Home Blog Page 14

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை ; சிங்கள இனவெறி அரசு முடிவு?

இலங்கையின் சுதந்திர தினத்தன்று இதுவரை சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம பாடப் பட்டு வந்தது.

இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப் படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடப் படுவது நிறுத்தப் படுவதாகவும் சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இருப்பதைப் பறிப்பவர்கள் இல்லாததையா கொடுக்கப் போகிறார்கள்?

சிங்களர்களிடம் தமிழர்கள் இனி அரசியல் தேர்வை பற்றி கனவு கூட காணக் கூடாது என்ற நிலையை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி விட்டன.

இரண்டாம் தர குடிமக்கள் ஆக வாழ்வது மட்டுமே சாத்தியம் என்றாகி விட்டது.

இந்திய அரசு தலையிடும் என்ற நம்பிக்கையும் சிதைந்து வருகிறது. ஆனாலும் வேறு வழியின்றி இந்திய அரசிடம்தான் நாம் கோரிக்கை வைக்க வேண்டியவர்கள் ஆக இருக்கிறோம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் எப்போது ஆட்சி மாறுவது எப்போது இதைப்பற்றி எல்லாம் பேசுவது?

ஐந்து பத்து ஆண்டுகள் எல்லாம் கால ஓட்டத்தில் சில நொடிகள்.

இந்தியாவில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான  மத்திய அரசு அமைய வேண்டும். மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு அதன் பின்தான் வெளி உறவுக் கொள்கைகளை இறுதி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும்.   அப்போது தமிழ் நாட்டு அரசின் கருத்துக்களை ஏற்று மத்திய அரசு செயல்  பட வேண்டும். அப்போது மட்டுமே  இலங்கை பிரச்னை தீர வழி பிறக்கும்.

அதுவரை காத்திருப்போம். இடையில் தளராது கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருப்போம்.

டாடி மோடி எடப்பாடிக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?!

ராஜேந்திர பாலாஜி மோடி எங்கள் டாடி என்று பேசினாலும் பேசினார் டாடி  எடப்பாடிக்கு ஊக்கப் பரிசு அறிவித்து விட்டார்.

அதுதான் தமிழ்நாட்டுக்கு நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் என்ற மத்திய அரசின் தர வரிசைப் பட்டியலில் முதல் இடம்.

2021 தேர்தலில் எப்படியும் பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடும்.

அதற்காக இப்போதே தரச் சான்றிதழ் கொடுத்த வைப்பது நல்லதல்லவா?

ஒன்பது துறைகளில் இரண்டில் மட்டுமே முதல் இடத்தை பிடித்த தமிழ்நாட்டுக்கு மொத்தமாக முதல் இடம் கொடுத்தது எப்படி?

2014ல் வாஜ்பாய் பிறந்த நாளன்று துவங்கிய இந்த நல்ல நிர்வாக நாள் என்ற திட்டம் முதல் முதலாக இந்த ஆண்டுதான் மாநிலங்களுக்கு தர வரிசையை கொடுத்திருக்கிறது. ஏன் இந்த ஆண்டு தொடங்க வேண்டும் என்ற கேள்விக்கும் இந்த தர வரிசையை தயாரிக்க என்ன முறை கடைப்பிடிக்கப் பட்டது என்ற கேள்வியிலும் விடைகள் நேரடியாக கிடைக்க வில்லை. 

பிரதமரின் அலுவலக மூலம் தான் இந்த திட்டம் வெளியே வந்திருக்கிறது. தனது அரசியல் காரணங்களுக்கு ஆக அரசு யந்திரத்தை மத்திய அரசு பயன் படுத்தி இருக்கிறது என்பதுதான் பொதுமக்களின் கருத்து.

ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கி இருக்கும் அமைச்சர்கள் எப்படி நல்ல நிர்வாகத்தை தர முடியும் ?

வாஜ்பாய் பிறந்த நாள் டிசம்பர்  25 வருகிற காரணத்தை காட்டி , அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதை பொருட் படுத்தாமல் அன்று வேலை நாள் என்று அறிவித்தது மோடியின் அலுவலகம். பிறகு எதிர்ப்பு கிளம்பியபிறகு அந்த திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு நல்லவர்கள்.

அந்த நல்லவர்கள் இந்த ஊழலில் வல்லவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள்.

என்னதான் முட்டுக் கொடுத்து பார்த்தாலும் பாஜகவை மக்கள் நம்ப மறுக்கிறார்களே?! ஏனென்றால் இது தமிழ்நாடு.

 

புகாரே கொடுக்காமல் தண்டிக்கும் மீ டூ சின்மயிக்கு என்ன தண்டனை? யார் கொடுப்பது?

கவிஞர் வைரமுத்துவுக்கு கொடுக்க இருந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வருகையை ரத்து செய்ததால் ரத்து செய்யப்  பட்டிருக்கிறது.

இதற்குப் பின்னால் பார்ப்பனீய சக்திகளின் அசுர பலம் இருக்கிறது. அதை யாராலும் வெல்ல முடியாது.

தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒரு அவாள் சொன்னால் உடனே ராஜ்நாத்  சிங் தனது வருகையை ரத்து செய்து விடுவார் என்று எல்லாருக்கும் தெரியும். இப்போது எஸ்ஆர்எம் பச்சமுத்து பாஜக கூட்டணியில் கூட இல்லை.

ராஜ்நாத்சிங் முதலில் ஒப்புக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அப்போது தெரியாதா வைரமுத்து யார் என்று?

பேசாமல் அவருக்கு கொடுத்திருந்த பத்ம பூஷன் விருதைக்கூட திரும்பப் பெற்றுக் கொள்ளலாமே?

காவல் துறையிடம் ஒரு புகார் கொடுக்கக் கூட சின்மயிக்கு துப்பில்லை. ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கும்பிட்டு ஓடிப்போன ஆள்தானே சின்மயி. தனது மார்பகங்களையும் அக்குளையும் குறிவைத்து  படம் பிடிக்கிறார்கள் என்று குற்றம் சொன்னவர்தான் இந்த சின்ன மயி.

ஒரு டிவிட் போட்டு உன் டாக்டர் பட்டத்தை காலி செய்து விட்டேன் என்று வேண்டுமானால் சின்மயி புளகாங்கிதம் அடையலாம்.

தன் புகாரை யாரும் விசாரிக்க வில்லை என்று ஆதங்கம் காட்டும் சின்மயி தரும் செய்திகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் பார்ப்பன ஊடகங்கள் ஏனம்மா ஒரு புகார் கொடுத்து காவல் துறையிடம் விசாரிக்க சொல்ல கூடாது என்ற கேள்வியை கேட்பதில்லை.

எம் ஜே அக்பர் முதற்கொண்டு புலன் விசாரணை பத்திரிகையாளர் வரை காவல் துறைதான் மீ டூ புகார்களை விசாரித்து வருகிறது. மீ டூ புகார் தருவதும் அதில்  விசாரணை நடத்துவதும் தவறே இல்லை. ஆனால் அதை வைத்து ஒரு ப்ளாக் மெயில் செய்ய முடியுமா? புகாரும் தர மாட்டேன். தனியார் தான் விசாரிக்க வேண்டும் என்றால் யார் அந்த தனி ஆள்? அதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறதா? ஏன் பதினைந்து வருடம் கழித்து சொல்கிறாய் ஏன் உன் திருமணத்திற்கு வாழ்த்துவதற்கு அழைத்தாய் என்ற கேள்விகளுக்கு சின்மயிடம் பதில் இல்லை.

தன்னோடு எட்டு பெண்களை துணைக்கு அழைக்கிறாரே ஏன் அவர்கள் புகார் கொடுக்க துணியவில்லை? எல்லாம் ஒரு ரகம் என்பதாலா?

அவாள்கள் ஒன்று சேர்ந்து ஆண்டாள் சர்ச்சையை ஏற்படுத்தியவரை பழி வாங்க செய்த முயற்சியின் விளைவுதான் சின்மயியா?!

ராணுவ அமைச்சருக்கு வேறு முக்கிய வேலைகள் காரணமாக விழா ரத்து செய்யப் பட்டிருந்தால் வேறு தேதி கொடுக்கலாம். மறுத்தால் அவர் யார் என்பது மீண்டும் உறுதிப்படும்.

வேறு ஒருவரைக் கொண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க எஸ்ஆர்எம் நிறுவனம் தயாராக இருந்ததாகவும் அதை வைரமுத்து மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஏன் ராஜ்நாத் சிங்கை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் இல்லையா என்ன?

பெண்கள் ஆண்களை பாலியல்  காரணம் காட்டி துன்புறுத்தினால் அதுவும் மீ டூ இயக்கத்தில் வருமா ?

அதுவும் அந்த புகாரை காவல் துறையில் கொடுக்காமல் ட்விட்டரில் சின்மயி மீது கொடுத்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா?

யாருக்காவது விடை தெரிந்தால் பொதுமேடையில் எழுதலாம்.

ரஜினியின் காமெடி தொடர்கிறது? போராட்டங்கள் பிரச்னைகளை தீர்க்காதாம்?

குடிஉரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள். கலவரத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அரசுகள் அடக்கு முறையில் ஈடுபடுவதால் கலவரம் தொடர்கிறது.

பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டு காவல்துறை தடி அடி துப்பாக்கி சூடு  வரை போக வேண்டிய சூழ்நிலை.

கமல்காசன் இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்று அரசியல் என்று முன்னெடுத்தவர் இன்று திமுக நடத்தும் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி பேசாமல் சூட்டிங்கில் தொடர்ந்து வேலையை பார்த்துக்கொண்டிருக்க  வேண்டியதுதானே.

வாயைத்திறந்து ஏதாவது ஒரிரண்டு வார்த்தைகள் சொல்லி  தன்னை அரசியலில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இப்போது வன்முறை போராட்டத்திற்கு தீர்வாகாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஏம்ப்பா யார் வன்முறை தீர்வு என்று சொன்னது? நீ அதை மறுப்பதற்கு.

அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் போது மக்கள் கொதித்து எழுகிறார்கள்.  அதைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு வரை போகிறது அரசு. இதற்கு  யார் காரணம்?

கருத்து சொல்ல வந்தவர் முதலில் இந்த சட்டம் பற்றிய தனது கருத்தை சொல்ல வேண்டுமா வேண்டாமா?

சொன்னால் நீ யார் பக்கம் என்று தெரிந்து விடும்.

அதை சொல்லாமல் தர்மோபதேசம் மட்டும் செய்தால் போப்பா வேலையை பாத்துட்டு என்று தான் மக்கள் உமிழ்வார்கள்.

தமிழ்நாடு பாஜகவின் அரசியல் கூத்து? போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா?

போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா?

அரசை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்துவதுதான் இயல்பு. அந்த வகையில் மத்திய அரசின் குடி உரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள்.

அதனால் மக்கள் மனம் மத்திய அரசுக்கு எதிராக கூர் சீவப்படுகிறது.

பாஜக என்ன செய்ய வேண்டும். இந்த எதிர்ப்பில் பொருள் இல்லை. கொண்டு வந்த சட்டம் நேர்மையானது என்று பிரச்சாரம் செய்யலாம். அவ்வளவுதானே.

ஆனால் சட்டத்துக்கு எதிராக போராடுவதை கண்டித்து ஒரு போராட்டம் அறிவித்து நடத்தியிருக்கிறது பாஜக.

நாளை ஒரு அரசு இதுமாதிரி ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் மக்கள் மத்தியில் பாஜக பிரச்சாரம் செய்யாதா?

எவ்வளவு கேவலமான சிந்தனை?

முதலில் திமுகவை எதிர்த்து போராட்டம் என்று அறிவித்தார்கள். பிறகு என்ன சிந்தனையோ. மாற்றிக்கொண்டு போராடும் கட்சிகளுக்கு எதிராக என்று அறிவித்து விட்டார்கள்.

சிந்தனை வறட்சி!

எதிர்ப்பு கட்டுக் கடங்காமல் வளர்ந்து கொண்டே போவது அவர்களுக்கு  கவலை அளிக்கலாம்.

இவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. பிரச்னைகள உருவாக்குவது மத்திய பாஜக அரசு. அதன் பலன்களை அனுபவித்துத் தானே  தீர வேண்டும்.

இன்னும் கடும் தாக்குதல்களை தனது திட்டத்தில் வைத்திருக்கிறது அமித் ஷா –மோடி கூட்டணி.

அவற்றை எல்லாம் மக்கள் பெருமளவில் எதிர்க்கத்தான் போகிறார்கள். அது எந்த வடிவம் எடுக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

அது அமுல் படுத்தப்படும் போது தான் தெரிய வரும்.

நாட்டை நாசகார பாதையில் கொண்டு செல்வது என்று இருவரும் முடிவெடுத்த பிறகு தடுப்பது உச்ச நீதி மன்றம் தான் என்ற நிலை கூட இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. அதுதான் கவலை அளிக்கிறது.

வரும் 23 ம் தேதி பிரமாண்டமான கண்டன பேரணியை திமுக கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாது எல்லாரும் சேர்ந்து நடத்த இருக்கிறார்கள். மாணவர்கள் இந்த பிரச்னையை கையில் எடுத்த பிறகு மத்திய அரசு ஏதாவது செய்து பிரச்னையின் தாக்கத்தை குறைத்தால் தவிர போராட்டம் ஓயும் என்று தோன்றவில்லை.

நியாயமான போராட்டத்தை கூட தூண்டிவிடப்படும் போராட்டம் என்று ஒரு பெயரிட்டு அலட்சியப்படுத்தினால் அதன் விளைவுகள் ஏற்படுத்தும் இழப்புகள் ஆளும் கட்சியை மட்டுமே சேரும்.

ஈழத் தமிழர்க்கு இரட்டை குடி உரிமை சாத்தியமா? அதிமுகவின் ஏமாற்று வேலை?

இரட்டை குடிஉரிமை பெறுவதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை.

பிறகு எப்படி இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் இலக்கு என்று அதிமுக சொல்கிறது?

குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக தனது 11 வாக்குகளை போடாமல் இருந்திருந்தால் எதிர்த்து வாக்களித்து இருந்தால் 116-114  என்ற விகிதத்தில் மசோதா நிராகரிக்கப்பட்டிருக்கும்.

இன்று இந்த பிரச்னையே வந்திருக்காது.

சென்ற ஆட்சிக் காலத்திலும் பாஜக முயன்று முடியாமல் போன முயற்சி இது ..

இன்று அதிமுக துணை போனதால் நிறைவேறி இருக்கிறது. இந்த துரோகத்தை முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக வில் உள்ள எந்த முஸ்லிமும் இன்னும் சட்டத்தை ஆதரித்து பேசவில்லை. முகம்மது ஜான் என்ற அதிமுக எம்பி ஜமாஅத் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதுதான் நிலைமை.

இங்கே அகதிகளாக அடைபட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடிஉரிமை தர வேண்டுமா என்பதை பரிசீலிக்கவே பாஜக அரசு தயாராக இல்லை. அவர்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழர்கள்.

இந்தியா அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குடிஉரிமை தர வேறு வழியை பயன்படுத்துகிறது.

\அவர்களுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் என்ற ( Overseas Citizenship of India )  உரிமையை வழங்குகிறது. அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. வாக்குரிமை கிடையாது. அதனால் அவர்களுக்கு வேறு எந்த சிறப்பு உரிமையும் கிடையாது.

எனவே ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குட உரிமை தர இயலாது என்கிறது பாஜக அரசு.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வாழ்ந்து வருபவர்கள் எங்கே போவார்கள்?

எப்போது இலங்கை இனப்பிரச்னை முடியும்? எப்போது தமிழர்களுக்கு அரசியல்  தீர்வு கிடைக்கும்? யாராலும் விடை தர இயலாத கேள்வி இது.

இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை முக்கியம். அதனால் அவர்கள் இலங்கை போவகே நல்லது என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அங்கே நிலைமை சீராகி விட்டதா?

அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அவர்கள்.

அங்கே தங்களுக்கு ஆபத்து என்று அவர்கள் கருதினால் இங்கே குடிஉரிமை தர வேண்டியது நமது கடமை. ஆனால் பாஜக அரசுக்கு மட்டும் அவர்கள் மீது எந்த  கவலையும் கிடையாது.

உலகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.

எப்போது ஈழத்தில் அமைதி திரும்பி அரசியல் உரிமைகள் திரும்ப கிடைக்கிறதோ அன்று அவர்கள் திரும்ப வருவார்கள். அப்போது இவர்களும் விரும்பினால் அங்கே செல்ல என்ன தடை?

அதுவரை நாடற்றவர்களாக இங்கே அடைக்கப்பட்டுக் கிடைக்க வேண்டுமா?

அகதிகள் முகாம்களில் அடைபட்டுக் கிடப்பவர்கள் விரும்பினால் அவர்களுக்கு இந்தியக் குடி உரிமை தர வேண்டும்.

மாறாக அவர்களுக்கு  இரட்டை குடி உரிமை பெற்றுத் தருவோம் என்று பசப்புவது ஏமாற்று வேலை?

திமுக பேரணியில் கமல்ஹாசன் கட்சி! சங்கடம் ஏற்படுத்தவா சங்கமம் ஆகவா?

வரும் 23ம் தேதி திமுக தலைமையில் ஆன எதிர்க்கட்சிகள் குடி உரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கண்டனப்  பேரணி நடத்த தீர்மானித்தன.

ஏற்கெனெவே மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

அங்கே போக முடியாமல் உள் துறை அமைச்சர் நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறார்.   வெளிநாட்டு அமைச்சர்கள் பயணங்களை ரத்து செய்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் கட்சி இதுவரை இரண்டு கழகங்களுக்கு மாற்றாக செயல்படுவோம் என்று சொல்லி வந்தது.

இன்று போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்த கமல்ஹாசன் இந்த சட்டம் மாணவர்களையும் அகதிகள் ஆக்குகிறது என்றார்.

திமுக நடத்த இருக்கிற எதிர்ப்பு பேரணியில் எதிர்க்கட்சி என்ற அளவில் கமல்ஹாசன் கட்சியும் கலந்து கொள்ளும் என்று.

இவர் வருவது எதிர்கட்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதற்கு என்றால் வரவேற்க வேண்டியதே.

ஆனால் நான் திமுகவிற்கு எதிரானவன். ஆனால் நானும் எதிர்க்கட்சி என்ற அளவில் மட்டுமே அது நடத்துகிற போராட்டத்தில் பங்கேற்பேன் என்றால் அதில் கொஞ்சம் சந்தேகம் வருகிறது. எல்லாரும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள்.

நாளை கூட்டணியில் நானும் சேர்வேன் என்றால் இப்போது பங்கேற்பதில் தவறில்லை.

இவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூடி திமுகவில் எம்ஜியாருக்கு இருந்த செல்வாக்கைப் போல் எனக்கும் இருக்கிறது என்பதை காட்டுவதற்கு கலந்து கொள்கிறாரா என்பதும் தெரியவில்லை.

ரஜினியை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் வந்திருக்கக் கூடும்.

எப்படியோ நடப்பது நல்லதாக  இருக்கட்டும்.

குஷியில் சின்மயி! சின்மயிக்கு புதுக் கதாநாயகர்கள் இயக்குனர் மித்ரனும் தயாரிப்பாளரும்?

டப்பிங் சங்கத்துக்கும் பாடகி சின்மயிக்கும் நடந்த மோதலில் ஒரு வருடமாக டப்பிங் பேசாமல் இருந்தார் சின்மயி.

செல்வாக்கு மிக்க பார்ப்பன வகுப்பில் இருந்த வந்தவர் என்பதால் ஊடக வெளிச்சம் சின்மயிக்கு அதிகம். அவர் விரும்புவதை அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார்கள்.  மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைத்து எல்லாரும் இவர் மீது பயப்படும்படி செய்து விடுவார்.

ராதாரவிக்கு சின்மயி ஒத்துழைக்காததால் இருவர்க்கும் இடையே உரசல்.

நடிகர் ராதாரவி சின்மயிக்கு நெருங்கிய பாஜகவில் ஐக்கியமானவுடன் சின்மயி காண்டாகி இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பாஜக தலைமையை கேள்வி  கேட்டார்.

இடையில் என்ன நடந்ததோ சமரசம் ஆகி விட்டார்கள் போல.

ஹீரோ படத்தின் கதாநாயகி பிரியதர்ஷனுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.

‘ஒரு வருடம் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு நான் தமிழ் படத்தில் டப்பிங் பேசி உள்ளேன். இதற்காக இயக்குனர் மித்ரனுக்கு நன்றி. மித்ரனும் தயாரிப்பாளரும் எனது கதாநாயகர்கள்‘ என்று பதிவிட்டுள்ளர் சின்மயி.

ஆண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் பெண்கள் மீதும் மீ டூ பாயுமா?

மருத்துவருக்கு என்ன ஆச்சு? கூட்டணி தர்மத்துக்காக விலை போனோம் என்கிறாரே?

குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் பாமகவின் ஓரே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.

இதுவரை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசி வந்த மருத்துவர் ராமதாஸ் இந்த முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஏனென்றால் இந்த சட்ட திருத்தம் ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு தரும் குடி உரிமையை முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கிறது.

வாக்களிக்காமல் வெளியேறி இருக்கலாம். ஆதரித்து வாக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை.

எல்லாவற்றையும் விட மருத்துவர் ராமதாஸ் சொன்ன விளக்கம் தான் அற்புதம்.

சட்டத்திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு அதனால் வாக்களித்தோம் என்றால் யாரும் கேட்கப் போவதில்லை.

ஆனால் சொன்னார் பாருங்கள் பதில்.!

“ கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்து வாக்களித்தோம்”

அதாவது உடன்பாடு இல்லாவிட்டாலும் ஆதரிப்பார்கள் இவர்கள்.

இனிமேல் ராமதாஸ் எதை சொன்னாலும் இது உங்கள் கருத்துத்தானா அல்லது கூட்டணி கருத்தா என்று தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஆதரித்தீர்களா என்பார்கள் என்பதற்காக அமைச்சர் பதவி கொடுத்தாலும் வேண்டாம் என்போம் என்கிறார்.

மொத்தத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியல் தரம் பாதாளம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஆக, மருத்துவரின் விலை கூட்டணி தர்மம்!

ரேப் இன் இந்தியா ஆன மேக் இன் இந்தியா?

குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி டெல்லி இந்தியாவின் ரேப் கேபிடல் என்று பிரசாரத்தின் பேசினார்.

இன்று ராகுல்காந்தி இந்தியாவில் மேக் இந்தியா இப்போது ரேப் இன் இந்தியா ஆகிவிட்டது என்று பேசி சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் அதிகரித்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.

அதைத்தான் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

ராகுலை எதிர்த்து பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அவையை நடத்த விடாமல் ரகளை செய்திருக்கிறார்கள்.

நான் என்ன ராகுல் சவர்க்கரா மன்னிப்புக் கேட்க. நான் ராகுல் காந்தி. மன்னிப்புக்  கேட்க மாட்டேன் என்று ராகுல் உறுதி காட்டுகிறார். உண்மையைத்தானே சொன்னேன் அதற்கு ஏன் மன்னிப்பு கேட்க  வேண்டும் என்பது அவரது வாதம்.

பாலியல் குற்றங்களை தடுக்க எல்லாரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய கால கட்டத்தில் அதை அரசியலாக்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது ஆரோக்கியமான அரசியலாக இல்லை.

ஹைதராபாத்தில் நடந்த பெண் மருத்துவர் கொலைக்கு என்கவுன்ட்டர் செய்து நீதி வழங்கிய நிலையில் ஆந்திராவில் இத்தகைய குற்றங்களுக்கு 21 நாளில் விசாரணை முடித்து தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஜகன் மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார்.

ஏதாவது உருப்படியாக செய்யுங்கப்பா?