Home Blog Page 50

பால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா??!!

பால்ய விவாகம் இந்து பார்ப்பன மதத்தில் ஏற்கப் பட்ட ஒன்றாக இருந்தது பல தலைமுறைகளாக .

ஒரு வழியாக சட்டப்படி அது தடை செய்யப்பட்டுவிட்டது.  இருந்தாலும் இன்னமும் அங்கும் இங்கும் அதுவும் நடந்து  கொண்டுதான் இருக்கிறது.

சட்டமாவது இருக்கிறதே.

ஆனால் கும்பமேளா நடந்து வரும் பிரயாக்ராஜ் நகரில்  கூடும் லட்சகணக்கான கூட்டத்தில் பார்க்கும் போதுதான் எத்தனை ஆழம் நம்பிக்கை ஊடுருவி மக்களின் வாழ்க்கை நிலைகளை பாதித்து இருக்கிறது என்று தெரிகிறது.

சன்யாசின் அகாடா அமைப்பு பெண் சாமியார்களுக்கு விலக்கு ஏற்படும் மூன்று நாட்களுக்கு விடுப்பு கொடுத்து மற்ற வகைகளில் பங்கேற்க வசதி செய்து கொடுக்கிறது.

பால்ய சாமியார்கள் என்று சொல்லும் பத்து வயது சிறுவர்கள் மத அடையாள சின்னங்களை சுமந்து கொண்டு நீராடுவது முதலான பல வகை சடங்குகளையும் செய்கிறார்கள்.

இதை அவர்கள் அறிவு பூர்வமாக தேர்ந்தெடுத்து செய்வதாக சொல்ல முடியுமா?

அவர்கள் பெற்றோர்கள் அவர்களை இதில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும்.   அல்லது யாராவது உள் நோக்கத்தோடு அவர்களை பயன் படுத்திக் கொண்டிருக்க  வேண்டும்.

சங்கர மடத்தில் கூட இளம் பிராயத்திலேயே பெற்றோர் சம்மதத்துடன் ஒருவரை மடத்துக்கு அனுப்பி  இள வயதிலேயே துறவு பூண வைக்கிறார்கள்.

அதுவே கூட சரியா என்ற விவாதம் தேவை. யாரும் யாராக வேண்டுமானாலும் ஆகட்டும். அந்த வயது வரும்போது. அதாவது எதுவாக ஆக வேண்டும் என்று தீர்மானிக்கும் தகுதி  வரும்போது. அது பதினெட்டு வயதில் தான் வரும். அப்போதுதான் அரசியல் சட்டம் ஒருவரை மேஜர் என்கிறது. அதாவது தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறன் படைத்தவர் என்று அங்கீகரிக்கிறது.

வாக்குரிமையும் அப்போதுதான் தரப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ள, வாக்களிக்க, எல்லாவற்றிக்கும் வயது பதினெட்டு  ஆக வேண்டும் என்று சொல்லும் சட்டம் சாமியார் ஆக மட்டும் ஐந்து வயதில் ஆகலாம் என்பதை அனுமதிக்குமா?

பெரும்பாலும் பால்ய சாமியார்கள் என்பது இந்து மதத்துக்குள் தான் இருக்கிறது  .  கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் பால்ய சாமியார் ஆவது வழக்கம் இல்லை.  இருந்தாலும் குற்றமே!

பாஜக ஆட்சியில் இது நடக்காது. ஆட்சி மாறட்டும். கோரிக்கை வலுவடையும்.

கையை வெட்டுங்கள் என்று பேசிய மத்திய அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி?

கையை வெட்டுங்கள் என்று பேசிய பாஜக மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே பதவியில் தொடர முடிகிறது.

ஏன் என்றால் அவர் வெட்ட சொன்னது இந்துப் பெண்களை தொட்டவர்களின் கைகளை. நடப்பது பாஜக ஆட்சி. பேசியவர் பார்ப்பனர். தைரியத்துக்கு என்ன குறைச்சல்.

இதை சாதாரணமான ஒரு மத வெறியாளர் சொன்னால் புரிந்து கொள்ளலாம். ஒரு  தவறு நடக்கிறது என்றால் அதற்கு ஒரு  அமைச்சர் சொல்லும் தீர்வு  இதுதானா?

சபரிமலைக்கு போன பெண்கள் குடகில் மறைந்திருப்பதாக  தகவல் வந்துள்ளது. அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்று வேறு பேசியிருக்கிறார்.

இப்படிப்பட்டவர்கள் தான் பாஜக அமைச்சர்கள். அதேநேரம் இரட்டை வேடத்திலும் தேர்ந்தவர்கள். உடனே பாஜக செய்தி தொடர்பாளர் மதுசூதன் ஹெக்தேவின் கருத்துக்கும் பாஜக வுக்கும் தொடர்பு இல்லை என்கிறார்.

பின் அமைச்சராக தொடர்வது எப்படி?

காந்தியடிகள் உருவபொம்மையை சுட்டு எரித்த இந்து மகாசபை தலைவியை கைது செய்யாதது ஏன்?

காந்தியடிகள் நினைவு நாளன்று உத்தர பிரதேசத்தில் இந்து மகா சபை தலைவி பூஜா ஷகின் பாண்டே என்பவர் கையில் துப்பாக்கியுடன் காவி உடை அணிந்து நிற்கிறார். அவரை சுற்றி பலர் கொடியுடன் நிற்கிறார்கள்.

மகாத்மா நாதுராம் கோட்சே வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். காந்தியை சுட்டு கொலை  செய்ததால் தூக்கில் இடப்பட்ட கோட்சேயை வாழ்த்தி முழக்கம் இடுவது பற்றி  எந்த பா ஜ க தலைவரும் மூச்சுக் கூட விடவில்லை.

பாண்டே துப்பாக்கியால் காந்தி பொம்மையை சுடுகிறார். அதிலிருந்து  சிவப்பு திரவம் வழிகிறது.  பின்னர் அந்த பொம்மையை சுட்டு எரிக்கிறார்கள். இதை படம் எடுத்து வெளியிடுகிறார்கள்.

எந்த காந்தியை தேசத்தந்தை என்று கொண்டாடுகிறோமோ அவரை அவமதிப்பதை தண்டிக்கத் தக்க குற்றமாக பா ஜ க அரசு  கருத வில்லையா?

கண்டனம் பெரிதாக எழுந்த நிலையில் மூன்று பேரை கைது செய்திருக்கிறார்கள்.   பூஜா பாண்டேயை தேடி வருகிறார்களாம்.

இன்னும் எத்தனை முறை காந்தியை கொல்வார்களோ?

ரஜினி ரசிகர்ளை சாகடிக்கணும் அல்லது நாம செத்துப் போகணும் ; சீமானின் உணர்ச்சிப் பேச்சு?!

ரஜினி ரசிகர்ளை சாகடிக்கணும் அல்லது நாம செத்துப் போகணும்

ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது சீமான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ரஜினி ரசிகர்ளை விமர்சித்து பேசியிருக்கிறார்.

யாரைப்பார்த்தாலும் தலைவர் படத்தை பார்த்தியா அவர் அப்படி பண்ணியிருக்கிறார் இப்படி பண்ணியிருக்கிறார் என்று ரஜினிகாந்த் படத்தை பற்றி பேசுவதை விமர்சித்தார்.

ரஜினி யார். அவர் ஒரு நடிகர். அவர் தலைவர் என்றால் நாட்டிற்கு உழைத்த காமராஜர், கக்கன், ஜீவா, ரெட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர் எல்லாம் யார்.? ரஜினி தலைவர் என்று சொல்ல அவர் என்ன செய்து விட்டார்.? இதுதான் சீமான் பேச்சின் சாரம்.

தலைவர்களை திரையில் தேடி பழக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கேரளாவில் அப்படி இல்லை. ஆந்திரா தவிர வேறு எங்கும் அப்படி இல்லை.

இந்த நிலை மாற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

         தமிழகத்தில் அரசியல் தலைவராக வர வேண்டும் என்றால் அவருக்கு  தமிழ் நாட்டைப்பற்றிய பூகோள அறிவு இருக்க வேண்டும். தமிழ்ச்சமுதாயத்தின் எல்லா பிரச்னைகளும் தெரிந்திருக்க வேண்டும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய தொலை நோக்கான தெளிவான பார்வை இருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை இருக்க வேண்டும்.   

தொழில் எதுவாக இருந்தாலும் அவருக்கு மேற்கண்ட தகுதிகள் இருந்தால் அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

ரஜினிக்கு கமலுக்கு இந்த தகுதிகள் இருக்கிறதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய  வேண்டும்.

ரசிகர்களை பொறுத்த வரை அவர்கள் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  யார் ரசிகர்கள்? நம் தம்பி தங்கைகள். மாமன் மச்சான்கள்.  தவறான வழியில் போனால் திருத்த என்ன செய்வோமோ அதைத்தான் செய்ய வேண்டும்.

சாகடிக்க வேண்டும் என்று சீமான் பேசியது உணர்ச்சி வசத்தால்.   அதனால்தான் உடனேயே அல்லது நாம் செத்துப் போய் விட வேண்டும் என்று பேசினார்.

    ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் சமூக பிரச்னைகள் தொடர்பாக அரசியலில் தங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லி விட்டு தாராளமாக வரலாம். அது இல்லாமல் வெறும் பந்தா காட்டிவிட்டு , பூச்சி காட்டலாம் என்று  அரசியலுக்கு வந்தால் விளைவு என்னவாகும் என்பதைத் தான் சீமான்  பேசியதாக எடுத்துக் கொள்ளவேண்டும். 

கட் அவுட்டுக்கு அண்டா பால் கேட்டு கவுந்திட்டியே சிம்பு??!!

தனது கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்ய வேண்டாம் என்று  முன்பு சிம்பு அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேட்கிறார்களோ இல்லையோ நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று நடிகர்கள் சொன்னால் கொஞ்சமாவது ரசிகர்கள் திருந்துவார்கள்.

அஜித்தின் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுகிறேன் என்று ரசிகர்கள் கட் அவுட்டோடு கீழே விழுந்து ஒருவர் இறந்தார் என்பது துயர செய்தி.

இன்றைக்கும் ரஜினி ரசிகர்கள் பால் ஊற்றுவதை அவர் கண்டிப்பதோ வேண்டாம் என்று அறிவுறுத்துவதோ இல்லை. ரசிக்கிறார் என்றுதானே அர்த்தம்.

தமிழன் மானம் கப்பல் ஏறுவதை ரசிக்கிறீர்கள்.

தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஒரே தொடர்பு வாக்கு செலுத்துவதே என்றும் அறிக்கை விடுத்தது அஜித்குமார் முதிர்ச்சியை காட்டி இருக்கிறார். பாராட்டும் குவிகிறது. இனி அஜித்துக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

நம்ப சிம்புவுக்கு என்ன வந்தது. யாரோ உனக்கு இரண்டு மூன்று ரசிகர்கள் . அதனால்தான். பால் அபிஷேகம் வேண்டாம் என்கிறாய் என்று சொன்னார்களாம் .

உடனே ஒரு  பேட்டி கொடுத்து பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம் அண்டா அண்டாவா ஊற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறார். தனக்கும் ஆள் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள ஆள் வைத்து ஊற்றிகொள்கிறார் என்று சொன்னால் என்ன செய்வார்.

இதன் மூலம் எல்லார் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது மட்டுமே மிச்சம்.

சிம்பு தனது நடவடிக்கைகளில் முதிர்ச்சியை காட்ட வேண்டும்.

திறமையுள்ள நடிகர் இது போன்ற சில்லறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மதிப்பை குறைத்துக் கொள்கிறாரே என்ற நல்ல எண்ணமே நமது கண்டனம்.

பால் முகவர்கள் சிம்பு மீது நடவடிக்கை கேட்டுவழக்கு போட்டிருக்கிறார்கள். இதுவும் விளம்பர உத்தியா?

நீ ராஜாவா வா! வரவேற்கிறோம்! கொண்டாடுவோம்.

இதுமாதிரி பேட்டி கொடுத்து காமெடி செய்யாதே??!! கூஜாவாகி விடுவாய்!!!

நூறாண்டுகளாக ஜனநாயகத்திலும் நிலைத்த குடும்ப ஆட்சி??!

1919-ல்  காங்கிரஸ் தலைவராக மோதிலால் நேரு தொடங்கிய குடும்ப ஆதிக்கம்  ஜவஹர்லால் நேரு , பிரோஸ் காந்தி , இந்திரா காந்தி , சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி , மேனகா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, என்று கடைசியில் 2019 ல் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பிரியங்கா காந்தி வரை நூறாண்டுகளாக தொடர்கிறது.

உலகில் வேறு எந்த குடும்பமும் ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்று ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்க முடியுமா என தெரியவில்லை.

மோதிலால் காஷ்மீர் பண்டிட் என்று அறியப்பட்டாலும் ஜவஹர்லால் தொடங்கி எல்லாருமே தங்களை சாதி மதம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்களாகத்தான் அடையாளப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பிரோஸ் ஒரு பார்சி. அவர் இந்திராவை மணந்தார். ராஜீவ் ஒரு இத்தாலிய கிறிஸ்தவரை மணந்தார். வருண் மட்டும் தான் பிராமணப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக பெருமிதம் கொண்டார். பிரியங்காவும் ஒரு கிருஸ்தவரை மணந்தார். ஆனாலும் நேரு குடும்பத்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் ஒரு பிராமணராகவே பாவிக்கப்பட்டு ஆதரவளிக்கப்படுகிறார்.

காங்கிரஸ்காரர்களுக்கு இன்னும் முப்பதாண்டுகளுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் கவலை இல்லை. பிரியங்கா வந்து விட்டாரே. அதற்குப் பின்னும் அவரின் குழந்தைகள் தயாராகவே இருப்பார்கள். எனவே காங்கிரஸ் காரர்களுக்கு இனி எப்போதும் தலைவர் பிரச்னை வரவே வராது.

ஏதோ காங்கிரசில் மட்டும்தான் குடும்பமே கட்சி என்று இருப்பது போல் சொல்வது நியாயமாக இருக்காது. நாட்டில் பல கட்சிகளில் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கும்போது எதையும் குறை சொல்ல முடியாது.

பாஜக ஒன்றும் பெருமை கொள்ள வேண்டாம். அங்கு ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது.  அவர்கள் ஒரு தலைவரை புகுத்த மாட்டார்களே தவிர இன நலனுக்காக ஒரு படையையே தயார் செய்து வைத்திருக்கிறார்களே.

இன நலனுக்காக தியாகம் செய்ய ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கும் அவர்கள் ஏன் தனி நபரை துதிக்க வேண்டும்?

ஆக நாட்டில் காங்கிரசிலும் சரி பாஜக விலும் சரி ஆதிக்கம் அவர்கள் கையில்.

நேரு குடும்பம் சாதித்த சாதனையை ஒரு தாகூர், ஜாட், குர்மி, யாதவ், போன்ற இதர பிற்பட்டோரோ சிறுபான்மையோரோ செய்திருக்க முடியுமா? பிராமணர்களால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை இது என்பதை மட்டும் மறுக்க முடியாது.

ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்?! திருத்தப் பட வேண்டிய உயர் நீதிமன்ற தீர்ப்பு!!!

ஜெயலலிதா குற்றவாளி இல்லையாம்?

குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மரினாவில் நினைவிடம் கட்ட தடை கேட்டு தொடரப் பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.  அதற்கு நீதிமன்றம் கூறிய காரணம்தான் ஏற்க முடியாத , அறிவுக்குப் பொருந்தாத, நியாயமில்லாத  , கேலிக்கூத்தான ஒன்றாக இருக்கிறது.

  ஒருவேளை சட்டப்படி சரியான எல்லாரையும் கட்டுப்படுத்தக்கூடிய  ஆனால் அநியாயமான தீர்ப்புகளில் ஒன்றாக இது  இருந்து விடும் வாய்ப்பும் அதிகம். 

                      நீதிமன்றங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு இது போன்ற தீர்ப்புகள் காரணமாக இருந்து விடக் கூடாதே என்ற கவலைதான் நமக்கு.

அரசு மேன்முறையீடு செய்யாது.   வழக்குப் போட்டவர் போடலாம்.   போடுவாரா தெரியாது.   மேன்முறையீடு செய்யப் பட்டு அது அனுமதிக்கப்  படும் வரை இந்த அநியாய தீர்ப்பு அமுலில் இருக்கும் என்பது அவலம்.

உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.    அதை உச்சநீதிமன்றம்  ரத்து செய்ய வில்லை.  எனவே ஜெயலலிதா குற்றவாளி இல்லை.  இதுதான் உயர்நீதி மன்ற தீர்ப்பு.

ஆளுக்கு தக்கபடி மாறும் தீர்ப்புகள் என்பது எப்படி நீதியாகும்?  குற்றம் செய்தது ஜெயலலிதா.  அவருக்கு துணை நின்றவர்கள் சசிகலாவும் மற்றவர்களும்.  மற்றவர்கள் குற்றவாளிகள் ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பை  எப்படி  விமர்சிப்பது.?   சிறை தண்டனை விதித்து தண்டிக்கப் பட முடியாத குற்றவாளி என்பதுதானே உண்மை. 

வழக்கில் முதல் எதிரி ஜெயலலிதா. இரண்டு முதல் நான்கு வரையிலான எதிரிகள் முதல் எதிரி பதவியில் இருக்கும்போது ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து குவிப்பதற்கு துணை நின்றவர்கள். அதாவது ஜெயலலிதாவின் பினாமிகள். ஜெயலலிதா இறந்ததால் மேன்முறையீடு அற்றுப் போனது. மற்றவர்கள் மீதான மேன்முறையீடு விசாரிக்கப் பட்டு முதல் எதிருக்கு துணை நின்றதற்காக மூவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்  பட்டு சிறையில் இருக்கிறார்கள்.   ஜெயலலிதாவும் உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறையில் தான் இருந்திருப்பார்.  வழக்கு அற்றுப் போனால் விளைவு அவர் சிறை தண்டனை அனுபவிக்க முடியாதே தவிர மற்றபடி அவரது சொத்துக்கள் தீர்ப்புக்கு  உட்பட்டதுதான்.  சிறையில் இருந்திருக்க வேண்டியவர் குற்றவாளி  இல்லை     என்பதை எப்படி ஏற்பது?

ஜெயலலிதா ஒரு மக்கள் தலைவர். அவருக்கு மணி மண்டபம் கட்டுவது மரபாக இருக்கலாம். அதில் கூட யாருக்கும் பெரிதாக ஆட்சேபணை இருக்க வாய்ப்பில்லை.

எம்ஜியார் சிலைகளுக்கு  அருகே யாருக்கும் சொல்லாமல் ஜெயலலிதா சிலைகளை ஆளும் கட்சிக்கார்கள் வைக்கிறார்கள். ஏன் திருட்டுத் தனமாக வைக்க வேண்டும்?  ஆட்சேபணை வரும் என்ற பயம்தானே?

அதிகார வர்க்கம் அத்து மீறும்போது நீதிமன்றங்கள் தான் ஜனநாயகத்தை காத்து வருகின்றன. நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கடமை நீதிமன்றங்களுக்கும் இருக்க வேண்டும். இந்த முரணுக்கும் ஒரு பதிலை நீதி மன்றம்  தர வேண்டும்.   தந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் டெக்னிக்கல் ஆக அணுகி தீர்ப்பு தருவது வெளிப்படையாக இருக்கும் முரண்பாட்டுக்கு விடை தராமல் விட்டு விடுவது என்பதெல்லாம் இது மாற்றப் பட வேண்டிய தீர்ப்பு என்பதையே உறுதிப்படுத்தும்.

சாகுபடி நிலம் வைத்திருந்தால் போதும் ஏக்கருக்கு ரூபாய் 8000 –தெலுங்கானா புரட்சி !!!

சாகுபடி நிலம் வைத்திருந்தால் போதும் ஏக்கருக்கு ரூபாய் 8000

தெலுங்கானாவில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு சாகுபடி காலத்துக்கு ஏக்கருக்கு ரூபாய் 4000 வீதம் இரண்டு சாகுபடி காலத்துக்கு ரூபாய் 8000 அவரது வங்கிக் கணக்கில் அரசு செலுத்தி விடும். அரசுக்கு இதனால் ஆண்டுக்கு ஆகும் செலவு ரூபாய்  10000 .

அவர் சாகுபடி செய்கிறாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்னை இல்லை.

இந்தியாவிலேயே இதுவே வெற்றி பெற்ற முதன் முயற்சி. எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறைந்த பட்ச உத்தரவாதம் இருக்கிறதே.

அதனால் தான் காங்கிரஸ், தெலுகு தேசம் ஜனசமிதி கம்யுனிஸ்டு கூட்டணியை முறியடித்து 119 சட்டமன்ற இடங்களில் 88 இடங்களை தனியாகவே பெற்று ஆட்சியில் அமர்ந்தார் கே.சந்திரசேகர ராவ்.

இந்த திட்டத்தை அமுல் படுத்த முதல் தேவை நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு நில ஆவணங்களை ஆய்வு செய்து நவீனப் படுத்த பெரு முயற்சி தேவைப்பட்டது. அதை தெலுங்கானா வருவாய் துறை செம்மையாக செய்தது.

57 லட்சம் விவசாயிகளின் நிலங்களை கணினி மயமாக ஆவணப்படுத்துவது என்பது சாதாரண காரியமா? அப்படி கணினி மயமாக்கப் பட்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை அமுல்படுத்த முடியும்.

2000 ஹெக்டேருக்கு ஒரு விவசாய விரிவாக்க அதிகாரி. அவருக்கு தேவைப்படும் கணினி  இன்டர்நெட் வசதிகள் தரப்பட்டன. இந்த அடிப்படை வேலைகள் செய்ததால் திட்டம் அமுலுக்கு வருவது சாத்தியப்பட்டது.

விதை, உரம், பூச்சிகொல்லி மாநியங்கள் தருவதற்கு பதில் இதுபோல் நேரடி நிதி உதவி அளித்தால் விவசாயி என்ன சாகுபடி செய்வது என்பதில் மாற்றி தேர்வு செய்ய வாய்ப்பு அதிகரிக்கும்.

உலக வர்த்தக அமைப்பும் விவசாயிகளுக்கு  நேரடி நிதி தருவதையே ஆதரிக்கிறது.

திட்டமிடலில் இருக்கிறது எல்லாம். இங்கே என்ன நடக்கிறது.? எந்த திட்டம் அறிவித்தாலும் அதில் அரசியல் தலையீடு செய்து கட்சிக்காரர்களுக்கே பயன்படுமாறு செய்வது மற்ற கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் எதிரிகள் ஆக்காதா?

        விவசாயத் தொழிலாளிகள் குறைந்து வருகின்றனர்.   அவர்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு உதவித்துகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி கூலி உயர்வை நேரடி கண்காணிப்பில் அரசு வைத்திருந்து சாகுபடி செலவுகளை கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் நன்மைகள் விளையும்.

எந்த பயிர் சாகுபடி செய்வது  என்பது தொடங்கி கட்டுபடியாகும் விலை நிர்ணயம்  விளைபோருளை சந்தைப் படுத்துவது வரை அரசு கண்காணிக்க வேண்டும்.    அதற்கான அமைப்புகள் இப்போதும் இருக்கின்றன. அவை முறையாகவும் வலிமையாகவும் இயங்குகின்றனவா?  அதைப்பற்றி ஆய்வுகள் உண்டா?   ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது.  நடைமுறைக்கு வரவேண்டும்.

எந்த திட்டத்திலும் குறைகளே இல்லாமல் நடைமுறைபடுத்த முடியாது. கே.சி.ஆர் திட்டத்திலும் நேரடி குத்தகை சாகுபடி தார்களுக்கு பயன் இல்லாமல் வெளியூர்களில் இருக்கும் உடைமையாளர்களுக்கு பயன் தருவது எப்படி என்று குற்றம் சுமத்தி வழக்கு நடக்கிறது. அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாமே. நம்மிடம் திட்டமே இல்லையே.

எல்லா மாநிலங்களும் பின்பற்ற தக்க  ஒரு திட்டத்தை அமுல் படுத்தியிருக்கும் சந்திரசேகர ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி?

கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் ஒரு திகில் நாவலை படித்த உணர்வை தருகிறது.

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அவரது எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை ஒரு கும்பல் திருடி அதை முதல்வர் எடப்பாடி வசம் கொடுத்ததாகவும் அதன் பின் அதில் சம்பந்தப்  பட்ட நபர்கள் ஒவ்வொருவராக கொல்லப் படுவதும் அதிர்ச்சியை அளித்தது. பின்னால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடந்து வருகிறது.  இரண்டாண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப் பட்டவர்களை தெஹெல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து அதை ஒரு ஆவண படமாக வெளியிடுகிறார்.

அதில் சம்பந்தப் பட்ட நபர்  முதல்வர் பழநிசாமியை தொடர்பு படுத்தி கொலைப்பழி சுமத்தி இருந்தார்.

குற்றச்சாட்டுகளை மறுத்து முதல்வர் பேட்டி கொடுத்து குற்றம் சுமத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார். அதன்படியே அவர்களை காவல் துறை கைது செய்து பல மணி நேரம் விசாரணை செய்து அவர்களை நீதிமன்றத்தில் காவலுக்கு அனுப்பியபோதுதான் நீதிமன்றம் அவர்களை காவலுக்கு அனுப்பவும் காவல் துறை விசாரணைக்கு அனுப்பவும் மறுத்தது.

அதன்பின் அவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது. அது சட்டப்படி சரி அல்ல.

தனது மகள் மனைவியை விபத்தில் இழந்து சயான் அதில் இருந்து தப்பியபின் விரக்தி மனநிலைக்கு வந்து அச்சமின்றி உண்மைகளை கூற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.

edappadi pazhanisamy
edappadi pazhanisamy

எப்படி இருந்தாலும் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், ஒபிஎஸ், வைத்திலிங்கம் ஆகிய நால்வரின் ஆவணங்கள் தான் எடப்பாடியால் மீட்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

சிக்கலின் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவும் என்ற எண்ணத்தில் எடப்பாடி  பாஜக-வுடன் கூட்டணி வைக்க இருந்ததாகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல என்பது தெரிந்ததும் அதில் இருந்து விலகி சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது.

கட்சியை அடகு வைத்தாலும் மக்கள் ஏற்க வேண்டுமே?

வேறு வழியில்லாமல் பாஜக வுடன் அதிமுக பாமக கிருஸ்ணசாமி கூட்டணி சேர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். எனவே மத்திய அரசு நியாய விசாரணைக்கு முயற்சி எடுக்கும் என்று தோன்றவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுனரிடம் மனு கொடுத்து சிபிஐ விசாரணை  கோரியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டுமா என தீர்மானிக்க இருக்கிறது.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனது அரசியல் எதிரிகள் சதி செய்து இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.  அதை யார் தீர்மானிப்பது?

குற்றம் சுமத்தப் படுபவர் தானே நீதிபதியாக இருந்து குற்றம் இல்லை என்று சொல்ல முடியுமா?

ஒரு முதல்வரின் மீது கொலைப்பழி சுமத்தப் படுகிறது.  அவர் மறுக்கிறார்.  குற்றம் சுமத்தியவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் சொல்வது புதிது என்பதால் மட்டுமே அவர்கள் குற்றச்சாட்டு பொய் என்று முடிவு செய்ய முடியுமா என்பதுதான் விடை காண வேண்டிய கேள்வி. 

குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை யார் முடிவு செய்வது.? நீதிமன்றம் சொல்லித்தான் நியாயமான விசாரணை நடக்க முடியும் என்பது நமது அரசியல் தலைவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

எடப்பாடி தானே முன்வந்து நியாயமான விசாரனை நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமாக பதவி விலகி வழி காட்டுவதுதான் ஆரோக்யமான அரசியல்.  கடைசி வரையில் பதவில் ஒட்டிக்கொண்டு விசாரணையை தடுப்பேன் என்று முரண்டு பிடித்தால் அவரது மீதான குற்றச்சாட்டு வலுப்பெறும் என்பதில் ஐயமே இல்லை.

அதிமுகவில் வேறு தலைவர்களே இல்லையா ?

இந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்? மோடி வலையில் விழுந்தாரா?

எல்லா பிரச்னைகளிலும் முதன்மை கருத்துக்களை முன் வைப்பவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்பவர் மும்பை விமான நிலையத்தில் இம்மிகிரஷன் கிளியரன்ஸ் வாங்க முயற்சித்தபோது அங்கே பணியில் இருந்த அதிகாரி இந்தியில் கேட்டதற்கு எனக்கு இந்தி தெரியாது ஆங்கிலம் தான் தெரியும் என்று சொன்ன பிறகும் அவரை நிறுத்தி வைத்திருக்கிறார்.

உடனே விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் புகார் செய்யாமல் இணைய தளத்தில் சம்பவத்தை வெளியிட்டார். அவர் மீது விசாரனை நடந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த அதிகாரி மீண்டும் அதை உறுதிபடுத்தும் வகையில் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வருபவர்கள் இருப்பதால் இதையெல்லாம் விசாரிக்க வேண்டி உள்ளது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். இந்தியாவில் இருப்பவர்கள் என்றால் இந்தியில்  பேசினால்தான் ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த பிரச்னை ஒருபுறம். இதை  கண்டித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ் அந்த அதிகாரியை கண்டித்திருந்த தோடுவிடவில்லை. ‘ இந்த நிலையை ஏற்படுதியவர்களுக்கு என்ன தண்டனை ?’ என்று ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். 

இந்தி பேச முடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் என்று யாரை சொல்கிறார். ?      தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக  கற்பிக்கும் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து வருகிறோம். அது தவறு என்கிறாரா? கற்றுக் கொடுத்திருந்தால் அந்த தமிழனுக்கு தடை வந்திருக்குமா என்கிறாரா?

பாமாக சமீபகாலமாக மோடியையும்  பாஜக-வையும் அதிகம் விமர்சிப்பதில்லை.        10% இட ஒதுக்கீடு சட்டத்தை விமர்சித்து பேசிய அன்புமணி எதிர்த்து வாக்களிக்க வில்லை. மாறாக வெளிநடப்பு செய்திருக்கிறார். அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

பாஜக – அதிமுக – பாமக கூட்டணி வந்துவிடும் என்று ஆரூடம் சொல்பவர்கள் வெற்றிபெருவார்களோ?