Home Blog Page 116

ஏரிகளை ஆக்ரமிக்கும் குற்றம் தொடர யார் காரணம்? போரூர் ஏரி நடுவில் ரோடு போடும் பொதுப் பணித்துறை ? பசுமை தீர்பாயம் தடை????

             சென்னை போரூர் ஏரியில் நானூறு ஏக்கர் காணாமல் போய் விட்டது.  இருப்பது  330   ஏக்கர் மட்டும்தான்.      நடுவில் மண் கொட்டும் பணியை பொதுப் பணி துறை செய்ததால் ஒருவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை கேட்டதை அடுத்து தற்காலிக தடை உத்தரவு கிடைத்திருக்கிறது. 
               1987  வாக்கில் எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு போரூர் ஏரியில் நிலம் ஒதுக்கப் பட்டதாக தெரிகிறது. 
              அரசே பல ஏரி புறம்போக்குகளை பேருந்து நிலையங்களாகவும் மருத்துவ மனைகளா கவும்  மாற்றியிருக்கிறது. 
            பல உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம்  பலவிதமான தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. 
             கலைஞர் ஆட்சி காலத்தில் Tamilnadu Protection of Tanks and  Eviction of Encroachment Act 2007  நிறைவேற்றப் பட்டது. 
              ஏரிகளை ஆக்ரமிப்பவர்களும் பொதுமக்கள்தான் .    ஏதோ அரசுக்கு மட்டும்தான் பொறுப்பு இருப்பதாக குற்றம் சாட்டுவதில் பொருள் இல்லை.   சக பொதுமக்கள் தடுக்க முனைந்தால் ஆக்கிரமிப்புகள் உருவாக மாட்டா. 
             மக்களின் விழிப்புணற்சியே ஆக்கிரமிப்புகளை தடுக்கும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

முதல்வர் அலுவலகம் வருவதற்கு போஸ்டர் பேனர்களா ? ஜெயலலிதாவுக்கு நடக்கும் கூத்து தெரியாதா? தடுக்காவிட்டால் நடத்துபவரே அவர்தான் என்றே பொருள்/!!!!!!


            ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சில நாட்களாக செய்திகள் உலவி வருகின்றன.  ஆனால் அரசு அதை உறுதி படுத்த வில்லை.   கலைஞரும்  அவர் ஒய்வெடுத்துகொள்ள அறிவுரை வழங்கி இருந்தார். 
              இந்நிலையில் நேற்று தலைமை செயலகம் வந்தார் ஜெயலலிதா மதியம் மணி 1.07 க்கு.  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 1006 நபர்களில்  5  பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.    பகல் 1.47  க்கு வீடு திரும்பினார் .   அலுவலகத்தில் இருந்தது வெறும்   40    நிமிடங்கள்.  
               இதற்கு காமராஜர் சாலை முழுவதும் வரவேற்பு பேனர்கள் , சங்கத் தலைவர்கள் வரவேற்பு ,வாழ்த்து கோஷங்கள் , கூடுதல் போலீஸ் பாதுகாப்பு. 
                முதல்வர் என்பவர் முதல் பணியாளர் .   அலுவலப் பணி செய்யத்தான் மக்கள் தேர்ந்து எடுத்திருக்கிரார்கள்.      உடல் நிலை சரி இல்லை என்றால் ஓய்வெடுத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. 
               ஆனால் நாற்பது நிமிடம் பணி செய்வதை கொண்டாட மக்கள் இருப்பது நாட்டுக்கு பெருமை சேர்ப்பது ஆகாது.  இதைவிட அசிங்கம் வேறு இல்லை. 
              ஜாலரா கூட்டங்களை ஒழித்தால்தான் நாடு மேம்படும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

மெட்ரோ ரயில் சென்னையில் துவக்கம்!!! ஜெயலலிதா தடுக்க முடியாத கலைஞர் துவங்கிய திட்டம்!!!! விரிவு படுத்தினால் நெரிசல் குறையும்!!!!!!

2006 ல்    திமுகவின்  தமிழக அமைச்சரவை விவாதித்து திட்ட அறிக்கை தயாரிக்க டெல்லி  மெட் ரோவிடம் பொறுப்பை ஒப்படைத்து அந்த அறிக்கைக்கு  07.11.2007 ல் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து ,  03.12.2007 ல் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் பதிவு செய்து,  21.11.2008 ல் மத்திய அரசும் ஜப்பான் அரசும் டோக்கியோவில் ஒப்பந்தம் போட்டு அதற்கு 28.01.2009 ல் மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் கொடுத்து 10.06.2009 ல் மு.க. ஸ்டாலினால் திட்டப் பணிகள் துவங்கி வைக்கப் பட்டு 15.02.2011 ல் மத்திய அரசு , மாநில அரசு, மற்றும் மெட்ரோ கம்பனிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இறுதியாக 29.06.2015 ல் ஜெயலலிதாவால் துவங்கி வைக்கப் பட்டது.

metro-train-chennai-1கலைஞர் காலத்தில் துவங்கி ஜெயலலிதா காலத்தில் முதல் கட்ட போக்குவரத்து தொடங்கியது என்றால்  சரிதான். அதே சமயத்தில் கலைஞர் காலத்தில் தொடங்கிய சமச்சீர் கல்வி, தலைமை செயலக கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் செம்மொழிப் பூங்கா போன்றவற்றை நிறுத்த முயற்சிததைப் போல் மேட்ரோவிற்கு மாற்றாக மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா முன்னெடுத்தார்.       ஆனால் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்க வில்லை.  காலத்தின் கட்டாயம் மெட்ரோ ரயில் வந்தே விட்டது.    அதில் கட்டண குறைப்பு விரிவாக்கம் போன்ற நிறைய பணிகள் காத்துக் கிடக்கின்றன.   இந்நிலையில்  திமுகவிற்கும் இந்த திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று ஜெயலலிதா அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன<????

பெருந்தன்மை ஆட்சியாளர்களுக்கு அவசியம்.  மற்றவருக்கு உரிய பங்கை அளிப்பதில் அரசியல் செய்வது,தன் மதிப்பை தானே குறைத்துக்கொள்ள முற்படுவது போலாகும்.  முதலீட்டளவில் மற்ற மெட்ரோக்களை  விட சென்னை மெட்ரோ அதிக முதலீடு செய்திருக்கும் என்பது  உண்மைதான். ஆனால் அதற்காக அதிக கட்டணம் கொடுக்க சென்னை வாசிகள் கடமைப் பட்டவர்கள் அல்ல.

பங்குதார் என்ற அடிப்படையில் கட்டண சமத்துவம் நிலவ செய்வதில் அரசுக்கு உரிய பொறுப்பை எடுத்துரைத்து கட்டண குறைப்பு செய்து முதல் வகுப்பை ஒழித்து அவசியமான சீர்திருத்தங்களை செய்தால்  சென்னை மக்கள் நன்றி சொல்வார்கள்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
vaithiyalingamv@gmail.com

முல்லைபெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் ஆபத்து என அ தி மு க அரசு கூறுவது நியாயமா? யார் மீது பழியை போட திட்டம் ???

                 அணையின் பாதுகாப்பிற்கு கேரளா அரசு செய்யும் பாதுகாப்பு செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.    ஆனால் ஆய்வுக்கு செல்லும் தமிழக அதிகாரிகளை கேரளா போலீசார் அடிக்கடி தடுத்து நிறுத்துவதால் தொழிலக  பாதுகாப்பு படையின் வசம அணையை விட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 
                கேரளா அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசு தானே அதை செய்ய மறுத்து விட்டது. 
                பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மீண்டும் மனு செய்த தமிழக அரசு உளவுத் துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி அணைகளை தகர்த்து மின் உற்பத்தி நிலையங்களை தகர்த்து பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த ஜெய்ஷ் இ முகமது , லஷ்கர் இ தொய்பா  இந்தியன் முஜாஹிதீன் , மற்றும் வ்டுதலை புலிகளின் ஆதரவாளர்களால் திட்டமிடப் பட்டு வருவதாக அறியப்படுவதால் அணையின்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனுவில் கூறியிருப்பதுதான் பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது. 
                  தமிழக அணைக்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எப்படி காரணமாக இருப்பார்கள்.?.    விடுதலை புலிகள் அழிக்கப் பட்டாலும் அதன் ஆதரவாளர்கள் செயல் பாட்டில் இருபதாக கூறும் இந்திய அரசின் உளவுத் துறையின் அறிக்கையை தமிழக அரசு தனது அரசியல் திட்டங்களுக்காக அதை முல்லைபெரியார் அணைப பிரச்சினையில் பயன் படுத்த முனைந்தது எதனால்? 
                     நாளை கேரளா அரசின் சதியால் யாராவது அணைக்கு சேதம் ஏற்படுத்தினால் அந்த பழியை இங்குள்ள தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகளின் மேல் போட்டு அவர்களை ஒடுக்க மத்திய அரசின் துணையோடு மாநில அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே?   
                       இங்கு எல்லாமே அரசியல்!!!     கேரளாவின் முதல்வர் உம்மன் சாண்டியும் எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தனும் சேர்ந்து போய் பிரதமர் மோடியை பார்க்கின்றனர்.    அந்த ஒற்றுமை தமிழகத்தில் வரும் நாள் எந்நாளோ அந்நாளே நன்னாள் . 
                       மொத்தத்தில் அ தி மு க அரசின் கூற்று அபத்தம்.!!!! 
                   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

கோகுல்ராஜை கொன்றது சாதி வெறியர்கள்? கவுரவக் கொலைகளை தடுக்கக்கூடிய தனிச்சட்டம் தேவை!!!!

               ஓமலூர் என்ஜினியர் கோகுல்ராஜ்  என்பவர்பின் உடல் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தது.    அவர் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.   அவருக்கும் கவுண்டர் வகுப்பை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததாகவும் அதனால் பெண்ணின் வகுப்பை சேர்ந்தவர்கள் அந்தப் பையனைக் கொன்று தண்டவாளத்தில் போட்டு விட்டதாக கூறி சில நாட்களாக பல போராட்டங்கள் நடந்தன. 
                    இப்போது இந்த வழக்கு சம்பந்தமாக ஆறு பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  
—               விசாரணையில் கோவிலுக்கு வந்த காதல் ஜோடியை  சின்னமலை பேரவையை சேர்ந்தவர்கள் விசாரித்து இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று  தெரிய  வந்து பெண்ணை மட்டும் அனுப்பி விட்டு இந்த பையனை மட்டும் அழைத்து சென்று கொன்று வீசியிரு;கிறார்கள். 
                 தனிப்பட்ட விரோதம்  ஏதுமில்லாமலே  மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கொன்றிருக்கிறார்கள். 
                 தர்மபுரி இளவரசன் -தொடர்ந்து இப்போது ஓமலூர் கோகுல்ராஜ்.   கேள்விக்குறியாகி நிற்கிறது தமிழ்ச் சமுதாய ஒற்றுமை. 

சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஜெயலலிதா அரசு தயங்குவது ஏன் ? மக்களுக்கு உண்மை தெரியாமல் மறைப்பது குற்றமல்லவா?

            சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெகதீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு ஆட்சேபணை தெரிவித்துள்ளது.. 
             கேரளா, கர்நாடகா , ஆந்திர ,டெல்லி அரசுகள் ஒளிபரப்ப தயங்காத போது தமிழ்நாடு மட்டும் தயங்குவது ஏன்/   
             அரசியல் சட்டத்தின் பிரிவு 118 மக்கள் மன்றங்கள் தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. அதன்படி வகுக்க பட்ட விதிகளின் படி சபாநாயகருக்கு ஒளிபரப்ப உரிமை கொடுக்க அதிகாரம் இருக்கிறது.     
              2004 ல் இருந்து  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேரடி ஒளிபரப்பு நடக்கிறது.  மய்யமண்டப்பதில் எம்பிக்கள் கூடுவது மசோதாக்களை கிழித்து எறிவது போன்றவை நடக்கின்றன.   அதை பொதுமக்கள் பார்க்கின்றனர்.    எடை போடுகின்றனர்.   என்ன கேட்டு விட்டது. 
               நிதி வசதி இல்லை என்கிறார்கள்.   தனியார் சேனல்களுக்கு உரிமை கொடுத்தால் என்ன?    எல்லா நாடுகளிலும் நடக்கின்ற நடைமுறை தானே? 
                 அம்மா தாயே என்று மூச்சுக்கு முன்னூறு தடவை துதி பாடுவது, யாராவது எழுந்தால் அமைச்சர்கள் எழுந்து ஒரு மணி நேரம் விளக்கம் என்ற பெயரால் பேசிக்கொண்டே அவர்களை பேச விடாமல் தடுப்பது, தடதடவென்று மேசையில் தட்டிக்கொண்டே இருப்பது , கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை திட்டுவது, கடுமையான தண்டனைகளை கொடுத்து வெளியேற்றும்போது மறுத்தால் காவலர்களை வைத்து வெளியேற்றுவது என்று ஜனநாயகத்துக்கு புறம்பான அனைத்தையும் செய்வதால் அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு இருக்கிறது என்பதைத்தான் அரசின் ஆட்சேபணை காட்டுகிறது. 
                   சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் கொடுத்த உத்தரவின் பேரில் டெல்லி அரசு சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கியது. அதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தால்தான் அரசு ஒளிபரப்பும் என்றால் மக்களுக்கு இறுதி நம்பிக்கை நீதிமன்றம்தான். 
                  ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் தரும் உத்தரவுகளை நிறைவேற்றும் கடமையையாவது செய்ய மனம் வருமா? 
                  இல்லை சட்டத்தின் பொந்துகளில் ஒளிந்து கொள்வார்களா/ 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நேர்மையற்ற வெற்றி நிலைக்குமா? ஆர் கே நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றி பெருமைப்படத்தக்கதா ?

முழுப்பூசணிக்காயை சோற்றில்  மறைக்க முடியமா?
                     முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா!
              நாடே விழித்திருக்கையில் இத்தனை அக்கிரமங்களை பட்டப் பகலில் நிகழ்த்த முடியுமா? 
                முடியும் என்றும் நிரூபித்திருக்கிறார்!
               சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவுடன் ;உச்சநீதி மன்றத்தில் பிணை பெற்ற வேகம், மூன்று மாதத்துக்குள் மேல்முறையீட்டை முடிக்க சொல்லி உத்தரவு சொல்லிவைத்தாற்போல் விடுதலை  தீர்ப்பில் கண்ட தவறுகளை பல நாளேடுகளும் சுட்டிக் காட்டிய பின்பும் கவலையே படாமல் தேர்தல் ஆணையம் மூலம் குறிப்பிட்ட தேதியில் இடைத்தேர்தல் ,அதில் ரஜ கஜ துரக பதாதிகளை இறக்கி எல்லாரையும் முடக்கி வெற்றி அறிவிப்பு ,மீண்டும் சட்ட மன்ற உறுப்பினர்.    உச்சநீதி மன்ற மேல்முறையீடு கர்நாடக அரசுக்கு வெற்றி கொடுத்தால் அல்லது உச்சநீதி மன்றம் ஏதாவது இடைக்கால உத்தரவு இட்டால் எல்லாம் இல்லாமல் போய் விடுமே  என்ற எந்த கவலையும் இல்லாமல் அதற்கும் ஒரு விலை இல்லாமலா போகும் என்ற நம்பிக்கை!!!   
              ஒண்ணரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயலலிதா?  கம்யூனிஸ்டு மகேந்திரன் வாங்கிய ஒன்பதாயிரத்து எழுநூறு வாக்குகளும் டிராபிக் ராமசாமி வாங்கிய இரண்டாயிரத்து அறுநூறு வாக்குகளும் விலை மதிப்பற்றவை . 
                துணிச்சலை பாராட்டலாம் !     தவறு செய்கிறவர்களுக்கு இருக்கும் துணிச்சல் பாராட்ட தக்கது தானா? 
               அது தவறை ஊக்குவிப்பது ஆகாதா?    தவறுக்கு ஊதியம் அளிப்பது ஆகாதா?   
                   யார் செய்தாலும் தவறு தவறுதான்.   திருமங்கலத்தில் தி.மு.கவுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டினார்கள்.   அதற்குரிய தண்டனையை மக்கள் அவர்களுக்கு வழங்கி விட்டார்கள். 
                 ஆணவப் போக்கையும் அதிகார துஷ் பிரயோகத்தையும் தனது ஆட்சி முறையாக்கி கொண்டுள்ள ஜெயலலிதா அதற்குரிய பலனையும் இனி எதிர்பார்த்தே இருக்க வேண்டும். 
              இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது
 அஹ்தொப்பது இல் என்றார் வள்ளுவர். 
                 அதாவது துன்பம் வரும்போது கலங்காதே அடுத்து வருவது மகிழ்ச்சி தரும்  என்று பொருள்.   
                 அதன் இன்னொரு பொருள்.    முறையற்ற இன்பம் வரும்போது அதிகம் ஆடாதே . ஏனெனில் அடுத்து வருவது வருத்தம் தரும் ???   
               

கருத்து சுதந்திரம் காக்கப்படவும் வேண்டும் , வெறுப்பை உமிழும் அரசியல்வாதிகள் தண்டிக்கப் படவும் வேண்டும் – அரசுகளின் கடமை என்ன ?

                 ‘ எங்களை விமர்சிப்பவர்களின் கண்களை தோண்டி எடுத்து வீசுவோம்  கைகளை வெட்டி எறிவோம்,’ என்றெல்லாம் பேசி இருப்பவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி .    
                 ஆளுவது மமதா பானர்ஜி.   எப்படி நடவடிக்கை எடுப்பார். /   
               பேச்சுரிமை கொடுத்திருக்கும் அரசியல் சட்டம் நியாயமான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது.  எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல சட்டம்.

               நரேந்திர மோடி என்னதான் கட்டுப் பாடுகளை விதித்தாலும் பா. ஜ.கவின் பல தலைவர்கள் தாறுமாராகத்தான் பேசி வருகிறார்கள். குறிப்பாக சாக்ஷி மகராஜ், நிரஞ்சன் ஜோதி போன்றவர்கள் முஸ்லிம்களை குறி வைத்து பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றும் முறை தவறி பிறந்தவர்கள் என்றும் வன்முறைக்கு வித்திடும் வண்ணம் பேசி வருவதை வழக்கப் படுத்தி விட்டார்கள்.

             தமிழ் நாட்டில் எச் .ராஜா முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று பேசியிருப்பதும்  ஒருவித பயங்கரவாதம்தான்.. 
            இந்த வகை வெறுப்பு பேச்சுக்களை கட்டுப் படுத்தும் வரை முறைகளை வகுக்க வேண்டி தாக்கல் செய்யப் பட்டிருக்கும் போது நல வழக்கு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிர வீன் தொகாடியா,, அக்பருதீன் ஒவைசி , ராஜ்தாக்கரே போன்றவர்களின் வெறுப்பு பேச்சுக்களை எப்படி கட்டுப் படுத்தப் போகிறீர்கள் என்று உச்ச நீதி மன்றம் கேட்டுள்ளது. 
             அதே நேரத்தில் தனக்கு எதிரான கருத்து உடையவர்களை வழக்குப் போட்டு அலைக்கழிக்கும் அரசுகளின் பிடியில் இருந்தும் பேசுபவர்களை காக்கும் பொறுப்பும் நீதி மன்றங்களுக்கு இருக்கிறது.

            சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து அதில் இந்திய தண்டணை சட்டத்தின் பிரிவுகள்   153, 153-A, 153-B, 295, 295A, 298 ,505  போன்ற பிரிவுகளின் மீது அரசுகள் வழக்கு தொடுக்க நிபந்தனைகள் விதித்து நெறிப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார் .    அது வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. 
             நூற்றுகணக்கான வழக்குகளில்  நீதிமன்றங்கள் வன்முறை பேசியவர்களை தண்டித்திருக்கிறது.    ஆனாலும் வன்முறைப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  

             மதம்  இனம் , மொழி தொடர்பான பல பிரச்னைகளில் மாறுதல்கள் அவசியம் தேவை. மாற்றங்களை வலியுறுத்தி பேசும்போது ஒருசிலரின் ஆதிக்கத்தின் ஆழம பற்றி பேசத்தான் வேண்டும்.   அதைக்கூட கொள்கை வழி நின்றுதான் பேச வேண்டுமே தவிர தனிப பட்ட முறையில் தாக்கிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.

         கொடுமை என்னவென்றால் எந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகிரார்களோ அவர்கள் மீதே ஆதிக்க சக்திகள் நீதி மன்றங்கள் துணை கொண்டே தடை யாணை பெறுவதுதான். .   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தனக்கு வந்த ஆபத்தை நாட்டுக்கு வந்ததாக மாற்றிய இந்திரா கொண்டு வந்த அவசர நிலை எதிர்காலத்தில் வருமா?


தேர்தல் முறைகேடு காரணமாக அதாவது தேர்தல் பணியில் அரசு அதிகாரியை ஈடு படுத்தியதால் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப் பட்ட இந்திரா உச்ச நீதிமன்றத்தில் தடை கிடைக்காததால் அவசர நிலையை பிரகடன படுத்தி பதவியில் நீடித்தார். 
        சட்டத்திற்கு புறம்பான கட்டளை களுக்கு பணியாதீர் என்று ஜெயப்ரகாஷ் நாராயணன் முழுப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். 
        இன்று ஜெயலலிதா தனக்கு வந்த பதவி இழப்பு சதியால் என்று கூறுகிறார்.   சொத்து  வாங்க குவிக்க சொல்லி யார் சதி செய்தார்கள். 
          தானே தனக்கு குழி வெட்டிக் கொண்டு பழியை பிறர மீது சுமத்துவது என்ன நியாயம்?   
           அவசர நிலை பிரச்சினை மத்தியில்  ஆளுபவர்கள் மட்டும் சம்பத்தப் பட்டது அல்ல.   ஆட்சியில் இருக்கும் எல்லோருக்கும் அது பொருந்தும். 
         எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மக்கள்தான். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

வையத் தலைமை கொள் -பாரதியின் கனவு நனவாகிறது. !!! சர்வதேச யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாட்டம் !!! மத , கட்சி சாயம் பூச முனைவோரிடம் எச்சரிக்கை அவசியம்!!!!

யோகக் கலை இந்தியாவில் தோன்றி உலக நாடுகளில் வளர்ந்திருக்கிற , உடலையும் மனதையும் பக்குவப் படுத்தும் கலை .  
       பிரதமர் மோடி ஐ.நாவில் பேசி அந்த அவையும் ஒப்புக் கொண்டு ஜூன் 21  ம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்து இருப்பது நமக்கு பெருமை அளிக்கும் ஒன்றுதான். இதில் 47 முஸ்லிம் நாடுகளும் அடக்கம். 
        மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் மதம் கடவுள் சம்பத்தப் தட்டது அல்ல. 
         இதனால் ஏதோ பா.ஜ.க  வளர்ந்து விடும் என்ற பயம் தேவை இல்லை. 
         அமெரிக்காவில் இது ஆன்மிகம் மட்டுமல்ல. பல லட்சம் டாலர் சம்பத்தப் பட்ட வணிகமும் ஆகும். 
          கம்யுனிஸ்டுகளும் நாத்திகர்களும் இதை கண் மூடித் தனமாக எதிர்ப்பது தேவை அற்றது. 
           யாராவது இதை அரசியல் ஆக்க முனைந்தால் தோல்வி உறுதி. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)