Home Blog Page 7

கொரானா: கைது பற்றி என்ன சொல்லப் போகிறார் ஹீலர்பாஸ்கர்?

ஹீலர் பாஸ்கர் பற்றி தெரிந்தவர்களுக்கு கொரானா வைரஸ் பற்றி புதிதாக அவர்  எதையும் சொல்லி விட வில்லை என்று தெரியும்.

பத்து வருடங்களாக சொல்லி வந்ததைத்தான் இப்போதும் சொல்வதாக அவர் சொல்கிறார். இதுவரை வந்த வைரஸ்களுக்கும் இப்போது வந்திருக்கும் வைரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது அவரது கருத்து.

எந்த வைரஸ் வந்தாலும் நமது உடல் தற்காத்துக்  கொள்ளும் . எனவே உடலை தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும். அதற்குத் தேவையான இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அவர் கைதுக்கு அது  காரணம் அல்ல. மக்களை மிரட்டியதுதான் ஆளும் கட்சியை சீண்டியதுதான் குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை சீண்டியதுதான் காரணம் என்கிறார்கள்.

#டாக்டர்கள் வேண்டுமென்றே உண்மையை சொல்ல மறுக்கிறார்கள். இல்லுமிநாட்டிகள் என்ற உலகின் உயர்வகுப்பு செல்வந்த கூட்டம் ஒன்று சாதாரண மக்களையும் நாடுகளையும் அடக்கி ஆளுவதற்காக பல்வேறு  முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அதில்  இதுவும் ஒன்று. தடுப்பு ஊசி தேவை அற்றது. ஏனென்றால் அது தடுப்பு  ஊசி என்று சொல்லவே முடியாது. வைரஸை உடலில் செலுத்துவதை எப்படி தடுப்பு  என்று சொல்ல முடியும்? காய்ச்சல் என்பது நோயே அல்ல. அது  நோயை குணப்படுத்த உடல் எடுக்கும் முயற்சி. பிரசவத்தை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். மருத்துவ மனை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. #

இவைதான் ஹீலர் பாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களில் சில.. இவை பெரும்பாலான மருத்துவர் களால் ஒப்புக் கொள்ளப் பட்டவை அல்ல. விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.

ஆனால்  மக்கள் தொகையை பாதியாக குறைக்க போகிறார்கள். அதற்காகத்தான் இந்த முயற்சிகள்.உங்களை பிடித்துக் கொண்டு போய் கொல்லப் போகிறார்கள். இப்படி அவர் பேசியதுதான் அவர் ஆதரவாளர்களுக்கே பிடிக்க வில்லை. பாஸ்கர் கொஞ்சம்  அத்து மீறி விட்டார் என்ற கருத்துதான் அதிகம். .

உலகம் ஒப்புக் கொள்ளும் கருத்துக் களைத்தான் எல்லாரும் சொல்ல வேண்டும் என்பது நியாயம் அல்ல. உலகம் தட்டை  என்று உலகமே நம்பியிருந்தபோது இல்லை  உலகம் உருண்டை என்று  சொன்ன கலிலியோவை அப்போது உலகம் ஏற்றுக் கொள்ள வில்லை. பின்னால் கலிலியோ சொன்னதுதான் உண்மையாயிற்றே தவிர அப்போது உலகம் நம்பியிருந்தது அல்ல.

ஆனால் பாஸ்கர் தனது மொழியில்  கவனமாக இருந்திருக்க வேண்டும். எவரையும் அவமதிக்கவோ ஒருமையில் அழைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அதுதான் அவரை இப்போது சிக்கலில்  கொண்டு விட்டிருக்கிறது. எதையும் அறிவார்ந்த  முறையில் சொன்னால்  இப்போதும் உலகம் கேட்க காத்திருக்கிறது. இன்று அதிகாரத்தில் இருப்போர்  வேண்டுமானால் கேட்காமல் இருக்கலாம். நாளை ?

உலகம் முழுவதும் பாஸ்கருக்கு அபிமானிகள் இருக்கிறார்கள். அவர்களை  பாஸ்கர் கைவிட்டு விடக் கூடாது.அவர்களுக்காகவாவது குற்றம் இழைக்காமல் தனது கருத்துக்களை சொல்வது எப்படி என்பதை  இனிமேலாவது  அவர் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

அதுவே அவருடைய அபிமானிகளின் விருப்பம்.

விடை தேட வேண்டிய  கேள்வி?

இதுவரை பல ஆண்டுகளாக மருத்துவ துறையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஸ்கர் சொல்லி வந்திருக்கிறார். அவை லட்சக் கணக்கான மக்களின் கவனத்திற்கு சென்று பலரின் பாராட்டுக்களையும் சிலரின்  விமர்சனதையும் பெற்றிருக்கிறது. ஏன்  இதுவரை அரசு அவரிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.? நடவடிக்கையும் எடுக்க வில்லை? 

ராஜேந்திர பாலாஜி நீக்கம் உண்மையான காரணம் இதுதான் ?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் துணை  ஒருங்கிணைப்பாளர்          பழனி சாமி  ஆகியோரால் இன்று நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.

கொஞ்ச நாளாகவே ராஜேந்திர பாலாஜி தன்னை தனித்துவம் மிக்கவராக காட்டிக் கொண்டிருந்தார். மோடி எங்கள் டாடி , எல்லாவற்றையும் மேலே உள்ளவன் பார்க்துக் கொள்வான் என்றெல்லாம் பேசி அதிமுகவுக்கு அவப்பெயர் தேடித் தந்தவர் ராஜேந்திர பாலாஜி.

அதிமுக அரசு மோடியின் அடிமை என்று விமர்சிக்கப்  படுவதற்கு ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் மேற்கோள் காட்டப் பட்டு  வந்தன.

முன்பு அமைச்சர் மணிகண்டனை பதவி நீக்கம் செய்து தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டினார் முதல்வர் பழனிசாமி. அவர் அமைதியாக இருந்து விட்டார்.

இப்போது ராஜேந்திர பாலாஜி. அது அமைச்சர் பதவி . இது கட்சி பதவி. வருமானம் வரும் அமைச்சர் பதவியை பறிக்கப் பட்டவரே அமைதியாக இருக்கிறார். இது வெறும் கட்சி  பதவி தானே ?வருமானம் வரும் அமைச்சர் பதவியை பறிக்க வில்லையே? எனவே இவரும் அமைதியாகி விடுவார் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது.

அது என்னவென்றால் ஓட்டு  மொத்தமாக பாஜக  சொல்லும் வழியில் செல்ல முடிவெடுத்துவிட்ட ராஜேந்திர பாலாஜி பாஜக யோசனைப்படி ரஜினியின் கடசியில் சேர தீர்மானித்து விட்டதாகவும் அதை மோப்பம் பிடித்து விட்ட அதிமுக தலைமை சேதாரம் அதிகமாகாமல் இருக்க இப்போதைக்கு  கட்சி  பதவியை பறித்து  பலத்தை குறைக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

அதற்கு தோதாக கொறானா பீதியில் மாநிலமே முடங்கி இருக்கும் நிலையில் பதவியை பறித்தால் அவர் அடங்கி விடுவார் என்பதுதான் எதிர்பார்ப்பாம்.

எங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இருவரும் பாஜக மேலிடத்திற்கு சொல்கிறார்களா?

பார்க்கலாம். எதிர்பார்ப்பு பலிக்கிறதா?இல்லை ராஜேந்திர பாலாஜி சிலிர்த்துக் கொள்வாரா என்பதை?

இதையும் மேலே உள்ளவன் பார்த்துக் கொள்வான் !!அப்படித்தானே அமைச்சரே?

நால்வரின் தூக்கு பாலியல் குற்றங்களை குறைக்க வேண்டும் ?!

மரண தண்டனை கூடாது என்று வாதிடுவோர் கூட இவர்கள் நாகரீக சமுதாயக்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூற தயங்காத அளவு கொடூரமான முறையில் பாலியல் குற்றம் இழைத்த நிர்பயா குற்றவாளிகள் நால்வர்  கடைசியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  தூக்கில் இடப்பட்டனர்.

மனித குலத்தின் மிகப் பழைமையான தொழில்  பாலியல்.

உலகின் எந்த நாட்டாலும் அறவே ஒழிக்க முடியாத தொழில்.

இந்தியாவில் கூட மும்பையிலும் கோல்கத்தாவிலும் சட்ட பூர்வமாகவே அனுமதிக்கப் பட்டு  மருத்துவக் கண்காணிப்பில் நடைபெறும் தொழில்.

ஆனால் மனிதர்கள் சட்டத்தை மீறியே வழக்கப் பட்டு விட்டார்கள். சட்டம் அனுமதிக்கும் வழிகளை புறந்தள்ளி குற்றம் செய்து தப்பித்துக்  கொள்ளலாம் என்ற அச்சமின்மை குற்றம் செய்ய தூண்டுகிறது.

அதனால்தான் மனிதன் பாலியல் ரீதியாக கொடூரமாக நடந்துகொண்டு கொலை செய்யும் அளவு துணிந்து விடுகிறான்.

கொலைக்கு மரண தண்டனை இருந்தும் கொலைகள் குறைய வில்லையே?

பெரும்பாலான கொலைகளுக்கு ஆயுள் தண்டனை  என்ற பெயரில் ஏழெட்டு  ஆண்டுகள்  சிறையில்  கழித்தால் போதும் என்ற நிலையில் விடுதலையாகி  மீண்டும் பயமின்றி வன்முறையில் இறங்கலாம் என்ற நிலைதான் சட்டத்தை  வலுவிழக்க செய்து வருகிறது.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் என்பது  கொஞ்சமாவது அச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

சட்டத்தின் மீதும் நீதி மன்றங்களின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தக்க  வைக்கும் தூக்கு  இது.

 

 

இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்க ஆள் வைத்து காயப்படுத்திக் கொண்ட இந்து முன்னணி பிரமுகர்?!

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் பகவான் நந்து .கனகம்பாளையத்தில் கடை வைத்திருக்கிறார்.

இந்து முஸ்லிம் கலவரம் உருவாக்க திட்டமிட்டோ கட்சியில் பெயர் வாங்கவோ திட்டம் தீட்டி இருக்கிறார். அதன் படி காவல் துறையில்  ஒரு புகார் கொடுக்கிறார். தன்னை ஆறு  பேர் கொண்ட கும்பல்  மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்து  தன்னை முதுகிலும் இரண்டு கைகளிலும் ஆயுதங்களால் வெட்டி  விட்டதாக புகார் கொடுக்கிறார்.  காவல் துறை தீவிரமாக விசாரித்ததில் அந்த நபரே  தனது கார் ஓட்டுனரை உதவிக்கு வைத்துக் கொண்டு இந்த தீய திட்டத்தை நிறைவேற்றியது  அம்பலத்துக்கு  வந்தது.

அதாவது இவரது ஓட்டுனர் கத்தியால் இவரது முதுகில்  காயப் படுத்த இவரே கத்தியால் தனது இரண்டு கைகளிலும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டாராம்.

விசாரணையில் இவரது ஒட்டுனர் ருத்ரமூர்த்கி  வட்டாட்சியரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அர்ஜூன் சம்பத் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்  போகிறார்? காவல் துறை  மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்ததாக கூறுவாரோ ?

 

மணிப்பூரில் கடுமை காட்டிய உச்சநீதி மன்றம் ஒபிஎஸ் விடயத்தில் மென்மை காட்டுகிறதா ?!

மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஷ்யாம் குமார் பாஜகவில் சேர்ந்து அமைச்சராகிறார்.

தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப் பட்ட மனுவை  சபாநாயகர் கிடப்பில்  போடுகிறார்  மூன்று ஆண்டுகளாக.  தமிழ்நாட்டில் ஓபிஎஸ் மற்றும் பத்து பேர் மீது இருக்கும் அதே நடவடிக்கை..விசாரணையில் சபாநாயகர் மூன்று மாதத் துக்குள் முடிவு எடுக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடுகிறது. அதற்குப் பிறகும் முடிவு எடுக்காததால் அமைச்சர் பதவியில்  இருந்து ஷ்யாம் குமாரை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

கட்சி தாவல் தடுப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் சபாநாயகர்கள். ஒன்று ஆளும்கட்சிக்கு  சாதகமாக முடிவெடுக்கிறார்கள். அல்லது  எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்துகிறார்கள்.

இவர்கள் முடிவு எடுப்பதற்குள் அமைச்சரவையில் ஆயுள் முடிந்து  விடும். ஒரு வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தை சுயாதிகாரம் கொண்ட தீர்ப்பாயத்திடம் கொடுத்தால் என்ன என்றும் உச்சநீதி  மன்றம் கேட்டிருக்கிறது.

இன்று மத்திய பிரதேசத்தில் நடந்து வருவது ஜனநாயகப் படுகொலை. நிகழ்த்திக் கொண்டிருப்பது  பாஜக. கட்சி தாவல் தடை சட்டத்தை ஏமாற்ற ராஜினாமா  செய்து வருகிறார்கள். ராஜினாமாவின் முடிவில் பின்னால் கட்சி தாவல் இருக்கிறது.

குஜராத்தில் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற மேலவை இடத்தை பெறக்கூடாது என்பதற்காக நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதற்காக ஒரு உறுப்பினர்க்கு இருபது கோடி முதல் அறுபது கோடி வரை பேரம் பேசி இருக்கிறார்களாம். இப்படி கட்சி மாறுபவர்களை தெருவில்  நிறுத்தி செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஹர்டிக் பட்டேல் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் தமிழ்நாடு சபாநாயகருக்கு  ஏன் காலக்கெடு எதுவும் விதிக்க வில்லை.?

 

 

 

சங்கர மடத்தில் பாஜக தமிழக தலவர் எப்படி நடத்தப்பட்டார் ??!

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல் முருகன் முதன் முதலில் சென்ற இடம் காஞ்சியில் உள்ள சங்கர மாதம்.

அருந்ததியர் ஒருவரை மாநில தலைவராக நியமித்ததன் நோக்கமே நாங்கள் சாதி பார்க்க மாட்டோம் என்று உலகுக்கு சொல்லிக் கொள்ளத்தான் .

அங்கே நடந்தது என்ன? விஜயேந்திரர் நாற்காலியை எடுக்கச் சொல்லி விட்டு தரையில் உட்கார்ந்து கொண்டாராம். இல்லையென்றால் முருகனையும் உட்கார சொல்ல வேண்டுமே?

உள்ளே வந்த முருகனை நிற்க வைத்தே ஆசீர்வாதம் தந்து அனுப்பி விட்டாராம் .

சுப்பிரமணியசாமி பார்ப்பனர் என்பதால் ஜெயந்திரர் சமமாக உட்கார வைத்து பேசி அனுப்பிய படங்கள் வெளி  வந்தன.

எல் .முருகன் ஏன் சங்கர மேடம் மட்டும் போக வேண்டும்?

திராவிட இயக்கங்களில் பதவி  வந்தால் பெரியார்  அண்ணா சமாதிகளுக்கு  சென்று வணக்கம் செலுத்துவார்கள். பாஜக மாநிலத்தலைவர் பார்ப்பனர்களுக்கு தலைவராக உள்ள விஜயேந்திரரை சென்று பார்த்து  வந்தால் என்ன பொருள்? இவர் பார்ப்பனீயத்தை  ஏற்றுக்  கொண்டவர் என்பதுதானே ?

பார்ப்பனீயத்தை ஏற்றுக்  கொண்ட ஒருவர் எப்படி சமத்துவத்துக்கு போராடுவார்?

எப்படி வளரும் இங்கே பாஜக?

 

 

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகற்கும் நியமனம் ?!

ஓய்வு  பெற்ற பின்  அரசு தரும் பதவிகளை பெற்றுக் கொள்வது நீதிபதிகளுக்கு பெருமை தருமா என்பது கேள்விக்குறியே.?!

முன்பு நீதிபதி சதாசிவம்  ஓய்வு பெற்ற பின் கேரள ஆளுனராக நியமிக்கப் பட்ட போதும் இப்படிப்பட்ட விமர்சனம் எழுந்தது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கின்றார்.

அயோத்தியா வழக்கில்  , ரபேல் விமான கொள்முதல் வழக்கில் என பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி ரஞ்சன் கோகாய்.

முன்னாள் முதல்வரின் மகன். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.அயோத்யா வழக்கில்  எப்படி தீர்ப்பு வருமோ என்று அகில உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில் தீர்வை வழங்கியவர். அது சட்டப்படியானது அல்ல தீர்வை இலக்காக கொண்டது என்று விமர்சிக்கப்பட்டது.

எப்படியானாலும் ஒரு நீதிபதி அரசு தரும் பதவியை வாங்கினால் அதற்கு பலரும் பல விமர்சனங்களை முன் வைப்பார்கள். அதற்கு இடங்கொடுத்து விட்டாரே ரஞ்சன் கோகோய் என்ற ஆதங்கம் நீதித்துறையை சேர்ந்த பலருக்கும் இருக்கிறது என்பது  மட்டும் உண்மை .

பாஜக வின் முன்னாள் அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நீதிபதிகள் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் பதவி  பெறுவது தவிர்க்கப் பட வேண்டும் என்றார் .    மோடி ஜெட்லி சொன்னதை நினைவு கூற வில்லையா என்று காங்கிரசின் அபிஷேக் சிங்வி கேட்கிறார்.

இதே கோகோய்தான் மேலும் மூன்று  உச்ச நீதி மன்ற நீதிபதிகளான சலமேஸ்வர் , மதன் பி லோகுர் , குரியன் ஜோசப் உடன் சேர்ந்து பத்திரிகை யாளர்களை  சந்தித்து அரசிடம் இருந்து முக்கிய வழக்குகளில் குறிப்பிட்ட அமர்வை நியமிக்க அழுத்தம் தரப் படுகிறது என்று கூறி  இதை சொல்ல வேண்டியது  நாங்கள் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை  என்றும் கூறினார்கள்.    இப்போது அதே கோகாய் ஆறு மாதத்திற்குள் பதவியை ஏற்றுக் கொள்கிறார் என்றால் என்ன சொல்வது?

நாளை பதவே ஏற்றபின் விளக்கம் சொல்கிறேன் என்று சொல்கிறார் கோகாய் .   ஏதோ ஒரு இடத்தில் அரசும் நீதிதுறையும் சந்தித்து தானே ஆக வேண்டும் என்பது அவர் கருத்து.    அவர்  தான் மேலவையில் சட்ட பூர்வமாக ஆலோசனைதானே சொல்லப்  போகிறேன் என்று சொல்லலாம். அதை அரசு கேட்கும் என்பது என்ன உத்தரவாதம்?   மேலவை உறுப்பினர்க்கு உரிய  சலுகைகளை பெற தனது தீர்ப்பில் குறை காணலாம் என்று  கோகோய் அச்சப்  பட வேண்டாமா?

இந்தியாவில் நீதித்துறை நெருக்குதலுக்கு உள்ளாக்கப் படுகிறது என்று  குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த நியமனம் தேவையா?

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் செயல் இது என்ற குற்றச்சாட்டை  எப்படி எதிர்கொள்வீர்கள் ?

தவிர்த்திருக்கலாம்.

 

தமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் ?!

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தமிழக உறுப்பினர்கள்  துணக்  கேள்விகளை  தமிழில் கேட்க சபாநாயகர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைகளை  பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய நாட்டு பாராளுமன்றத்கில் இந்த நாட்டு  மொழியான தமிழில் கேள்வி  கேட்க உரிமை இல்லையென்றால் இது எந்த நாட்டு பாராளுமன்றம் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா ? 

பாஜக  உறுப்பினர் அரவிந்த் குமார் சர்மா இந்தி இந்த நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப் பட வேண்டும் என்று பேசியதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். பாஜக வின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன?

இதை எதிர்த்து பேச மற்ற மொழி உறுப்பினர்களுக்கு உரிமை இல்லையா?

அதே நேரத்தில்   மத்திய சமஸ்கிரித பல்கலைகழக மசோதா மூலம் மூன்று சமஸ்கிரித பல்கலைகழகங்களுக்கு  மத்திய பல்கலை கழகங்களாக தகுதி  அளித்து சட்டம் நிறைவேற்றப்  பட்டிருக்கிறது. முன்பே மக்களவையிலும் இப்போது மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப் பட்டு விட்டதால் இனி  சட்டமாகிவிடும். இதர செம்மொழிகளுக்கு ஏன் இந்த சலுகை அளிக்கப்படவில்லை?

இனி இந்தி அல்லாத மாநில உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியில் மட்டுமே பேச வேண்டும் அதை பிற மொழிகளில் மொழிபெயர்த்து  தர வேண்டும் என்று முடிவெடுத்தால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வாய்ப்பிருக்கிறது.

மத நம்பிக்கைகளை தகர்த்த கொரானா ?!

கொரானா உயிர்களை மட்டும் கொல்லவில்லை.

மத நம்பிக்கை களையும்  தகர்த்து வருகிறது.

கை குலுக்குவதை கைவிட்டு உலகமே இன்று கைகூப்பி வணக்கம் சொல்கிறது.

உடனே இந்து மதவாதிகள் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

இந்து கோவில்களுக்கு கூட்டமாக   வர வேண்டாம் என்கிறார்கள்.  திருவிழாக்கள் ரத்து செய்யப்  படுகின்றன.  திருப்பதிக்கு கூட்டம் குறைந்து விட்டது.

குவைத் கூட்டமாக நமாஸ் செய்வதை தடை செய்திருக்கிறது. மசூதிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கிறார்கள்.

சர்ச்சுகளில் கூட்டம் குறைகிறது.

மொத்தத்தில்   கொரானா பாதிப்பில் இருந்து தப்பிக்க கடவுள் நம்பிக்கை போதாது என்ற மனநிலைக்கு மக்கள்  வந்து விட்டார்கள்.   எல்லா  மதங்களுக்கும் இது பொருந்தும்.

பாவம் கொரானா ! கடவுள்  நம்பிக்கையில் பார பட்சம் பார்க்காமல் எல்லாரையும் காவு கொள்கிறது.

கொரானாவை எந்த கடவுள் அனுப்பினார் என்பதில் மட்டும் போட்டி இல்லை.

மதசார்பின்மையை  கொள்கையாக கொண்டிருக்கும்   கொரானாவை கட்டுப்படுத்தி ஒழிப்பதில் மட்டும் எல்லா மதங்களும் ஒன்று பட்டிருக்கின்றன.

ஒழிக கொரானா ?!

ரஜினி விலகினாலும் அல்லக்கை மணியன் விட மாட்டார் போலிருக்கே?!

ரஜினி காந்த் வெளிப்படையாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டார்.

மக்களிடம் எழுச்சி வரட்டும். அது எனக்கு தெரியட்டும். அப்போ வர்றேன்  . என்பதுதான் இறுதி செய்தி.

முதல்வர் கனவு தனக்கு என்றுமே இருந்ததில்லை என்றும் சொல்லி விட்டார்.

இளைஞர்களையும் அறிவில் சிறந்த  ஓய்வு பெற்ற அதிகாரிகளையும்  பதவியில்  அமர வைப்பாராம்.  உழைப்பதற்கு மட்டுமே ரசிகர் மன்றத்தினர்.

சிலர் மட்டும் சந்தேகம் கிளப்பினார்கள். எல்லாம் ஸ்கிரிப்ட் படி தான் நடக்கும் என்றார்கள்.

அதாவது  தனக்கு கிடைத்த தகவல்கள் படி  மக்கள் எழுச்சி இருக்கிறது  என்று சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு 10 – 15 %  வாக்குகளை   வாங்கி  திமுகவின் வெற்றியை தடுத்து விடுவதுதான் அது.   

நான் இருக்கும்வரை முகஸ்டாலின் முதல்வராக முடியாது  என்று சவால் விட்டிருக்கிறாரே  பாஜகவின் முரளிதர்ராவ் . பாவம் அது அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் .

மேற்கண்ட கருத்தைத்தான் எதிரொலித்திருக்கிறார் தமிழருவி மணியன்.

வைகோ , , விஜயகாந்த் என்று  இருவரையும் முதல்வர் கனவில்  மிதக்க விட்ட மாமனிதர் மணியன்.     இப்போது  ரஜினியின் அல்லக்கையாக  மாறிவிட்டார். ரஜினி வேண்டாம்  என்றாலும் விடமாட்டார் போல.

விரைவில் ரஜினிகாந்த் சுற்றுப் பயணம் செய்து கட்சி ஆரம்பிப்பார் என்கிறார் மணியன்.

அந்த முதல்வர்  தானாக ஏன்  இருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்து விட்டதோ  என்னவோ. ?

கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட கடசிகள் தமிழ்நாட்டை  சுரண்டி  விட்டன என்ற  ரஜினியின் கருத்து    சமூகநீதிக்கு எதிரானவர்களின் நஞ்சு  தோய்ந்த கருத்து.    சங்கிகளின் கருத்து.

குருமூர்த்திகளும்  மணியன் களும்  எப்படியாவது ரஜினியை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்கள்.

மாட்ட மாட்டேன்  என்று  அறிவித்து விட்டு பல்டி  அடித்து திரும்பினால்  மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு தெரியாதா என்ன ?

ஓயட்டும் அல்லக்கைகள் ?!