Home Blog Page 121

தமிழர்களை அவமானப் படுத்தும் ஜெயலலிதா

நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் என்ன நான்தான் முதலமைச்சர் என்று பறை சாற்றிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

    இவர் மேன்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வர முடிந்தால் அது வேறு.!
     ஆனால் தீர்ப்பு வரும் வரை கூட தற்காலிக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெயர் படம் எதுவும் அரசு விழாக்களில் வர அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது தமிழர்களை அவமதிப்பதாக ஆகாதா?
     சென்னையில் நடந்த   குடியரசு தின அணிவகுப்பில் ஜெயலலிதா படமே ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தது.  டெல்லியில் நடந்த அணிவகுப்பில் தமிழகம் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லையாம்.
     தீவுத் திடலில் நடக்கும் பொருட்காட்சியில்   ஜெயலலிதா படங்களே காட்சியளிக்கின்றன.   பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு இது நடந்திருந்தாலும் அது சரியா என்பதுதான் கேள்வி?
     இங்கு எது நடத்தினாலும் கேட்க யாரும் இல்லை என்ற அளவில் காரியங்கள் நடப்பது இன்னும் எத்தனை நாளுக்கோ ?
     சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் ஜெயலலிதா படங்களை அகற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து விட்டது.  முன்னால் முதல்வர் படம் என்று அரசே கட்சியாடும்போது  நீதிமன்றம் தலையிட முடியாமல் போனது.
    தார்மீக கடமை என்பதே இல்லையா?     வாக்காளர்களுக்கு   பணம் கொடுத்து வெல்வேன் யார் கேட்பது?   முன்பு அவர்கள் செய்ய வில்லையா?    என்று அக்கிரமங்களை நியாயப் படுத்தும் போக்கு நிறுத்தப் பட்டே ஆக வேண்டும்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V) 

பணம் கொடுத்தால் வாங்கிகொள்வேன்-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்ற இளங்கோவன் அதற்கு காரணம் வாக்காளர்களுக்கு ஐந்தாயிரம் வரை பட்டுவாடா செய்ய இருப்பதை காரணமாக காட்டியவர் மேலும் சொன்னார், ” என்னிடம் கூட ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்  வாங்கிகொள்வேன் .   ஆனால் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.” என்றார்.

     இதேபோல் டெல்லி தேர்தலில் கேஜ்ரிவால் சொல்லி விட்டு பின்பு அதை வாபஸ் வாங்கினார்.   
இளங்கோவனுக்கு வேண்டுமானால் ஒரு லட்ச ரூபாய் பெரிதாக இருக்கலாம். சாதாரண குடிமகனுக்கு ஐநூரும் ஆயிரமும் பெரிது.   பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை இவர் கண்டிக்கிறாரா?  இல்லையா? 
     இப்படியெல்லாம் பொறுப்பற்றுப் பேசும் தலைவர்களால் விளைவது கேடல்லாமல் வேறென்ன? 
     ப. சிதம்பரத்தை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட காங்கிர சுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதும் அவர் கூற்று. 
   காங்கிரஸ் மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது . யார் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று ஏன் சிரமப் படுவானேன்?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V) 

ஆங்கிலத்தை எதிர்ப்பவர்கள் இந்தி வெறியர்கள் ?

தாய் மொழி தவிர்த்து எந்த மொழியை கட்டாயப் படுத்தினாலும் அது திணிப்புதான்

     எப்படியாவது இந்தியை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்பவர்கள் என்ன சொல்கிறார்கள் ?   இரண்டாவது மொழியாக அந்நிய மொழி ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை படித்தால்தான் என்ன ? 
     இந்தியை தாய் மொழியாக கொண்டவன் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டு உலகம் சுற்றப் போய்விடுவான்.  நாம் மட்டும் தமிழையும் இந்தியையும் மட்டும் கற்றுக்கொண்டு இந்தியாவிலேயே முடங்கி விடவேண்டும்.       இதுதானே திட்டம்.  ? 
            ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் எனக்கு தமிழ் தவிர்த்து எல்லா மொழிகளும் அன்னியம்தான். 
            இந்தியோ , மராத்தியோ வங்காளியோ  எதுவாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப தமிழன் கற்றுக் கொள்வான். 
          தமிழுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தமிழை ஆட்சி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆக்குவார்களேயானால் பாராட்டலாம். அப்போது இந்தியோ ஆங்கிலமோ எதையோ இரண்டாவது மொழியாக கற்றுக் கொண்டு போய் விடுவேன். 
       இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து இங்கு கூலி வேலைக்கு வருபவன் தமிழ் கற்றுக் கொண்டா வருகிறான்.  டெல்லியில் கூலி வேலை செய்யும்  தமிழன் இந்தி கற்றுக் கொண்டா வேலைக்குக் போனான். ? போனபின்  கற்றுக் கொள்ள வில்லையா? 
       என் தாய் நாட்டை என் தாய் மொழியில் வாழ்த்தி ஒலி முழக்கம் செய்ய முடியாது.   பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் கோஷம் போட வேண்டும்.  
       எனது நாட்டு மக்களவையில் எனது தாய் மொழியில் உணர்வு பூர்வமாக பேச முடியாது.     ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்.  
     உயர் நீதி மன்றத்திலோ உச்ச நீதி மன்றத்திலோ என் தாய் மொழியில் நான் வாதிட முடியாது  .   அதற்கு இந்தியோ ஆங்கிலமோ வேண்டும். 
     வங்கி , அஞ்சல், மத்திய அரசின் அலுவலகங்கள் , இன்னும் பல துறைகளிலும் நான் தொடர்பு கொள்ள  கருத்துப் பரிமாற என் தாய் மொழி தவிர்த்து இந்தி ஆங்கிலம் இரண்டில் ஒன்றில்தான் நான் பழகியாக வேண்டும். 
     இதே நிலைமைதான் எல்லா இந்தி அல்லாத மற்ற மொழிக் காரர்களுக்கும். 
     நான் இந்த நாட்டுக் காரன்தானா?   சந்தேகம் வந்தால் தவறா? 
     இந்தியன் எல்லோரும் சமம் என்றால் மொழியை கற்றுக் கொள்ள வேண்டிய பளுவும் எல்லாருக்கும் சமமாகத் தானே இருக்க வேண்டும்.      இந்தி அல்லாதவரை ஏமாற்றத் தானே மும்மொழித் திட்டம். !
இதுவரை எந்த இந்திக்காரன் தமிழ், தெலுகு, கன்னடம் , ஒரியா என்று கற்றிருக்கிறான் ? 
     இந்தியை எதிர்த்து விட்டு ஆங்கிலத்தை புகுத்தியதுதான்      இந்தி எதிர்ப்பு போரின் சாதனை என்று எழுதுபவர்களின் உள்நோக்கம்  ஆங்கிலத்துக்கு பதிலாக  இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான். 
        தமிழனுக்கு எது வேண்டும் என்பதை அவனே தீர்மானித்துக் கொள்ளட்டும்.     
        முதலில் தமிழுக்கும் ஏனைய அட்டவணை எட்டில் கண்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் உரிய சம அந்தஸ்தை ,ஆட்சியிலும் நீதிமன்றத்திலும் தந்து விட்டு பிறகு உபதேசம் செய்ய வாருங்கள். 
     நான் என் நாட்டில்தான் வாழ்கிறேன் என்ற உணர்வு முதலில் எனக்கு வரட்டும்.  அதற்கு உதவுங்கள். 
      பிறகு உபதேசிக்கலாம்.. 
     
      
     

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V).   

தயாநிதி மாறனுக்கு மானமில்லை- குருமூர்த்தி

தயாநிதி மாறன் தொலை தொடர்பு துறை அமைச்சராக மத்தியில் இருந்தபோது பெற்றிருந்த ஒரு தொலைபேசி இணைப்பில் 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு சன் டி.வி. யில் இணைத்து முறைகேடு புரிந்தார் என்ற குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து இப்போது சன் டி.வி. ஊழியர்கள் மூவர் கைது செய்யப் பட்டநிலையில் இதற்கெல்லாம் காரணம் ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்று தயாநிதி மாறன பேட்டி கொடுக்க பிரச்சினை நீதிமன்றத்தையும் தாண்டி தனிப்பட்ட முறையில் போய் நிற்கிறது.

” ஏன் மீது மான நஷ்ட வழக்கு போடுங்கள் என்றேன்.    ஏன் போடவில்லை. ;மானம் உள்ளவர்கள்தானே மான நஷ்ட வழக்கு போட முடியும்”    -ஆடிட்டர் குருமூர்த்தி . 
     சி.பி.ஐ.அரசியல் காரணங்களுக்காக பயன் படுத்தப் படுகிறது என்று முலாயம், மாயாவதி, மமதா  , என்று பலர் பிரச்சனைகளில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.       யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அவர்களது கையாளாக சி.பி.ஐ. மாறி விடுகிறது. 
     எட்டாண்டுகளுக்குப்  பிறகு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையிலும் அவசர அவசரமாக கைதுப் படலம் துவங்கி இருக்கிறது. 
       யார் குற்றம் இழைத்தாலும் தண்டிக்கப் பட வேண்டும் .   அரசியல் புகுந்து சாட்சியங்களை உருவாக்குவது என்பது அநீதி. 
     சட்டம் தன் பணியை  செய்வதில் யாருக்கும் ஆட்சேபனை  இருக்க முடியாது. 
     ஒரே இணைப்பு இருந்ததா அல்லது ஒரு இணைப்பில் பல இணைப்புகள் பொருத்தப்பட்டு இருந்ததா என்பது விசாரணைக்கு உட்பட்டது. 
     எது  எப்படி இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது ஏற்றுகொள்ள முடியாதது. 
     அதிகாரம் கையில் இருந்தால் துணிவு தானாக வரும் என்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு உதாரணம்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஜெயலலிதாவை ஜெட்லி சந்தித்தது தவறா?

நான்காண்டு சிறை தண்டணை பெற்ற , முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த , தற்போது உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியில் உள்ள  , கர்நாடக உயர்நீதி மன்ற சிறப்பு அமர்வில் மேன்முறையீட்டை நடத்திக் கொண்டு இருக்கிற ஜெயலலிதாவை , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து நாற்பது நிமிடம் தனியாக பேசிவிட்டு வந்தது, கலைஞர் , மருத்துவர் ராமதாசு  ,மற்றும்  இடது கம்யூனிஸ்ட் களின் கண்டனத்தை கிளப்பியிருக்கிறது..

            ஊழலுக்கு எதிரானவர்கள் என்று தங்களை பிரகடனப் படுத்திக் கொண்டுள்ள பா.ஜ.க.வினர் ஊழல குற்றத்தில் தண்டிக்கப் பட்ட ஒருவரை சந்திப்பது சட்டப்படி வேண்டுமானால் தவறில்லாமல் இருக்கலாம். 
தார்மீக நியாயப் படி ? 
மக்கள் மன்றத்துக்கு இவர்கள் பதில் சொல்ல கடமை பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 
முன்பு ரவி சங்கர் பிரசாத் பார்த்து சென்றதால் ஜெயலலிதா தண்டனையில் இருந்து தப்பி விடவில்லை. 
எனவே ஜெட்லி வருகையால் மேன்முறையீடு  விசாரணை பாதிக்கப் படும் என்பது அல்ல பிரச்சினை. . நீதித்துறை அவ்வளவு பலவீனமாகவும் இல்லை. 
பாராளுமன்ற மேலவையில் ஆதரவு தேவை என்றால் அதை வெளிப்படையாக கோருவதில் என்ன தயக்கம். ? 
ஜெட்லி பதவிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின்  பதினெட்டு ஆண்டு நிலுவையில் இருந்த வருமான வரி வழக்கு சுமுகமாக முடிக்கப் பட்டது என்பது உண்மைதானே.!
சி.பி.ஐ. மத்திய அரசின் கைப்பாவையாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. 
மமதாவாக இருந்தாலும் முலாயமாக இருந்தாலும் மாயாவதியாக இருந்தாலும் சி.பி.ஐ.யை பயன்படுத்தி பணிய வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 
அந்த வகை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த சந்திப்பும் அமைந்து விடக் கூடாது. 
திரைமறைவு பேரங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் சந்திப்பை வெளிப்படையாக நடத்தி விபரங்களை வெளியிடுவதன் மூலம் ஊகங்களை தவிர்க்கலாமல்லவா?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஈழம் – அடுத்து வருவது – துயரமா ? விடியலா?

ராஜபக்சே ஆட்சி மாறியதும் – சிறிசேன அரசு பதவியேற்றதும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது மட்டும் உண்மை.    
ஆனால் வரலாறு அறிந்தவர்களுக்கு சிங்கள பேரினவாதிகள் அவ்வளவு எளிதில் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வழி விடுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. 
இன அழிப்பு, போர்க்குற்றம், எல்லாம் நடந்தது என்பதை ஒப்புக் கொள்ளாதவர்கள்  இலங்கை இந்திய அரசுகள்.   
தமிழர்களுக்கு சம உரிமை கொடுப்பதை பற்றி தேர்தலில் கூட பேசாத சிறிசெனாவால்என்ன வகையான தீர்வை தந்து விட முடியும் ?
ராணுவத்தை அகற்ற முடியாது என்றும் தமிழ் கூட்டமைப்பு தனக்கு ஆதரவு அளித்த தற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தவர் சிறிசேன. 
சிறிலங்கா ஒற்றையாட்சி முறையை தனது அரசியல் சட்டத்தில் கொண்டுள்ளது. 
ஜனநாயக, சோசியலிச குடியரசான இலங்கை மொழி  மதம் ஒருமைத்தன்மை போன்றவற்றில் அரசியல் சட்ட திருத்தும் கொண்டு வரவேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதலையும் பெற வேண்டும். 
இதுவரை பதினெட்டு முறை திருத்தும் செய்திருக்கிறார்கள். அதில் பதின்மூன்றாவது திருத்தும் இந்தியா முன்னெடுத்து கொண்டுவந்தது. ராஜீவ்- ஜெயாவர்தன ஒப்பந்தம் , வடக்கு கிழக்கு மாகாணங்களை உருவாக்குவது செல்லாது என்று இலங்கை உச்ச நீதி மன்றம் அறிவித்து விட்டதால் நிறைவேற்ற முடியாத ஒன்றாக ஆகி விட்டது.
இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல் படுத்துவோம் என்று பேசியிருப்பது எப்படி செய்யப் போகிறார் என்பதை பொறுத்தது.  
சுஷ்மா ஸ்வராஜ் -சமரவீர மூன்று மணி நேரம் பேசியும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை விபரமாக கூற வில்லை. 
அகதிகளாக வந்திருப்பவர்களை திரும்ப அனுப்புவதுதான் அவர்களது திட்டமாக இருக்குமோ என்ற அச்சம் அனைவர் மனத்திலும் பதிந்து விட்டது. 
ராணுவம் அகலாது- காணிகள் திரும்ப கிடைக்காது. பாதுகாப்பு உறுதியில்லை. இந்த சூழ்நிலையில் அகதிகளை திரும்ப போக நிர்பந்திப்பது சர்வதேச நெறி முறைகளுக்கு எதிரானது. 
பறிமுதல் செய்யப் பட்ட படகுகள் திரும்ப ஒப்படைக்கப் பட வேண்டும். மீனவர் கைது என்பது அறவே நிறுத்தப் பட வேண்டும். இவைகள் நல்ல தொடக்கத்தின் அறிகுறிகளாக விளங்கட்டும்.; 
தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாநில அரசுக்கு முதலில் அதிகாரங்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தட்டும் . 
பாராளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாத சிறிசேன அரசால் என்ன முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் ? எல்லாவற்றையும் விட, சிறிசேன  எந்த உறுதி மொழியும் தராத நிலையில் ,மூன்றாந்தர குடிமக்களாக வாழ்ந்தாலே போதும் என்ற நிரந்தர நிலைமையை தமிழர்களுக்கு  உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் இன்றைய நிலவரம். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தமிழர்களை அடக்கத்தான் தடை-ஜல்லிக்கட்டு ஒரு சாக்கு !

எந்த ஜல்லிக்கட்டிலும் எந்த காளையும் இறந்ததாக வரலாறு இல்லை.
பின் ஏன் அதை தடை செய்ய துடிக்கிறார்கள்? 
மனிதர்கள் பாதிக்கப் படுகிறார்களே என்ற ஆதங்கமா? 
நாள்தோறும் கோடிக்கணக்கில் கோழி, ஆடு, மாடு ,முயல்,என்று கணக்கில்லாமல் கொன்று தின்னப் படுகின்றன.   அதை ஏன் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை.    நீ வேண்டுமானால் ஒதுங்கி இரு.   
மற்றவரை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. 
கொல்லாமை ஒரு அறம்தான். சட்டமல்ல. 
நாள்தோறும் விபத்துக்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கிறார்கள். அவற்றை குறைக்க சிந்திக்க வேண்டும். 
ஜல்லிக்கட்டில் இறப்பது. ஒரு விபத்து. . கூச்சல் போடுகிற யாரும் வேடிக்கை பார்க்க கூட செல்வதில்லை. 
 மேனகா காந்தி ஒரு மத்திய அமைச்சர்.  ஜல்லிக்கட்டு வெளிநாட்டு இறக்குமதி  என்கிறார். 
வெளிநாட்டில் ஈட்டியால் குத்தி மாடுகளை கொல்வதும்  இங்கு கையால் திமிலை பிடித்து நிறுத்துவதும் ஒன்றா? 
வன விலங்குகளை துன்புறுத்தி விளையாட்டு காட்ட கூடாது என்ற சட்டத்தை பயன் படுத்தி ,  புலி, சிங்கம் கரடி யானை போன்ற விலங்கு களோடு  காளையை சேர்த்து தடை பெற தவறான வழியை கடை பிடித்திருக்கிறார்கள்.    இது ஒரு பண்பாட்டு மேலான படையெடுப்பு. 
இந்த ஆண்டு நிறைவேற்றப் பட்ட சதி திட்டம் அடுத்த ஆண்டு தொடரக்கூடாது.     
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

சிறீ சேனா- தேவதையா ? மற்றுமொரு பிசாசா ?

ராஜ பக்சே ஒருவழியாக தோற்கடிக்கப் பட்டு விட்டார்.  யாரால்? 
மற்றுமொரு சிங்கள ஆதிக்க பிரதிநிதி மைத்ரி பால ஸ்ரீசெனாவால்.. இதில் தமிழர்கள் மகிழ என்ன இருக்கிறது? 
தேர்தலின்போதே தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவேன் என்று மறந்து கூட வாக்குறுதி கொடுக்க வில்லை சிறீசேன. 
  போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா.குழுவிற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்குமா?
தமிழர்கள் சம உரிமையுடன் தன்மானத்துடன் வாழ சிங்கள அரசு வழி வகுக்குமா?    மொத்தத்தில் மனிதம் மதிக்கப் படுமா?   
 இதுவரையில் அறவழிப் போராட்டங்கள் கூட அனுமதிக்கப் படாத நிலையில் , ராணுவத்தை தமிழர்கள் மத்தியில் குவித்து வைத்துக் கொண்டு அச்சுறுத்தி ஆண்டு கொண்டு இருக்கும் நிலையில் மாற்றம் இருக்குமா?  
  மேதகு பிரபாகரன் ஆயுதம் தூக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை இப்படி விளக்குவார் , ” சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் இரண்டாக பிரிந்து  நடத்தும் அரசியலில் , ஒருவர் ஆட்சிக்கு வந்து ஆதிக்கம் செலுத்துவதும் மற்றவர் ஆதரிப்பார் என்று நம்பி தமிழர்கள் அவர்கள் பின் சென்று  ஏமாறுவதும் அவர்கள் நடத்தும் நாடகத்தின் பல அங்கங்களை நாம் பார்த்து சலித்து விட்டோம். இனி அவர்களோடு ஒன்றாக  மானத்துடன் வாழ்வது என்பது நடக்கவே நடக்காது. “
தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று ஒழிக்கப் பட்டபோது  எந்த சிங்கள சக்தியும் கண்டித்து குரல் கொடுக்க வில்லை. 
இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவும் தமிழர்களுக்கு சம உரிமை வாங்கி கொடுக்கப் போவதில்லை.  
 சர்வதேச ஒத்துழைப்புடன்  கூடிய 
மற்றுமொரு நீண்ட நெடிய அறவழிப் போராட்டத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்.   
மற்றபடி அரக்கனாக அடையாளம் காணப்பட்ட ராஜபக்சே  அதிகாரம் இழந்தான் என்ற செய்தி வரவேற்கப் பட வேண்டிய ஒன்றுதான். .  
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


வைகோவை தொடர்வாரா மருத்துவர் ராமதாஸ் ?

வைகோ வெளியேற வேண்டும் என்றார் சுப்ரமணியன் சுவாமி . வெளியேறி விட்டார் வைகோ. 
இப்போது மருத்துவர் ராமதாஸ் விடுதலை புலி ஆதரவாளர் தலித் விரோதி எனவே அவரும் வெளியேற வேண்டும் என்கிறார். 
மருத்துவர் ராமதாஸ் பற்றி இப்போதுதான் தெரியுமா?  கூட்டு சேர்ந்த போது தெரியாதா? 
முதன் முதல் பா.ஜ.க வுடன் கூட்டு சேர்ந்து பிறரும் சேர தூண்டு கோலாக இருந்தவர் வைகோ. 
பதவி ஏற்க ராஜ பக்சேவை அழைத்த உடனே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார் வைகோ. 
இலங்கைப் பிரச்னையில் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டிருந்த கொள்கையே மோடி அரசிலும் தொடர்வது கொடுமை. 
பிரதமர் மோடிக்கு  ராஜபக்சே மீண்டு ம் வெற்றி பெறுவதில் அப்படி என்ன அக்கறை. ?
இனப்படுகொலையாளன் எப்படி நண்பன் ஆனான்? 
ஐ நா மன்றத்தின் போர்குற்ற விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்புகொடுக்க; போகிறதா இல்லையா என்பதில் இருக்கிறது மோடி நல்லவரா கெட்டவரா என்பது. 
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பதை யாரும் மறந்து கூட பேச மறுப்பது உச்ச கட்ட கொடுமை. 
தமிழகத்தில் பா ஜ க வளர வேண்டுமா வேண்டாமா என்பதை விட மோடியின் நம்பகத் தன்மையை சோதனைக்கு ஆளாக்குவது இலங்கைத்தமிழர் பிரச்சினை ஆகத்தான் இருக்கும். 
சு.சாமியை முதலில் வாயை மூடச்  சொல்லுங்கள்.  அல்லது அவரை வெளியேற்றுங்கள்.    
இரண்டும் நடக்கா விட்டால் மருத்துவர் ராமதாஸ் வைகோவை பின்பற்றுவது வதே  நல்லது.

ஜெயலலிதா பெற்ற நிபந்தனை அற்ற ஜாமீன்

நூறு கோடி அபராதம் நான்கு ஆண்டுகள் சிறை என கடுமையான தண்டனைக்கு உள்ளான ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகள் அற்ற ஜாமீன் கிடைத்த போது எல்லார் மனத்திலும் எழுந்த சந்தேகம் ,இதே போல் அபராத துகை கட்டாமல் மேல்முறையீடு அல்லது ஜாமீன் மனுவை 
மற்றவர்களுக்கும் உச்ச நீதி மன்றம் வழங்குமா?
ஏனைய வழக்குகளில் இதே போன்று அபராதத்தில் ஒரு பகுதி கூட கட்டாமல் மற்றவர்கள் கேட்டால் நீதிமன்றங்கள் எப்படி அணுகுவார்கள்.? 
லாலு பிரசாத் துக்கு ஒரு நீதி ஜே-க்கு ஒரு நீதியா?     
டிராபிக் ராமசாமி தொடுத்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது பல சங்கடங்களை உச்ச நீதி மன்றம் சந்திக்கும் போல் தெரிகிறது. 
வழக்கறிஞர் நாரிமன் மகன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது இவர் ஆஜரானது சரியா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம் . 
இதில் ஆயிரம் கோடி சம்பத்தப் பட்டுள்ளது என்றும் அபாண்டம் சுமத்தப் படுவதாக ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். 
ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துவது குற்றம். 
ஆனால் சந்தேகத்தின் நிழல் கூட தன் மீது விழாமல் காத்துக் கொள்வதும் உச்சமீதி மன்றத்தின் கடமை. 
வி.வைத்தியலிங்கம்
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041