Home Blog Page 114

சிலை திருட்டு வழக்கில் இயக்குனர் சேகர் கைது??? உறுதிப்படுத்த பட வேண்டிய தகவல்கள் ! அதிர்ச்சி தரும் உண்மைகள்!!!


                    குடும்பப் பாங்கான படங்களை எடுத்துப் புகழ் பெற்ற ஒரு நல்ல இயக்குனர் சிலை திருட்டு வழக்கில் கைதாவார் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 
                  அவரே கூட தன்னை சந்தித்த சினிமா துறையினரிடம் தான் குற்றவாளியல்ல என்றே கூறியிருக்கிறார். 
                  பிணை மனு அனுமதிக்கப்படும் பட்சத்தில் வெளியே வந்துதான் அவரது வாக்குமூலம் உலகுக்கு தெரியும். 
              ஓரளவு நல்ல நிலையில் வாழும் இயக்குனர் சேகரைப் போன்றவர்கள் தகாத நபர்களுடன் வைத்திருந்த தொடர்பு அவரை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டதா?   அவரது கலைக்கூடத்தில் குற்றாளிகள் கூடி சதி செய்து பல கோயில்களில் உள்ள சிலைகளை திருட சதி செய்தார்கள் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. 
               கலைச்சின்னங்களை  திருடும் கும்பலோடு அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுதிப்படுத்த  முயற்சித்து வருகிறோம் என டி ஜி பி பிலிப் கூறியிருக்கிறார்.   உறுதிப்படுத்தாமலா கைது செய்திருக்கிறார்கள்???
             மும்பையை சேர்ந்த வியாபாரிகள் மூலமாகவேதான் புராதன சிவ ஆலயங்கள் பற்றிய விபரங்களை சேகரித்த தாக சேகர் வாக்குமூலம் அளித்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். 
               இப்போதைக்கு பிடிபட்ட ஒரு குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. 
                
                          குற்றம் செய்தார் என்பது இறுதியில் நிரூபணம் ஆனால் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட ஏழ்மைதான் காரணம் என்பது அடிபட்டுப் போகும்.         சமுதாயத்தின் கேடுகளை ஆய்வு செய்பவர்கள் கூட கேடுகள் செய்யத் துணிய தயங்க மாட்டார்கள் என்பதற்கு சேகர் கைது சான்றும்  ஆகிவிடும். மாறாக கைதுக்கு காரணம் வெறும் சந்தேகமே என்பது உறுதிப் படுத்தப் பட்டால் காவல் துறையின் நடைமுறைகள் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் !!! 

உழைக்காமலேயே பிழைக்கும் கலையை கற்றவர்கள் ராகுல்காந்தி குடும்பம்?!!! அருண் ஜெட்லி தாக்கு!!!! பரஸ்பர குற்றச்சாட்டுகளால் நாற்றமெடுத்த பாராளுமன்றம் !!!!!!!


                       பாராளுமன்ற மக்களவை ஒதுக்கபட்ட நேரத்தில்  48% மும் மேலவை 9 % மும் மட்டுமே வேலை செய்திருக்கிறது. 
                        பாராளுமன்றம் நடத்த ஒரு நிமிடத்துக்கு  Rs. 30,000  செலவாகிறது. கடந்த  19 வருடங்களில் 2,163  மணி நேரம் வீணடிக்கப் பட்டிருக்கிறது. எனவே தடங்கல் இல்லாமல் பாராளுமன்றம் இயங்க ஒரு வழிகாட்டு முறைகளை வகுத்து தர கோரி  உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தக்கலாகி இருக்கிறது. 
                        குழாயடிச் சண்டை அளவுக்கு பாராளுமன்ற விவாதம் இருந்திருக்கிறது.    
                       லலித் மோடிக்கு சிபாரிசு செய்ததில் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று ராகுல் நேரடியாக சுஷ்மா ஸ்வராசைப் பார்த்துக் கேட்க ‘ போய் உங்கம்மாவிடம் கேள். எவ்வளவு பணம் குவாத்ரோசியிடம் இருந்து வந்தது என்று ” என சுஷ்மா பதிலுக்கு முழங்க வாரன் அன்டர்சன் என்ற போபால் விஷ வாயு வழக்கில் சம்பத்தப்பட்டவரை திருட்டுத்தனமாக அமெரிக்க அனுப்பி விட்டு அதற்கு பதிலாக நேரு குடும்பத்துக்கு வேண்டிய முகமது யூனுஸ் மகன் அடில் ஷா என்பவரை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரவில்லையா எனவும் பதில் கேள்வி எழுப்ப சபை விவாத மன்றமாக இல்லாமல் வசைபாடும் மன்றமாக மாறிப் போனது . 
                   ஒரு கட்டத்தில் காங்கிரஸ் விவாதங்களை அனுமதிக்க மறுப்பதில் தனிமைப் பட்டு போனது.
                     பாராளுமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது.    இந்த அளவு தரம் தாழ்ந்து தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டும் சம்பவங்கள் இதுவரையில் நடந்தது இல்லை .   
                    எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக  அருண் ஜெட்லி  சொன்னார் ,  ‘ இன்னமும் நாணயமான பல மனிதர்களின் குழந்தைகள் வாழ்வதற்கு என வேலை செய்துதான் பிழைக்கிரார்கள். 
ஆனால் பல தலைமுறைகளாக இந்த நாட்டின் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் மட்டும் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ததே இல்லை. வேலை செய்யாமலேயே எல்லா வசதிகளுடனும் வாழ்வதை ஒரு கலையாகவே அவர்கள் கற்றிருக்கிறார்கள்.   நமக்கு அது தெரியவில்லை. ”   என்று நேரடியாகவே ராகுல் சோனியா குடும்பத்தை குற்றம் சாட்டினார். 
                     இவர்கள் போட்ட சண்டையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டதும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறுவது தள்ளிப் போனதும் தான் நடந்தது. 

நெய்வேலி யில் மத்திய மாநில அரசுகள் காட்டி வரும் மெத்தனம் காரணமாக உற்பத்தி பாதிக்கும் அபாயம்! மின்வெட்டு வரும் ஆபத்து.!! தனியார் மயமாக்க சதியா???


              நெய்வேலியில் உற்பத்தியாகும்  1450  மெகவாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு 40 %..     
              ஜூலை மாதம் 20 ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் நிரந்தர தொழிலாளர்கள்  12,000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.    2012  ஜனவரியில் புதுப்பித்திருக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 30  முறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவேதும்  ஏற்படாமல்  போகவே அறிவிப்பு கொடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 
                தி மு க ஆட்சிகாலத்தில்  1997 ல்  60 % ஊதிய உயர்வும்  2007 ல் 25 % ஊதிய உயர்வும் ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.   
               இப்பொழுது பத்து சதத்துக்கு மேல் உயர்வு கிடையாது என்று நிர்வாகம் பிடிவாதம் பிடிப்பதால் பிரச்சினை வளர்ந்து கொண்டே போகிறது.        
                1500  கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் நிறுவனத்தில்
 தொழிலாளர்களுக்கு  ஒரு நீதி நிர்வாகத்துக்கு ஒரு நீதி என ஊதிய உயர்வில்  பாரபட்சம்  கடைபிடிக்கப் படுவது ஏன் ? 
                உயர்நீதிமன்றம் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்திருப்பது சரிஇல்லை என்பதோடு ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினையிலும் நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது. 
                ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து நிர்வாகம் சமாளித்து வந்த நிலையில்   2013 ல் ஒப்பந்த தொழிலாளர்கள்  52   நாள் தொடர் வேலைநிறுத்தம் செய்ததற்கு தொ மு ச செயலாளர் திருமாவளவன் தான்   காரணம் என குற்றம் சுமத்தி  2015 ல் அவரை திடீரென பணி நீக்கம் செய்ததன் நோக்கம் என்பது புதிராக இருக்கிறது. 
              ஏற்கனவே  மோடியின் ஆட்சி தனியார் நிறுவனங்களின் ஏஜெண்டு போல் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் லாபம் தரும் நெய்வேலி அனல் மின் நிலையத்தையும் நட்டத்தில் வீழ்த்தி அதையே காரணம் காட்டி தனியார் மயமாக்கும் ரகசிய திட்டம் வேலை செய்கிறதோ என்ற அச்சத்தையும் அனைவர் மத்தியிலும் நிரவாகத்தின் போக்கு உருவாக்கியிருக்கிறது. 
             முதல்வர் ஜெயலலிதா சென்ற மாதம் 23 ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாக நிலக்கரித் துறை அமைச்சர் இதில் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கேட்டு கொண்டார்.   இதுவரை பதில் இல்லை. 
             பிரதமர் சென்னை வந்து ஜெயலலிதா வீட்டில் விருந்து உண்டபோது அளிக்கப் பட்ட  21   கோரிக்கைகள் அடங்கிய மனுவிலும் நெய்வேலி  பிரச்சினை இடம் பெற வில்லை. 
               இரண்டு நாட்களுக்கே நிலக்கரி  இருப்பு இருக்கும் நிலையில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது. 
                 தமிழக அரசும் மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினையில் மெத்தனம் காட்டுவதும் தொழிலாளர் தலைவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் நிலைமையை மோசமாக்கவே உதவும். 
                ஒருவேளை அவர்கள் திட்டமிடுவதும் அதுதானோ?

மதத்தின் பேரால் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம்!! ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தீர்ப்பு !! தமிழ்நாட்டில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நிறுத்துவது எப்போது???

                  சமணர்கள் என்கிற ஜைனர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கும் வழக்கத்தை சாந்தரா என்றும் சுலோகானா என்றும் அழைக்கிறார்கள்.    அது தங்கள் மதம் அனுமதிக்கிற படியால் தற்கொலை அல்ல என்றும் உரிமை என்றும் வாதிட்டு வந்தனர். 
                இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த உரிமை பற்றி மனித உரிமை ஆர்வலர் தொடுத்த வழக்கில் சமணர்களின் சாந்தரா பழக்கம் தற்கொலை முயற்சிதான் என்றும் ஆதரிப்பவர்கள் தூண்டும் குற்றத்தை புரிபவர்கள் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 
            மேலும் அரசியல் சாசனம் வாழ்வதற்கான உரிமையை வழங்கி உள்ளது.          மதத்தை ப் பின்பற்றும்  25  வது பிரிவு வாழ்வுரிமைக்கு கட்டுப்பட்டதுதான் என்றும் தொன்மையானது என்பதாலேயே அதை அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். 
             இன்னமும் தலையில் தேங்காய் உடைக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
         இன்னமும் உடன்கட்டை ஏறுவதை கூட மதத்தின் பேரால் நியாயப் படுத்துவோர் இருக்கலாம். 
          மதத்தின் பேரால் தொடரும் அர்த்தமற்ற சடங்குகளை நிறுத்தும் நேரம் வந்து விட்டது.    
         நேபாளத்தில் ஒரே நேரத்தில்  5000  எருமைகளை கொன்று குவிக்கும் மத சடங்கு நிகழ்ச்சியை அந்த நாட்டு அரசு சமீபத்தில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. 
             தமிழ்நாட்டில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.  அரசு தலையிடுமா?   அல்லது பக்தர்களுக்கு பயந்து ஒதுங்குமா???

சாமியாரிணி ராதே தன்னை ‘ மா ‘ என அழைத்துக்கொள்ள தடை கேட்டு வழக்கு!! ? போபாலில் வழக்கறிஞர் தொடர்ந்தார்!!!! அரசியல் அம்மாக்களை , தாய்களை, என்ன செய்வீர்கள்????

               ”  சாமியாரிணி ராதே தன்னை ” ராதேமா” என்று அழைத்துக்கொண்டு சீடர்களையும் அப்படியே பிரசாரம் செய்ய தூண்டுகிறார் . அது எங்களது மத உணர்வுகளை காயப்படுத்துகிறது.தன்னை கடவுள் அவதாரம் என அழைத்துக் கொள்வதும் தவறு. . தன்னை கடவுள் எனவும் அம்மா என அழைத்துக் கொள்ளவும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” என கோரி போபால் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்து அதில் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியிருக்கிறது. 
                ஆர்.கே. பாண்டே என்ற அந்த வழக்கறிஞர் என்ன நோக்கத்திற்காக அந்த வழக்கை பதிவு  செய்தார் என்பதை ஆராய வேண்டும்.   
             உண்மையிலேயே போலிகளை ஒழிக்கும் நோக்கில் வழக்கா அல்லது பிராமணர் அல்லாதவர் ஆன்மிக உலகில் ஆட்சி செய்ய வருவதை தடுக்கும் முயற்சியா என்பதை ஆராய வேண்டும். 
               ராதே மா தன்னுடன் எப்போதும் ஒரு அடி நீள திரிசூலத்தை விமான பயணத்தின் போதுகூட கையில் ஏந்தி செல்வாராம்.
              
              போலி சாமியர்களை அடையாளம் காணும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டா என தெரியவில்லை.  நாட்டில் ஆயிரக்கணக்கான சாமியார்கள் உலவுகிறார்கள்.   ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கில் சீடர்கள். அரசு என்ன செய் முடியும். ?
               குருமார்கள் பொருள் ஆசை இல்லாதவர்களாக சமுதாய சிந்தனை உள்ளவர்களாக இருந்தால் வரவேற்கலாம்.    பெரும்பாலானவர்கள் அப்படி இல்லையே!!!  
              பொதுவாக பிராமணர்கள்  அல்லாதவர்களை குருமார்களாக ஏற்றுக் கொள்வது அரிதிலும் அரிது.   மேல்மருவத்தூரிலும் வேலூரிலும் பிரசித்தி பெற்று விளங்கும் ஆதி பராசக்தி பீடமும் சக்தி பீடமும்  பிராமணர் அல்லாதவர்களை பீடாதிபதிகளாக உயர்த்திப் பிடித்தாலும் அவர்களை கடவுளுக்கு இணையான ” அம்மாவாக” பேசப் படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். இத்தனைக்கும் இருவரையும் ” அம்மா ” என்றுதான்அழைக்கிறார்கள். .               ஏனென்றால் இருவரும் தங்களுக்கு சக்தி உண்டு என்று சொல்லாமல் அங்கே நிலைநாட்டபட்டிருக்கும் இறைவிக்குத்தான் சக்தி உண்டு என்றே சொல்கிறார்கள். 
                கேரளாவில்  மா ஆனந்தமயீ பிறப்பில் மீனவராக இருந்தாலும் உயர்த்திப் பிடிக்கப் படுவதிலும் நிர்வாகத்திலும் பிராமணர்கள் இருக்கிறார்கள். 
                      இடம் ,மொழி ,வகுப்பு எதுவாக இருந்தாலும் ஒன்றில் மட்டும் எல்லாரும் ஒன்று சேருகிறார்கள்.  அதுதான் பண ஆதிக்கம். 
செல்வத்தை குவிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இந்த ஆன்மிக மையங்கள் எந்த ஆய்வுக்கும் ஆட்படாமல் பாமரர்களையும் நம்பிக்கையாளர்களையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார்கள். 
                    எல்லாம் சரி.  ஆன்மிகத்தில் அம்மா என்று அழைத்துக்கொண்டு எங்களை ஏமாற்றக் கூடாது என்று வழக்கு போட்டவர் கள்.  அரசியலில்  உலவும் , அம்மாக்களை ,வரலாற்றுத் தாய்களை தடை செய்யக் கோருவார்களா????   கோர முடியுமா???   

லலித் மோடியிடம் பணம் வாங்கினாரா சுஷ்மா சுவராஜ் ??? ராகுல் காந்தி குறிப்பிட்டு குற்றம் சாட்டியும் மவுனம் காப்பதின் பொருள் என்ன?


             நாடாளுமன்ற முடக்கத்திற்கு லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவும் வசுந்தராவும் உதவிய குற்றச்சாட்டு முக்கியமானது. 
              அதில் உண்மை இருக்கிறதா என்பது ஒரு புறம இருக்க சுஷ்மா குடும்பம் நீண்ட கால தொடர்பு வைத்திருந்த லலித் மோடி குடும்பத்திலிருந்து வாங்கிய பணம் எவ்வளவு என்றும் அதன் வங்கி  கணக்கு விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அதுவரை நாடாளுமன்றம் இயங்க அனுமதிக்க முடியாது என்றும் ராகுல் திரும்ப திரும்ப கோரி வருகிறார். 
                அவதூறு சுமத்தும் ராகுல் மீது சுஷ்மா வழக்கு தொடுக்க உரிமை இருக்கிறது.  இருந்தும் சுஷ்மா அமைதி காக்கிறார். 
                   ராகுலிடம் கணக்கு விபரங்கள் இல்லாவிட்டால் குறிப்பிட்டு குற்றம் சாட்ட மாட்டார் என்பது தெரிகிறது.   
                 இதில் பொறுப்பற்றவர் யார் குற்றவாளி யார் என்பது பொது மக்களுக்கு தெரிய வேண்டும். 
                 தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு சுஷ்மா எப்படி சிபாரிசு செய்தார் என்ற குற்றச்சாட்டு விவாதிக்கப் பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது.  
               பா ஜ க வின் முன்னணி  தலைவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோசமான விளைவுகளை கட்சி சந்திக்க நேரிடும் என்றாலும்  உண்மையை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. 
               நிலைமையை மோசமாக்கும்  விதமாக நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கும் லலித் மோடியிடம் நெருக்கம் இருந்தது என்று கபில் சிபல் குற்றம்  சாட்டி  சான்றுகளை அடுக்குகிறார்.  
              தெளிவு படுத்த வேண்டியது பா ஜ க அரசின் கடமை???
               
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஜெயலலிதா – மோடி சந்திப்பு உணர்த்தும் உண்மை என்ன ? கூட்டணிக்கு அச்சாரமா? திசை திருப்பும் உத்தியா? சனாதனிகளின் அரசியல் சதியா?

             ஜெயலலிதாவுக்கு உடல் நலமில்லை என்று அவரே அறிக்கை வெளியிட்டு அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த இயலாமல் போனதாக கூறியிருந்தார்.   
             ஆனால் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை விமான நிலையத்தில் வரவேற்றதுடன் நில்லாது பொது நிகஷ்ச்சியில் மோடி கலந்து கொண்டு விட்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவரை  வரவேற்று  அவருக்கு  விருந்தளித்து   21  கோரிக்கைகள் கொண்ட மனுவையும் கொடுத்து தனது உடல் நலத்தை வெளிப்படுத்தினார் . 
                எல்லார மனதிலும் கூட்டணிக்கு ஆச்சரியமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாது.    அதே நேரத்தில் மதுரையில் பேசிய
 பா ஜ க தலைவர் அமித் ஷா தமிழகத்தில்  ஊழல் முதல் இடம் பிடித்திருக்கிறது என்று பேசியிருக்கிறார்.     அதே சொத்துக் குவிப்பு  ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு ,விடுவிக்கப்பட்டு மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் சந்திக்க இருக்கும் ஜெயலலிதா அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் அவரை மோடி தேடிச்சென்று சந்திக்கிறார் என்றால் அதற்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று யாராவது சொன்னால் அது பொய் .
              ஜெயலலிதா சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்.   அவரை இந்து ஆதரவு சக்தியாகத்தான்  பா ஜ க பார்க்கிறது.    1998 ல்   தீண்டத்தகாத கட் சியாக இருந்த பா ஜ க வோடு கூட்டணி வைத்து  அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா.         
            
                வாஜ்பாய் தனது கோரிக்கைகளுக்குஇணங்க வில்லை என்றதும்  13   நாட்களில் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஆட்சியை கவிழ்த்ததும்   அந்த சூழ்நிலையில் குறைந்த பட்ச செயல் திட்ட நிபந்தனையின் அடிப்படையில் கலைஞர் பா ஜ க வோடு கூட்டணி வைத்து அடுத்த ஆட்சி அமைய வழி வகுத்தார். 
             இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா ஜ க வின் ஆதரவு பல வழிகளிலும் ஜெயலலிதாவுக்கு தேவை.      பா ஜ க வுக்கும்  தமிழ் நாட்டில் வேரூன்ற ஜெயலலிதாவின் ஆதரவு தேவை.   சனாதன தர்மத்தை நிலை நாட்ட பகுத்தறிவு இயக்கமாம் தி மு க வை பலவீனமாக்க ஜெயலலிதா கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் பா ஜ க ஆதரவு நிலைப்பாடு. 
                ஆனால் தமிழக மக்கள் இவர்களின் சதிகளை அடையாளம் கண்டு கொள்ள இயலாதவர்களா என்ன?   
                  அகற்றப்ட வேண்டிய ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி என்ற கருத்து உடையவர்கள் , குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில்  ஒன்று பட வேண்டிய தருணம் இது.     
                 மாறாக ஆட்சியில் இல்லாத தி மு க வின் கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்டி பேசுபவர்கள் உண்மையில் ஜெயலலிதாவின்  எதிர்ப்பு சக்திகளை பிரிக்கும் வேலையில் தெரிந்தோ திட்டமிட்டோ  இறங்கியிருக்கிறார்கள் என்றுதான் பொருள் . 
    
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்டு !!! பா ஜ க அரசின் அடக்கு முறை நியாயமானதா???

                ராஜ்ய சபையில் பெரும்பான்மை இல்லாததால் பல சட்டங்களை இயற்ற முடியாமல் பா ஜ க அரசு தவித்து வருகிறது.

              காங்கிரசும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சுஷ்மா ஸ்வராஜ்  ம பி முதல்வர் சிவராஜ் சிங் சவுஹன் , ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் ராஜினாமா செய்தால்தான் பாராளுமன்றத்தை நடத்த விடுவோம் என்று  ரகளை செய்து வந்தது. 
               மாநில முதல்வர்களை அவர்கள் மீதி என்னதான் குற்றச்சாட்டு இருந்தாலும் போதிய விசாரணை இல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ராஜினாமா செய்யக் கோருவதும் அது சம்பந்தமான அவர்களது விளக்கங்களை கோரிப் பெறாமல் விவாதம் நடத்த வேண்டும் என்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. 
                  இந்நிலையில்   25  உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அவையை நடத்த முடிவு செய்து சபாநாயகர் உத்தரவிட்டு அதன் பின் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 
                இந்த நடை முறை சரிதானா?     காங்கிரஸ் ஆண்ட போது
 பா.  ஜ .க வும் இதே நடைமுறையை பின்பற்றிதான் குற்றம் சாட்டப் பட்டவர்கள்  பதவி விலக நிர்பந்தித்து. வந்தது. 
               அதே நிபந்தனையை இப்போது காங்கிரஸ் முன் வைப்பதால் பா ஜ க வும் திணறுகிறது. 
                எவர் மீதும் முதல் தகவல் அறிக்கை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 
              1989  ல்  63  எம் பி க்கள் , சஸ்பென்ட் செய்யப் பட்டதை நாயுடு மேற்கொள் காட்டுகிறார்.      2013 ல்  ஆகஸ்டு மாதத்தில்  12  பேர் ஐந்து நாட்களுக்கும் , 2012 ல் எட்டு பேர் நான்கு நாட்களுக்கும் ,  2013 அக்டோபர் மாதத்தில்  9  பேர் ஐந்து நாட்களுக்கும் , 2014 பெப்ரவரியில்  16 பேர் ஐந்து நாட்களுக்கும் இடை நீக்கம் செய்யப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.   
               பாராளுமன்றம் என்பது விவாதம் செய்யத் தானே தவிர முடக்குவதற்கான அமைப்பு அல்ல. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நாகா பிரிவினை வாதிகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்!!! விபரங்கள் வெளியிடப் படவேண்டும்! ஆனால் சோனியாவின் ஆட்சேபனையில் அர்த்தமில்லை!!!

                   மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் , அஸ்ஸாம் மாநிலங்களில் பெரும்பாலான நாகர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து நாகர்களுக்கு தனி நாடு கேட்கும் பிரிவினைவாத இயக்கங்கள்  இந்தியா ராணுவத்துடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்தன.   

                நாகா தேசிய சோஷியலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் இசாக் மூய்வா தனிப்பெரும் தலைவர்.     அவருடன்  மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்த கொண்டிருப்பது மிகப்  பெரிய மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். 
               ஆனால் மியன்மாரில் மறைந்து வாழும் கப்லாங் குழு இன்னமும் அச்சுறுத்தலாகவே நீடிக்கும். 
              ஒப்பந்தத்தின் விபரங்களை மத்திய அரசு வெளியிடாதது  பல சந்தேகங்களை உருவாக்கும் .   
             வடகிழக்கு மாநில முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த ஒப்பந்தம் உருவானது ஏற்கத்தக்கதல்ல என்று சோனியா காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற செயலாகவே தோன்றுகிறது. 
           அமைதியை மோடி அரசு கொண்டு வந்து விட்டதே என்ற ஆதங்கம் இருந்தால் அதை இப்படி வெளிப்படுத்தி தனது பலவீனத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டாம். . 
              எதில்தான் அரசியல் செய்வது என்று ஒரு வரை முறை கிடையாதா???
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

பிச்சைக்காரர்களுக்கு பாட்டுப்பாடும் வேலை தரும் மத்திய அரசு?

            அரசின் திட்டங்கள் மக்களிடம் போய் சேர பிரசாரம் செய்வதற்காக நல்ல குரல் வளம் உள்ள 3000 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு தூய்மையான இந்தியா  , பெண் குழந்தைகளை காப்போம்  படிக்க வைப்போம் போன்ற திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்து , ரயில்களில் இவர்கள் பிரசாரம் செய்ய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்  ஈடுபட்டுள்ளது. 
             இவர்கள் பாட்டுப்பாடி பிச்சை எடுப்பார்களா?  அல்லது பாட்டு மட்டும் பாடுவார்களா? 
             பிச்சை எடுக்காமல் பாட்டு மட்டும் பாடுவார்கள் என்றால் பரவாயில்லை. 
             பழக்க தோஷம் காரணமாக பிச்சை எடுத்தால் அதை ஊக்குவிக்கும் குற்றத்தை மத்திய அரசு செய்வது ஆகாதா? 
              நோக்கம் நல்லது என்றாலும் நடைமுறையில் பிச்சை எடுப்பதை வளர்த்தால் அது தேசிய அவமானம் என்பதில் என்ன சந்தேகம்? 
             முதலில் மும்பையிலும் பின் நாடு முழுக்கவும் அமுல் படுத்த உத்தேசிக்கபட்டிருக்கும் இந்த திட்டம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ ???   
            வேறு வேலை கிடைக்காமல் பாட்டுப் பிச்சைக்காரர்கள் அதிகமாகும் ஆபத்துதான் அதிகம்!!!!!
– 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)