Home Blog Page 30

டிரம்ப் ஒரு பொய்யர் என்று சொல்ல மோடி தயங்குவது ஏன்?

ஒசாகாவில் நடந்த ஜி 20மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடி தன்னிடம் காஷ்மீர் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வைத்துக்கொண்டு சொன்னார்.

அதிர்ச்சி அடைந்த இந்தியா உடனே தனது வெளிஉறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் மறுப்பு தெரிவித்தது.

ஏன் என்றால் இந்திய பாகிஸ்தான் பிரச்னைகளில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிப்பது இல்லை என்று இரு நாடுகளும் முன்பே ஒப்புக்கொண்டுள்ளன.

எனவே டிரம்ப் சொன்னது பொய் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதை இந்திய அரசும் மோடியும் எதிர்கொள்ளும் விதம் சரியில்லை.

ராஜ்நாத் சிங்கும் ஜெய்சங்கரும் மட்டும் மறுத்தால் போதுமா?

சம்பந்தப்பட்டவர் மோடி. அவர்க்கும் டிரம்புக்கும்தான் தெரியும் என்ன பேசினார்கள் என்று.

டிரம்ப் சொல்வதை மறுக்கும் உரிமை மோடிக்கு மட்டுமே உண்டு.

பொதுவாக இரு நாட்டு பிரதமர்கள் பேசும்போது அருகில் இருக்கும் செயலாளர்கள் குறிப்பு எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாமல் ஒன்றும் பேசிவிட  முடியாது.

என்ன இருந்தாலும் மற்றவர்களை விட்டு மறுப்பு தெரிவிப்பதை விட தானே மறுப்பு தெரிவிப்பதுதான் மோடிக்கு மரியாதை தரும்.

இல்லை என்றால் மறுக்க துணிவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்..

அதுவும் எதிர்கட்சிகள் இதை பொறுத்து வெளிநடப்பு செய்த பிறகும் மோடி மௌனம் காப்பது சரியல்ல.

அரசு செலவில் 2000 குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் வீதம் ரூ 200 கோடி கொடுத்த முதல்வர்?!

தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் புதுமையானவர்.

ஆனால் அவரது செல்வாக்கை தடுத்து பாஜக கடந்த பாராளுமன்ற தேர்தலில் நான்கு இடகளில் வெற்றி பெற்று அடுத்தது நாங்கள்தான் என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னிலையில் கேசிஆர் தனது சொந்த கிராமம் சிந்தாமடகா செல்கிறார். அங்கு உள்ள 2000 குடும்பங்களுக்கும் தலா பத்து லட்சம் தரப்போவதாகவும் அதை வைத்து நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

டிராக்டர், வீடு நிலம் உபகரணங்கள் எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு உடனே இந்த துகையை நான் அனுமதிக்க போகிறேன் என்றும் அறிவிக்கிறார்.

அந்த கிராமத்து மக்கள் ஏழ்மையில் உழல்வதாகவோ அல்லது அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாகவோ இருந்தால் ஒருவேளை இது சட்டப்படி சரியாக இருக்கலாம்.

ஆனால் ஒரு முதல்வர் தனது சொந்த கிராமம் என்ற அடிப்படையில் மட்டும் தன் விருப்பப்படி நன்கொடை வழங்க முடியுமா என்பது சட்டப்படி கேள்விக்குரியது.

எதிர்க்கட்சிகள் இதை நீதிமன்றம் கொண்டு செல்வார்களா அல்லது விட்டு விடுவார்களா என்பதை தாண்டி ஜனநாயகத்திலும் மன்னர் போல சிந்தித்து செயல்படும் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு கேசிஆர் ஒரு உதாரணம்.

தலைமை தகவல் ஆணையரை அடக்க சட்ட திருத்தம் கொண்டுவந்த மோடி அரசு.!

மோடி அரசு வந்ததில் இருந்து ஜனநாயக அமைப்புகளை சிதைக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

அதில் ஒன்றுதான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டு வந்திருக்கும் திருத்தம்.

பாராளுமன்ற கமிட்டிகள் எதற்கும் பரிசீலனைக்கு அனுப்பாத மத்திய அரசு  மக்களவையில் சட்டத்தை நிறைவேற்றி விட்டு மேலவையில் நிறைவேற்ற காத்திருக்கிறது.

சுயாதிகரம் பெற்ற அமைப்பாக இருந்தால்தான் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படும்.

எல்லா அரசு நிறுவனங்களும் தங்கள் அமைப்பைப் பற்றிய தகவல்களை பொதுவெளியில் வெளியிட சட்டம் உத்தரவிடுகிறது.

இருப்பினும் மக்கள் மனுப் போட்டுதான் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடிகிறது.

இப்போது காலியாக வைத்திருக்கும் ஆணையர்களை நியமிக்க அரசு ஆர்வம காட்ட வில்லை.

ஆணையர்களின் பொறுப்பு முன்பு ஐந்தாண்டுகளாக இருந்ததை இப்போது ஏன் மாற்ற வேண்டும்.

சம்பளம் போன்றவற்றை ஏன் மாறுதலுக்கு உள்ளாக்க வேண்டும்?

ஆணையர்களை பணி பாதிகாப்பு என்ற அச்சத்தில் வைத்திருக்க மத்திய அரசு விரும்புகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் இல்லை.

அன்னா ஹசாரே இதை கண்டித்திருக்கிறார். சோனியா காந்தி கண்டித்திருக்கிறார்.  திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் எல்லாமே கண்டித்திருக்கின்றன.

திமுகவின் ஆ ராசா இதை கருப்பு நாள் என வர்ணித்திருக்கிறார்.

பாராளுமன்ற மேலவையில் ஏதாவது திருத்தம் செய்ய மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா என்பது மட்டுமே இப்போதிருக்கும் ஒரே நம்பிக்கை.

தனியார் துறையில் உள்ளூர் வாசிகளுக்கே 75% வேலை; ஜெகன்மோகன் ரெட்டி சட்டம்?!

தனியார் துறையில் உள்ளூர் வாசிகளுக்கே 75% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்  என்று நாட்டிலேயே முதன் முறையாக சட்டம் இயற்றி ஜெகன்மோகன் ரெட்டி சாதனை புரிந்துள்ளார்.

தகுதி பெற்ற ஆட்கள் கிடைக்கவில்லை என்றெல்லாம் தப்பிக்க முடியாது. ஆந்திர அரசே அவர்களுக்கு தேவையான தகுதி பயிர்ச்சியை அளித்து வேலை கிடைக்க செய்துவிடும்.

மத்திய பிரதேச அரசு இதுபோல் ஒரு சட்டத்தை இயற்ற போவதாக அறிவித்து இருந்தது. அது 70% ஆக இருந்தது. இதே கோரிக்கை கர்நாடக குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் இருந்து வருகிறது.

ஆனால் ஜெகன் கொண்டு வந்துள்ள Andhra Pradesh Employment of Local Candidates in Industries/Factories Act, 2019 வித்தியாசமாக சிந்தித்து உள்ளூர் ஆட்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மாநில அரசு உதவி செய்யும் ஏற்பாட்டை செய்துள்ளது.

அத்துடன் அப்படிப்பட்ட வேலை வாய்ப்பை பெறுபவர்களுக்கு மாநில அரசு ஊக்கதுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவே படையெடுப்பு நடந்து வரும் நிலையில் ஆந்திர அரசின் வழியில் தமிழக அரசும் உள்ளூர் வாசிகளுக்கு தனியார் துறையில் 80% இடஒதுக்கீட்டை உறுதிசெய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பதே போதுமேடையின் எதிர்பார்ப்பு.

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் மோசடி?!

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கு தேர்வுகள் பலகட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதில் தேறுபவர்களுக்கு என குறைந்த மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 100 மார்க்குகளுக்கு 61.25ம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 28.5ம் குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆக நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன.

இப்போது தெரிகிறதா ஏன் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குஉயர் சாதியினருக்கு பத்து சத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு தீவிரமாக முன்னெடுத்தது என்று ?

எஸ்சி வகுப்பினர் ஓபிசி வகுப்பினர் பொதுபிரிவினர் தேர்வாக 61.25 மார்க் எடுக்க வேண்டும் என்பதும் உயர்சாதி வகுப்பினர் மட்டும் 28.5 மார்க் எடுத்தால் போதும் என்றால் அவர்கள் அனைவருமே தேர்வாகிவிடுவார்கள் என்பதுதானே பொருள்?

இதில் பாதிக்கப்படுபவர்கள் பிற்பட்டோரும் மற்றவர்களும்தான்.

ஆக பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி கோட்பாட்டின் அடித்தளத்தையே நொறுக்கிவிடும் என்பது கண்கூடு .

பாஜக அரசு செய்யும் காரியங்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அமைதியின்மைக்கு வழிகோலி வருகிறது.

இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்?!

சூர்யா சொல்வதில் என்ன தவறு? தரமான கல்வி ஏழைகளுக்கு கிடைக்கக் கூடாதா?

நடிகர் சூர்யா ஒரு விழாவில் புதிய கல்வித் திட்டத்தை பற்றி பேசியது ஆதரவு அலைகளை உருவாக்கி விட்டது.

ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கக் கூடாதா என்ற கேள்வி எல்லாராலும் எழுப்பப் படுகிறது.

இதுவரை பணக்காரார்களுக்கு மட்டுமே உயர்தர கல்வி கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

அரசின் கடமை எல்லாருக்கும் தரமான கல்வியும் தேவையான மருத்துவமும் கிடைக்கச் செய்வது.

இதை விட்டு விட்டு நாங்கள் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று மார் தட்டுவதில் பயனில்லை.

இலவசங்கள் பெரும்பாலானவை தேவை இல்லாதவைகள் ஆகிவிடும் இந்த இரண்டும் எல்லாருக்கும் கிடைத்து விட்டால்.

தனது அகரம் பௌண்டேஷனில் இதுவரை 54 மாணவர்கள் மருத்துவ கல்வியை பெற்றிருந்திருக்கிறார்கள் என்றும் அதாவது நீட் வருவதற்கு முன்பு, இப்போது நீட் வந்துவிட்ட பிறகு ஒரு கிராமப் புற மாணவர் கூட மருத்துவக் கல்வி பெறமுடியவில்லை என்றும் கூறுகிறார்.

புதிய கல்வத் திட்டத்தின் பல பகுதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்களை கல்வியில் இருந்து அப்புறப் படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தனை நுழைவுத் தேர்வுகளை நடத்தினால் பள்ளியில் கல்லூரியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கே படிப்பதெல்லாம் வேஸ்ட்  தகுதி தேர்வுக்கு தயார் செய்வத்துதான் படிப்பு என்றால் ஏன் பள்ளிகள் கல்லூரிகள்?

ஐயாயிரம் ஆண்டுகளாக பின்தங்கியோரை தாழ்த்தப்பட்டோரை கல்வியில் இருந்து ஒதுக்கி வந்தே அடக்கி ஆண்டவர்கள் இப்போதும் வேறு வகையில் எல்லாம் அதே நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்.

பணக்காரர்கள் கையில் இருந்து கல்வி மையங்களை பறித்து அரசிடம் சேர்ப்போம்.  கல்வி ஒருபோதும் வணிக மயமாவதை அனுமதியோம்.

அனைவருக்கும் தரமான கல்வியை தருபவர்க்கே இனி ஆட்சி அதிகாரம் என்ற நிலை யை ஏற்படுத்துவோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில்; தாமதிக்கப்பட்ட நீதி?!

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஓடியா, வங்காளம், இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவித்தது.

அதில் தமிழ் விடுபட்டுப்போக பிரச்னை ஆனது. தொடக்கத்திலேயே எல்லா மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தால் பிரச்னை எழுந்திருக்காது.

பிரச்னை எழுந்தபிறகு இப்போது தமிழில் முக்கிய தீர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.

இதை முன்பே செய்திருந்தால் என்ன அல்லது அறிவிப்பு மட்டுமாவது செய்திருந்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

மொழிப் பிரச்னைக்கு தீர்வு மொழி மாற்றமே?!

மொழிபெயர்ப்பு செய்துவிட்டால் யார் என்ன மொழியில் பேசினாலும் பிரச்னை இல்லை.

பாராளுமன்றத்தில் தமிழில் பேசினால் உடனே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொடுத்து விடுகிறார்கள். எனவே யார் எந்த மொழியில் பேசினாலும் மற்றவர்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டாலும் உடனே புரிந்து கொள்ள முடிகிறது.

மொழிபெயர்ப்பை தீர்வாக ஏற்றுக் கொண்டால் நீ மூன்று மொழி படி  என்று சொல்ல வேண்டிய அவசியமே எழாதே ?

அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 4 பேர் பலி ?!

அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வருகிறார்களாம். இத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்க வில்லை என்று முதல்வர் பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறுகிறார்.

திருப்பதியில் கூட தினமும் 75000 பேர்தான் தரிசனம் செய்ய முடியும். ஆனால் இங்கே தினமும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் எப்படி தரிசனம் செய்ய முடியும்?

கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். எல்லாம் வயதானவர்கள்.

தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்து விட்டார் முதல்வர். போதுமா? கவனக்குறைவுக்கு யார் பொறுப்பு?

அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இனியாவது இத்தகைய கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிறவர்கள் பக்தர்கள். பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் கொடுக்கும் விளம்பரத்தில் மயங்கி ஒருமுறையாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்ற ஆவலில் குழுமுகின்றனர்.

அதை பயன்படுத்திக் கொண்டு வணிகம் செய்பவர்கள் முதற்கொண்டு பக்தர்களை வதைக்கிறார்கள்.

நம்பிக்கை உள்ளோர் கூடும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

இதுவரை முப்பது லட்சம் பேர் கூடினார்கள் என்று சொல்கிறார்கள். எந்த பக்தரும் தரிசனம் செய்து விட்டு சும்மா திரும்புவதில்லை. அவர்கள் தரும் காணிக்கைகள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன. இந்து அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறதா? அதில் ஏதும் முறைகேடு நடைபெற வழியில்லையா என்பதையெல்லாம் அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.

ஏன் என்றால் தாத்தாச்சாரியார் ஒருவர் தாங்கள்தான் அத்திவரதர் இருப்பதை  கண்டுபிடித்து சொன்னோம் என்று தனி உரிமை கோருவதாக செய்திகள் வருகின்றன. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதையும் அறநிலையத்துறை விளக்க வேண்டும்.

உயிரை பலி கொள்ளும் அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதால் தமிழக அரசே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

உயிர்ப்பலி வரதனுக்கே அடுக்காது??!!

ஜோதிடத்தால் வீழ்ந்த ‘சரவணபவன்’ ராஜகோபால்??!!

சாமானியர் கூட உழைப்பால் உயர் முடியும் என நிருபித்தவர் சரவணபவன் ‘ அண்ணாச்சி’ ராஜகோபால்.

1981ல் மிகச் சிறிய அளவில் ஓட்டல் தொழிலை தொடங்கிய அவர் குறுகிய காலத்திலேயே வியப்பூட்டும் அளவு தொழிலை விரிவுபடுத்தினார்.

ஜோதிடம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம் கொண்டவர் ராஜகோபால். திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகளின் சீடராகவும் இருந்திருக்கிறார்.

இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் இருக்கும்போது மூன்றாவது திருமணம் செய்தால் மேலும் உச்சத்துக்கு செய்வீர்கள் என்று ஜோதிடர் ஒருவர் சொன்ன ஆலோசனை தான் அவர் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டதாக சொல்கிறார்கள்.

அதற்காக திருமணம் ஆன பெண்ணை அடைய ஆசைப்பட்டு அவர் மறுக்கவே அவரது கணவரை கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்து ஆயுள் தண்டனை பெற வைத்து கடைசியில் அவரது ஆயுள் சிறைக் கைதியாகவே முடிந்துவிட்டது.

ஆன்மிகம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன வென்று ஆதிகாலத் தமிழருக்கு தெரிந்திருக்கிறது.

அதில் ஜோதிடம் எல்லாம் இல்லை.

உள்ளே புகுந்து ஆக்கிரமித்துவிட்ட சனாதன தர்மத்தின் குழந்தைகள்தான் மூட நம்பிக்கைகள்.

சரவணபவன் ராஜகோபாலின் மரணம் ஆன்மிகத் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை  மணி ?!!

ராகுல் கொக்கைன் போதை மருந்து எடுப்பது உண்மையா? சு. சாமிக்கு என்ன தன்டனை

சுப்பிரமணிய சாமி அதிரடியாக பலர் மீது அவதூறு குற்றம் சாட்டுவதை வழக்கமாகவே வைதிருக்கிறார் .

சமீபத்தில் ராகுல் காந்தி கொக்கைன் என்ற போதை மருந்து உட்கொள்வதாக கூறியிருந்தார். அதற்காக அவர் மீது வழக்கு பதியப் பட்டு விசாரணை நடந்து  வருகிறது. இது எப்போது முடியும் என தெரியவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்  இந்தக்குற்றசாட்டைக் கூறியவர் யார் என்பதும்.

சேற்றை வாரி இறைப்பது மட்டுமே ஒரு ஆயுதமாக இந்த நாட்டில் இருந்து வருகிறது. விசாரணை முடிந்து நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும் அதற்குள் அவர் மீது கெட்ட பெயர் பரவி எதிர்காலத்தை நாசமாக்கி விடும். எனவே பொய் குற்றச்சாட்டை விட ஒரு மோசமான ஆயுதம் இருக்க முடியாது.

ஒன்று ராகுல் கொக்கைன் எடுப்பவராக இருந்தால் அவர் அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர். அல்லது நிரபராதியாக இருந்தால் சுப்பிரமணியசாமி பொய் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதுவும் விரைவில் நடைபெற வேண்டும். கால தாமதம் ஆனால் குற்றவாளிகளின் எண்ணம் ஈடேறி விடும். அதற்குப் பிறகு தீர்ப்பு வந்தால் என்ன வராவிட்டால் என்ன?

காங்கிரஸ் இதில் தீவிரம் காட்டி உண்மையை வெளிக் கொணர தவறினால் சுப்பிரமணிய சாமி கூறுவது போல் ராகுல் dope test என்கிற போதை மருந்து  பரிசோதனையில் தோற்பார் என்பது உறுதியாகிவிடும்.