Home Blog Page 2

நிதிப்பகிர்வில் மத்திய அரசால் வஞ்சிக்கப் படும் தமிழகம்?

தமிழக அரசின் 2020-21 க்கான நிதிநிலை அறிக்கையில், சரியான கணக்கீடுகள் மூலம் போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் 25 வது நிதிக்குழுவின் முன்பு நாம்  தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தது.

அது மத்திய  அரசை குற்றம் சாட்டும் வகையில் அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் அதையே திமுக தலைவர் முகஸ்டாலின் சுட்டிக் காட்டினால் மறுக்கிறார் நிதி அமைச்சர் ஓ பி எஸ்.

15 வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதற்கு  நேரடியாக பதில் சொல்ல வில்லை  ஓ பி எஸ்.

முதல் அமைச்சரின் முயற்சியால் நமக்கு 32849  கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறும் ஓ பி எஸ் அது சரியானதுதான் என்று சொல்லாதது ஏன்?

1971 ம்‌ மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே ஒதுக்கீடுகள் செய்யப் பட வேண்டும் என்பது தமிழகக்தின் வாதம். ஏனென்றால் அதற்குபிறகு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் காரணமாக பிறப்பு  விகிதம் குறைந்ததால் 2011  அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால் நமக்கு பாதிப்பு உண்டாகும். அதாவது மக்கள் தொகை கட்டுப்பாட்டை திறம்பட நிர்வகித்ததால் நாம் நீதி ஒதுக்கீடில் வஞ்சிக்கப் பட வேண்டுமா?

தமிழக அரசு அப்படி ஒரு  கோரிக்கையை வைத்திருப்பதாக சொல்கிறது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பதை சொல்லவில்லை .

14  வது நிதிக்குழு தமிழகத்திற்கு பரிந்துரைத்த நிதி  4.023 % என்றால்   15  வது நிதிக்குழு பரிந்துரைத்திருப்பது   4.189 % என்கிறார் ஓ பி எஸ்.  அதாவது உயர்த்தி      அளித் திருக்கிறது என்பது அவரது வாதம்.

ஆனால் அது சரியானது என்பதை ஒப்புக்கொள்கிறாரா அல்லது  1971 கணக்கெடுப்பின் படி ஒதுக்கினால் இன்னும் அதிகம் கிடைக்கும் என்பதை மறுக்கிறாரா ?

மத்திய அரசு வஞ்சிப்பதை தமிழக அரசு ஏன் மறைக்க வேண்டும். ?

இட ஒதுக்கீடு பிரச்னையில் மீண்டும் குழப்பும் உச்ச நீதிமன்றம்?

இட ஒதுக்கீடு என்று வந்து விட்டால் அதிகார வர்க்கம் என்ன செய்தாவது நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நீர்க்துப் போகச் செய்ய கமண்டலத்தை கையில் எடுத்தது பாஜக. ராமர் கோயில் கட்ட ரத யாத்திரையை துவக்கினார் அன்றைய பாஜக தலைவர் எல் கே அத்வானி.

ஆந்திராவில் மலைவாழ் மக்கள்  அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்கள் ஆக நியமிக்கப் பட்டதால் அங்கு பெருத்த அளவில் ஆசிரியர்கள்  பள்ளிகளுக்கு வராமல் இருப்பது தடுக்கப் பட முடியவில்லை.

எனவே அந்த மாநில அரசு மலைவாழ் மக்கள் வாழும்  பகுதிகளில் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டால் ஆசிரியர்கள் வருகையின்மை ஒழியும் என்று திட்டமிட்டு 100 % பணிகளையும் உள்ளூர் மக்களுக்கே வழங்க உத்தரவாதமளிக்கும் சட்டத்தை அரசு உருவாக்கியது.

அந்த சட்டதைத்தான் செல்லாது என்று இப்போது உச்ச நீதி மன்றத்தின் அரசியல்  சாசன அமர்வு தீர்ப்பு சொல்லி இருக்கிறது. ஏனென்றால் அது பிற மாவட்ட மக்களின் உரிமையை பாதிக்கிறதாம்.

ஏற்கெனெவே ஐம்பது சதத்துக்கும் மேல் ஒதுக்கீடு கூடாது என்று ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறது உச்ச நீதி மன்றம். சம்பந்தம் இல்லாமல் அந்த பட்டியலில் கண்ட வகுப்பினரில் ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களுக்கு தடையாக இருப்பது  போல்  ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது  தீர்ப்பு. எஸ் சி எஸ் டி வகுப்பு பட்டியலை மீண்டும் மறு பரிசீலனை  செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தெரிகிறது .

இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை  சாதி  என்னும்போது சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா வேண்டாமா?

1931 க்குப் பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு  நடைபெறவே இல்லை என்பது  சுதந்திரம் அடைந்தும் நாம் விடுதலை அடையவில்லை என்பதைத் தானே காட்டுகிறது. 

இட ஒதுக்கீடு  அமுல்படுத்த பட்டது  என்ன விளைவை  ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்தான் அறிய முடியும்.

எல்லா  சாதி மக்களும் ஐம்பது சத அளவிற்கு குறையாமல் எல்லா துறைகளிலும் அவரவர் பங்கை பெற்று விட்டார்கள் என்றால் இட ஒதுக்கீட்டையே ஒழித்து விடலாமே. 

இட ஒதுக்கீட்டின் பலன் எல்லாருக்கும் போய் சேரவில்லை என்பது தெரிந்து  விடும் என்பதால்தான் சாதி வாரி  கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார்கள்.

அதற்கு உச்ச நீதி  மன்றம் உத்தரவிட்டிருந்தால் நாடு பாராட்டி  இருக்கும்.

2021  ல்  நடை பெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி  கணக்கெடுப்பும்  நடை  பெற்றால் மட்டுமே இட ஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும்.

அவதூறு வழக்குகளுக்கு முடிவே கிடையாதா?

எந்த அரசும் அவதூறு வழக்கு போட்டு தண்டனை பெற்று தந்ததாக வரலாறும் இல்லை. எந்த அரசும் அவதூறு வழக்கு போடுவதை நிறுத்தியதாகவும் வரலாறு இல்லை.

அவர்களுக்கு  தண்டனை  பெற்று தருவது நோக்கமல்ல. அப்போதைக்கு வழக்கு போட்டு துன்புறுத்துவது மட்டுமே நோக்கம்.

அந்த வகையை சேர்ந்தது கோவையில் சிம்ப்லிசிடி இணைய தள ஆசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜ பாண்டியன் கைது.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி மேலெழுந்தவாரியான பார்வையில் குற்றம் தெரிவதாக திருப்தி அடைந்தபின் தான் அனுப்பி இருப்பார். அதற்கு  போதிய முகாந்திரம் இருக்கிறதா என்பதை மேல் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் கண்ட குறைபாடுகளை எழுதியிருக்கிறார்கள். அவை சரியா தவறா என்பது விசாரணைக்கு உரியது. ஆனால் அதற்காக கைது செய்ய வேண்டுமா? மிரட்ட வேண்டுமா? மிரட்டியதால் எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்களா? மேலும் தீவிரமாக எழுதுவார்கள்..

அரசு அதை தவிர்க்க வேண்டாமா?

பத்திரிகையாளர் சங்கம் தொடங்கி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எல்லா கட்சி      தலைவர்களும் விடுதலை செய்ய கோரி வேண்டுகோள் விடுத்து விட்டார்கள்.

அதனால்  எல்லாம் அரசு மிரண்டு விடுதலை செய்து விடும் என்று நம்ப இடமில்லை. ஆனால் எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள் என்பதை  வரலாறு பதிவு செய்யும் அல்லவா?

ரஜினி ரசிகரால் விஜய் ரசிகர் கொலை.. ரசிகர் மன்றங்களை தடை செய்யும் நேரமிது?

கொரொனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற வாக்குவாதத்தில்  விஜய் ரசிகரை  ரஜினி ரசிகர் கொலை செய்திருக்கிறார்.

கொலையான யுவராஜ் கூலி தொழிலாளி.கொலை  செய்த தினேஷ் பாபு வும் தொழிலாளிதான். மது அருந்தி வாதத்தில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது.

இதை விட ஒரு இழிவான செய்தி தமிழ் சமுதாயத்தில் இருக்க முடியுமா?

யாருக்காவது ரசிகராக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த சினிமா ரசிகர் கூட்டம் எத்தனை விரும்பத் தகாத விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ரசிகர் மன்றங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றனவா ?

சினிமா வெளிவந்தால் பால் அபிஷேகம் செய்வதில் தொடங்கி நடிகரை  பூஸ்ட் செய்யும் அத்தனை  வேலைகளையும் செய்கிறார்கள். நடிகர்களே அதற்கு துணை  போவது  உண்மைதானே ?

இது ஒரு சமுதாய தீமை. முடிந்தால் தடை.   முடியாவிட்டால்  கடுமையான கட்டுப்பாடுகள் .

ஏதாவது செய்து இவர்களை திருத்த அல்லது தடுக்க அரசு ஆராய வேண்டும்.

ஆட்சியில் இருப்போர் ரசிக மன்றங்களின் தயாரிப்பு என்பதில்  ஓரளவு உண்மை இருந்தாலும் அவர்களும் இப்போது மறு பரிசீலனை செய்ய தயாராகவே இருப்பார்கள்.ஏனென்றால் அவர்களிடம் தான் இப்போது கதாநாயகர்கள் யாரும் இல்லையே?

வெளிநாடு சென்று கொரொனாவைக் கொண்டு வந்த மதுரைகோவில் பட்டர்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயார் கொரொனாவால் இறந்தது  வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பட்டர்  வெளிநாடு சென்று  திரும்பியவராம். ஆனால் அதை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாராம். அதனால் கோயில் முழுதும் அதிகாரிகள் மருந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் அவரும் அவர் குடும்பத்தினரும் நோயின் பாதிப்பில் இருந்து  மீள விழைகிறோம்.

ஆனால் பட்டர்  மீது நடவடிக்கை கோரி இந்து இயக்கத்தவர்கள் குரல் எழுப்புவார்களா ? டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த முஸ்லீம்கள் கொரொனாவை பரப்பியதாக மதசாயம் பூசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் இப்போது அமைதி காப்பதன் பொருள் என்ன?

இனிமேலாவது கொரொனாவிற்கு மதசாயம் பூச கூடாது என்பதை இந்த சம்பவம் ஏற்படுத்தினால் நல்லது.

ஜோதிகா சொன்னதில் என்ன தவறு? வெறுப்பை உமிழும் சங்கிகள்

கோயில் என்று சொல்லிவிட்டு எதைச் சொன்னாலும் விமர்சிக்கிற ஒரு கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. அதில் சங்கிகளும் இருக்கிறார்கள். சங்கி அடிமைகளும் இருக்கிறார்கள்.

ஜோதிகா தஞ்சாவூர் போயிருக்கிறார். கோயிலுக்கும் போய் வந்தபின் ஒரு                        மருத்துவமனைக்கும் சென்றிக்கிறார். அங்கே அவர் பல குறைபாடுகளை பார்த்தபின் கோவிலுக்கு செய்வதைவிட மருத்துவமனைகளில் கவனம் செலுத்துவது நல்லது அவசியம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில் என்ன பெரிய  தவறை கண்டார்கள்? கோவிலை எங்கே அவர் விமர்சித்தார்? அவர் இந்துவாக வாழ்பவர். கோவிலுக்கு போய் வந்துதான் மருத்துவ மனைகளை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

எதற்கு எடுத்தாலும் மசூதி சர்ச் பற்றி பேசுவீர்களா என்று கேட்பதை நிறுத்துங்கள். இந்து பிரச்னையை மட்டும்தான் இந்து பேசுவான். மற்ற மத பிரச்னைகளை மற்றவர்கள்  பேசிக்கொள்வார்கள்.

அதிலும் திரௌபதி இயக்குனர் பெரியகோவில் பற்றி  பேசாதீர்கள் என்று மிரட்டுகிறார். புரிந்துதான் பேசினாரா யாரையாவது தாங்கி பிடிக்க பேசினாரா என்று தெரியவில்லை.

சபாஷ் ஜோதிகா ?!

கொரோனா கொள்முதலில் கோடிக்கணக்கில் இழப்பு! யார் ஈடு செய்வது?

கொரொனா விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் கூடுதல் விலை கொடுத்த வகையில் இழப்பு ஏற்பட்டிருப்பது முதல் கட்ட  ஆய்வில் தெரிகிறது.

திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு கொடுத்த அறிக்கையில் இது தெளிவாகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ஒரு கருவிக்கு ரூபா 337 என்றும் ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 377.44 எனவும் கொள்முதல் செய்ததாக அம்மாநில அமைச்சரின் டிவீட்டில் தெரிகிறது. அதையே நமது மருத்துவ சேவை கழகத்தின் இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட கொள்முதல் உத்தரவு நகல் மூலம் ரூபாய் 600 எனவும் ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 672 எனவும் வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் தமிழகம் கூடுதலாக ரூபாய் 294.56 கொடுத்து வாங்கியிருப்பது தெரிய வருகிறது. இந்த விலை மத்திய அரசு நிர்ணயித்ததா நாம் நிர்ணயித்ததா என்பதை தாண்டி கூடுதல் விலை நாம் கொடுத்தோம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இழப்பு யாரால் ஏற்பட்டது? யார் இதை ஈடு காட்டுவது?

இதில் அந்த கருவியை நான்கு லட்சம் அளவில் கொள்முதல் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.   தேவை அவ்வளவு இருக்குமா என்பது வேறு.

இப்போது அதே கருவியை பிரிட்டிஷ் அரசு தரம் குறைந்தது என்ற காரணம் காட்டி கொள்முதலை ரத்து செய்து இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அது ஊர்ஜிதமானால் நமது கொள்முதலும் நின்று போகும். ஆக திட்டமிட்டது நடவாது. போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்னை இத்தோடு போகும் என்று தெரியவில்லை.

கொரொனா ஊழலையுமா கொண்டு வரும்? விசாரணையில்  நடந்தால் தெரிந்து விடப் போகிறது. பொறுத்திருப்போம். 

மருத்துவரை கல்லறையில் அடக்கம் செய்ய காவல் துறையால் முடியாமல் போனது ஏன்?

கொரானாவால் இறந்த கிறிஸ்துவ மருத்துவருக்கு அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் இந்து மயானத்தில் அடக்கம் செய்த அவலம் சென்னையில்  நடந்துள்ளது.

அந்த மருத்துவர் கொரொனா வார்டில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். கொரொனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர். அவரது உடலை  கீழ்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவித்து கலவரம் செய்து தாக்குதல் நடத்தி பணியாளர்களை காயப் படுத்தி அராஜகம் செய்திருக்கிறார்கள்.

காவல் துறை  சமாதானம் செய்ய முடியாமல் பக்கத்து இந்து மயானத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அவரது மனைவியின் முறையீட்டின் பேரில் இப்போது மறை மாவட்ட  பேராயர் தலையீடு செய்து  கல்லறையில்   அடக்கம் செய்ய  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதுவரை 13 மருத்துவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கலவரம் செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடக்கிறது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்.

இந்த அராஜகம் அனுமதிக்கப்பட்டால் கொரொனாவை  வெல்ல முடியாது.

ஆனால் இதற்கும் மத சாயம் பூச ஒரு கூட்டம் அலைகிறது. கலவரம் செய்தவர்கள் அறியாமையால், அச்சத்தால், விரோதத்தால், எதனால் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது  விசாரணையில் தெரிந்து விடும்.

ஆனால் இதில் காவல் துறையின் இயலா தன்மை  புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு நூறு கலவரக்காரர்களை அடக்க முடியாத நிலையிலா காவல்  துறை இருக்கிறது.

பின்னர் அவர்கள் மீது  தக்க நடவடிக்கை எடுத்து விட்டோம் என்பது முன்பு தடுக்க  தவறிய   இயலாமையை மறைத்து விடுமா?

அரசை குற்றம் சொன்னால் அது அரசியல் என்று பொருள் அல்ல. இனி இந்த தவறு நடக்கக் கூடாது என்ற அக்கறை.;

அதிமுக செய்யும் அம்மா உணவக அரசியல்?

கொரொனாவால்  பாதிக்கப் பட்ட மக்களுக்கு திமுக தனது மாவட்ட நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி நல்ல பெயர் எடுப்பதை சகிக்காத அதிமுக அரசு அதற்கு தடை  போட முயற்சித்து உயர்நீதி  மன்ற தீர்ப்பால் இன்று அனுமதிக்க  வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளானது.

அப்படியும் பல முட்டுக் கட்டைகளை அதிகாரிகள் மூலம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது அரசு.

அதே அதிமுக இன்று என்ன செய்கிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க திட்டமிட்டு  அந்த செலவை மாவட்ட கழகங்கள்  ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது. இது மட்டும் அரசியல் இல்லையா?

வேண்டுமானால் திமுகவினரும் அம்மா உணவக செலவை ஏற்றுக் கொல்லட்டுமே என்றால் அது அதிமுக அரசு செய்வதாகத்தான் மக்கள் நினைப்பார்கள்.

ராயபுரத்தில் அமைச்சர்  ஜெயக்குமார் முதலில் அறிவிக்க பின்பு  முதல்வர் பழனிசாமி சேலத்தில் அறிவிக்க  மதுரையில்  செல்லூர்  ராஜு  என்று எல்லா மாவட்டங்களிலும்  அம்மா உணவகங்கள் அதிமுக நடத்தப் படுவதைப்போல் தோற்றம் உருவாகி விட்டது.

முகஸ்டாலின் இதை  ஆட்சேபித்து அறிக்கை வெளியிட்டதில் நியாயம் இருக்கிறது.

கொரொனாவில் அரசியல்  வேண்டாம் என்று  சொல்லிக் கொண்டே அரசியல் செய்து  கொண்டிருக்கிறது அதிமுக. 

சரி. வசூல் செய்ததில் ஒரு  பகுதியாவது   பொது மக்களின் உணவுக்கு  செய்கிறதே ?!

கச்சா எண்ணையை விலை வீழ்ச்சியை ஏன் இந்தியா பயன்படுத்த வில்லை ?

அமெரிக்க எண்ணையை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமகி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.

கொரொனா விளைவித்த ஊரடங்கால் உலகத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு  வெகுவாக குறைந்து  போய்  கச்சா எண்ணையை வாங்குவதற்கு ஆள் இல்லை.

உற்பத்தி செய்ததை ஸ்டாக் செய்யவும் இடமில்லை.. உற்பத்தியை நிறுத்தவும் முடியவில்லை.

கச்சா எண்ணைய் வாங்கும் நாடுகள் பணம் கொடுக்காமலே பெற்றுக்  கொண்டால்  போதும் என்பது மட்டுமல்ல  அதற்கு ஆகும் செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்  என்ற அளவுக்கு அமெரிக்கா  வந்து விட்டது.

எண்ணையையும் வாங்கிக்கொண்டு  அதற்கு அமெரிக்கா பேரலுக்கு ஐம்பத்து மூன்று டாலர் பணமும் தர தயாராக இருந்து வந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு  பேரல் விலை வெறும் பதினெட்டு டாலராக குறைந்து  விட்டதுதான் இன்றைய நிலை.

ஆனால் இந்த நிலைமையை இந்தியா பயன் படுத்திக் கொள்ள தயாராக இல்லை.

அப்படியே குறைந்த விலைக்கு  வாங்கினாலும் அதன் பலனை மத்திய அரசு எடுத்துக் கொள்ளுமே தவிர பொதுமக்களுக்கா  தரப் போகிறது?