Home Blog Page 44

சுப்பிரமணிய சாமி மகள் சுகாசினி ஹைதர் இந்துவா முஸ்லிமா??!!

சுப்பிரமணிய சாமிக்கு கீதாஞ்சலி சுவாமி என்றும் சுகாசினி ஹைதர் என்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இதில் சுகாசினி ஹைதர் என்ற முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அவர் இந்து பத்திரிகையில் நீண்ட காலமாக பணி புரிந்து வருவது தெரிந்ததே.

சமீபத்தில் சுகாசினி நரேந்திர மோடிக்கு யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மிக உயர்ந்த சிவில் விருதான ‘சயீத்’ என்ற பரிசை வழங்கி கவுரவித்திருக்கிறது.

அங்கே ஒரு இந்து கோவிலுக்கு அவர் அடிக்கல் நாட்டப்போவதாகவும் தகவல்.

இதற்கிடையே மோடி அப்படி என்ன செய்து விட்டார் என சுகாசினி பதிவு  இட்டதாகவும் அதற்கு பதில் அடியாக மற்றொருவர் ‘இந்த மதம் மாறிய பெண்ணுக்கு ஏன் இந்த இந்து விரோதம்?’ என்று பதிவிட்டார்.

அதற்கு பதில் கொடுத்து சுப்பிரமணிய சாமி ‘என் மகள் மதம் மாறவில்லை. ஒன்று உனக்கு புத்தி பேதலித்து இருக்க வேண்டும். அல்லது முட்டாளாக இருக்க வேண்டும் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

மகள் முஸ்லிமை திருமணம் செய்ததை  மறுக்காத சுப்பிரமணிய சாமி மதம் மாற வில்லை என்கிறார். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் தப்பில்லை. 

தமிழர் வரலாற்றை மறைக்க முயன்ற மத்திய அரசின் சதி நீதிமன்ற தலையீட்டில் வெளிவந்தது??!!

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி மு.. 905ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல் தந்தது.

இது எப்படி மத்திய அரசு செய்த சதியாகும் ?

கீழடி அகழாய்வில் சிறப்பாக பணி செய்து உண்மைகளை வெளிக்கொணர காரணமாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றிய மத்திய அரசு என்ன காரணம் கூறியது? அப்போதே இது பற்றி எல்லா இதழ்களும் எழுதின.

இப்போதும் கூட மத்திய அரசு தானாக இந்த உண்மையை வெளியிட்டதா?

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்

“ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம்.  அங்கிருந்து 15 கி மீ தூரத்தில்தான் பாண்டிய நாட்டின் தலைநகரம் கொற்கை அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இதனால் 2004 ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டு எடுக்கப்பட்டன.  அங்கு இதுவரை 4 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கை தற்போது வரை வெளியிடப் பட வில்லை. எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிடவும் அங்கு மீண்டும் அகழாய்வு நடத்தவும் கண்டெடுக்கப் பட்ட பழங்கால பொருட்களை அங்கேயே காட்சிப் படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அகழாய்வில் கண்டடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் அந்த பொருட்களின் மாதிரி தொல்லியல் துறை சார்பில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதுதான் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி,

“பரிசோதனை முடிவுகள் படி ஒரு பொருள் கி.மு. 905ம் ஆண்டையும் மற்றொன்று கி.மு.791 ம் ஆண்டையும் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தயாரித்து வழங்க கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கி மு.395ம் ஆண்டு காலத்தை சேர்ந்தவை என்றும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரின் வழக்கறிஞர் திண்டுக்கல் பாடியூரில் தொல்லியல் துறைக்கு  சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் பள்ளியாக உள்ளது. பழனி ரவிமங்கலத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் உள்ளன. இது பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.

இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டியது  மாநில அரசா மத்திய அரசா என்று  கேட்டு வழக்கை உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

கொடுமை என்னவென்றால் மத்திய தொல்லியல் துறை தனக்கு இந்த தடயங்கள்/சான்றுகள் கிடைத்து பல ஆண்டுகளாக ஏன் கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வில்லை  என்பதையும் அதற்காக பல அறிவுஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் முயற்சித்தும் அது நடை பெற வில்லை  என்பதையும் நீதி மன்றம் பதிவு செய்தது.

2003ல் எடுக்கப்பட்ட சான்றுகள் இரண்டு. அவற்றில் ஒன்று கி.மு.696-540  ஆண்டுகளுக்கு முற்பட்டவை அதாவது சுமார் 2645-2489  ஆண்டுகளுக்கு முந்தியவை  மற்றொன்று கி.மு. 791-701 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அதாவது சுமார் 2740-2650 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

பதினாறு ஆண்டுகளாக பரிசோதனைக்கு உட்படுத்தப் படாததற்கு பெயர் சதி இல்லாமல் வேறென்ன? 

ராணுவத்தை மோடியின் சேனை என்பவர்கள் துரோகிகள்; பாஜக வேட்பாளர் வி கே சிங் ??!!

சில நாட்களுக்கு முன்பே உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று பேசியிருந்தார்.

அது தொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையமும் அறிவிப்பு அனுப்பி விளக்கம் கோரியிருக்கிறது.

இந்நிலையில் காசியாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள் ராணுவ தலைவரும் மத்திய அமைச்சருமான வி கே சிங் ” இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று சொல்லுவது தவறு மட்டுமல்ல சொல்பவர்கள் நாட்டுக்கு விரோதிகள் ” என்று சொல்லியிருக்கிறார்.

இது ஆதித்ய நாத்துக்கும் சிங்குக்கும் இடையே உள்ள பிளவை காட்டுகிறதா என்பது இனிமேல்தான் தெரியும்.

” ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எந்த சார்பும் இல்லாதது. யார் எப்படி பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சிலர் மோடியின் பா ஜக தொண்டர்களை படையாக நினைத்து பேசியிருக்கலாம்.

ராணுவ வெற்றிகளை தன் வெற்றியாக பதிவு  செய்ய நினைத்த மோடிக்கும் இது சரியான பதிலடி.

அதிருப்தியை பதிவு செய்த அத்வானி ??!! மோடிக்கு சிக்கல் வலுக்கும்??!!

பாஜக 1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி உருவானபோது நிறுவனர்களில் ஒருவராக விளங்கியவர் எல் கே அத்வானி.

ஆறு முறை காந்திநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவரை இந்த தேர்தலில் ஒதுக்கிவிட்டது மோடி-அமித்ஷா கூட்டணி.  எழுபது வயது தாண்டியவர்களுக்கு பதவி கிடையாதாம்.

ஏதோ ஒரு சாக்கு. தனது அதிருப்தியை அப்போதைக்கப்போது வெளியிடும் அத்வானி நேற்று தனதுபதிவில் குறிப்பிட்ட கருத்துக்கள் அவரது மன உளைச்சலை தெளிவாக காட்டியது.

‘ முதலில் நாடு. அடுத்து கட்சி. கடைசியாகத்தான் தன் நலன். இதுவே நான் எனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் கொள்கை.   ‘

‘இந்திய ஜனநாயகத்தின்  உண்மையான பொருள் என்னவென்றால் பன்முகத் தன்மைக்கு மரியாதை அளிப்பதும் கருத்து சுதந்திரமும் தான். ஆரம்பத்தில் இருந்தே பாஜக அரசியல் ரீதியாக எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை நமது எதிரிகளாக கருதுவதில்லை.   அவர்கள் நமது எதிர்ப்பாளர்கள் மட்டுமே.”

” அதேபோல் இந்திய தேசிய வாதத்தில் அரசியல் ரீதியாக நம்மை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேச விரோதிகள் என்றும் நாம் ஒருபோதும் கருதுவதில்லை.  பாஜக ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் அளவிலான கருத்து சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.”

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தேச துரோக குற்றத்தை நீக்குவோம் என்ற நிலைப்பாட்டையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில்  நமது ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் பற்றிய ஆதாரங்களை கேட்டவர்களையும் தேச துரோகிகள் என்று பாஜக தலைவர்கள் சாடியதை பார்த்தோம்.

இந்நிலையில் அத்வானியின் இந்த அறிவிப்பு மோடிக்கு எதிரானதாக பிரச்சாரம் செய்யப் படக் கூடும் என்பதை அனுமானித்த பிரதமர் மோடி உடனே சாதுரியமாக  அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்தி விட்டார். பதில் அளித்த மோடி தனது பதிவில் ,

“அத்வானி பாஜக வின் உண்மையான கருத்தை மிகச் சரியாக கூறியுள்ளார். முதலில் தேசம் அடுத்து கட்சி இறுதியாக நாம் என்ற வழிகாட்டு மந்திரம் மிகவும் முக்கியமானது. பாஜக வின் செயல்வீரராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அத்வானி போன்றவர்களின் வாழ்த்து அதனை மேலும் வலுப்படுத்தும்.”

மீசையில் மண் ஓடவில்லை என்று மோடி வேண்டுமானால் மார் தட்டிக் கொள்ளலாம்.

இதுவரை மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை எப்படியெல்லாம் மோடியும் பாஜக வின் அமித் ஷா உள்ளிட்ட இதர தலைவர்களும் கொச்சையாக விமர்சித்தார்கள் என்பதை நாடு  அறியும்.

அத்வானி பேசத் தொடங்கி விட்டார். இனி நிறுத்த மாட்டார். நிறுத்தக் கூடாது என்று நாடு எதிர்பார்க்கிறது.  

பாஜக வை பலவீனப்  படுத்த வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. பாஜக மற்ற நாட்டுப் பற்றாளர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என்பதற்காக கூறுகிறோம். 

அத்வானி முன்பொருமுறை பாகிஸ்தான் சென்றபோது அந்த நாட்டு பாராளுமன்றத்தில் பேசும்போது முகமது அலி ஜின்னா கூறிய வார்த்தைகளை மேற்கொள் காட்டி இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி சகோதர உணர்வோடு வாழ வேண்டும் என்று பேசினார். உடனே பாஜக வில் இருந்த பார்ப்பன சக்திகள் அவரை ஏதோ நாட்டுக்கு எதிரி என்ற அளவில் மோசமாக விமர்சித்தார்கள். அதுவும் பிரவீன் தொக்காடியா என்ற பார்ப்பன வி ச் பி தலைவர் மிகவும் கேவலமாக விமர்சித்தார். ஆர் எஸ் எஸ் கள்ள மௌனம் சாதித்தது.   ஏனென்றால் அத்வானி பார்ப்பனர் அல்லவே. சிந்தியாயிற்றே??!!

இப்போதும் மோடி -அமித் ஷா கூட்டணி அத்வானியை ஆர் எஸ் எஸ் ஆமோதிப்பில்லாமல் ஒதுக்கி இருக்க முடியாது.

பாஜக வில் எப்போதும் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்க மட்டுமே பயன் படுத்தப் படுவார்கள்.  

இந்த விதிக்கு மோடியும்-அமித் ஷா கூட்டணியும் கூட விதி விலக்கல்ல என்பது வரலாறு உணர்த்தும்.

உயர் கல்வித்துறை- சூரப்பா மோதலால் பாதிக்கப்படும் பொறியியல் மாணவர் சேர்க்கை??!!

கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகம்தான் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.

சென்ற ஆண்டும் ஒற்றைச் சாளர முறையில் நடத்தி நல்ல பெயர் வாங்கியது.

ஆனால் அதற்கான அனுமதியை தந்தது தமிழக அரசின் உயர் கல்வித்துறை.    தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ( Directorate of Technical Education ) தான் அதற்கான அனுமதியை வழங்குகிறது. அதுவரையில் தமிழர்கள் தான் அண்ணா பல்கலையில் துணை வேந்தர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் பன்வாரிலால் புரோஹித் தான் கர்நாடகாவில் இருந்து எம் கே சூரப்பாவை நியமித்தார். அது ஒருவேளை இங்குள்ளவர்களுக்கு வருத்தம் அளித்திருக்கலாம்.

அதை வெளிக்காட்ட 2017 ல் அமைக்கப்பட்ட 3 ஆண்டுகள் கமிட்டியை இந்த ஆண்டு மறு சீரமைப்பு செய்து அதில் இயக்ககத்தின் கமிஷனர் விவேகானந்தனை இணை தலைவராக நியமித்தது. உடனே சூரப்பா கமிட்டியில் இருந்து தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அது மட்டுமல்ல இந்த ஆண்டு அண்ணா பல்கலை தேர்வு செயல் பாடுகளில் பங்கேற்காது என்றும் அறிவித்தார்.

கல்வி இயக்ககம் நடத்தினால் அதில் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்பது கல்வித்துறைக்கே இழுக்கு.

யார் பெரியவர் என்ற மோதலில் பலியாவது மாணவர் சேர்க்கை என்பதை யாரும் சட்டை செய்ய வில்லை  என்பதுதான் பரிதாபம்.

அண்ணா பல்கலைக்  கழகம் மாணவர்களுக்கு உரியதே தவிர அதை நிர்வகிப்பவர்களுக்கு உரியது அல்ல என்பதை எம் கே சூரப்பா உணர மாட்டாரா??

பல்கலையின் மாண்பைக் குலைத்து விடாதீர்கள்!!!

4 லட்சம் கோடி கடன் என்று பொய் வாக்குமூலம் தந்தவருக்கு சின்னம் தந்த தேர்தல் ஆணையம்.??!!

தேர்தலில் நிற்பவர்கள் தங்கள் சொத்து மற்றும் கடன் பற்றி படிவம் 26 ல் தகவல் தர வேண்டும்.

அதை நோட்டரி ஒருவர் சான்றிட வேண்டும்.

அதில் பெரம்பூர் தொகுதியில் நிற்கும் மோகன்ராஜ் என்ற ஓய்வு பெற்ற காவல் அதிகாரி தனது படிவத்தில் தேர்தல் கமிஷன் செயல்முறை எந்த அளவு பலவீனமாக உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்த நினைத்தார்.

அதன் படி தனக்கு 1.76 லட்சம் கோடி சொத்துக்கள் (2G ஊழல் என்று எதிர்கட்சிகள் விளம்பரப்படுத்திய துகை) இருக்கின்றன என்றும் 4 லட்சம் கோடி உலக வங்கி கடன் இருப்பதாகவும் ஒரு பொய் வாக்குமூலம் பதிவு செய்து அதையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அவருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கி  இருக்கிறார்கள்.

இந்த தவறை தான் தெரிந்தே செய்ததாகவும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் இது தண்டிக்கத் தக்க குற்றம் அல்ல, இது ஒரு சிவில் குற்றமே என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் ஒரு  ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர். தான் ஓய்வு பெறும் முன்பு ஒழுங்காக பணியாற்றியதாகவும் ஓய்வு பெறும் மூன்றாண்டுகளுக்கு முன்பு லஞ்சம் வாங்கி உயர் அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்து தப்பித்ததாகவும் கூறுகிறார்.

சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.

அதற்காக இப்படியா என்றும் கேள்விகள் எழுகின்றன. பதில்தான் கிடைக்கவில்லை.

தேர்தல் கமிஷன் நடைமுறைகள் ஓட்டைகள் நிறைந்தது என்பது இதன் மூலம் நிரூபிக்கப் பட்டு விட்டது. ஓட்டைகளை அடைக்க என்ன செய்யப் போகிறது தேர்தல் கமிஷன்.??

மகிழ்ச்சி அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

ராகுல் காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அதிர்ச்சி கொடுத்து திக்கு முக்காட வைத்து விட்டது.

காங்கிரஸ் அறிக்கையா இது என்று சிலரால் நம்பவே முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அபாயகரமானது. செயல்முறைப்படுத்த முடியாதது. அதன் நோக்கம் நாட்டை துண்டாடுவதுதான் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்து இருப்பதில் இருந்தே பாஜக எவ்வளவு தூரம் கலங்கி நிற்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த தேர்தல் அறிக்கையால் காங்கிரஸ் பெற இருக்கும் நம்பிக்கைத் தன்மையை பாஜக வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆங்கிலேயர் காலத்து தேசத்துரோக குற்றம் சட்டப் பிரிவு 124 A இன்னமும் நீடிப்பது கேவலம். அதை நீக்குவோம் என்று காங்கிரஸ் சொல்கிறது. ராணுவத்துக்கு அளித்து இருக்கும் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறுவோம் என்கிறது. இனி மலைவாழ் மக்கள் காட்டில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% த்தை கல்விக்கு ஒதுக்குவோம் என்றும் 3% த்தை மருத்துவ பணிக்கு ஒதுக்குவோம் என்றும் உறுதி அளிக்கிறது.

மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ரபெல் ஊழல் விசாரணை, சரக்கு சேவை வரியை மறுபரிசீலனை, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மீண்டும் திட்டக் கமிஷன், பெட்ரோல் டீசல் ஜி எஸ் டி வரம்புக்குள், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, நியாய் என்னும் குறைந்த பட்ச வருவாய் உறுதி திட்டத்தில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் 72,000/-, எல்லாவற்றுக்கும் மேலாக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதுடன் நீட் தேர்வு ரத்தை மாநிலங்களிடம் விட்டு விடுவது என்று இந்திய மக்கள் எதிர்பாராத பல திட்டங்களை காங்கிரஸ் அறிவித்திருப்பது உண்மையிலியே ஒரு திருப்பு முனைதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அதனால் தான் பாஜக அஞ்சுகிறது.

குறிப்பாக திமுக  தனது தேர்தல் அற்க்கையில் குறிப்பிட்டிருந்த பல அம்சங்களை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு சேர்த்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.

மாநிலங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக குறைத்து அவைகளை உள்ளாட்சி அமைப்புகளாக மாற்றும் வேலையில் இறங்கி இருந்த பாஜக விற்கு இது பெருத்த ஏமாற்றம்தான். ஏனென்றால் காங்கிரஸ் அறிக்கை உருப்பெற்றால் மாநிலங்கள் சுயமாக சிந்தித்து முன்னேற முடியும்.

மாநிலங்களில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே இந்திய ஒற்றுமையை கட்டிக் காக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

ஒருவழியாக தமிழகத்துக்கும் வந்தது லோக் ஆயுக்தா?!

ஒருவழியாக தமிழகத்துக்கு லோக் ஆயுக்தா தலைவராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி தேவதாஸ் அவர்களை நியமித்து அதுவும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.

திரு கே. ஜெயபாலன், திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி இருவரும் நீதிப்பிரிவு உறுப்பினர்களாகவும் திரு. எம். ராஜாராம், திரு.கே. ஆறுமுகம் இருவரும் நீதிப்பிரிவு அல்லாத உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

இனிமேல் அரசியல் களம் சூடு பிடிக்கும். குற்றம் சொல்பவர்கள் ஆதாரத்துடன் புகார் கொடுக்கும்போது விசாரணை நடத்தி தீர்வு காண லோக் ஆயுக்தா அமைப்பு உதவிகரமாக நிச்சயம் இருக்கும்.

லோக் ஆயுக்தா விசாரனையில்தானே எடியூரப்ப முன்பு பதவி இழந்தார்.

கால தாமதம் ஆனாலும் வரவேற்க வேண்டிய நியமனம்.

ரபேல் பேர ஊழல் புத்தகங்களை அள்ளிச்சென்று திருப்பிக் கொடுத்த தேர்தல் ஆணையம்??!!

பாரதி புத்தகாலயம் ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் ரூபாய்  15/- விலையில் இந்து என் ராம் தலைமையில் ஒரு புத்தகத்தை வெளியிட இருந்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் திடீர் என்று அந்த புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

அது உடனடியாக பிரச்னை ஆனது. தேர்தல் சமயத்தில் அதை வெளியிட கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என்றார்.

எதிர்ப்பு கிளம்பியுடன் பறிமுதல் செய்த புத்தகங்களை மாலையில் திருப்பி கொடுத்து இருக்கிறார்கள்.

சரி. தவறாகவும் தகுந்த ஆணை எதுவும் இல்லாமலும் பறிமுதல் செய்த அதிகாரிக்கு என்ன தண்டனை?

யார் சொல்லி அவர் இந்த நடவடிக்கை எடுத்தார்?

கெட்ட பெயர் ஏற்படும் என்றவுடன் வாலை சுருட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம் என்றுதானே பொருள்?

பாஜக – அதிமுக வுடன் கூட்டு  சேர்ந்து கொண்டதா தேர்தல் ஆணையம்? 

இல்லையென்றால் அனுமதி இன்றி தவறான நடவடிக்கை எடுத்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கட்டும்??!! அல்லது தேவையில்லாமல் வானில் துப்பாக்கியால்  சுட்டு அதிர்ச்சி அளித்த தேர்தல் அதிகாரியை மாற்றியது போல் இவரையும் மாற்றட்டும்.

குறிப்பு; இந்த பதிவு வெளிவந்த அடுத்த நாளே புத்தகங்களை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரியை ஆணையம் இட மாற்றம் செய்து விட்டது.  வாழ்த்துக்கள்.

வேலூரில் தேர்தலை ரத்து செய்து மிரட்ட தேர்தல் ஆணையம் மூலம் திட்டமா?

தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்த மத்திய ஆளும் கட்சி தேர்தல் ஆணையம் மூலம் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து மிரட்ட திட்டம் தீட்டி இருப்பதாக தெரிகிறது.

வேலூரில் துரைமுருகன் வீட்டிலும் அவரது கல்லூரியிலும் நடத்திய தேடுதல் வருமான வரித்துறை நடத்தியதாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் பணம் தவறாக பயன்படுத்த முயன்றால் அதை தடுக்க செலவின பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

அவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்ய உரிமை இருக்கிறது.  ஆனால் வருமான வரித்துறை தேர்தல் காலத்தில் அந்த வேலையை செய்யும்போதுதான் சந்தேகம் வருகிறது.

வருமான வரித்துறை தன் பணிகளை தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள எந்த சட்டபூர்வ தடையும் இல்லைதான்.

அந்த சோதனையை ஏன் அவர்கள் துல்லிய தாக்குதல் போல் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டும் பாய்ச்சுகிறார்கள் என்பதுதான் கேள்வி?

ஆளும் கட்சி பணபலம் இல்லாமல்தான் இந்த தேர்தலை சந்திக்கிறதா?

துரைமுருகன் வீட்டிலும் கல்லூரியிலும் நடத்திய சோதனையை யாரும் கேள்வி கேட்கவில்லை. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது எல்லாம் சட்டப்படிதான் நடந்திருக்கிறதா அல்லது ஏதாவது விதிமீறல்கள் உள்ளனவா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்.

அரவக்குறிச்சியில் சென்ற சட்ட மன்ற தேர்தலின்போது அன்புநாதன் என்ற அதிமுக பிரமுகரின் வீட்டில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தலுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்ட பணம்தான் என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்து தேர்தலை ரத்து செய்தது.

அதேபோல் வேலூரிலும் இன்னும் சில தொகுதிகளிலும் ஏதாவது காரணத்தை காட்டி தேர்தலை ரத்து செய்ய கமிஷன் முடிவு செய்தால் அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் பார்க்கப்படும்.

 என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். அது சட்ட பூர்வமானதா இல்லையா என்பதை நீதிமன்றம் ஆராயட்டும். ஆனால் தேர்தல் ரத்து என்ற முடிவை ஆணையம் எடுக்கக்கூடாது.  

 எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டுமே!!!