Home Blog Page 115

தாக்குப்பிடிக்குமா டாஸ்மாக் கடைகள்??? எத்தனை கடைகளுக்கு போலீஸ் போடுவீர்கள்??? மதுவிலக்கு போராட்டம் தீவிரம் அடைகிறது?!!!

                 சசிபெருமாள் மதுவிலக்கு போராட்டத்தில் மரணம் அடைந்த பிறகு தமிழ் நாட்டில் மதுவிலக்கு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
              கலைஞர் மதுவிலக்கு கொண்டுவருவேன் என்றதும் எல்லாருமே போட்டி போட்டுக் கொண்டு மதுவிலக்கு கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள். 
             அதிக பட்சமாக திடீரென்று இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என்பதுதான் எல்லார்  கோரிக்கையும். 
              இனிமேல் ஜெயலலிதா அமைதி காக்க முடியாது.   வைகோ வின் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப் பட்டது. 
பல ஊர்களிலும் இதுபோல் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது என்றால் எத்தனை கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.?
              ஊராட்சி தீர்மானம் போட்டால் ஏன் அந்த ஊரில் கடை போடவேண்டும் ? 
               குடிக்க வருபவன் சட்டப்படி வந்து குடித்துவிட்டு திரும்பிப் போகும்போது மோட்டார் சைக்கிளில் போனால் குற்றவாளி ஆகிறான்!   இது முரண்பாடில்லையா???
             கேரளாவில் உள்ளதுபோல் வீட்டுக்கு வாங்கிச்சென்று வீட்டில் குடிக்கட்டும்.
              பார்களை முதலில் ஒழிக்கட்டும்!    நேரத்தை பாதியாக குறைக்கட்டும்!   கடைகளின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல குறைக்கட்டும்!   ஊராட்சிகள் , வார்டுகள் , தீர்மானம்  போட்டால் அங்கு திறக்க வேண்டாம் !   இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மதுவிலக்கை நோக்கி அரசு நடை போட வேண்டும்.    இது காலத்தின் கட்டாயம்.    கலைஞர் உணர்ந்து கொண்டார்.  ஜெயலலிதாவும் உணர்ந்து கொண்டால் நல்லது.   இல்லாவிடில் தனிமைப் படுத்தப் படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தற்கொலை தமிழன் பண்பாடா?? அப்துல் கலாம் மறைவிற்கு உயிர் அஞ்சலி செலுத்திய தமிழன் சுப்பிரமணி ?! இந்த விபரீதப் போக்கை தடுத்து நிறுத்த என்ன வழி???

            தமிழர்கள் உணர்வு மிக்கவர்கள்!     ஆனால்  உணர்வு மிகுதியால்  அறிவைப்  பின்னுக்குத் தள்ளுவதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. . .   
             நாடே திரண்டு அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தியது சுப்ரமணியின் மனதை வருத்தியது.    திருவாரூரை சேர்ந்த போரூரில் வேலை  செய்து வந்த அந்த  27  தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்த  உயிரை விட்டுவிட்டான்.   அவன் குடும்பம்தான் பரிதவிக்கும்.   நாமும் ஏங்குகிறோம்?  
                       இந்தப் போக்கு சரியா?   இதை எப்படி தடுத்து நிறுத்துவது?   
                 யார் சிறைக்குப் போனாலும் , யார் இறந்தாலும் , யார் கைது செய்யப் பட்டாலும் கூடவே  இறப்பது  தமிழன் தலை விதியா?
                முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தியதில் ஒரு நியாயம் இருந்தது.    சக உதிரங்கள் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப் பட்ட  நிலையில் அது கையறு நிலையின் வெளிப்பாடு.  இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தார்கள். வரலாற்றில் இடம் பெற்றார்கள். 
                ஒப்பிடமுடியாத சூழல் அது .  
                இந்த அவலம் தடுத்து நிறுத்தப் பட்டே ஆக  வேண்டும். .
       நாளையே யாரும் கைது செய்யப் பட்டால் சிறை வைக்கப் பட்டால் , மரணம் அடைந்தால்  இந்த இழப்பும் அவலமும் அவமானமும் தொடரக் கூடாதே !!!!

சசிபெருமாள் மரணம் தமிழக அரசு நடத்திய அலட்சியக் கொலை? காரணமானவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்! மதுவிலக்கு அமல் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் !!!!!

                     தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கே உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார் சங்கரலிங்க நாடார்.  மதுவிலக்கும் அவரது போராட்டத்தின் ஒரு பகுதி. 
                     30.05.2014 லேயே  , பள்ளி  கல்லூரி அருகில் டாஸ்மாக் கடை இருப்பதை அகற்ற மதுரை உயர்நீதி  மன்றம் உத்தரவிட்டும் , அரசு அதிகாரிகள் அகற்ற மறுத்தது ஏன்?        உண்ணாவிரதம் இருந்தும் பயனில்லாமால்தான் தீக்குளிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்..   இவரும் பா ஜ க நிர்வாகி ஜெயசீலன் என்பவரும் செல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 
                   காவல் துறை இருந்தும் அவர்களை ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்த விட்டு வேடிக்கை பார்த்ததன விளைவு சசிபெருமாள் ரத்த வாந்தி  எடுத்து இறந்திருக்கிறார். 
                     இரண்டு குற்றம் நடந்திருக்கிறது.   ஒன்று நீதிமன்றம் கடையை அகற்ற உத்தரவிட்டும் நடைமுறைப்படுத்தாத குற்றம்.   அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். நீதிமன்றமே தானாக முன் வந்து இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                 இரண்டாவது அவர் சாகும் வரை போராடும் அளவுக்கு தூண்டியது. அது தற்கொலை என்று கூட சொல்வார்கள்.    அதற்கு தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை .? அதுவும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே!!!
              கலைஞர் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று அறிவித்த  பிறகு தமிழகத்தில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.    யாரும் மதுவுக்கு  ஆதரவாக பேசி இனி மக்களிடம் வாக்கு வாங்கி வெற்றி பெற முடியாது என்ற நிலை  உருவாகிவிட்டது.
                 உடனே மதுவிலக்கை அறிவித்து , செய்த குற்றங்களுக்கு இப்போதாவது தமிழக அரசு பிராயச்சித்தம் செய்து கொள்ளட்டும்.  
  comments may also  be addressed to; vaithiyalingamv@gmail.com

முருகன் ,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை தாமதமாவது ஏன் ? காங்கிரசின் அடிச்சுவட்டில் பா.ஜ.க.?/

              உச்சநீதிமன்றம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் தூக்கு தண்டணை கிடையாது என்றும் ஆயுள் தண்டணை மட்டுமே என்றும் தீர்ப்பு செய்தது ,மத்திய அரசு சார்பில் செய்யப்பட்ட  curative petition  ஐ தள்ளுபடி செய்தது மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.   
              இப்பொழுது இருக்கும் ஒரே கேள்வி ஆயுள் தண்டணை என்பது  14  ஆண்டுகளா அல்லது ஆயுள் வரைக்குமா  என்பதும் அதை முடிவு செய்வது மாநில அரசின் அதிகாரமா அல்லது மத்திய அரசின் ஒப்புதலுடனா என்பதும் மட்டும்தான்.  
              சி.பி.ஐ சம்பத்தப்பட்ட வழக்குகளில் மாநில அரசு தண்டணை குறைப்பு செய்ய முடியுமா என்பதும் நிலுவையில் உள்ளது. அந்த பெஞ்ச் தீர்ப்பு வர எத்தனை நாளாகும் என்பது தெரியாது.   அந்த விசாரணையை விரைவு செய்ய வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. 
                 அவசரப்பட்டு ஜெயலலிதா சட்டமன்றத்தில் மத்திய     
அரசு  ஒப்புதல் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வோம் என்று அறிவித்து மத்திய அரசு உச்சநீதி மன்றம் செல்ல வழி வகுத்தார். 
               அப்படி இல்லாமல் இம்முறையாவது அவர்கள் விடுதலை பெற எந்த தடையும் ஏற்படா வண்ணம் செயல்பட்டு அவர்கள் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு உண்மையாகவே முயற்சிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்கள் வேண்டுகோள்.    
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

அப்துல் கலாமுக்கு வரலாறு காணாத அஞ்சலி!!! யாகுப் மேமனுக்கு தூக்கு!!! இதுதான் இந்தியா !!!!


              பாரத     ரத்னா  அப்துல் கலாம் மறைந்ததை ஒட்டி இன்று அவர் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.  பிரதமர் மோடி உட்பட நாடே திரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டுஇருக்கிறது.    பட்டி தொட்டியெங்கும் அவரது படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். 
            மாணவர் களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே மரணம். யார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் எப்போதும் திருகுரானையும் திருக்குறளையும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கேசட்டுகளையும் வைத்திருத்தல் ,இவை மூன்றும் அவரது அடையாளம்.
                வல்லரசு என்பது வெறும் அணு ஆயுதங்களோடு பொருள் கொள்ளாமல்  கல்வி இளைஞர் நலம் போன்றவற்றில்  தன்னிறைவு , பெற்று விட்டாலே வலிமையான அரசுதான் என்பதை வலியுறுத் தியவர்  .   இவர் ஒரு முஸ்லிம்.  
              மும்பை குண்டு விடுப்பில் 257  உயிர்களை காவு வாங்கிய சதி வழக்கில் கைதாகி தூக்கு தண்டணை வழங்கப் பட்ட யாகுப் மேமனுக்கு இன்று தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்டது.  கார்களில் ஆர் டி எக்ஸ் ரக வெடிமருந்துகளை நிரப்பி நகரின் பல்வேறு இடங்களில் வெடிக்கச் செய்து அப்பாவி  மக்கள்  கொல்லப்பட காரணமாக இருந்தவர்.   சதியில் ஈடுபட்டதை  ஒப்புக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்.  மற்ற 
சதிகாரர்களா ன தாவூத் இப்ராஹிமும் இவரது அண்ணன் டைகர் மேமனும் கராச்சியில் வாழ்ந்து வருகின்றனர். இவரும் முஸ்லிம்தான்.
               இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் ஆனால்  வேறு வேறு சேதிகளை சொல்லுகின்றன. 
               உண்மைக்கும் உழைப்புக்கும் எப்போதும் மரியாதை உண்டு.  
அதேபோல் வஞ்சகத்திற்கும்   கொலைக்கும் எப்போதும் தண்டணை உண்டு. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ராகுல் தவறவிட்ட வாய்ப்பு ! சென்னை வந்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பேசாதது ஏன்? குற்ற உணர்வா???

              ஈழக்கனவைத் தகர்த்து பிரபாகரன் படுகொலைக்கு சோனியா ,ராகுல் ,பிரியங்கதான் காரணம் என்றும் ராஜீவ் படுகொலைக்கு நடந்த பழிவாங்கல் ஒண்ணரை லட்சம் தமிழர்களை காவு கொண்டது என்றும் தமிழர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்ட கருத்து.  
                இலங்கைப்போரில்   இந்திய அரசின் பங்கு தொடர்ந்து மறுக்கப் பட்டு வந்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை.    
                கூட்டணி அரசில் பங்கு வகித்ததால் தி மு க வும் அந்தப் பழியில் பங்கு போட நேர்ந்தது;.
                    அகாலிகளுக்கு எதிராக  பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டு பின் அவரை தங்கக் கோவிலுக்குள் கொன்றதால் கொல்லப்பட்டவர் இந்திரா காந்தி. 
                    பழிவாங்குகிறோம் என்று எண்ணாயிரம் சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் கொன்றார்கள். 
                     பின் அதே சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோஹனை பிரதமராகவும் ஆக்கினார்கள். 
                    விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தவர் இந்திரா.   அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொன்றவர் ராஜிவ்காந்தி.   
                       எந்தவிதத்திலும் ராஜீவ் கொலையை நியாயப்படுத்த முடியாது.        விசாரணையே  முற்றுப் பெறவில்லை.    அது வேறு. .    ஆனால் ஈழத் தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள். ?
                      செய்த குற்றத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற 
உணர்வு  ஏன் வரவில்லை?    
                    போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் நிருபர்கள் கேள்வி கேட்டபோது ,இலங்கை பிரச்சினை ஒரு” ஸ்மால் மேட்டர் ” என்று பதில் அளித்தவர் ராகுல் காந்தி. 
                     சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமா? 
                      நடந்தது இருக்கட்டும்.   இலங்கைத்தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப் பாடுபடுவோம் என்று சொல்லக் கூட முடியவில்லையா?   
                     அவசரநிலையை பிரகடனப்படுத்தி ய தற்காக  சென்னைக் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டவர் இந்திராகாந்தி.   
                           குறைந்தது தங்கள் மீது  கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என்று மறுக்கக் கூட மனமில்லையா?
                       தமிழர்கள் உணர்வு மங்கிப் போனவர்கள் என்ற நினைவு இருந்தால் தவிர இவ்வளவு அலட்சியம் காட்டி இருக்க மாட்டார் ராகுல். 
                      இங்குள்ள தலைவர்களுக்கும் அதைசொல்லிக் கொடுக்க மனமில்லையா?   அல்லது பயமா>?
                        தனி விமானத்தில் வந்தார் பேசினார் சென்றார்!!!!
                       கலைஞர் மதுவிலக்கு பற்றி பேசியதால் புதிய மதுக் கொள்கை கொண்டு வரப படும் என்றார். 
                      எந்தவிளைவையும்  ஏற்படுத்தாமல் எதற்கு வந்தார் என்பதே தெரியவில்லை. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

இந்துக்களுக்கு எதிரான இந்து முன்னணியின் கோரிக்கை..?? நுழைவுக் கட்டணத்தை ரத்து செய் என்பது அர்ச்சகர்களுக்கு ஆதரவானது தானே..!!

           பக்தர்களே, உண்டியலில் காசு போடாதீர்,  அர்ச்சனை சீட்டு வாங்காதீர் , நுழைவுக் கட்டணம் செலுத்தாதீர்  , அர்ச்சகர்களிடம் மட்டும் தட்சிணை செலுத்துங்கள் என்று நேரடியாக சொல்லுவதற்கு பதிலாக , அரசே நுழைவுக்கட்டணம் வாங்காதே என்று இந்து முன்னணி போராட்டம் நடத்தி உள்ளது. 
             பக்திக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இந்து முன்னணி எந்த காலத்திலும் முன் வந்ததில்லை. 
             அப்படி சொல்ல முயன்றால்  99 %  நம்பிக்கைகள் அடிபட்டுப் போய் விடும் என்ற பயம்.      இன்று வருமானம் வரும்  அத்தனை கோயில்களும் பிராமணர் கட்டுப் பாட்டில்தான் இயங்கி வருகின்றன.    தமிழுக்கு அங்கே இடமில்லை.   சம்ஸ்க்ருதம் மட்டுமே அர்ச்சனை மொழி.   வழிபடும் தமிழர்கள் காதைப் பொத்திக் கொண்டு தேமே என்று நம்பிக்கையோடு வழிபட்டு விட்டு தட்சினையை   மட்டும் சிரத்தையோடு செலுத்தி விட்டு வருகிறார்கள். 
              அரசின் கட்டுப் பாட்டில் இந்து ஆலயங்கள் இருப்பதால் ஓரளவுக்கு பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு கோவில் நிர்வாகத்தில் பங்கு உள்ளது.    
            எனவேதான் அரசே ஆலயத்தை பிராமணர்களிடம் ஒப்படை என்பதற்கு பதிலாக , அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று இந்து முன்னணி குரல் கொடுத்துக்  கொண்டிருக்கிறது. 
             பெரும்பான்மை மக்களை அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாகவே அவர்களை அடக்கி  ஆளும் தந்திரத்தை இந்து முன்னணியை நடத்தும் பிராமணர்கள் சாமர்த்தியமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 
             ஆனால் அதற்கு பெரும்பான்மை இந்துக்கள் இரையாக வில்லை என்பதும்  அதற்கு  பெரியாரும் அண்ணாவும் விதைத்து வைத்த சுயமரியாதை உணர்வு தான் காரணம்  என்பதும் மறக்கக் கூடாத உண்மை. 
            சூழ்ச்சி ஒருபோதும் வெற்றி பெறாது.  
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நாக்கை வெட்டுவாராம் எம். பி.சுந்தரம்!!! ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேசினால்? நாடு எங்கே போகிறது????

           ராசிபுரத்தில் பேசிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேசுபவர் நாக்கை வெட்டுவோம் என்று பேசியதாக தொலைக்காட்சி செய்தி கூறுகிறது. 
             அது உண்மை என்றால் நாடு எங்கே போகிறது என்ற கவலை பிறக்கிறது. 
           சமீப காலமாக ஜெயலலிதா உடல்நிலை பற்றி பலவிதமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதைப்பற்றி  விளக்கம் சொல்ல வேண்டிய தமிழக அரசு மௌனம் காப்பதால் பலரும் பல விதமாக  கருத்து தெரிவிக்கும் நிலை உளது.  
             இதை தடுக்க வேண்டியது யார் கடமை??/    அரசு  மௌனம் காப்பது சரியா?    முதல்வர் பொது ஊழியர். .  பொதுமக்களுக்கு அவரைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. 
           ஆனால் கண்டபடி  ஆதாரம் இல்லாமல் எழுத காரணமாக  இருப்பது யார்? 
            அரசு அறிக்கை வெளியிட்டு இதற்கு முற்றுப்  புள்ளி  வைக்க வேண்டும். 
             சுந்தரம் போன்றவர்கள் இதுபோல் பொறுப்பற்று பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

கூட்டணி வைக்க அமைச்சரவையில் இடம் கேட்கும் கட்சிகள்!! நிபந்தனைகளின் உள்நோக்கம் என்ன?

           அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல்.      இப்போதே களை கட்டிவிட்டது தேர்தல் திருவிழா !!!
             தி மு க வுக்கு மக்கள் விரோத, பெரியார் அண்ணா கொள்கைகளுக்கு மூடு விழா நடத்தும் ஜெயலலிதாவின் அ தி மு க வை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் ஒரே நோக்கம் . 
               தமிழகத்தில் திமுக அணி ,அதிமுக அணி தவிர்த்து இரண்டையும் எதிர்க்கும் புது உருவம் எடுத்திருக்கும் பா.ம. க  ,சீமானின் நாம் தமிழர் கட்சி என்று; பல அணிகள் களத்தில். 
               ஒரு தேர்தலில் தேமு தி க தனித்து நின்றதால்   21    இடங்களில் அ தி ம க வென்றது. காரணம் அ தி மு க எதிர்ப்பு ஓட்டை பிரித்தல். 
               அதே வலை இப்போதும் பின்னப் படலாம். அதற்கென தனியாக கூலி கிடைத்தால் வேண்டாம் என்பவர்கள் எத்தனை பேர்?                   திருமாவளவன்  ஜவாஹரில்லா , இப்போது காங்கிரசின் இளங்கோவன் ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடன் கூட்டணி.???
                ஒன்பது மாதங்களுக்கு முன்பே கூட்டணியின் தன்மை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?   
               யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை இருக்கும் பட்சத்தில் வெற்றி பெற என்ன வியூகம் என்பதில் அக்கறை செலுத்தாமல் கூட்டணியை பலவீனப் படுத்தும் விதத்தில் என்ன பேசினாலும் அதற்கு அர்த்தம் ஒன்றுதான்.   இவர்கள் நோக்கம் வேறு????
              கலைஞர் திறந்த மனதுடன் இருக்கிறார்.     தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் பேசினால்தான் நல்ல முடிவை எடுக்க முடியும்.   வியூகத்தை இப்போதே வெளிப்படுத்துவது பலவீனமாக் கிவிடும் அல்லது எதிரியை மாற்று திட்டம் தீட்ட இடம் கொடுத்தது போல் ஆகி விடும்  என்பது இவர்களுக்கு தெரியாதா???
               இவர்களில் ஒருசிலர் , அதிமுக வின் திட்டப்படி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதற்கு திட்டமிட்டு துணை போகிறவர்கள் என்ற முத்திரையை எதிர் காலத்தில் சுமப்பார்கள். 
               நிறைய திருப்பங்களை எதிர் நோக்கி இருக்கிறது அடுத்த பொதுத்தேர்தல்.  
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஏரிகளை ஆக்ரமிக்கும் குற்றம் தொடர யார் காரணம்? போரூர் ஏரி நடுவில் ரோடு போடும் பொதுப் பணித்துறை ? பசுமை தீர்பாயம் தடை????

             சென்னை போரூர் ஏரியில் நானூறு ஏக்கர் காணாமல் போய் விட்டது.  இருப்பது  330   ஏக்கர் மட்டும்தான்.      நடுவில் மண் கொட்டும் பணியை பொதுப் பணி துறை செய்ததால் ஒருவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை கேட்டதை அடுத்து தற்காலிக தடை உத்தரவு கிடைத்திருக்கிறது. 
               1987  வாக்கில் எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு போரூர் ஏரியில் நிலம் ஒதுக்கப் பட்டதாக தெரிகிறது. 
              அரசே பல ஏரி புறம்போக்குகளை பேருந்து நிலையங்களாகவும் மருத்துவ மனைகளா கவும்  மாற்றியிருக்கிறது. 
            பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம்  பலவிதமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. 
             கலைஞர் ஆட்சி காலத்தில் Tamilnadu Protection of Tanks and  Eviction of Encroachment Act 2007  நிறைவேற்றப் பட்டது. 
              ஏரிகளை ஆக்ரமிப்பவர்களும் பொதுமக்கள்தான் .    ஏதோ அரசுக்கு மட்டும்தான் பொறுப்பு இருப்பதாக குற்றம் சாட்டுவதில் பொருள் இல்லை.   சக பொதுமக்கள் தடுக்க முனைந்தால் ஆக்கிரமிப்புகள் உருவாக மாட்டா. 
             மக்களின் விழிப்புணற்சியே ஆக்கிரமிப்புகளை தடுக்கும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)