்கம் அதில் மண்டபம் கட்டவில்லை. 2006 ல் கருணாநிதி கடற்கரையில் சிலை வைத்தார்.  அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது.  அரசு அப்போது சிலை இருக்கும் இடம் ஒரு போக்குவரத்து தீவு , ”  traffic island ” எனவே போக்குவரத்துக்கு பாதிப்பில்லை  என்று எதிருரை தாக்கல் செய்தது.

                           2011 ல் ஆட்சி மாற்றம் வந்ததும் கருணாநிதி செய்த அனைத்தையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் சிலை விவகாரத்திலும் அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ‘  ஆமாம் சிலை இருப்பது போக்குவரத்துக்கு இடைஞ்சல் தான் என்று புதிய எதிர் உரை தாக்கல் செய்தது.   
                         விசாரித்த நீதிமன்றம் இப்படி அரசு தனது நிலைபாட்டை மாற்றிகொள்ளலாமா என்று கேட்கவில்லை.    அரசு நிலைப்பாட்டை ஒட்டி எப்போது சிலையை அகற்றப் போகிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்தது. 
                        சிலையை அகற்றினால் கெட்ட பெயர் வரும் என சிந்தித்த  ஜெயலலிதா  சிவாஜிக்கு மனிமண்டபத்தை அரசே கட்டும் என அறிவித்தார். 
                         ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.    கருணாநிதி வைத்த சிலையை அகற்றியது போலவும் ஆயிற்று .     நடிகர் சங்கம்  கட்ட  தவறிய  மணிமண்டபத்தை ஜெயலலிதா கட்டியது போலவும் ஆயிற்று.         இப்போது சிலையை அகற்றி மணிமண்டபம் கட்டும் இடத்தில வைத்தால் யாரும் குற்றம்  சொல்ல முடியாதே?
                   உயர்நீதி மன்றத்தில் அவகாசம் கேட்டிருக்கிறது  அரசு. .   சிலையை அகற்றாமல் மணிமண்டபம் கட்டினால் அது பெருந்தன்மை.   சிலையை அகற்றுவதற்காக மணிமண்டபம் அறிவிப்பு என்றால் அது இழுக்கு.   
                 ஜெயலலிதா பெருமை தேடிக் கொள்ளப்போகிறாரா  அல்லது இழிவைத் தேடிகொள்ளப் போகிறாரா  ?    
                          

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முன்னாள் துணை வேந்தர் குல்பர்கி படுகொலை!!!??? மகாராஷ்ட்ராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் பாசிசக் கும்பல் வெறியாட்டம்!!??? தடுக்காவிட்டால் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம்!!!


         கன்னட எழுத்தாளரும் முன்னாள் கன்னட பல்கலைக்கழகதுணை வேந்தரும் ஆராய்ச்சியாளருமான     77  வயது எம் எம் குல்பர்கி தார்வாரில் வீட்டில் இருந்தபோது காலை நேரத்தில்  கதவைத் தட்டிய கொலைகாரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். .  
             வீரசைவ இயக்கத்தின் தத்துவத்தையும் அடிப்படையில்லா நம்பிக்கைகளையும் அறிவுபூர்வமாக எதிர்த்து ஆராய்ச்சி செய்து எழுதியதால் இவர் மீது பலர்  கோபம  கொண்டிருக்கலாம்.
              அதுமட்டுமல்ல , விக்ரக ஆராதனை மீதும் மூட நம்பிக்கைகள் மீதும் அவருக்கு கடுமையான ஆட்சேபணைகள் இருந்தன.  அவருக்கு குடும்ப பிரச்சினைகளோ விரோதிகளோ இல்லை என்று குடும்பத்தார் கூறுகின்றனர். 
              இவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு சில மாதங்களுக்கு முன்பு விலக்கப்பட்டது ஏன் என்பது புதிர்தான்.
               கர்நாடகாவில் இதுதான் முதல் கொலை என்றாலும் பக்கத்துக்கு மாநிலமான மகாராஷ்ட்ராவில் நடந்த இரு கொலைகளையும் ஒப்பிட்டால் சந்தேகம் இல்லாமல் இது இந்து பயங்கர வாதிகளால் நடத்தப் பட்ட திட்டமிட்ட படுகொலை என்பது புலப்படும். 
                 2013   ல் 65  வயதான டாக்டர் நரேந்திர தபோல்கர் காலை நடைபயிற்சியில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல் வலது கம்யூனிஸ்ட் தலைவரும் பகுத்தறிவு வாதியுமான கோவிந்தராவ் பன்சாரே நடைபயிற்சியின் போதுதான்     2015   பிப்ரவரி  16 ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.      
             இருவரும் நண்பர்கள் இனைந்து பணியாற்றியவர்கள்.  அதிலும் தபோல்கர் போலி சாமியார்களுக்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மாநிலம் தழுவிய இயக்கத்தையே நடத்தியது மட்டுமில்லாமல் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒர் சட்டம் இயற்றவும் முனைப்பு காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   
               விக்ரக ஆராதனைக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிரான போராட்டத்தை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்று இந்துத்துவ சக்திகள் உறுதியாக இருப்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. 
                 வழக்கம் போல இதில் விரோதம் சொத்துப் பிரச்னை இருக்கிறதா என்றும் ஆராய்கிறோம் என்று காவல் துறை சொல்வது திசை திருப்பும் உத்தி தானே தவிர வேறல்ல. 
               இந்தியா முழுவதும் எழும்  கண்டனக்குரல்கள் அரசை உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தி தண்டணை பெற்றுத்தரும் என்று நம்புவோம். 
                மெத்தனமாக இருந்தால் இந்தக் கும்பல் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதை அரசு உணர வேண்டும். 
              பகுத்தறிவு சிந்தனைகளுக்கு எதிரான  சமூக அமைதியை கெடுக்கும்  இந்த கும்பலை அடக்கியே ஆக வேண்டும். 
             

முதல்வர் போட்டியில் கருணாநிதியை மிஞ்சினார் ஸ்டாலின் !!!! கருத்துக்கணிப்பு முடிவுகள்!!! மீண்டும் அ தி மு க வெற்றி பெரும் என்றாலும் தி மு க விற்கு இடையே இடைவெளி மிகவும் குறைவு! எட்டு மாதங்களில் இடைவெளி குறையலாம்!!!

              மக்கள் ஆய்வக இயக்குனர் பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவிற்கு அதிக ஆதரவு தெரிவிக்கப் பட்டாலும் அடுத்த இடத்துக்கான போட்டியில் கருணாநிதியை மிஞ்சினார் ஸ்டாலின் என்பதுதான் கவனிக்க வேண்டிய தகவல். 
               ஜெயலலிதா   -31.56 %  ஸ்டாலின்  -27.98 % –    கருணாநிதி – 21.33%,   விஜயகாந்த் -6.24 %,  அன்புமணி ராமதாஸ் – 2.27 %  , அடுத்தடுத்த இடங்களில், வைகோ, திருமாவளவன் ,ஜி.கே.வாசன் தமிழிசை,சீமான் ஆகியோர் இடம் பிடிக்கிறார்கள்.  
               எந்த கட்சிக்கு வாக்கு என்ற கேள்விக்கு  அ.தி.மு.க என்று 34.1 %  பேரும் , தி. மு க என்று 32.6%  பேரும், தே.மு.தி.க 4% perum, பா.ம.க என்று.3 % perm  பா. ஜ.க என்று 2.9 %  பேரும் காங்கிரஸ் என்று  1.6%  பேரும் வாக்களித்திருக்கிறார்கள். . 
              தி மு க – அ தி மு க விற்கு மாற்றுக் கட்சி கிடையாது என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருக்கிறார்கள். 
               3370  பேரிடம்  28 மாவட்டங்களில்  80  சட்ட மன்ற தொகுதிகளில் செய்யப் பட்ட இந்த ஆய்வு எந்தளவு இன்னும் எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லுபடியாகும் என்பதை விட சமூக உளவியல் அடிப்படையில் செய்யப் பட்ட இந்த ஆய்வு   ஓரளவு மக்கள் மனநிலையை பிரதிபலிக்கிற வகையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 
                மிக முக்கியமாக   கருணாநிதியை விட ஸ்டாலின் அதிக வாக்கு பெற்றிருப்பது அவரது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை உறுதி செய்கிறது.    இனி  சில மாதங்களில்  கலைஞர்  முதலைமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவித்தால் ஆச்சரியம் ஒன்றுமில்லை . 
              அ தி மு க விற்கும் தி மு க விற்கும் இருக்கும் வித்தியாசம் சொற்ப அளவே என்னும்போது இடைப்பட்ட  எட்டு மாதங்கள் இந்த இடைவெளியை குறைக்கும் என்பது உறுதி.
               மதுவிலக்கை மிகப் பெரும்பான்மையோர்  ஆதரிக்கிறார்கள் என்பது பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..  
                     ஐந்து கட்சி கூட்டணி கணக்கிலேயே இல்லை.  மூன்றாம் இடத்தை குறி  வைப்பவர்கள்  முதல் இடம் பிடிக்க இருப்பவர்களின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க மட்டுமே உதவுவார்கள். ஒருவேளை அதுவே திட்டமாகவும் இருக்கலாம். 
              மருத்துவர் ராமதாஸ் இந்த கருத்து கணிப்பை மறுதலித் ததுடன்   இதன் பின்னணியில் தி மு க இருக்கிறது  என சொல்லியிருப்பது அவர் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. 
                 
              எப்படியோ நல்லது நடந்தால்  சரி.

28.7 லட்சம் மக்கள் இந்தியாவில் மதமற்றோர்!! கணக்கெடுப்பில் தகவல். ! முறையாக கணக்கெடுத்தால் எண்ணிக்கை உயரும்!!??

                  இந்தியாவில்   28.7  லட்சம் மக்களும்  தமிழ் நாட்டில்  1  லட்சம் மக்களும் தாங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள். 
                 இவர்கள் அனைவரும் நாத்திகர்கள் , பகுத்தறிவாளர்கள், மற்றும்  எந்த  குறிப்பிட்ட மதத்தையும் சாராத ஏதோ ஒரு  அடையாளம் தெரியாத சக்தியை நம்புபவர்களாக இருக்கிறார்கள். 
                 உ.பி யில் ஆறு லட்சம்  பேரும் பீகார் மே.வங்கம் , ஆந்திர , தெலங்கானா கர்நாடகா  தமிழ் நாட்டிலும் தலா  ஒரு லட்சம் பேர் மதமற்றவர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். 
                தமிழ் நாட்டில்தான் பெரியார்  1879 -1973  ல் சுமரியாதை பிரசாரம் செய்தார் என்றால் மற்ற மாநிலங்களில் யார் செய்தார்கள். ?
சரியான முறையில் பதிவு செய்தால் இந்த எண்ணிக்கை உயரும். 
              WIN – Gallup – 2012 லிருந்து செய்த பதிவில் இந்தியாவில் 3%  மக்கள் நாத்திகர்களாகவும் 3%  எதுவும் சொல்ல விரும்பாமலும் இருகிறார்கள்.      81 %  இந்தியர்கள் மத  நம்பிக்கை 
உள்ளவர்களாகவும்  13 %  இந்தியர்கள் எந்த மதத்தையும் சேராதவர் களாகவும் இருக் கிறார்கள். 
              மதமற்ற ஆனால் இறை நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக  மதச்சன்டைகள் ஒழியும் போட்டிகள் மறையும் நாடு நலம்பெரும் !!!!

இடஒதுக்கீட்டு கொள்கையை ஒழித்துக்கட்ட பா ஜ க – ஆர் எஸ் எஸ் கூட்டு சதி!!?? குஜராத்தில் படேல் சமூகத்தின் போராட்ட பின்னணி என்ன?? மறைந்திருக்கும் உண்மைகள் !!!????

                  இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினாலும் குஜராத்தின் படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல் தலைமையில் நடத்தும் போராட்டத்தின் உண்மை நோக்கம் இட ஒதுக்கீடு கொள்கையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதே!
                படேல் சமூகத்தினர் வசதி மிக்கவர்கள்.   முற்பட்ட சமூகத்தினர் என்று வகைப் படுத்தப்பட்டவர்கள் . 
               திடீரென்று பத்து லட்சம் பேரைக் கூட்டி ஒன்று இட ஒதுக்கீட்டிலிருந்து நாட்டை விடுவிப்போம் ! அல்லது எல்லாரையும் இட ஒதுக்கீட்டின் அடிமைகள் ஆக்குவோம் ! என்று குரல் கொடுப்பதன் நோக்கம் வெளிப்படையாக தெரிகிறது. யாருக்கும் கிடைக்கக் கூடாது இட ஒதுக்கீடு சலுகை!!
               தனக்கு தொடர்பு இல்லாதது போல் காட்டிக் கொள்ள ஆர்.எஸ் எஸ் முயற்சித்தாலும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.   மூன்றில் ஒரு பங்கு  பா ஜ க சட்ட மன்ற உறுப்பினர்கள்  பட்டிதார்கள்  என்கிற படேல்கள் .   .பா ஜ க விற்கு எதிரான போராட்டமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.    
                 பொது கோட்டாவிலும் இடம் பெறுகிற வர்களுக்கு தனியிடம் ஏன் ??? இதுதான் அவர்கள் வைக்கிற வாதம். 
பொது கோட்டா என்று ஒன்றில்லை.      பொதுப்போட்டி என்றுதான் இருக்கிறது.     பொதுபோட்டியில் தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் போட்டியிட என்ன தடை?      தகுதி படைத்தவன் போட்டியிடுகிறான் .    தகுதி மறுக்கப் பட்ட இதர பிரிவினர் சலுகை  கோருகிறார்கள் ..
இதில் என்ன முரண்பாடு? 
                தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தில் உள்ளது.  மாற்ற முடியாது.      மற்றவர் இட ஒதுக்கீடு பின்னால் வந்தது.       ஆனால் அடிப்படை ஒன்றுதான் .       சமூக , கல்வி ஆகிய இரண்டின் அடிப்படையில் பிற்பட்ட தன்மை. ஆம்.   நீ தாழ்த்தப்பட்டவன் , நீ பிற்பட்டவன்  , உன்னுடைய இடம் இது , மற்றவர்களுடைய இடம் அது என்றெல்லாம் சமுதாயத்தையே பிரித்துப்போட்ட வேத விதிகளை சட்டமாக வைத்திருந்த  காலம்.   நீ படிக்கக் கூடாது , படித்தால் நாக்கை அறுப்பேன்  வேதத்தை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவேன் என்றெல்லாம் எழுதி வைத்து அடக்கி ஒடுக்கி வைத்திருந்த காலம். எனவேதான்   சமூக கல்வி தன்மையை மட்டும் அடிப்படையாக அரசியல் சட்டம் வகுத்து ஒதுக்கீடு வழங்கியத. 
                              பொருளாதார ரீதியில் அல்ல. இருந்தாலும் உச்சநீதி மன்றம் கிரீமிலேயர் என்கிற பசையுள்ளவர்கள் என்ற அடிப்படையில் பிற்பட்டோரில் உள்ளவர்களே கூட ஒதுக்கீடு உரிமை இல்லாதவர்கள் என்று தீர்ப்பு அளித்தது..     
                         ஐம்பது சதத்துக்கு மேல் ஒதுக்கீடு கூடாது என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு  கூட தமிழ் நாட்டில்   69  % என்ற அளவில் ஆண்டாண்டு இடங்களை அதிகப் படுத்தி அமுல்படுத்தப் பட்டு வருகிறது. 
                     வி. பி. சிங் மண்டல கமிஷன் பரிந்துரைப்படி  27 % ஒதுக்கீடு செய்ய முனைந்த போதும் இதே போல்தான் போராட்டம் வெடித்தது என்பது மறக்க முடியாது. 
                    மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் கூட எல்லாருக்குமே அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து விடலாம் என்கிறார்கள். 
                   இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அவர்கள் . கவனிக்க தவறுகிறார்கள்.
                    சாதியை உறுதி செய்ய எல்லா  சாதிகளும் வேற்றுமை மறந்து  ஒன்றுபடுவதை  தடுக்க எல்லாருக்கும்  சாதி அடிப்படையில் ஒதுக்கீடு தவிர வேறு ஆயுதம் அவர்களுக்கு கிடைக்காது.    நம் கையை வைத்து நம் கண்ணை குத்தும் கலை இது என்பதை தவிர வேறு என்ன?. 
                    ஒர்வேளை   சாதி நீடிக்க வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் வேண்டுமானால் எல்லாருக்குமே சாதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க விரும்பலாம். 
                     ஹர்திக் படேல் குஜ்ஜார் இனத்தவரையும் சேர்த்துக் கொண்டு போராட திட்டமிடுகிறார்.   எல்லா முற்பட்ட சமூகத்தவரையும் இணைத்து ஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணை க்கிறார்.     இதற்கு ஆர் எஸ்  எஸ் துணை போகிறது.   
                ஏனென்றால் அப்போதுதானே தலையில் பிறந்தவர்கள் முதல் நிலையில் நீடித்து குருவாக கோலோச்சி ஆன்மிக பீடங்களை அலங்கரிக்க முடியும்.   கீழே இருப்பதற்கு யார் போட்டியிட்டால் அவர்களுக்கு என்ன/ ?
                    
                 இவ்வளவு பேசுகிறார்களே ஒதுக்கீடு என்ன விளைவுகளை ஏற்படுத்தியி ருக்கிறது  என்று ஏன் இவர்கள் ஆய்வு செய்து முடிவை வெளியிட மறுக்கிறார்கள்.    அரசியல் சட்டத்தில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறதே?
               வர்ணாசிரம தர்மம்  நிலைக்க பாடுபடும் யுத்தத்தின் ஒரு பகுதிதான் படேல்களின் போராட்டம்.     அதை வெற்றி பெற அனுமதிக்க கூடாது.  
                 ஜனநாயக நெறிமுறைகளின் படி நடக்கும் போராட்டம் அல்ல இது.            இருந்தால் பேச்சு வார்த்தைக்கு 
உடன் பட்டிருப்பார்களே? 
                 காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் ஒதுக்கீடு பிரச்சினை முன்னுக்கு வருவது முதலில்  வி பி சிங் ஆட்சிக்காலத்திலும் இப்போது நரேந்திர மோடி ஆட்சிக்காலத்திலும் தொடர்கிறது..    
                சதியின் ஆணிவேரை கண்டறிந்து களைவோம்??!!!!

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் காப்பாற்றப்பட்டது !!! மருத்துவ மனையாக மாற்றும் ஜெ. அரசின் உத்தரவு ரத்து?! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு??!!!

               ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன்  கலைஞர் திறந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்ற உத்தரவிட்டிருந்தார்.   அதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்து வைத்திருந்தது. 
                   5.4   லட்சம் புத்தகங்களுடன் மிகப் பெரிய நூலகத்தை வேண்டுமென்றே மருத்துவ மனையாக மாற்ற முயற்சித்ததே  கண்டிக்கத்தக்கது.   உடனடியாக  ஆணையர் அமைத்து பார்வையிட்டு அரசு செய்த அலங்கோலங்களை தெரிந்த பின் ஆணையர்கள் தெரிவித்து இருந்த கருத்துகளை நிறைவேற்றிட உத்தரவிட்ட நீதிபதிகள் அமுல்படுத்திய அறிக்கையை அடுத்த மாதம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர் . 
                  கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் இன்றி நூலகமே பாழ் பட்டு போய் இருக்கும் நிலையில் இனியாவது   அரசு கடமையை செய்யுமா ?  அல்லது மேல்முறையீடு செய்து தனது மக்கள் நலன் காணா வெறுப்பை உமிழுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். 
                   தேர்தல் வரும் காலம் என்பதால் மேல்முறையீடு செய்யாது  என்பதை எதிபார்க்கலாம்.
                      ஜெயலலிதா இனியாவது தன் போக்கை மாற்றிக் கொள்வாரா?
                    நீதிமன்றத்தின்  குட்டு வாங்குவது இந்த அரசுக்கு வழக்கமான ஒன்றாகி விட்டதே?!!!!

போராட்டம் போதும் ! ஜெயலலிதா அறிவிப்பு! இதுவரையில் நடந்த அராஜகம் ஜெயலலிதா சொல்லித்தானா???? சட்ட ஒழுங்கை சீர்குலைத்தது தமிழக அரசே ???!!!


                 ஈ வி கே எஸ் இளங்கோவன்  கொடும்பாவி எரிப்பு காங்கிரஸ் அலுவலகங்கள்  மீது  தாக்குதல் , என்று கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும்  ரணகளம் ஆனது. 
                மோடி- ஜெயலலிதா சந்திப்பு பற்றி இளங்கோவன் சொல்லியது ஆட்சேபகரமானது என்றே வைத்துக் கொள்வோம்!!!       50  நிமிடங்கள் என்ன பேசினார்கள் என்று கேட்பது வேறு.    தனிமையில் என்ன செய்தார்கள் என்று கேட்பது வேறு!   
                  அதற்குத்தான் அரசை விட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்தாகி விட்டதே!   பிறகு ஏன் தமிழகம் ஸ்தம்பிக்க வேண்டும்?   
               தேசீய அளவில் இந்த ஆர்பாட்ட செய்திகள் பிரபலம்!   சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே ஆர்ப்பாட்டங்களை தூண்டலாமா? 
               தொடங்கிய உடனே முதல்வர் அறிக்கை விட்டிருக்க வேண்டும்!    ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக எல்லா நகரங்களிலும் அ தி மு க வி னர்  அராஜகங்களை நிறைவேற்றிய பின்னர் இன்று அறிக்கை விடுகிறார் ‘ போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் ??!!!     அப்படியானால் இதுவரை நடந்தது எல்லாம் நீங்கள் சொல்லித்தானா? 
              இதுவரை மௌனம் காத்து வேலை முடியட்டும் என்று 
காத்திருந்தீர்களா?
                 சாதனை என்று ஏதாவது இருந்தால் எல்லாரையும் பயத்தில் வைத்திருந்தது தானோ? 

சாதியத்திடம் தோற்றுகொண்டிருக்கும் இந்துத்துவம்! தலித்துகளின் தேரை எரித்த சாதி வெறி! மௌனம் காக்கும் இந்து அமைப்புகள்!!!????


               விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் சேஷசமுத்திரம்  கிராமத்தில் தலித்துகள் தாங்கள் பகுதியில் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் கொண்டு சென்று வந்தததற்கு பதிலாக தேர் ஒன்று செய்து அதில் ஊர்வலம் நடத்த முடிவு செய்தார்கள்.       சாதி இந்துக்கள் நடத்தும் திருவிழாவில் தங்களுக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர்கள் எடுத்த இந்த முயற்சிக்கும் சாதி இந்துக்கள் தடை விதிக்கவே காவல் துறையின் அனுமதியோடு  திருவிழா நடத்த துணிந்திருக்கிறார்கள்.
                    பௌத்த மதம் மாறப்போவதாக அவர்கள் அறிவித்த பிறகு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கொடுக்க முனைந்திருகிறது.     அதையும் மீறி தேரையும்  தலித்துகளின் வீடுகளையும் பெட்ரோல் குண்டுகள் வீசி தீக்கிரையாக்கி இருக்கிறர்கள் சாதி வெறியர்கள். 
                     முடிவில்லாமல் தொடரும் இது போன்ற வக்கிர சம்பவங்கள் காட்டும் உண்மை என்ன???  
                      இந்து மதம் என்று சொல்லப் படுகின்ற சனாதன மதம் என்கிற வர்ண தர்ம மதத்தில் சாதி ஒற்றுமை என்பது கானல் நீரே என்பதுதானா ?
                   இதைப் பற்றிப் பேசி ஒற்றுமை ஏற்படுத்தவோ தவறு செய்கிறவர்களை கண்டிக்கவோ மதத் தலைவர்களோ சாதித் தலைவர்களோ எந்த அரசியல் தலைவர்களுமோ யாரும் தீவிரமாக  இல்லை என்பது தான் உண்மை. 
                      ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை சந்திக்க யாருமே தயாராக இல்லை. 
                    அரசுகளும் பாராமுகமாகவே செயல் படுகின்றன . சென்னை உயர்நீதிமன்றம் கூட சாதி ஒற்றுமையை ஏற்படுத்த முடியாவிட்டால் திருவிழா நடத்த அனுமதி தராதீர்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது என்றால் நிலைமை எவ்வளவு கேவலம்.. 
                     ஆதிக்க சக்திகளின் இடமும் இந்து மதத்தில் கேவலம்தான். . இவர்களுக்கு பிராமணர்கள்  பூசை செய்யும் கோவில்களில் பூசை செய்ய அனுமதி கிடையாது. வன்னியர்கள் தங்களை அக்னி குண்டத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று இந்து புராணங்களைத்தான்  துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். 
               இந்து என்று அழைத்துக் கொள்கிறவர்கள்  சாதிக்கு தாங்கள் மதத்தில் அல்லது வழிமுறையில்  என்ன இடம் என்று விவாதித்து விடை காண முயற்சிக்க வேண்டும்.    கண்டும் காணாமலும் இருக்கிற இந்த பிரச்சினையை  விரைவில் தீர்க்கா விட்டால் தமிழர் ஒற்றுமையும் நிரந்தரமாக பாதிக்கப் படும் .    என்ன செய்யப் போகிறோம்????

பூமிக்கடியில் ஓடும சரஸ்வதி நதியைக் கண்டெடுக்க பா ஜ க அரசுகள் முனைப்பு!!! மூடநம்பிக்கைக்கு கஜானாவை காலி செய்வதா? நீதிமன்றங்கள் தலையிட வழி உண்டா???

            புராண இதிகாசங்களில் குறுப்பிடப்படும் சரஸ்வதி நதிக்கு புத்துயிர் கொடுக்க பா ஜ க ஆளும் ராஜஸ்தான் அரியானா அரசுகள் முனைப்புக் காட்டுகின்றன. 
               ராஜஸ்தான் மாநில நதிக்கரை மற்றும் நீர் வளத்திட்ட ஆணையத் தலைவர் ஸ்ரீராம் வேதிரே  இந்த தகவலை கூறினார். 
             ராஜஸ்தான் மாநில அரசு சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கும் பணியை நதிக்கரை மற்றும் நீர் வளத்திட்ட ஆணையத்திடம் ஒப்படைதுள்ளதாம்.   இஸ்ரோ, மத்திய நீர்  வள வாரியம் மாநில நிலத்தடி வாரியம் தேசீய நீரியல் மையம் ஆகியவற்றுடன் சரஸ்வதி நதி குறித்து மேற்கொள்ளப் போகும் ஆணையம் இணைந்து செயல் படுமாம். 
                  சரஸ்வதி நதியை கண்டறிவதற்கான பணியை அரியானா அரசு சரஸ்வதி நதி பாரம்பரிய வளர்ச்சி வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி யுள்ளது. தற்போதும் நிறைந்து ஓடும சிந்து நதிக்கு இணையாக உள்ள பாலைவனப் பகுதி முற்காலத்தில் சரஸ்வதி நதியாக ஓடி அரபிக்கடலில் கலந்ததாக நம்பப் படுகிறது என்றும் வேதிரே  தெரிவித்தார். 
                     ஓடும நதிகளை கவனிக்க  மத்திய அரசுக்கு நேரம் இல்லை.   இதில் இல்லாத  நதியை தேடி எத்தனை கோடிகளை செலவழிக்கப் போகிறார்களோ?   
                      இதை மூட நம்பிக்கை என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது. ?        அரசு பணம் விரயம் ஆவதை தடுக்க நீதி மன்றம் தலையிட முடியாதா? 
                    மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு விட்டு எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று யார் சொல்வது?   
                 பெரும்பான்மை இருந்தால் இப்படி அறிவுக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்வதற்கு அதிகாரம் உண்டா?   
                ரொம்ப தப்பான  வழியில் போகிறது பா ஜ க.!!!!   
              எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!!!!!

தாதுமணல் கொள்ளையில் அரசு காட்டும் மெத்தனம் காட்டும் உண்மை என்ன??? பிரமிக்க வைக்கும் தகவல்கள் !!!!

                                தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சட்ட விரோதமாக அபூர்வ ரக தாதுக்களான கார்னெட் , சிர்கான், ருடைல், மாக்னசைட் போன்ற ஆயிரக்கணக்கான கோடிகள் பெருமானமுள்ள தாது மணலை வி வி மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ் வேர்ல்ட் கார்ணட் இந்தியா கம்பெனி இரண்டும் தோண்டுவதை ஆய்வு செய்ய ககன் தீப் சிங் பேடி ஐ ஏ எஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை  2013  செப்டம்பரில் அரசு அமைத்தது.   

                              இந்த விசாரணையைதான்   உயர் நீதி மன்ற நீதிபதி டி.ராஜா தள்ளுபடி செய்ததுடன் இந்த விசாரணையை வினோத் குமார் சர்மா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நடத்தவும் உத்தரவு இட்டிருந்தார். 
                            இதற்கு முன்பு நீதிபதி சி. எஸ் கர்ணன் , இந்திய சுரங்க மையத்தின்  (  Indian bureau of Mines )  இரண்டு கம்பனிகளின் உரிம  ரத்து ஆணைகளை தனது  32  தீர்ப்புகளில் ரத்து செய்திருந்தார். 
அதுவும் மத்திய அரசின் வாதங்களை கேட்காமலும்   மத்திய அரசின்  மையம் தனது எதிர் வாதுரையை தாக்கல் செய்யும் முன்பும். 
                           இந்த இரண்டு உத்தரவுகளையும் உயர்நீதிமன்ற பெஞ்ச் நிறுத்தி வைத்தது. பல்வேறு இலகாக்களில் இருந்து  230  பேர் பணியாற்றும் வேலையில் விசாரணையின் தலைமை அதிகாரி மட்டும் ஏதும் செய்து விட முடியாது என்று வாதிட்ட அரசின் நிலைபாட்டை பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. 
                        30,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்றும் ஏறத்தாழ ஆண்டுக்கு 30,000  கோடி வருவாய் பாதிக்கப் படும் என்றும் வி வி மினரல்சின் இயக்குனர் சுப்ரமணியன்  கூறியிருக்கிறார்.   
                     ஜெயலலிதா அரசு  பொறுப்பேற்ற உடனே தாது மணலை ஏன் அரசே ஏற்றுமதி செய்யக் கூடாது என ஆய்வு செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பின் இறுதி நிலை என்ன என்பது தெரியவில்லை. 
                      இந்த தாதுக்கள் தான் கடல் அரிப்பை தடுக்கும் சக்தி வாய்ந்தவை என்றும் இந்த மணல் அள்ளும்நடவடிக்கைகளால் கடல் நீர் கிராமங்களில் புகுந்து குடிநீரை பாழ் படுத்தி விடுகின்றன என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
               வேலை வாய்ப்பு இழப்பு  ,   ஆயிரக்கனக்கான கோடிகளில் லாபம் என்கிறார்களே அதை  அரசுக்கு கொண்டு  வர ஏன் முயற்சிக்கவில்லை?    
                டாஸ்மாக் மூலம் மக்களின் எதிர்காலத்தை   பாழாக்கி விலையில்லா பொருட்கள் வழங்கி விலையில்லா அறியாமையை வளர்க்கும் தமிழக அரசு தாது மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். 
                     கொடுமை என்னவென்றால் நீதிமன்ற தடையையும் மீறி தாது மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுவதுதான் !!!!    
                        அப்படிஎன்றால் உண்மைக் குற்றவாளிகள் யார்???