Home Blog Page 17

அதிமுக -பாஜக உறவு கணவன் மனைவியைப் போன்றது? முரளிதர் ராவ் அதிர்ச்சி வர்ணனை

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருக்கும் உறவை இதுவரை பாஜக செயலாளர் முரளிதர் ராவைப் போல் யாரும் சொன்னதில்லை.

அதிமுக -பாஜக இடையே இருக்கும் உறவு கணவன் மனைவி உறவைப் போன்றது என்றார் ராவ்.

இந்துக்கள் மட்டுமே கணவன் மனைவி உறவு புனிதமான பந்தமாக பாவிக்கிறார்கள். இஸ்லாம் அதை ஒரு ஒப்பந்தம் என்றே கருதுகிறது. கிறித்துவம் இறைவன் போட்ட முடிச்சை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவான் என்கிறது.

அதிமுக இனி எங்களிடம் இருந்து பிரிந்து போக முடியாது நாங்கள் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டோம் என்பதைத் தான் முரளிதர் ராவ் அப்படி கூறுகிறாரா?

மேயர் தேர்தலை மறைமுக தேர்தலாக்கி பாஜகவின் கனவை உடைத்த எடப்படியின் மேல் உள்ள கோபத்தில் அப்படி கூடுகிறாரா ராவ்?

அதிமுக கூட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பதை வெளியில் சொல்ல மாட்டோம் என்கிறார் ராவ். கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை யாராவது வெளியில் விவாதிப்பார்களா என்கிறார் ராவ்?

அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் அதிகம். அப்படியானால் எத்தனை திருமணங்களை அதிமுக செய்திருக்கிறது? யாருக்கு விசுவாசமாக இருக்கும்?  நவீன பாஞ்சாலி கதையாக இருக்கிறதே என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? 

மத்திய பாஜக அரசின் அடிமையாக அதிமுக அரசு நடந்து கொள்கிறது என்ற விமர்சனங்கள் வலுவடைந்துள்ள நிலையில் அதற்கு வலு சேர்க்கிற வகையில் இருக்கிறது முரளிதர் ராவின் பேச்சு?

எம் ஆர் ராதாவின் பெயரைக் கெடுக்க வந்த மகன் ரவி?

அரசியலில் எல்லாக் கட்சிகளிலும் ஒரு ரவுண்டு போய் வந்தவர் ராதாரவி.

திமுக எல்லா சலுகை களையும் கொடுத்து எம் எல் ஏ ஆக்கி அழகு பார்த்தது. அதிமுகவுக்கும் போய் அங்கும் பல சலுகைகளை அனுபவித்தார்.

இரண்டு  கட்சிகளிலும் நட்சத்திர பேச்சாளர்.

இங்கிருந்து அவர்களை திட்டுவதும் அங்கிருந்து இவர்களை திட்டுவதும் இவருக்கு கைவந்த கலை.

இவருக்கும் மறைந்த நடிகர் எஸ் எஸ் சந்திரனுக்கும் ஜெயலலிதா பல சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறார்.

இத்தனைக்கும் எம் ஜி ஆரை சுட்ட எம் ஆர் ராதாவின் மகன் என்றாலும் திராவிட இயக்கத்தில் எம் ஆர் ராதாவுக்கு இருந்த செல்வாக்கு அவரது வாரிசுகளுக்கு இரண்டு திராவிட கட்சிகளிலும் பதவிகளை அள்ளித் தந்தது.

வாயை வைத்துக் கொண்டு  சும்மா இருக்க மாட்டார் ரவி. எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வது இவருக்கு விருப்பமான பொழுது போக்கு .

திமுகவில் இருந்து  நயன்தாரா பற்றி ஏடா கூடமா பேசி விலக்கப்பட்ட பின் அதிமுகவில் சேர்ந்தார்.

அங்கே வசூல் முன்ப  போல் இல்லை போல் இருக்கிறது.

திடீர் என்று நேற்று அகில இந்திய பாஜக செயலாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்து விட்டார்.

இனி என்ன ஆகப் போகிறதோ பாஜக?

அதுவும் பாஜக வுக்கும் அதிமுகவுக்கும் உள்ள உறவு கணவன் மனைவி உறவு போன்றது என்று சொன்ன முரளிதர் ராவ் முன்னிலையிலேயே சேர்ந்திருக்கிறார். இனி அதிமுகவை எப்படி விமர்சிப்பார்.?

எல்லாம் சரி. எம் ஆர் ராதா பெரியாரின் தொண்டர். அந்தக் காலத்திலேயே சுயமரியாதை பிரசாரம் செய்த தூய நாத்திகர். எந்தக் காரணம் கொண்டும் தன் கொள்கையை எம் ரா ராதா விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் எம் ஆர் ராதாவுக்கு தனிச்சிறப்பு. 

ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவின் வரலாற்று ஓவியம. அதை ரவி நடத்தி பெயர் எடுத்திருக்கிறார். அதில் வரும் திருவாரூர் தங்கராசுவின் நாத்திக வசனங்களை இனி ரவி நாடகம் போட்டால் மாற்ற வேண்டி வரும் என்பதால் நடத்த மாட்டார் என்று நம்பலாம்.

அதனால் தான் பெரியார் திடலில் அவர் பெயரில் திடல் அமைத்திருக்கிறார்கள்.

பாஜக சனாதனிகளின் கூடாரம். இனி ராதாரவி அங்கே போய் பஜனை பாட வேண்டியதுதான்.

அவர்களும் இவரை நன்றாக பயன்படுத்தி எம் ஆர் ராதா பேசிய கருத்துக்களுக்கு எதிராக இவரை பயன்படுத்துவார்கள். அதற்கும் இவர் உடன் பட்டே ஆக வேண்டும்.

உனக்கு என்ன சொத்தா இல்லை?

ஏன் தந்தையை காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ரவி?

தந்தையைப் போல் நாத்திகர் இல்லையென்றாலும் சுயமரியாதை உள்ள இந்துவாக மற்ற திராவிட இயக்க நண்பர்களைப் போல் இருந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அமித்ஷா விளையாட்டு இன்னும் என்னவெல்லாம் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றப் போகிறதோ?

ரவியின் பின்னால் அவரது வளர்ப்பு நாய் கூட போகாது என்றாலும் இப்படி தனி மரமாக அவர் நிற்கப் போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஒரே ஒருவர் மகிழலாம். அவர் சின்மயி. தன் சமுதாயக் கூடாரத்துக்குள் கடைசியில் புகலிடம் தேடி வந்துவிட்டார் ரவி என்பதால் இருக்கலாம் அந்த மகிழ்ச்சி. 

உள்ளாட்சி தேர்தல் நடத்த அஞ்சுவது ஆளும்கட்சியா திமுகவா?

குறை இல்லாமல் சட்டப்படி தேர்தல் நடத்த நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுகவின் குற்றம் என்றால் அந்தக் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை அங்கீகரித்து தடை கொடுத்த நீதிமன்றத்தை என்ன சொல்வது?

தேர்தலை நடத்த நீதிமன்றத்தை நாடியது திமுக. நடத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி தண்டிக்க மனு போட்டது திமுக.

டிசம்பர் மாதம் 13 ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதி மன்றம்.

அதற்குள் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கி அதில் மறுவரையறை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி தேர்தலை நடத்த சிக்கலை ஏற்படுத்தியது ஆளும்கட்சி. கேட்டால் அதற்கும் தேர்தல் நடத்துவதற்கும் தொடர்பு இல்லை   என்கிறார்கள்.

அதை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமா?

எந்த குறைகள் இருந்தாலும் அவைகளுடன் கூடவே தேர்தலை நடத்துங்கள் என்று கூறுமா?

கூறினால் அப்படியே  தேர்தலை நடத்தட்டுமே?

பொங்கல் வர இன்னும் ஒன்றரை  மாதம் இருக்கும்போதே அரிசி அட்டை தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்ததன் பின்னணி தேர்தல் என்பதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களா வாக்காளர்கள்?

பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வென்றவர்களுக்கு பயம் என்று ஆளும்கட்சி கூறுகிறது. இரண்டு இடைத்தேர்தல்களில் வென்று விட்டதால் அவர்களுக்கு தைரியம் வந்து விட்டதா? கூட்டணி கட்சிகள் மிரட்டிக் கொண்டு இருப்பதை கண்டும் காணாமல் இருந்து கொண்டு சமாளிக்கிறது அதிமுக அரசு.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல் பல பணிகள் தேங்கி கிடப்பது உண்மைதான்.      உள்ளாட்சி நிதியை மத்திய அரசிடமும் இருந்து பெற முடியவில்லை.

உச்ச நீதிமன்றம் மட்டுமே தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தர விட முடியும்.

தேர்தல் வரட்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.

அஞ்சியது யார் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லட்டுமே?

நாதுராம் கோட்சே தேசபக்தர்.. பாஜக எம் பி பிரக்யா சிங்

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று இரண்டாம் முறையாக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரக்ய சிங் தாகூர் பேசியது நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஏன் பிரக்ய சிங் குறுக்கிட்டு பேச வேண்டும்?

இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று பாஜக என்றாலே வன்முறையாளர்கள் என்ற வரையறையை நிரூபிக்கும் வகையில் அவரது கூற்று அமைந்துள்ளது.

போபால்  மக்கள் அவரை தங்கள் உறுப்பினராக தேர்ந்து எடுத்தது எதற்காக?

கட்சி பாகுபாடு பார்க்காமல் எல்லா மக்களையும் சந்தித்து அவர்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் .

இந்த  நிலையில் பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர் ஆ ராசா பேசும்போது மகாத்மாவையே சுட்டுக் கொல்லும் அளவு யார் அவர்மீது கோபம கொண்டிருந்தனர் என்பதை சான்றுகளோடு நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார்.

திடீர் என்று உத்தவ் தாக்கரே முதல்வர் ஆவார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.

பிரக்ஞாவை பாராளுமன்ற பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கி இருக்கிறது பாஜக. போதுமா?

2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவரை நன்னடத்தை காரணமாக அவரை வெளியில் விட்டி வைத்திருக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும் உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தகுதி இருக்கிறதோ இல்லையோ நம்மை ஆளுவது பார்ப்பனீயம் தான்.

இந்த நினைவை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் யாரையும் ஏமாற்ற முடியாது.

இனி உலகை ஆள நாம்தான்.

இட ஒதுக்கீட்டில் மோசடி செய்யும் அதிகாரிகளை பணி நீக்க செய்ய வேண்டும்?!

இட ஒதுக்கீடு என்பது போராடிப் பெற்ற சமூக நீதி உரிமை.

ஆனால் அதை முழுவதுமாக நிறைவேற்ற விடாமல் அவ்வப போது பதவியில் இருக்கும் முற்பட்ட சமூகத்தவர்கள் தடுத்து வருகிறார்கள்.

அவர்கள் யார் என்று  இனங்கண்டு கொள்வது  கடினம். ஏன் எனில் அந்த பணியில் பல அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்களால் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாத வகையில் விதிகள் இருக்கும். அதில் முறைகேடு என்றால் பலர் கூடித்தான் செய்ய வேண்டும்.

ஆக இடஒதுக்கீட்டை  மறுக்கும் வேலையை பலர் கூட்டாக சேர்ந்துதான் செய்ய வேண்டும். அப்படி என்றால் அந்த பணியில் எல்லாரும் முற்பட்ட சமூகத்தவர் ஆக இருந்தாக வேண்டும். பிற்பட்டோர் யாராவது இருந்தால்  அவர் முட்டுக்கட்டை போடக்கூடும்.

இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலில்  குளறுபடி செய்யப்பட்டிருக்கிறது.

தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களை பொது பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டுப் பிரிவில்  உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்து அவர்கள் இடங்கள் அதே பிரிவை சேர்ந்தவர்களுக்கு கிடைக்காமல் செய்யும் சதியை செய்திருக்கிறார்கள். இதை தெரியாமல் செய்ய வாய்ப்பு இல்லை.

இது தொடர்பாக எண்ணற்ற வழக்குகள் நடைபெற்று தீர்ப்புகளும் வழங்கப்பட்டு இருந்தாலும் இந்த தவறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது தொடர்பாக எல்லா கட்சி தலைவர்களும் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதுதான் தெரியவில்லை.

கொடுத்துப் பறிக்கிற வேலையை முற்பட்டோர் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு அதிகாரத்தில் உள்ள பிற்பட்டோர் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

அதிகாரம் கிடைத்தும் உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் தகுதி யானவர்கள் அல்ல என்று பொருள்படும்.

ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மோடியை இழிவுபடுத்திய மராட்டிய பாஜக? பார்ப்பனீயத்தை வென்ற மராத்தாக்கள்

ஒருவழியாக நான்குநாள் முதல்வராக இருந்த பட்னாவிஸ் ராஜினாமா செய்து விட்டார்.

இறுதிவரை பார்ப்பனர் ஆட்சியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய் மராத்தாக்கள் ஆட்சியை பிடித்து விட்டார்கள்.

மேலெழுந்த வாரியாக பார்த்தால் இதில் சாதி எங்கே வரும் என்றுதான் தோன்றும். ஆனால் பட்னாவிஸ் தலைமையை மீண்டும் கொண்டு வர சங்கப் பரிவாரங்கள் நடத்திய சூழ்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டால் இதில் சாதி எந்த அளவு  பங்கு வகித்தது என்று புரியும்.

சரத் பவாரிடம் இருந்து அஜித்தை பிரிக்க திட்டமிட்டதை என்னவென்று அழைப்பது ?

கடைசியில் தனி மரமாக அஜித் நின்றபோதுதான் இனி முடியாது என்ற  உண்மை உரைத்தது பட்னாவிசுக்கு.

இதில் ஏன் பிரதமரை இழிவுபடுத்தினார்கள் என்பதுதான் அவர்கள் யார் என்பதை புரிய வைக்கும். பதவிக்கு வருவதற்காக யாரை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். அவர்கள் மரியாதை பறிபோகும் என்பதை பற்றிக் கூட கவலைப் படமாட்டார்கள்.

நள்ளிரவில் எடுத்த முடிவை அதிகாலையில் அமுல்படுத்த அமைச்சரவை கூடி எடுக்க வேண்டிய குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக்கொள்வது என்ற முடிவை ஏன் பிரதமரின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி அமுல்படுதினார்கள்?

ஆராயாமல் எடுத்த முடிவால் இன்று பிரதமர், ஆளுநர், குடியரசுத் தலைவர் என்று எல்லாருக்கும் அவமானம். மோடியின் பெயர் கெட்டால் பரவாயில்லை என்பதால் தானே?

இப்படியா அவர்களை அவமானப்படுத்துவது ?

உச்சநீதிமன்றம் நாளை வாக்கெடுப்பு என்று அறிவித்த உடனேயே கலகலத்து விட்டது  பாஜக .

சிவசேனாவை குற்றம் சாட்டுகிற பாஜக தேர்தலுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி பேசி முடிவெடுத்தோம் என்று உத்தவ் தாக்கரே சொன்னபோது உடனேயே ஏன் மறுக்கவில்லை? 

இந்துத்துவத்தை பாஜக வுக்கு முன்பே மராட்டியத்தில் முழங்கியது சிவசேனா. பெரிய கட்சியாக இருந்த சிவசேனாவுடன் கைகோர்த்து ஜூனியர் பார்ட்னராக சேர்ந்து ஒரு கட்டத்தில் அவர்களை மைனாரிட்டி பார்ட்னர் ஆக்கிய பாஜக பதவியை பங்கிட்டுக் கொள்ள தயங்கியதுதான் இருபத்து ஐந்து ஆண்டு கூட்டு உடையக் காரணம். இனி ஒட்டாது?

பாஜகவின் உண்மை முகம் மராட்டியத்தில் வெளிப்பட்டு விட்டதுதான் இந்திய அரசியலில் திருப்பு முனை.

இனி யாரும் அவர்களுடன் சேர யோசிப்பார்கள். அதிமுகவுக்கே பயம் வந்துவிட்டதே?

ஒருவகையில் சிவசேனை என்ற மாநில கட்சி மாநிலத் தலைமை வகிப்பது நல்ல முன்னேற்றம். 

மாவீரன் பிரபாகரன் புகழ் நிலைக்கும்! ஏங்க வைக்கும் நினைவுகள்?

மாவீரன் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்காக உலகமே காத்திருந்த காலம் ஒன்று உண்டு.

அந்த எழுச்சி உரை ஆண்டு முழுதும் வீரர்களுக்கு உணர்வு கூட்டும் உரையாக விளங்கும்.

புலிகளின் ஆட்சிக் காலம் இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்த காலம். நம்மால் முடியு என்று உலகுக்கு உணர்த்திய காலம். நேர்மையான போரைத்தான் இறுதி வரை புலிகள் நிகழ்த்தினார்கள். ஒருபோதும் சிங்கள பொதுமக்களை தொட்டதே இல்லை. மாறாக சிங்கள வெறியர்கள்தான் தமிழ் குடிமக்களை சாமானியர்களை பெண்களை குழந்தைகளை கொன்று ஒழித்தார்கள்.

அஞ்சலி செலுத்துவோம். உலகம் காணா உண்மை வீரன். குடும்பத்தையே போரில் ஈடுபடுத்திய தன்னலம் கருதா தன்னிகரில்லா தலைவன்.

விமர்சனங்கள் எல்லாம் ஒருதலைப் பட்சமானவை. எப்படி இவர்களால் முடிந்தது என்ற வெறுப்பினால் விளைந்த வசைகள்.

ஆனால் தமிழ்க் குடிமக்கள் ஒருபோதும் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. தங்களுடன் வாழ்ந்து கொண்டே போரிட்ட தலைவனை அவர்கள் அறிவார்கள் தானே.

இன்று கொலைகாரர்கள் கையில் ஆட்சி வந்து விட்டது.

கோத்தபாய இந்தியாவுடன்  நாங்கள் நடுநிலை வகிப்போம் என்கிறார். நாம்தான் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அறவழி போராட்டம் ஒரு போதும் தோற்றதில்லை.

அறக்கடவுள் தமிழர்களுக்கு நியாயம் வழங்கியே தீரும்.

அந்த நம்பிக்கையில்

தமிழர்களின் குல தெய்வமாக வாழும்

மாவீரன் பிரபாகரனுக்கு தமிழினத்தின் இதய அஞ்சலி.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்ய மறுக்கும் அதிமுக அரசு?!

பாஜகவினருக்கு பயந்து பயிற்சி கொடுத்தும் கூட பணியில் அனைத்து சாதியினரையும் அமர வைக்காமல் தவிர்க்கிறது அதிமுக அரசு.

தவிக்கிறார்கள் அனைத்து சாதியினரும்.

பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கண்ட கனவு கனவாகவே இருக்கிறது.

கேரளாவில் கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டு விட்டார்கள்.  எண்ணிக்கை முக்கியமல்ல. இன்று இருநூறு பேர். நாளை இரண்டு ஆயிரம் பேர். எதிர்காலத்தில் பூணூல் போடாதவரும் அர்ச்சனை செய்யாத கோவிலே இல்லை என்னும் நிலை உருவாகும். 

பூணூல் போட்டவர் இறைத்தொண்டுதானே செய்கிறார். அதில்தான் மற்றவர்கள் பங்கு கேட்கிறார்கள். கொடுத்து விட்டுப் போகவேண்டியதுதானே.

குறிப்பாக சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் அட்டூழியம் இன்னும் எத்தனை ஆண்டுகள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை.

கோவிலுக்கு சென்று முக்குறுணி கணபதிக்கு அர்ச்சனை செய்ய கோரியபோது லதா என்ற பெண்ணை அர்ச்சகர் தர்ஷன் என்பவர் தரக்குறைவாக பேசியதோடு கன்னத்திலும் அறைந்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப் ப்ட்டிருக்கிரரர் தர்ஷன்.

கோவில் மீட்பு போராட்டம் வெற்றி  பெறும் நிலையில் இருந்ததை சுப்பிரமணியன் சாமி தனது உச்சநீதி மன்ற தொடர்புகளை வைத்து ரத்து செய்ய வைத்தார்.

அது அவர்களால் முடிகிறது. இன்று கோவிலை தங்கள் சொந்த சொத்து போலவே அவர்களால் கொள்ளை அடிக்க முடிகிறது.

பாவம் பக்தன். அவனுக்கு இதையெல்லாம் பரிசீலிக்க நேரம் இல்லை. அவனுக்கு அவன் பிரச்னை. அதை இறைவன் தீர்க்க வேண்டும் என்று முறையிடுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாது.

இந்த அப்பாவி பக்தர்கள் தான் அவர்களின் பலம. பக்தன் விழித்துக் கொண்டால்  எல்லாம் சரியாகி விடும்.

இறைவனுக்கும் எனக்கும் இடையில் ஏன் ஒருவன் என்ற கேள்வியை பக்தன் கேட்க ஆரம்பித்து  விட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்.

சட்டம் தடை போடாத நிலையிலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பாஜக வுக்கு பயந்து கொண்டு அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர் ஆக்காமல் வைத்திருக்கும் அதிமுக ஆட்சி வீட்டுக்குப்  போனால்தான் அடுத்த ஆட்சியாவது அந்த வரலாற்று கடமையை செய்யும்.

ஒபிஎஸ் ஐ நீங்க ஆம்பளைங்களா என்று ஏன் கேட்டார் குருமூர்த்தி?

நான்தான் ஒபிஎஸ் ஐ ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் செய்ய சொன்னேன்.    அதனால்தான் இரண்டு அதிமுக பிரிவுகளும் ஒன்றாகின. ஒபிஎஸ் என்னை சந்தித்தபோது நீங்களெல்லாம் என்ன ஆம்பளைங்களா என்று கேட்டேன். என்று பேசியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் விழாவில்.

சசிகலா முதல்வர் பதவி ஏற்பதை தடுக்கும் எண்ணத்தில் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டார்கள்.

குருமூர்த்தி இப்படி பேசுவது புதிதல்ல. ஆர் கே நகர் தேர்தலில் தினகரன் வெக்ற்றி பெற்றபோது அதிமுகவினரை “a bunch of impotents” என்று வர்ணித்தார். அதிமுகவினரை பார்த்து  இப்படி விமர்சித்தால் அவர்களிடம் இருந்து கடுமையான எதிர்வினை வராது என்ற நம்பிக்கை குருமூர்த்திக்கு .

இப்போது ஒபிஎஸ் தன்னை சந்தித்த போதும் அப்படியே அழைத்ததாக கூறுகிறார். இப்போதும் ஒபிஎஸ் நேரடியாக மறுக்கவில்லை.

ஜெயக்குமார் ஒரு ஆம்பிளை மற்றவரை ஆம்பிளையா என்று கேட்க மாட்டார் என்கிறார். தரங்கெட்ட செயல் என்கிறார். செல்லூர் ராஜு குருமூர்த்தி ஒரு உதிர்ந்த சருகு என்கிறார். மூன்றாம் தர ஆள் என்கிறார்.

முதல்வர் வாய் திறக்கவில்லை.

ஒபிஎஸ் ஏன் குருமூர்த்தியை சந்திக்க வேண்டும்? பெரிய அரசியல் ஞானி என்பதாலா? பத்திரிகை ஆசிரியர் என்பதாலா? எப்போதும் அரசியல் ஆலோசனை சொல்பவர் என்பதாலா? எதுவும் இல்லை.!

மத்திய பாஜக  அரசில் செல்வாக்கு மிக்கவர். ரிசர்வ் வங்கியின் இயக்குனராக பாஜக அரசு நியமித்து அவரது முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. அவரிடம் பேசினால் மத்திய பாஜகவிடம் பேசுவது போல. அந்த நிலையில்தான் குருமூர்த்தியிடம் சென்று ஒபிஎஸ் ஆலோசனை கேட்டு தர்மயுத்தம் -சமாதியில் தியானம் என்று கலகத்தை தொடங்கினார். 

எனவே குருமூர்த்தியிடம் ஆலோசனை என்பது பாஜகவிடம் அடங்கிப் போவதற்குத் தயார் என்பதன் அடையாளம். 

குருமூர்த்தி ஏன் இப்படி அதிமுகவை சீண்ட வேண்டும்.?

இரண்டு காரணங்களுக்காக. ஒன்று ரஜினியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு எதிர்காலத்தில் பாஜக திட்டமிடும் வியூகங்களுக்கு தாளம் போட வேண்டும்.   

எனவே ரஜினி எனக்கு காவி சாயம் பூச வேண்டாம் என்பதெல்லாம் வேடம்.

அந்த ஸ்க்ரிப்டை எழுதியதும் பாஜகவாகத்தான் இருக்கும்.

மீண்டும் சசிகலாவை உள்ளே விட மாட்டோம் என்பதற்குத்தான் ஐந்தாண்டு கால உறுப்பினர் நிபந்தனையை புகுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது அதிமுக பொதுக்குழு.

மேயர் தேர்தலில் கேட்ட இடம் கொடுக்காமல் மறைமுக தேர்தலை புகுத்தி பாஜக வின் கோபத்துக்கு ஆளானது அதிமுக.

அதேபோல் இன்னமும் முழுவதும் பாஜகவின் திட்டங்களுக்கு தலை ஆட்டாமல் போக்குக் காட்டி வருகிறது எடப்பாடி அரசு. எனவேதான் குருமூர்த்தி மூலம் ஒரு மறைமுகமான எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்திருக்கிறது என்றுதான் தெரிகிறது.

பார்க்கலாம் அதிமுக பாஜகவின் பிடியில் அகப்படப் போகிறதா விடுபடப் போகிறதா என்பதை?

ஆட்சிக்கு வர மந்திரம் வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ்?!

அதிசயம் நடக்கும் என்று ரஜினி காட்டிய பூச்சாண்டி காட்சிகள் மறையும் முன்பே அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்து விட்டார்.

“தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி நடைபெறும். யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி. என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அது என்ன மந்திரம் என்று இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்லுவேன்.” இதுதான் அன்புமணி பாமக இளைஞரணி கூட்டத்தில் பேசியது.

தமிழத்தின் மாற்றம் முன்னேற்றத்தை கொண்டு வருவோம் என்று யாரும் சொல்வதில் தவறில்லை. ஆனால் அது மந்திரத்தால் முடியும் என்னும்போதுதான் கவலையாக இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் கையில்  தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்ற கவலை பிறக்கிறதா இல்லையா?

பொறுப்புள்ள தலைவர் என்றால் மக்களுக்கு புரியும் மொழியில் பேசவேண்டும்.

ஒருவர் அதிசயம் நடக்கும் என்கிறார். மற்றொருவர் மந்திரம் இருக்கிறது என்கிறார்.

மராட்டியத்தில் பாஜக நடத்திய ஆட்சி மாற்றத்தை பாமக தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவிக்கின்றன.

ஆளும் அதிமுக ஆட்சி மீது அன்று  ஊழல் குற்றச்சாற்று சுமத்திய பாமக இன்று கூட்டணி ஆட்சிக்குவேட்டு வைக்கவும் தயாராகி விட்டது.