தமிழக அரசு விவசாய வேலைகளுக்கு சுய கட்டுப்பாட்டுக்கு விலக்கு அளித்துள்ளது. அதனால் வேலைகள் நடைபெறும்.
ஆனால் இதுவரை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த திடீர் கட்டுப்பாடுகளால் பெருத்த இழப்புகளை சந்தித்துள்ளனர் .
அவர்கள் காப்பீடு செய்ய வில்லை. அவர்களுக்கு என்ன நிவாரணம்.?
வாழை விவசாயிகள் தங்கள் விளைச்சலை விற்க முடியவில்லை. காரணம் சந்தை இல்லை. வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வில்லை.
பூ விவசாயிகள் வணிகம் செய்ய முடியாமல் டன் கணக்கில் கொட்டி அழிக்கிறார்கள். தொழிலாளிகள் வருவாய் இல்லாமல் அரசு தரும் விலையில்லா அரிசியில் வாழ்கிறார்கள்.
சிறு குறு தொழில்கள் நசித்துப் போய் விட்டன. உற்பத்தியும் இல்லை மார்க்கெட்டும் இல்லை.
இப்படி அனைத்து தரப்பும் இழப்புகளை சந்தித்து அடுத்து எப்படி தங்களை மீண்டும் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
ஈ எம் ஐ கட்டும் தவணையை தள்ளி வைத்து அரசு இது நிவாரணம் என்கிறது.
ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் அரசு இவற்றை எல்லாம் ஏற்கும் நிலையிலா இருக்கிறது?
குறைந்த பட்சம் இவற்றை எல்லாம் ஆராயலாம் அல்லவா?
ஆட்சியாளர்கள் தற்போது தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமையை பறை சாற்றலாம்..
அத்தகைய முயற்சிகளுக்கு அடையாளம் ஏதும் தெரியவில்லை என்பதுதான் துயரம்.