Home Blog Page 47

மோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா?!

மோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா?!

தாமோதரதாஸ் நரேந்திர மோடி – தனிப்பட்ட முறையில் ஒழுக்க சீலர் – சொத்து சேர்க்காதவர் – நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர் – கடுமையாக உழைப்பவர் .

அதில் எல்லாம் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கருத்து வேறுபாடு எங்கே தோன்றுகிறது என்றால் அவர் என்ன கொள்கையை கொண்டிருக்கிறார்?  யாருடைய பிரதிநிதியாக செயல் படுகிறார் ? யார் அவரை ஆட்டுவிக்கிறார்கள்? உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? இதில்தான் மாற்றுக் கருத்து நிரம்ப இருக்கிறது.

சனாதன தர்மத்தை நிலைநாட்ட பாடுபடுகிறார். கார்பரேட் பெரு முதலாளிகளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆர் எஸ் எஸ் அவரை ஆட்டுவிக்கிறது. உண்மையான அதிகாரம் ஆர் எஸ் எஸ் இடம் இருக்கிறது. இதை மறுக்க முடியுமா முடியாதா ? 

குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற கொச்சையான விமர்சனங்கள் அர்த்தமற்றவை. அவரது சொந்தங்கள் சாதாரணமான இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போற்றப்பட வேண்டியதுதான். வாழ்த்துவோம்.

ஆனால் பிரச்னை அதுவா?

ஒப்பீடு சரியா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் ஹிட்லர் , முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் கூட தனிப்பட்ட முறையில் ஒழுக்க சீலர்கள் தானே? சொத்து சேர்க்காதவர்கள் தானே? உறவினர்களை பேணாதவர்கள் தானே? அவர்கள் கொண்டிருந்த இனவெறி-  நாங்கள் ஆளப் பிறந்தவர்கள் என்ற தவறான சித்தாந்தம்  அதுதானே அவர்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாக அமைந்தது.

Modi-hitler
Modi-hitler

பாகிஸ்தான் நமக்கு பகை நாடு. அதற்கு அது முஸ்லிம் நாடு என்பது மட்டும் காரணம் இல்லை. பக்கத்தில் பங்களா தேசம் ஆப்கானிஸ்தான் முஸ்லிம் நாடுகள் நம்மோடு நேசத்தோடு வாழவில்லையா? காஷ்மீர் தான் பாகிஸ்தான் நம்மோடு பகை நாடாக தொடர காரணம். காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் ஒருவேளை பாகிஸ்தான் நட்பு நாடாக மாற வாய்ப்பு இருக்கிறது.

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?    சிக்கல் நிறைந்தது காஷ்மீர் பிரச்னை. ஒரே நாளில் அதை  தீர்த்து விட முடியாது.   காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு மூன்றும் தனித்தனி பிரச்னைகளை உள்ளடக்கியவை. காஷ்மீரில் மட்டும்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மை.மற்ற இரண்டு பகுதிகளை அவர்கள் கட்டுப் படுத்த  முடியுமா ? எந்த மக்களையும் ராணுவ பலம கொண்டு மட்டும் ஆண்டு விட  முடியுமா? எத்தனை  காலத்துக்கு முடியும்? முடிந்தாலும் அது நியாயமா?  பேசி மட்டுமே  தீர்க்க வேண்டிய பிரச்னை காஷ்மீர்.

பாகிஸ்தான் தனக்குள் முஸ்லிம் பயங்கரவாத பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ராணுவம் தான் உண்மையான அதிகாரத்தை செலுத்தி வருகிறது. புட்டோ, பெனாசிர், என்று அதன் தலைவர்கள் கொல்லப்பட்டு ஜனநாயகம் அதற்கு அன்னியப் பட்டு நிற்கிறது.    பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அனுமதிப்பதால் தான் அமேரிக்கா போன்ற  உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானை எச்சரித்து வருகின்றனர்.

உயிரைப் பணயம் வைத்து இந்திய வீரர்கள் எல்லைப் பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

எந்தப் போரிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. வெல்லவும் முடியாது. எப்போதும் பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா கூட இன்று தயங்கி நிற்கிறது. நமது ராணுவ பலம் வெற்றிக்கு உத்தரவாதம்  தரும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு  வந்தாலும் இதே நிலைதான். காங்கிரசும் பாஜக-வும் வெளி உறவுக் கொள்கையில் மாற்றுக் கொள்கை கொண்டவர்கள் அல்ல. மூன்றாவதாக  யார் வந்தாலும் இதே நிலைதான் நீடிக்குமே தவிர மாற்று நிலை எடுக்கப் போவதில்லை.

narendra-modi
narendra-modi

இன்று இந்திய தேசம் முழுவதும் ராணுவத்தின் பக்கம் நிற்கிறது.

அபிநந்தன் விடுதலையை எல்லா இந்தியரும் கொண்டாடுகிறார்கள்.

அவரை பாகிஸ்தான் விடுவித்தது சர்வதேச நிர்பந்தம் காரணமா, இந்தியாவின் மீதான அச்சம் காரணமா என்ற விவாதத்தை  தாண்டி பேச்சு வார்த்தைக்கு தயார் என்று அறிவிக்க வேண்டிய நிலையில் தான் இம்ரான் கான் இருக்கிறார்.

ஆனால் இந்தியா பேச்சுவார்த்தைக்கு உடனடியாக சம்மதிக்க தயங்குவதன்  காரணம் பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கர வாத குழுக்களை கட்டுப்படுத்தாமல் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயன் இல்லை என்பதுதான். அதில் நியாயமும் இருக்கிறது.

இப்படி ஒட்டு மொத்த தேசமும் மத்திய அரசின் பின்னாலும் ராணுவத்தின் பின்னாலும் இருக்கும்போது பிரதமர் மோடியை அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பதை ஏதோ தேசத்துக்கே எதிராக பேசுவதாக முத்திரை குத்துவது என்ன நியாயம்?

போரினால் கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எடியூரப்பா பேசினால் அது அரசியல் அல்ல. எடியூரப்பாவின்  பேச்சை பாகிஸ்தானில் பிரசுரித்து அரசியல் காரணங்களுக்காக மோடி போர் நடத்துகிறார் என்றார்களே அவர்களை என்ன செய்வீர்கள். எடியூரப்பா மேல் நடவடிக்கை எடுத்தீர்களா?

தேசம் பெரிது. அதில் அரசியல் செய்யாதீர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் இசைக்காமல் மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன?

மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன?

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் நாற்பதாயிரம் கோடி செலவிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

முன்பே மோடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தேசிய கீதம் இசைக்காமல் ஒரு நிகழ்ச்சி நடந்த போதே ஏன் மோடிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்க விருப்பம் இல்லையா? அதற்காகவே தேசிய கீதமும் இசைக்காமல் அரசு நிகழ்ச்சி நடந்ததா என்ற கேள்வி எழுப்பப் பட்டது.

இப்போது மீண்டும் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த செயல் தமிழர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு  காரணம் மாநில அரசா? மத்திய அரசா?

யாரேனும் விளக்கம் சொல்ல வேண்டாமா?

இதேபோல் மற்றவர்கள் அரசு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி விமர்சித்து இருப்பார்கள்?

மற்றவர்களுக்கு ஒரு நீதி  மோடிக்கு ஒரு நீதியா?

இவர்களின் நாட்டுப் பற்று ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்திலும் தேசிய கீதத்திலும் திராவிட என்ற சொல் வருவதால் தவிர்க்கிறார்களா?

‘மோடிஜி’ என்று பாசத்துடன் அழைத்த எடப்பாடியும் ஒபிஎஸ்சும் விளக்கம் சொல்வார்களா? மௌனித்துப் போவார்களா?

மோடி வென்றால் பாதி அதிமுக பாஜகவில் கரைந்து விடும்? மோடிஜி என்று அழைத்து பக்தி காட்டிய எடப்பாடி ஒபிஎஸ்

மோடி வென்றால் பாதி அதிமுக பாஜகவில் கரைந்து விடும்?

கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை எடப்பாடியும் ஒபிஎஸ்ம் பணிவு காட்டி வரவேற்றனர்.

கறுப்புக் கொடி காட்ட நின்ற மதிமகவினர் வைகோ தலைமையில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். மீனவர்  பிரச்னை தொடங்கி பெற்றோலிய மண்டலம் அமைப்பது, மீத்தேன், எடுப்பது, இந்தி திணிப்பு என்று பலவகைகளிலும் தமிழர் பண்பாட்டை சிதைப்பதை கொள்கையாக கொண்டு செயல்படும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தை எதிர்த்து பாஜக-வினர் வைகோவை தாக்க முயற்சிக்க காவல்துறை தலையிட்டு மதிமுகவினரை கைது செய்து கொண்டு  சென்றது.

எந்த அளவு அதிமுக பாஜகவிற்கு அடிமையாக மாறி விட்டது என்பதை காட்டும் விழாவாக கூட்டம் அமைந்து விட்டது.

தமிழக தலைவர்கள் யாரும் வட இந்திய தலைவர்களை ஜி போட்டு அழைக்க மாட்டார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஒபிஎஸ்சும் போட்டி போட்டுக் கொண்டு பிரதமரை மோடிஜி என்று பாசத்துடன் அழைத்தது தமிழ்க் கலாச்சாரத்துக்கு விடை கொடுக்க அவர்கள் தயாராகி விட்டதையே காட்டியது.

admk-modi
admk-modi

போகிற போக்கை  பார்த்தால்  மோடி  வென்று ஆட்சி அமைத்தால் பாதி அதிமுக பாஜக-வில் கரைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

திராவிட் இயக்க தோன்றல்களான அதிமுக தொண்டர்கள் சிந்திப்பார்களாக.

மோடி தனது உரையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்றார்.  நிர்மலாவுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு? இங்கு பிறந்தவர் என்பதை தவிர.    ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டு வடக்கில் செட்டில் ஆகி அந்த தொடர்பில் மத்திய அமைச்சரானவர்.

எப்போதாவது தமிழகத்தில் மக்களோடு கலந்து பிரச்னைகளை தெரிந்து கொண்டவரா? கர்நாடக மாநிலத்தில் இருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்க பட்டு காவிரிப் பிரச்னையில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் அல்லவா?  ராஜாஜியை பற்றி பேசி தான் பிரதிநிதி என்பதையும் மோடி பறைசாற்றிகொண்டார். மீனவர்களுக்கு சாதனங்களை வழங்கியது பற்றி  பேசிய  மோடி ஏன் இன்னமும் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்கிறது என்பது பற்றி வாய் திறக்க வில்லை.

நேற்று கூட இரண்டு இலங்கை மீனவர்களை எல்லை தாண்டியதாக இந்திய ரோந்துப் படை கைது செய்து விடுவித்திருகிறது. ஏன் தமிழ் மீனவர்கள் கைது செய்யப் படும்போது தலையிட்டு இதே ரோந்துப் படை தடுக்க  வில்லை.?

நெருடலான பல பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் மோடியையும் பாஜக வையும் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் தான் இருப்பார்கள்.

இரட்டை இலை கிடைத்ததால் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கு வெற்றியா?!

இரட்டை இலை கிடைத்ததால் அதிமுகவுக்கு வெற்றியா?!

இரட்டை இலை சின்னத்தை  எடப்பாடி ஒபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை டெல்லி உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது.

அது தினகரனுக்கு வேண்டுமானால் பின்னடைவாக இருக்கலாம்.

தமிழக மக்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் என்ன பயன்?

மக்களின் அதிகாரத்தை பாஜக-விடம் அடகு வைத்த கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு இரட்டை இலை எப்படி வெற்றி  பெறும்?

ஆர்கேநகர் தொகுதியில் இரட்டை இலை தோற்றது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்று ஒரு காரணம். இன்று வேறு ஒரு காரணம்.

ஆக தோற்கத் தயாராக இருக்கும் சின்னமே இரட்டை இலை. எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு இரட்டை இலை சின்னத்தின் மீதான பாசம் அதிமுக தொண்டர்களுக்கு  போய்விட்டது.

தினகரனின் தனிக்கட்சி அதிமுக தொண்டர்களை பிரித்து விட்டது உண்மைதான். யாருக்கு எவ்வளவு என்பது தேர்தலில் தான் தெரியும்.

திராவிட இயக்கத்தின் கூறு என்ற முத்திரையை இழந்த அதிமுக எப்படி வெற்றிபெறும்?

இசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படுவது ஏன்?

1956 சென்னையில் நிறுவப்பட்ட இசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் இப்போது சங்கீத் வாத்யாலயா என்ற பெயரில் அண்ணா சாலை டிவிஸ் பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வருகிறது.

இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இருந்து வரும் கைவினைப் பொருட்கள் ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வருகிறது.

அதில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வில்யாழ், மகரயாழ் , மச்சயாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ், போன்றனவும், வீணை , தம்புரா, மிருதங்கம், தவில் , நாகசுரம், தபேலா, ஆகிய இசைக்கருவிகளும் வைக்கப்  பட்டுள்ளன. இசை மாணவர்களுக்கும் ஆய்வு செய்பவர்களுக்க்ம் இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இதை டெல்லி பிரகதி மைதானத்தில் நிறுவ தீர்மானித்ததின் காரணம் என்ன? இதைப்பற்றி மாநில அரசு என்ன கருத்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.

முரசொலி நாளிதழ் எழுதிய தலையங்கம் இந்த வஞ்சக நடவடிக்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

சென்னையில் வேண்டாம் எல்லாம் டெல்லியில் தான் என்றால் மாநிலங்கள் எதற்கு என்றும் அது கேள்வி எழுப்பி இருக்கிறது.

பதில் சொல்லத்தான் யாரும் இல்லை?

தமிழர் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாமக ??!!

மீண்டு எழவே முடியாத நிலைக்கு போய் விட்டது பாட்டாளி மக்கள் கட்சி.

ஒரு மகளிர் அணி செயலாளர் விலகிவிட்டார். நடிகர் ரஞ்சித் துணைத்தலைவர் பதிவியில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிய கையோடு தினகரனின் அ ம மு க வில் இணைந்து விட்டார்.

ஒரு காலத்தில் தமிழர் ஒற்றுமையை கட்டிக் காக்கும் என நம்பப் பட்ட கட்சி இன்று தமிழர் ஒற்றுமைக்கு உலை வைக்கும் கட்சியாக மாறிப்போய் விட்டது.

சாதிகள்தான் தமிழர் ஒற்றுமைக்கு தடை என்பது உண்மையானால் சாதிக் கட்சியான பாமக எப்படி தமிழர் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்ததால் மருத்துவர் ராமதாஸ் திருமாவளவனோடு கைகோர்த்து வன்னியர் தலித் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார்.

ஒரு தேர்தலில் வெற்றி  பெற முடியவில்லை  என்பதற்காக அதன் காரணம் தலித் கட்சியோடு காட்டிய உறவுதான் என தவறாக கணக்கிட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக தலித் உறவையும் திருமாவளவன் உறவையும் துண்டித்தவர் மருத்துவர் ராமதாஸ்.

அதுவரை போராளியாக இருந்தவர் அதுமுதல் வணிகராக மாறிப்  போனார்.

இன்று அதிமுக வுடன் கூட்டணி கண்டவுடன் அன்புமணி பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நிலவும் வன்னியர்-தலித் பகைமைக்கு ராமதாஸ் காரணமா? திருமாவளவன் காரணமா?

இருவரும் கடைப்பிடிக்கும் விரோதம் தமிழர்களுக்கு நல்லதல்ல என்பதை இருவரும் உணர்ந்து இருக்கிறார்களா ?

பாமக இருக்கும் இடத்தில நான் இருக்க மாட்டேன் என்று திருமா கூறுகிறார்.  நிரந்தரமாக வன்னியர் எதிரியாக இருக்கப் போகிறாரா?    குறைந்த பட்சம் வேல்முருகனோடு கூட சேர்ந்து வலம்வரக்கூடாதா?

சாதிக் கட்சி என்ற முத்திரை விழக் கூடாது என்பதற்காகத்தான் முகமூடி பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் கட்சிதான்

புதிய தமிழகம்-தேவேந்திர குல வேளாளர் கட்சிதான்

புதிய நீதி கட்சி -முதலியார் கட்சிதான்

இந்திய ஜனநாயக கட்சி- உடையார் கட்சிதான்

கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி- கவுண்டர் கட்சிதான்

அ இ சமத்துவ மக்கள் கட்சி- நாடார் கட்சிதான்

விடுதலை சிறுத்தைகள் கட்சி- பறையர் கட்சிதான்.

தேவநாதன் யாதவர் கட்சி நடத்துகிறார். ஜான் பாண்டியன், வேல்முருகன், என்று பலரும் கட்சிகளின் பெயரை பொதுவாக வைத்துக்  கொண்டு  சாதிக்கட்சிகள் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முத்தரையர், வேளாளர், கிருத்துவர், முஸ்லிம் என்று மதம் சாதி அடிப்படையில்தான் கட்சிகள் இயங்கி வருகின்றன.

இவர்களது சாதி அமைப்புகளை ஒழித்தால் தான் தமிழர் ஒற்றுமை உருவாகும்.

சாதிகளை வைத்துக் கொண்டு தமிழர் ஒற்றுமையைக் கொண்டு வரவே முடியாது.

எனவே தமிழர் ஒற்றுமையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பும் எவரும் இந்த சாதிக் கட்சிகளை ஆதரிக்கவே முடியாது- கூடாது.

வேறு விதமாக சொல்லுவதென்றால் பாமக வலுவாக இருந்தால் தமிழர் ஒற்றுமை உருவாகாது  என்பதால் அதை தோற்கடித்தே ஆக வேண்டும்.  வலுவிழக்கச் செய்தே ஆக வேண்டும்.

பாமகவை தோற்கடிப்போம் சாதி ஒழிப்பை நிலை நாட்டுவோம்.

போர்ச்சூழலில் நடக்க இருக்கும் தேர்தல் மோடிக்கு சாதகமா??!

இந்திய போர் விமானங்கள் நடத்திய துல்லிய தாக்குதல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன.

புல்வாமா பயங்கரவாத தற்கொலை  தாக்குதலில் கொல்லப்பட்ட நாற்பதுக்கும் மேலான இந்திய வீரர்களின் மரணத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது.

தாக்குதல் நடத்திய இடம் தீவிரவாதிகளின் முகாம்கள். எனவே இது இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய போர் ஆகாது. ஆனாலும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.

எனவே நிச்சயம் அடுத்து ஒரு தாக்குதலை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கும் பதிலடி கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

புல்வாமா தாக்குதலை நடத்தி கொடூரமாக நாற்பதுக்கும் மேல் இந்திய வீரர்களை தற்கொலைத் தாக்குதலில் கொலை செய்தவன் பாகிஸ்தானியல்ல.  காஷ்மீரி இளைஞர்தான். ஆனால் அவனுக்கு பயிற்சியளித்தது பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள தீவிரவாத இயக்கம்.   தாக்குதலுக்கு பொறுப்பு  நாங்கள் தான் என்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று நாமும் விடுதலையான காஷ்மீர் என்று பாகிஸ்தானும் சொல்லும் இடத்தில்தான் இயங்கி வருகிறது.  லஷ்கர் இ தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தீவிரவாத இயக்கங்களும் அங்கு இயங்கி வருகின்றன. எதையும் பாகிஸ்தான் அரசால் கட்டுப் படுத்த முடியவில்லை.

எப்படி இருந்தாலும் பிரச்னை இப்போது ஓயப்போவதில்லை.

பாகிஸ்தான் எப்படி  எப்போது பதிலடி கொடுக்கும்?. அதற்கு இந்தியா எப்படி பல மடங்கு திருப்பிக் கொடுக்கும்? இது போரில் முடியுமா? போர் வருமா வராதா? சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய வாய்ப்புகள் உண்டா இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடுவதற்குள் அல்லது பதில் கிடைப்பதற்குள் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விடும்.

ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பாஜக அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய வெற்றிக்கு சொந்தக்காரர் மோடி என்றும் அவரால்தான் முடியும் என்றும் பிரச்சாரத்தை பாஜக சார்பில் தொடங்கி யாகி விட்டது. பாஜகவின் வேண்டுகோள் செவி சாய்க்கப் படும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

எல்லா எதிர்க்கட்சிகளும் விமானப் படையின் தாக்குதலை வரவேற்று இருக்கின்றன. ஆளும் கட்சி எதிர்க்கட்சி வேறுபாடு தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இல்லை.

கார்கில் போர் வாஜ்பாய்க்கு தந்த புகழை இந்த தாக்குதல் மோடிக்கு தருமா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் வாஜ்பாய் மதவாதி என்ற பெயரை எடுக்க வில்லை.

இந்திய வாக்காளர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்கள். அவர்களுக்கு பிரச்னைகளை பகுத்துப்பார்க்கத் தெரியும்.

மோடி இந்த ஐந்து ஆண்டு  கால ஆட்சியில் உருவாக்கிய பிரச்னைகள் அடுத்த பத்தாண்டுகளில் தீர்க்க முடியாதவை என்பதை அவர்கள் உணர்வார்கள். மீண்டும் நீடித்தால் அவரால் உருவாகும் பிரச்னைகள் இந்தியாவை நிரந்தர படுகுழிக்குள் தள்ளி விடும் என்பதையும் உணர்ந்தவர்கள். எனவே சூழ்ந்திருக்கும் போர்மேகம் மோடிக்கு எந்த வகையிலும் தேர்தல் வெற்றிக்கு உதவாது.

தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்? தவறான தீர்ப்பு?!

தகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்?

2006-2011 ல் காங்கிரஸ் உறுப்பினராக போட்டியிட்ட வேல்துரை வெற்றி பெற்றபின் சந்தித்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் வெற்றி பெற்றது செல்லும் என்றும், உச்ச நீதிமன்றம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

காரணம் அவர் பதிவு செய்த அரசு ஒப்பந்தக்காரர் என்பதுதான். அந்த தகுதிகுறைவுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அவர் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டார்.

வழக்கு போட்டது 2006ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது 13.04.2011ல். இடையில் ஏற்பட்ட தாமதத்திற்கு  யார் காரணம்? நீதிமன்ற நடைமுறைகள் தானே.

சட்ட மன்ற செயலாளர் ஜூலை மாதம் 2011 ல் அறிவிப்பு ஒன்றை அனுப்பி  அதில் வேல்துரை தன் சம்பளமாக  2006-2011 காலகட்டத்தில் பெற்ற  ரூபாய் 21.58 லட்சத்தையும் திருப்பி செலுத்த கோருகிறார். அதில்  2019 ல் தீர்ப்பளிக்கும் உயர்நீதி மன்றம்  வழக்கில்  ஏற்பட்ட தாமதம்  தகுதி நீக்கத்தின்  தாக்கத்தை  நீக்கி விட்டது என்றாலும் அந்த தாமதத்தின் பலனை வேல்துரை பெற முடியாது என்று தீர்ப்பளித்து  துகையை திரும்ப செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இது சரியான தீர்ப்பாக தெரியவில்லை.

வேல்துரை தேர்தல் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன நேரத்தில் அவர் தனக்கு சேர வேண்டிய சம்பளம் என்று நினைத்துத்தான் பெற்று செலவு செய்திருப்பார்.

உச்ச நீதிமன்றம் மாற்றி தீர்ப்பு சொல்லும் என்று அவருக்கு தெரியுமா?  அப்படியே இருந்தாலும் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதி மன்றம் அவர் பெற்ற சம்பளம் பற்றியும் விளக்கம் தந்திருக்கலாம்.

இப்போது மீண்டும் வழக்கு உச்சநீதிமன்றம் போகவேண்டுமா. அல்லது தனி  நீதிபதி தீர்ப்பு என்றால் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேன்முறையீட போக வேண்டும்.

அவர் இறந்திருந்தால் அவரது வாரிசுகளிடம் வசூல் செய்வார்களா? அல்லது சொத்து இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடைப்பீர்களா ?

அரசு ஊழியர்களுக்கு தவறுதலாக கணக்கிடப் பட்டதன் காரணமாக கூடுதல் சம்பளம்/ படிகள் தரப்பட்டிருந்தால் அப்படி தவறாக தரப்பட்ட பணப்பயன்கள்  திரும்பப் பெறத் தக்கவை அல்ல என்று  உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.

சம்பளம் பெற்ற காலத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதே நீதி மன்றங்கள் இந்த சம்பளப் பட்டுவாடா பற்றியும் ஏதாவது ஒரு நிபந்தனை உத்தரவு இட்டிருக்கலாம் அல்லவா?    நீங்கள் பெறும் சம்பளம் நீதி மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப் பட்டது, தோற்றால் திரும்பப் செலுத்த நேரலாம் என்று உத்தரவிட்டிருந்தால் இந்த முரண்பாடு எழுந்திருக்காது.

நீதிமன்றங்கள் இன்னும் கொஞ்சம் நீதிசெய்யலாம்.

குழந்தைகளின் படிப்பை கெடுக்க முனைந்த கயவர்கள்?!

ஐந்தாவது எட்டாவது வகுப்பு வரையில் பள்ளிக் குழந்தைகளை தேர்வில் வெற்றி பெற வில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தி வைப்பதில்லை என்ற முடிவை பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி நெடிய விவாதத்திற்குப் பின் எடுத்து இலவச கட்டாய கல்விச்சட்டம்  2009 ன் படி அமுல்படுத்தப் பட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதனால் கல்வியின் தரம் கெட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எதுவும் இல்லை.

தமிழக அரசின் நிலைப்பாடும் அதுதான். அதையே கடந்த 2016 ம் ஆண்டு டெல்லியில் நடந்த மத்திய கல்வி ஆலோசனை குழு கூட்டத்திலும் ( Central advisory  board of education ) தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப் பட்டது.

இந்நிலையில் மாநில பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்  பட்டது. அதில் ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப் படும் என்றும் தேர்வில்  வெற்றி பெறாத குழந்தைகளுக்கு மறு வாய்ப்பும் அளிக்கப் பட்டு  தேர்வு பெறாவிட்டால் அவர்களை நிறுத்தி வைப்பது அந்த பள்ளியின் விருப்பம் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதை பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அனுமதியில்லாமல் அனுப்பினார்களா? சென்ற ஆண்டு கட்டாயக்  கல்வி சட்டத்தில் மாற்றம் செய்து தேர்வு வைக்கலாம் நிறுத்துவதும் நிறுத்தாததும் அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று ஒரு திருத்தம் செய்தார்கள்.  அந்த திருத்தத்தை பயன் பயன்படுத்தி இப்போது இந்த சுற்றறிக்கை  அனுப்பப் பட்டிருக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எந்த ஆண்டும் போர்டு தேர்வு  இருக்காது என்று சொன்னாரே தவிர இந்த சுற்றறிக்கையை அனுப்பியது எப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்ல வில்லை. இன்று வரை அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்படவுமில்லை.   அனுமதி இல்லாமல் அனுப்பப் பட்டிருந்தால் அனுப்பியவர் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து விளக்கம் தரவும் இல்லை.

பெரும்பாலும் பிற்பட்ட தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பயனடையும் இந்த திட்டத்தில் கை வைப்பதின் நோக்கம் அவர்களில் ஒரு பகுதியினரை யாவது மேலே படிக்க விடாமல் செய்வது என்ற நோக்கத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

   பத்தாயிரம் ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமையை மற்றவர்களுக்கு மறுத்தவர்கள் எல்லா கால கட்டத்திலும் அதே முயற்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தளங்களில் முயற்சித்துக்  கொண்டே இருக்கிறார்கள். 

                  சாதாரண தேர்வுகள் சுமுக சூழ்நிலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஓரளவு முதிர்ச்சி பெற்ற எட்டாவது தாண்டிய பிள்ளைகள் பிளஸ் டூ படிப்பில் பொதுத்தேர்வை எதிர்கொண்டால் போதும் என்ற நிலையைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்த செய்த முயற்சிக்கு யார் காரணம் என்று கண்டறிந்து தக்க தண்டனை வழங்கினால் தான் எதிர்காலத்தில் இத்தகைய முயற்சியை கைவிடுவார்கள்.

இடையில் உடனடியாக,  போர்டு தேர்வு என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.

சேர நாடு கேரளாவில் உருவான எம்ஜிஆர் நினைவகம்!!!

கேரளாவை நாம்தான் சேர நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அதை உணர்ந்ததாக தெரியவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் இல்லை. அதற்கு முன்பு அவர்கள் தமிழ் தானே பேசிக்கொண்டிருந்திருக்க முடியும்.

பெரியார், தெருவில் அனைவரும் நடக்கும்  உரிமையை பெற வைக்கம் சென்றுதான் போராடினார். கர்நாடகாவுக்கோ ஆந்திராவுக்கோ செல்லவில்லை.

எம்ஜிஆர் தன்னை கோவை மன்றாடியார் என்று சொன்னார்.

தற்போது அவரது பூர்விகம் தொடர்பாக ஒரு முற்றுபுள்ளி. கேரளாவின் சித்தூர் தாலுகா வடவன்னுர் கிராம பஞ்சாயத்தில் அவரது பூர்விக வீடான சத்யா விலாசத்தில் சைதை துரைசாமியால் ஒரு நினைவகம் அமைக்கப்  பட்டிருக்கிறது.

மேலக்காத் கோபால மேனன் -வடவன்னுர் சத்யபாமாவின் இரண்டாவது மகன் எம் ஜி யார். கண்டியில் பிறந்து வடவன்னுரில் வளர்ந்து சென்னையில் நடிகராகி   திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆருக்கு நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழகம் தந்தது .

எந்த தலைவருக்கும் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் அவருக்கு தமிழகம் தந்தது. பொன்மனச் செம்மலாக போற்றப்பட்டார். தான் சம்பாதித்த எதையும் எங்கும் கொண்டு செல்லாமல் இங்கேயே விட்டுச் சென்றார்.

அதனால்தான் அவருக்கு ஊருக்கு  ஊர் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் வைத்து கொண்டாடுகிறது தமிழகம்.

அவர் செய்த ஒரே தவறு ஜெயலலிதாவை அடையாளம் காட்டியதுதான் என்பது பலரது கருத்து. அதிமுகவினர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அது அவர்களது உரிமை.

அவரது நினைவகத்தை பார்க்கும் மலையாளிகள் தாங்கள் சேர நாட்டினர் என்பதால் தானே தமிழர்கள் எம்ஜியாரை தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் என்ற உணர்வு வந்தால் அதுவே எம்ஜிஆருக்கு  அவர்கள் செலுத்தும் மரியாதை.