Home Blog Page 43

ராமதாசை வைத்துக்கொண்டே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற நிதின் கட்கரி??!!

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து எல்லாருடனுடம் சேர்ந்து வழக்குப் போட்டவர் அன்புமணி ராமதாஸ்.

சென்னை உயர் நீதிமன்றம் அந்த திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதும் உச்ச நீதிமன்றம் சென்று மேன்முறையீடு செய்தால் எனைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் போட்டவர் அன்புமணி.

எங்களால் தான் எட்டு வழி சாலை திட்டம் ரத்தானது என்று விவசாயிகளிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டது பாமக.

ஏன் முதல்வர் பழனிசாமி கூட சாலை வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து ஆனால் உயர்நீதி மன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டால் நாங்கள் நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்போம் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் சேலம் வந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி விவசாயிகளுடன் கலந்து பேசி சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

அப்போது பக்கத்தில் இருந்த மருத்துவர் ராமதாசோ முதல்வர் எடப்பாடியோ  எந்தவித மறுப்பும் சொல்லவில்லை விளக்கமும் சொல்லவில்லை.

இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் பாஜக கூட்டணி என்பது முன்பே தெரியும்தான் என்றாலும் மருத்துவர் ராமதாஸ் காட்டிய மௌனம் அவரது இமேஜை ரொம்பவே டேமேஜ் செய்து விட்டது.

ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கியது? தடுக்குமா தேர்தல் ஆணையம்?

எதிர்பார்த்ததை போலவே தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஓட்டுக்கு ரூபாய் 300  விநியோகம் தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

இதில் எந்த அளவு உண்மை என்பதை தேர்தல் ஆணையம்தான் உறுதிபடுத்த வேண்டும்.

எல்லாம் முடிந்தபிறகு எங்களால் பண விநியோகக்தை தடுக்க முடியவில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் எந்த பயனும் இல்லை.

ஜெயலலிதா பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை.

ஆனால் 2016ல் திமுகவினரிடம் இருந்து 1% வித்தியாசத்தில் வெற்றியை தட்டிப் பறிக்க தமிழ்நாடு முழுதும் அதிமுக வேட்பாளர்களுக்கு 650 கோடிக்கும் மேலான ஊழல் பணத்தை எஸ் ஆர் எஸ் மைனிங் என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்துள்ளதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துரையிடம் கிடைத்துள்ளதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் தகவல்களை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

எல்லா தகவல்களையும் 9.5.2017 அன்றே வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் அத்துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பி அதை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதெல்லாம் இதுவரை வெளிவராத மர்மங்களாகவே இருக்கின்றன.

எனவே இப்போது வெளிவரும் செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறந்தள்ளி விடமுடியாது.

பொதுமக்கள் கண்காணிப்பும் வேண்டும். அதிகாரிகளின் கண்டிப்பான நடவடிக்கையும் வேண்டும் .

            ஓட்டுக்குப் பணம் என்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.  வரும் மூன்று நாட்கள் தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாட்கள் என்பதால் எச்சரிக்கை தேவை என்பதை பொதுமேடை கவலையுடன் பதிவு செய்கிறது.

தனக்கு தானே குழி தோண்டிக்கொண்ட பாஜக-வின் தேர்தல் அறிக்கை..

இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையை சுத்தமாக துடைத்து விட்டது பாஜக வின் தேர்தல் அறிக்கை.

கூட்டுத் தலைமையை ஒழித்து விட்ட நரேந்திர மோடி இப்போது அதன் மீதான நம்பிக்கையையும் ஒழித்துவிட்டார்.

நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாத சனாதன கருத்துக்களை மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறது பாஜக.

அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 A பிரிவுகள் மாற்றப்பட்டு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை பறிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதை மீண்டும் உறுதி படுத்தி இருக்கிறது தேர்தல் அறிக்கை.

பொதுசிவில்சட்டம் கொண்டு வருவோம் என்கிறது அறிக்கை. தனிவாழ்க்கையில் கூட தங்கள் மதப்படியான உரிமைகளை மக்கள்  இழக்க வேண்டும் என்கிறது. குழப்பத்தையும் எதிர்ப்பையும் தான் இது ஏற்படுத்தும்.

அனைத்து பள்ளிகளிலும் சமஸ்க்ரிதம் கற்பித்தல் விரிவாக்கம் செய்யப்படும் பிரபலப் படுத்தப் படும். சமஸ்கிருத ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஆராய்சியாளர்கள் மற்றும் புலவர்கள் 100 பேருக்கு பாணினி பெயரில் பண நல்கையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்படும் என்கிறது அறிக்கை. என் மற்ற மொழிகள் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்பட கூடாதா அதற்கு உரிய தகுதி மற்ற மொழிகளுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.    சமஸ்கிருதம் வழக்கொழிந்துபோய் மற்ற எல்லா மொழிகளிலும் இரண்டறக் கலந்து விட்டது. அதைத் தனிமைப் படுத்தி தனி உருவம் கொடுக்கும் வேலை வேண்டாத வேலை. அதில்  முனைப்பாக இருக்கிறது பாஜக. மற்ற மொழிக்காரர்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் வேலை இது.

வேலை வாய்ப்புக்கு எந்த வாக்குறுதியும் இல்லை.

அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கு, இந்தி மொழி திணிப்பு நிறுத்தம், கேபிள் கட்டண குறைப்பு, தமிழ் வளர்ச்சி திட்டங்கள் என இருந்தவற்றிற்கு மாறாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதை யாரும் விளக்குவதற்கு முன் வரவில்லை.

    இந்தியாவை ஒற்றைக் கலாச்சார நாடாக மாற்றிடத் துடிக்கும் வெறிதான் பாஜக வின் தேர்தல் அறிக்கையில் தெரிகிறது. 

இவர்கள் கையில் நாடு போனால் என்னவாகும் மாநில உரிமைகள் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

நல்லவேளை தேர்தலுக்கு முன்பாகவே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டார்களே.

ஆங்கிலதிலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை  மற்ற மாநில மக்களுக்கு அவரவர் மொழிகளில் தரப்பட தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து தங்களை நன்றாக மீண்டும் அடையாள படுத்திக்கொண்டிருகிறது பாஜக .

மொத்தத்தில் தனக்கு தானே குழி தோண்டிக் கொண்டு விட்டது பாஜக தனது தேர்தல் அறிக்கை மூலமாகவே??!!

நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம்; அதிமுகவை மிரட்டிய பியுஷ் கோயல்?

நீட் தேர்வு பிரச்னையில் நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம் என்று  பாஜக-வின் அமைச்சர் பியுஷ் கோயல் சென்னையில் பேட்டி கொடுக்கிறார்.

மறுத்து பேசத்தான் அதிமுக-வில் ஆள் இல்லை.

தேர்தல் நேரத்திலேயே இப்படி மிரட்டுகிறார்களே? சாதாரண காலத்தில் எப்படி மிரட்டுவார்கள்.!

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு வாங்கிக் தருவோம் என்று உறுதியளித்திருந்தது.

சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்ட மசோதா என்னவாயிற்று என்று சொல்லக் கூட அதிமுக அமைச்சர்களுக்கு முடிய வில்லை.

நீட் தேர்வு என்பது எத்தனை பேர் தேர்வாகிறார்கள் என்பது முக்கியம் அல்ல.

என்ன பாடத் திட்டத்தில் தேர்வு நடத்தப் படுகிறது என்பதுதான் முக்கியம்.

என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, சிஒபீஸ்இ மற்றும் மாநில பாடத் திட்டங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் கலந்து நீட் பாடத்திட்டம் என்று ஒன்றை அறிவித்தாலும் அதை எப்போது அறிவிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 

              ஆண்டு முழுதும் பயிலும் பாடத் திட்டம் ஒன்று.  நீட்டில்கேட்கப்படும் பாடத்திட்டம் வேறொன்று என்றால் அது அயோக்கியத்தனம் இல்லையா?

அத்தகைய அகில இந்திய தேர்வு நமக்கு எதற்கு?

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் இந்த கொடுமை  நிகழாதல்லவா?

இப்படி காட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் இருந்தால் நமது உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும்?

மாநில உரிமைகளை உயர்த்திப் பிடித்த ராகுல் காந்தி??!!

கிருஷ்ணகிரியில் சேலத்தில், தேனியில் மதுரையில் என நான்கு இடங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

மாநில உரிமைகளை அடக்கி வைக்க முனையும் பாஜக எங்கே? மாநில உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் ராகுல் எங்கே என்று மக்கள் வியக்கும் வண்ணம் அவரது பேச்சு இருந்தது.

ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதே பாஜகவின் கொள்கை.

இதற்கு மாறாக இந்தியா பலவித கலாச்சாரங்களை கொண்ட அற்புதமான நாடு என்றார் ராகுல். அதுதானே உண்மை. ஆனால் அதை ஒப்புக்கொள்ள பாஜக என்றுமே தயாராக இருந்ததில்லை.

பாஜக அதிமுகவை அடிமைப் படுத்தி வைத்திருப்பதை சுட்டிக் காட்டி தமிழக மக்களை ஒருபோதும் அடிமைப்படுத்திவிட முடியாது என்றார்.

ஜிஎஸ்டி-யால் தொழில்கள் அழிந்ததை சுட்டிக்காட்டி அதை மறு சீரமைப்பு செய்வோம் என்றார். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ரயில்வேக்கு தனி பட்ஜெட், என்று உறுதியளித்த ராகுல் தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள அனுமதிக்க மாட்டோம் என்றார்.

நீட் தேவையா என்பதை அந்தந்த மாநில மக்களே முடிவு செய்து கொள்வார்கள் என்று உறுதியளித்தார்.

மொத்தத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தந்த மகிழ்ச்சியை தமிழ்நாடு வந்த ராகுலின் பேச்சு இன்னும் உயர்த்திப் பிடித்து தமிழ் மக்களுக்கு ஒரு புது தெம்பையே அளித்து விட்டது.

Unity in Diversity -பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பதன் உண்மையான பொருளை ராகுல் காந்தியின் பேச்சு வெளிப் படுத்தி விட்டது.

வலிமையான மாநிலங்கள் மட்டுமே வளமான பாரதத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை பிரதி பலித்த ராகுல் காந்தியின் பேச்சு உண்மையிலேயே வரலாற்று சிறப்பு வாய்ந்ததுதான் !!!

ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ள 22 தொகுதி இடைத்தேர்தல்கள்??!

எடப்பாடி ஆட்சி தொடர, முடிந்த மட்டும் தேர்தல் கமிஷன் முயன்றது.

மார்ச் 10 தேதி தேர்தல் அறிவிப்பு கொடுத்தபோதே அப்போது காலியாக இருந்த 21 தொகுதிகளுக்கு பதிலாக 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது தேர்தல் கமிஷன்.

வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற சொத்தை வாதத்தை வைத்து மற்ற மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்கவில்லை.

முன் உதாரணங்களாக பல தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தேர்தலை நடத்தியதை கண்டுகொள்ளவில்லை.

திமுக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து பயனில்லாமல் போகவே உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் நடத்துகிறோம் என்று பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது தேர்தல் கமிஷன்.

மார்ச் 21ம் தேதி சூலூர் கனகராஜ் இறந்ததும் வேறு வழியில்லாமல் இப்போது நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்துள்ளது .

இப்போதும் கூட மே 19 ம் தேதி என்பதால் அந்த நான்கு தொகுதிகளிலும் அமைச்சர் படை அங்கே வேலை செய்யும் வாய்ப்பை  அதிமுகவுக்கு  தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

திமுக அணிக்கு இப்போது 97 உறுப்பினர் ஆதரவு இருக்கிறது. இந்த 22 லும் வென்றுவிட்டால் ஆதரவு எண்ணிக்கை 119 ஆகி ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

தினகரன் வேறு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறும் என்று ஆரூடம் கூறி வருகிறார். அது என்ன கணக்கில் என்று அவருக்குத்தான் தெரியும்.

இரண்டு அணிகளும் ஒன்று சேரப் போகிறார்களா?

கருத்துக் கணிப்பில் எல்லா தொகுதிகளிலும் தினகரன் மூன்றாவது இடத்தை பெறுவார் என்று சொல்கிறார்கள். அவரால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்றால் அதிமுக வினர்தான். ஆர்கே நகர் ஒரு விதிவிலக்கு. அது ஒருபோதும் விதியாக முடியாது.

அதிக பட்சம் விஜயகாந்த்தை போல் தனித்து போட்டியிட்டு 8.33 % -10.1% வாக்குகளை வாங்கி தன்னை அசைக்க முடியாத சக்தியாக ஒருவேளை உருவாக்கிக்  கொள்ளலாம். அதற்கு மேல் வாங்கினால் ஒருவேளை அதிமுக அணிகள் இணைப்பிற்கு அது வழி கோலலாம்.

பெரும்பான்மை பெற தேவையான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்கள்.? தினகரனுடன் ஒட்டிக கொள்வார்களா?    சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?

பாஜகவுடன் இரண்டற கலந்துவிட்ட இபிஎஸ் – ஒபிஎஸ் எங்கே? தன் வாழ்நாளில் பாஜக-வுடன் இனி ஒட்டுறவு இல்லை என அறிவித்து விட்ட தினகரன் எங்கே?

ஒருவேளை இடைதேர்தல் வெற்றிகள் பலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால் கூட மாற்றம் வரும் வாய்ப்பு குறையப் போவதில்லை. 

மக்கள்  தீர்ப்பு இபிஎஸ் – ஒபிஎஸ் அணிக்கு முழுவதும் சாதகமாக இல்லாமல் தினகரன் அறுபது லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று விட்டாலே அந்த அணியில் பிளவு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். அதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார்.  அப்போதும் காட்சி  மாற்றம் ஏற்படும். அது என்ன என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரிய வரும்.

எல்லாற்றுக்கும் மேலாக மத்தியில் மோடி இல்லை என்றாலே இங்கே இபிஎஸ் -ஒபிஎஸ் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

அதற்கும் எண்ணிக்கை வேண்டுமே? மத்தியில் ஆதரவு இருந்து இங்கே பெரும்பான்மை இல்லை என்றாலும் மத்தியில் ஆதரவு இருந்து இங்கே இழுபறி என்றாலும் ஆட்சி தொடர்வது முடியாதது ஆகிவிடும்.

குறைந்த பட்சம் பத்து தொகுதிகளில் அதிமுக வென்றால் மட்டுமே ஆட்சி நீடிக்க முடியும்.

அதற்கு வாய்ப்பே இல்லை.

அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் – 72 ஆண்டுகளாக இட ஒதுக்கீடுதான் இல்லை??!

சட்ட மேதை அம்பேத்கரின் பெயரில் சட்ட பல்கலைகழகம் இயங்கி வருகிறது.

ஆனால் இங்கு கடந்த 72 ஆண்டுகளாக ஒரு மலைவாழ் மக்கள் கூட உதவி பேராசிரியர் ஆக நியமிக்கப்பட்டதில்லை என்ற உண்மை சென்னை உயர் நீதிமன்ற வழக்கின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிற்பட்ட, மிக பிற்பட்ட, பட்டியல் வகுப்பு பிரிவினருக்கு இட இதுக்கீடு தந்து 186 உதவி பேராசிரியர் இடங்களுக்கு ஆசிரியர் பயிற்சி கழகம் வெளியிட்ட அறிவிப்பை, மலைவாழ் மக்களுக்கு இடம் தராத காரணத்தால், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

எப்படி இந்த முறைகேடு இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளப் பட வில்லை?

இத்தனைக்கும் தேசிய பட்டியல் வகுப்பினர் கமிஷன் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இதனை எல்லாம் ஆராய நேரம் இல்லை.

ஆக இதனால் என்ன தெரிகிறது என்றால் எந்த சட்டமும் அதற்கு உருவகம் கொடுக்கப்படவில்லை என்றால் அது இருப்பதில் பயன் இல்லை. வெறும் ஏட்டில் இருந்து என்ன பயன்.?

ஏதோ அப்போதைக்கப்போது நீதி மன்றங்கள் இந்த தவறுகளை சுட்டிக் காட்டுவதால் தவறுகள் நிவர்த்தி  செய்யப் படுகின்றன.

இன்னும் பல அநியாயங்கள் நீதிமன்றங்களின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கிடக்கின்றன.

குருமூர்த்தி வலையில் வீரமணி விழலாமா??!!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழ் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவங்கள்.

கடுமையான தண்டனை மட்டுமே இந்த இழிவை போக்கும்.

எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்வை காண வேண்டிய நேரத்தில் அதை அரசியலாக்குவதோ சந்தடி சாக்கில் எதிரிகளை குறிவைத்து பேசுவதோ மிக மட்டமான செயல்.

அதைத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி செய்திருக்கிறார்.

தனது துக்ளக் இதழில் அதற்கான சதியை அரங்கேற்றுகிறார்.

“தமிழகத்தில் பெண்கள் இழிவு படுத்தப் படுவதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். பெரியார்தான் காரணம். எனவே அவரது கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் அகற்றினால்தான் இங்கே பெண்கள் புனர் வாழ்வு பெற முடியும்” என்ற கருத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

அதில் பெரியார் படத்தையும் போட்டிருக்கிறார்.

இது தேர்தல் நேரம். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. திமுக அணி வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் குருமூர்த்தி கும்பல் சாதி மத சண்டையை தூண்டி விடும் நோக்கில் பெண்கள் இழிவு படுத்தப்பட திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்றால் திராவிட இயக்கங்கள் இந்து மதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அதை வைத்து இந்து மத வெறியை தூண்டி அரசியல் ஆதாயம் காணலாம் என்பதுதான் குருமூர்த்தியின் திட்டமாக இருக்க வேண்டும்.

பெரியாரை குருமூர்த்தி இழிவு படுத்திய காரணத்தால் கி.வீரமணி அவர்கள் பதில் சொல்லும் விதத்தில் பெரியார் என்னென்ன சொன்னார் என்பதை பட்டியல் இட்டு யார் பெண்களை இழிவு படுத்துகிறவர்கள் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள் என்று பேட்டி கொடுக்கிறார்.

கி .வீரமணி சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்து மத வெறியர்கள்  பெரியாரையும் வீரமணியையும் திராவிட இயக்கத்தையும் தாக்கி மிக மோசமாக பேட்டி கொடுக்கிறார்கள். பதிவு இடுகிறார்கள். அதில் வீரமணியை சாரங்கபாணி கோனார் என்றும் ராமசாமி நாயக்கர், என்றும் அவன் இவன் என்றும் தங்க ள்  தகுதியை வெளிக்காட்டு கிறார்கள்.

இப்படி பேசுகிறவர்கள் மீது வழக்கில்லை. வீரமணி மீது மட்டும் வழக்கு பதிவு செய்கிறது காவல் துறை.

நாடெங்கும் இருக்கும் பெரியார் சிலைகள் அவர்கள் கண்களை உறுத்துகின்றன.

தமிழ்நாட்டில் நிலவும் விழிப்புணர்வு அவர்களை எரிச்சல் அடைய செய்கிறது.

அதனால் எல்லா பார்ப்பனர்களும் ஒன்று  சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி சுய மரியாதை இயக்கத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

வீரமணி மேற்கொள் காட்டியிருக்கும் ஆபாசமான புராண கதைகளில் உள்ளவற்றை படித்துதான் இளைஞர்கள் கெட்டுப் போய் விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வதில் என்ன தவறு? புராணங்களில் ஆபாசம் இருக்கிறதா இல்லையா?

அவற்றை பிறகு பார்ப்போம்.

ஆனாலும் திரு.கி. வீரமணி அவர்கள் இந்த விளக்கத்தை ஒரு பதினைந்து நாட்கள் தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா? பிறகு வட்டியும் முதலுமாக திருப்பி பிரச்சாரம் செய்திருக்கலாமே?

இப்போது தேவையில்லாமல் மூளைகெட்டுப்போன சில தமிழர்களை வைத்து தமிழர்களுக்குள் பேதம் ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தந்திருக்க வேண்டாமே?

இதை எதிர்பார்த்து தானே அவர்கள் இந்த ஆயுதத்தை கையில் எடுத்தார்கள்?  தேர்தலுக்காக மெளனமாக இருக்க வேண்டியதில்லை. தகுந்த முறையில் மறுப்பை வெளியிட்டு விட்டு விளக்க கூட்டங்களுக்கு தயார் ஆகி இருக்கலாமே?

புராண கதைகளில் ஆபாசம் உள்ளதா இல்லையா என்பதை அடுத்து பார்ப்போம்??!!

நீதி மன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய ஆலோசகர்??!!

ஊழல் செய்வதற்கும் எல்லை இல்லை என்றாகிவிட்டது.

படித்தவர்கள் கூட நீதிமன்றத்தை மதிப்பதில்லை என்பது மட்டுமல்ல கொஞ்சம் கூட பயமே இல்லாமல் நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தமிழக விரல் ரேகை பிரிவு துணை ஆய்வாளர் பணிக்காக தமிழ்நாடு சீருடை  பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒருவர் கணிதம் தொடர்பான கேள்விக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பதற்காக வழக்கு தொடர்கிறார். பதில் தவறு என்பது தேர்வாணையத்தின் நிலை.

நீதிமன்றத்தில் ஐஐடி யில் பணியாற்றும் டி மூர்த்தி என்பவரிடம் பதில் தவறு என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதின் அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்.

supreme courtமேல்முறையீட்டில் டி மூர்த்தி என்பவர் ஐஐடி யில் பணியாற்றவே இல்லை என்று வாதிடப்பட்டது. விசாரணையில் தேர்வாணையத்தின் ஆலோசகர் ஜிவி குமார்  என்பவர் டி மூர்த்தி என்பவருடன் சேர்ந்து கொண்டு தேர்வானையத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு குமார் கைதாகி மூர்த்தி தேடப்பட்டு வருகிறார்.

படித்தவர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா??!! இப்படிப்பட்டவர்கள் செய்யும் மோசடிகளால் எத்தனை தகுதி பெற்றவர்கள் வாய்ப்புகளை இழந்தார்களோ ?

மிகக் கடுமையான தண்டனை மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்கும்.

முதல் அமைச்சர் வாகன அணிவகுப்பில் பறிமுதல் செய்யப்பட்ட 1.8 கோடி ரூபாய்??!!

பிரதமர் மோடி அருணாச்சல் பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய செல்கிறார்.

அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்க அந்த மாநில முதல் அமைச்சர் பீமா காண்டு ஒரு வாகன அணிவகுப்பில் செல்கிறார். ஒரு காரில் செய்யப்பட்ட சோதனையில் ரூபாய் 1.8 கோடி பறிமுதல் செய்யப்படுகிறது.

காரில் வந்தவர்கள் தங்கள் உறவினர்கள் ஒரு வேலைக்காக இந்த பணத்தை கொடுத்ததாக கூறினார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அவர்கள் ஏன் நள்ளிரவில் அந்த பணத்தை முதல்வரின் வாகன அணிவகுப்பில் எடுத்து செல்ல வேண்டும்? அதுவும் தேர்தல் நேரத்தில்!!

தமிழகத்தில் காவல் துறையின் பாதுகாப்போடு அதிமுக வினரின் தேர்தல் செலவுப் பணம் கடத்தப் படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

பாஜக கூட்டணியில்  இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை அருணாச்சல பிரதேச சம்பவம் நிருபித்து இருக்கிறது.

காங்கிரஸ் புகார் செய்ய இருக்கிறது. என்ன செய்யப் போகிறது தேர்தல் கமிஷன் ???!!