Home Blog Page 72

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது!! அன்புமணி-தமிழிசை சண்டை தேவையா?

இந்தியாவில் அறிவிக்கப் பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எத்தனை செயல்  பாட்டுக்கு வந்திருக்கிறது?

இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கு முன் தமிழ் நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது  பா ஜ க வாலா பா ம கா வாலா என்ற வாதம் தொடங்கி விட்டது.

தான்   2008 லேயே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உத்தரவிட்டு நிதி ஒதுக்கியதாகவும் அதன் பின் பதவி விலகியதால் மேற்கொண்டு தொடர முடியவில்லை என்றாலும் தன்னால்தான் மதுரையில் எய்ம்ஸ் வந்தது என்றும் அன்புமணி  ராமதாஸ் உரிமை கோர , பின் எதற்காக நீங்கள் எய்ம்ஸ் தர்மபுரியில் அமைய வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என்றும் தமிழிசை கேள்வி கேட்க , முன்னால் நாம் சொன்ன எப்போது எய்ம்ஸ் அமுலுக்கு வரும் என்ற கேள்வி பின்னுக்கு போய் விட்டது.

வரும் முன் தமிழ்நாட்டில் மதுரை , செங்கிப்பட்டி, வேலூர், தர்மபுரி , திருச்சி என்று போட்டி இருக்கலாம்.  வந்தபின் அதன் நடைமுறை பற்றி சிந்திப்பதே நல்லது.

தென் மாவட்டங்களை பா ஜ க குறி வைக்கிறது .

தேவேந்திர குல வேளாளர் , வன்னியர் என்று  சாதி ரீதியாக வளைத்துப் போடப்  பார்க்கிறது.   அதுவே பா ஜ க – பா ம க இடையே உரசல் ஏற்பட காரணம்.

இதில் பா ஜ க வெற்றி பெறுமா என்பது வேறு.

என்ன காரணங்களுக்காக எய்ம்ஸ் வந்திருந்தாலும் வந்ததை வரவேற்போம்.

நிதிப்பற்றாக்குறை ரூ 40,530 கோடி; எடப்பாடி அரசின் மோசமான நிதி நிர்வாகம்?!

2017-18 ம்  ஆண்டில்  தமிழக அரசின் நிதிப் பற்றாகுறை ரூ   40,530 கோடி என்றும் தமிழ்நாடு மூன்றாவது பெரிய பற்றாக் குறை மாநிலம்  ரிசர்வ் வங்கி வெளியிட்ட வெளியீட்டில் இருந்து தெரிய வருகிறது.

அரசியல் நிலைத்தன்மை இல்லாதது அரசு  எந்திரம் முழு அளவில் செயல்படாதது புதிய தொழில் வரத்து இல்லாதது போன்றவை காரணம் என்கிறார்கள்.

Fiscal Responsibility and Budget Management Act ன் படி நிதிபற்றாக்குறை வட்டி செலவு மொத்தக்கடன் ஆகியன     3% அளவில் இருக்க வேண்டும் என்ற வரையறையை தமிழக அரசு எட்டிவிட்டதாகவும் அதனால்  14 வது நிதிக்கமிஷனின் பரிந்துரைகள் ஏற்கப் படுவதில் சிரமங்கள் ஏற்படலாம் எனவும் டெல்லி தேசிய பொது  நிதி மற்றும் கொள்கை இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் என் ஆர் பானுமூர்த்தி சொல்கிறார்.

இதற்கெல்லாம் தமிழ்நாடு உதய் திட்டத்தில் சேர்ந்ததுதான் காரணம் என்ற தமிழக அரசின் வாதம் தவறு என்றும் மகாராஷ்டிரா  குஜராத் மாநிலங்கள் எல்லாம் உதய் திட்டத்தில் சேர்ந்தும் அதனால் இழப்பை சந்திக்க வில்லைஎன்பதும் சுட்டி காட்டப் படுகிறது.

அரசின் வருவாய் உயராததுதான் காரணம்.   அதை அரசு  ஒப்புக்  கொள்ள வேண்டும்.

அடுத்து தொழிற்சாலைகள் அதன் முழு உற்பத்தி திறனில் செயல்பட்டால் மட்டுமே அரசிற்கு வருவாய் உயரும் எனவும் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கவனிக்கத் தக்கது.

அரசும் தன் செலவினங்களை குறைக்க திட்டமிட வேண்டும்.  அதை அரசு செய்கிரதாப் இன்றால் இல்லை என்பதே பதில் .

ஆக அரசின் தவறான நிதி க் கொள்கையினால் பாதிக்கப் படப் போவது என்னவோ பொதுமக்களே??!!

கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வாளரை அமெரிக்காவில் உரையாற்ற அனுமதி மறுத்த மத்திய அரசு??!!

அமர்நாத் ராமகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சியில் முதலாவது இரண்டாவது சுற்று ஆராய்ச்சியை முடித்தவுடன் திடீரென்று குவாஹாத்திக்கு மாறுதல் செய்யப் பட்டார்.

அப்போதே ஆட்சேபனைக் குரல்கள் எழுந்தன.

இப்போது அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பு இவரது ஆராய்ச்சியை பற்றி உரையாற்ற அழைத்த போது மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

சங்க காலத்து நாகரிகம் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் வெளி உலகத்துக்கு தெரியக் கூடாது என்று மத்திய அரசு விரும்புகிறதா?

மறுக்க எந்த காரணமும் தெரிவிக்கப் படவில்லையாம்.

மத சார்பற்ற சமுதாயம் இங்கே வாழ்ந்த அடையாளம் தெரியக் கூடாது என்பதே நோக்கம் என சந்தேகிக்க இடமிருக்கிறது.

எல்லாம் சரி.  கண்டுபிடிப்புகளை அப்போதைக்கப் போது வெளியிடுவதில் அதிகாரிகளுக்கு என்ன சிரமம்?

வடிகட்டி வெளியிடுவதில் காட்டும் உள்நோக்கம் என்ன?

வரலாற்றை திரிக்க முயற்சி நடக்கிறது.    தடுக்க தமிழ்நாடு அரசு செய்யும் முயற்சிகள் என்ன?

3345 பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் சட்ட மன்றத்தில் அறிவிக்கிறார்.    என்னென்ன பொருட்கள் என்பதை உடனே அறிவிக்க வேண்டும்.

மேலும் ஆராய்ச்சி தேவை இல்லை என தற்போதைய அதிகாரி ஸ்ரீராமன் தெரிவிப்பது கேள்விக்குறிகளை எழுப்புகிறது.

ஆனால் அமைச்சர் ஆராய்ச்சி தொடரும் என்கிறார்.

ஒரு கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்க இருப்பது ஆறுதல் செய்தி.

முன்பு கண்டுபிடிக்கப் பட்டவைகளை மைசூருக்கு கொண்டு சென்றார்களே எதற்காக?

வரலாறு பாதுகாக்கப் படவேண்டும்.   அதாவது உண்மை  வரலாறு.

இந்தியாவில் 19569 மொழிகள்!!! புள்ளி விபரம் வெளியிட ஏன் இத்தனை தாமதம்?

கடந்த  2011  ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மொழிவாரியான ஆய்வு குறித்த தகவல்களை மக்கள் தொகை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது .

அதில்தான்   121   கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பத்தாயிரம் அல்லது அதற்கும் மேல் அதிகம் பேரால்  121  மொழிகள் அதிகளவில் பேசப்படுவதாகவும் எட்டாவது அட்டவணையில் இந்த  121 மொழிகள் இரண்டாக பிரிக்கப் பட்டு  22  மொழிகள் அட்டவணைப் படுத்தப் பட்டு  99 மொழிகள் அங்கீகரிக்கப் படாமல் உள்ளதாகவும் தெரிகிறது.

அட்டவணைப் படுத்தப் படாத மொழிகள்  2011 ல் ஒன்று குறைந்து 99 ஆக உள்ளது. முன்பு இது   100   ஆக இருந்தது.

19, 569  தாய் மொழிகள் இந்தியாவில் என்பது ஆச்சரியப் பட வைக்கிறது.

அதாவது 96.71  % பேர்  அட்டவணையில் உள்ள  22 ல் ஒன்றை தாய் மொழியாக கொண்டுள்ளனர்.  மீதமுள்ள  3.29 %  பேர் பிற மொழிகளை பேசுபவர்களாக உள்ளனர்.

அடையாளம் காணக் கூடிய மொழிகளாக  270  தாய் மொழிகள் உள்ளனவாம்.

இவற்றில்  123  மொழிகள் அட்டவணை இடப்பட்டபிரிவிலும் மீதமுள்ள  147 மொழிகள் அட்டவணைஇடப் படாத பிரிவில் உள்ளன.

எல்லா மொழிகளுக்கும் அங்கீகாரம் தர இயலாது என்பதற்காகவா  இந்தப் புள்ளி விபரம்  என்பது தெரியவில்லை.

பெரும்பான்மை பேச்சு வழக்கு மொழிகள் ஆக இருக்க வேண்டும்.

அட்டவணை படுத்தப் பட்ட மொழிகள் அலுவல் மொழிகளாக அங்கீகாரம் பெரும் நாளே நல்ல நாள்.

பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணைக் கெடுத்து பாவம் செய்த பாதிரியார்கள் ??!!

கேரள மாநிலம் மலங்கரா ஆர்தொடாக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு ஒரு உறவுக்கார பாதிரியாரிடம் தொடர்பு வைத்திருந்ததாககூறி பாவ மன்னிப்பு கோரினார்.

அப்போது அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்.    பாவ மன்னிப்புக் கொடுத்த பாதிரி கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதை விடியோ எடுத்து மற்ற பாதிரிகளிடம் காட்ட அவர்களும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.  இதுபோல் எட்டு பாதிரியார்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.

விபரம் தெரிந்த கணவர் சபை நிர்வாகத்திடம் புகார் செய்ய சபை ஐந்து பாதிரியார்களை மட்டும் இடை நீக்கம் செய்திருக்கிறது.

மற்ற மூவரும் தண்டிக்கப் படும் வரை ஓயப் போவதில்லை என்று கணவர் கூறுகிறார்.

அவர் திருச்சபையின் புகழை கெடுக்க விரும்பாமல் காவல் துறையில் புகார் கொடுக்காவிட்டாலும் பிரச்னை சமூக வலை தளங்களில் வெளியாகி விட்டதால் வேறு வழியின்றி குற்றப் பிரிவு விசாரணைக்கு டி ஜி  பி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டிருக்கிறார்.

அவர்களுக்குதான் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் ஈடுபட உரிமை  உண்டே இந்த பாதிரிகளுக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்.

ஆக எல்லா மதங்களிலும் கொடுமையானவர்கள் இருக்கத் கத்தான் செய்கிறார்கள்.

நடவடிக்கை எடுத்த திருச்சபைக்கு பாராட்டுக்கள்.

வெளியில் வந்தது ஒன்று என்றால் வெளியில் வராதது இன்னும் எத்தனையோ என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

மதத்தை மாசு  படுத்தும் சக்திகள் களைஎடுக்கப் படத்தான் வேண்டும்.

ஆமாம் . இந்தப் பாதிரிகளுக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா?

சட்டம் தண்டனை கொடுக்கும்.

இன்னொரு பாதிரி பாவமன்னிப்பு கொடுப்பார்.

எனவே மீண்டும் குற்றம் செய்வார்களோ?

சட்ட உதவி செய்த வக்கீல் வாஞ்சிநாதன் கைது??!!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில் செய்யும் வாஞ்சிநாதன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்  ஒருங்கிணைப்பாளராக வும் இருக்கிறார்.

இவர் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இவரை விமான நிலையத்தில் வைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கில்  கைது செய்திருக்கிறார்கள்.

அந்த வழக்கு பொய்யா உண்மையா என்பது நீண்ட விசாரணைக்கு பின்பே தெரிய வரும்.  அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.  இந்த தாமதம்தான் பிரச்னையின் மையப் புள்ளி.

இதை ஆட்சேபித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

நமக்கு எழும் கேள்வி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் மட்டும்தான் செய்ய முடியுமா?

நன்றாக இது பொய் வழக்கு என்று தெரியும் வழக்கில் ஏன் பொய் வழக்கு போட்டவர் மீது குற்ற வழக்கு போட்டு தண்டிக்க முடியவில்லை.

சட்டத்தில் இதில் இடமில்லை  என்று சொல்ல முடியாது.

அதில் ஆயிரம் சந்து பொந்துகள் உள்ளன.    நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.   அப்போதுதான் நீதி கிடைக்கும்.

பொய் வழக்கு போடுகிறோம் என்ற பயம் காவல் அதிகாரிகளுக்கு அறவே இல்லை. ஏன் என்றால் யார் நீதிமன்றத்துக்கு அலைவார்கள். செலவு செய்வார்கள்.  அதுவே  பயமின்றி பொய் வழக்கு போடும் துணிவை தருகிறது.

வக்கீல்கள் தங்கள் மீதான பொய் வழக்குகளில் தக்க நிவாரணம் பெற முடியாது என்பது நீதித் துறைக்கே களங்கம்.

பிறமொழி மாணவர் தமிழ் கற்க இரண்டாண்டுகள் போதாதா?

எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி பள்ளிகளில் கட்டாயப் பாடமாகத்தான் இருக்கிறது.

தி மு க அரசு  Tamilnadu Tamil Learning Act 2006  கொண்டு வந்து தெலுங்கு , உருது, கன்னட , மலையாள மீடியம் பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொள்வதை கட்டாயம் ஆக்கியது.

வேற்று மாநிலத்தில்  இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் தமிழ் கற்றுக்  கொள்ள கெடு நான்கு ஆண்டுகள்.   இந்த காலக்  கெடு போதும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

சட்ட மன்றத்தில் இந்தக் கெடுவை நீட்டிக்க திமுக உறுப்பினர் ஓசூர் ஒய் பிரகாஷ் கோரிக்கை விடுத்தார்.

சட்ட மன்றத்தில்  தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒய் பிரகாஷ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இருவரும் தெலுங்கிலேயே பேசினார்கள்.   ஆனால் அதை மொழி பெயர்த்து  தெலுங்கில் தருமாறு சபாநாயகர் கேட்டார்.   ஏனெனில் மொழிபெயர்ப்பு செய்ய அவையில் ஏற்பாடு இல்லை.

முந்தைய சட்ட மன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் சட்ட மன்றத்தில் தெலுங்கிலேயே பேசுவார்.   அதற்கு ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் தருவார்.

பத்தாண்டுகள் ஆனபின்பும் தமிழ் தமிழ்நாட்டு பள்ளிகளில் கட்டாயம் என்ற சட்டம் அமுல்படுத்தப் படாதது வருந்தத் தக்கது.

தமிழைக் காக்க இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை.

பிற மாநில மக்கள் படையெடுப்பு தமிழகத்தில் அதிகம் உள்ளது.     அது அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும்  உரிமை.   யாரும் எங்கேயும் வாழலாம்.   ஆனால் அந்தந்த மாநில மொழிகளை மதித்து வாழ வேண்டும்.  கற்று வாழ வேண்டும்.

மும்பைக்கும் டெல்லிக்கும் சென்று பிழைக்கும் தமிழர்கள் மராட்டியையும் இந்தியையும் கற்றுக் கொண்டுதான் வாழ வேண்டும்.

அதற்கு தமிழகம் விலக்கல்ல.

மற்ற மாநிலங்களில் இருந்து நாம் என்னை பாடம் கற்றிருக்கிறோம் ?

பயங்கரவாதிகளின் பயிற்சிக்களம் தமிழ்நாடு என்று பொன் ராதாகிருஷ்ணன் மிரட்டுவது ஏன் தெரியுமா?

அடிக்கடி பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நக்சலைட்டுகள் , மாவோயிஸ்டுகள் , பயங்கர வாதிகள்,  தமிழ் பெயரை சொல்லி பேசும் பிரிவினை வாத இயக்கங்கள் பல அமைப்புகளில் ஊடுருவி இருக்கின்றனர் என்று சொல்லி வருகிறார்.

தமிழக அரசு இதை மறுத்து வருகிறது .   ஜெயக்குமார் கூட அவர் ஏதோ விளம்பரத்துக்காக பேசுகிறார் என பதில் சொல்கிறார்.    ஒரு மத்திய அமைச்சர் விளம்பரத்துக்காகவா  பேசுவார்?

தமிழக அரசே மத்திய அரசின் அடிமை என்று குற்றம் சாட்டப் படுகிறது.

பெரும்பான்மை இல்லை.    மத்திய அரசு வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த அடிமைகளை கூட்டு சேர்த்து  கால் ஊன்ற முடியாதா என்பதே பா ஜ க வின் கணக்கு.

பின் எதற்கு இந்த பயங்கரவாத பூச்சாண்டி?

தேர்தலுக்கு முன் அவசரநிலை கொண்டுவரலாமா  என திட்டமிடுகிறதா மத்திய அரசு?

அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்த திட்டமா?

இந்த ஒன்றில் எதை அமுல் படுத்தவும் இந்த குற்றச்சாட்டு பயன்படும் என்று அவர் நம்புகிறார் என்றுதான் பொருள்.

இல்லையென்றால் மாநில அரசு இல்லை என்னும் ஒன்றை  இவர் இருக்கறது என்று ஏன் சொல்ல வேண்டும்?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தவுடன் தீவிரவாதிகள் ஊடுருவல் என்றீர்கள்.   ஒரு தீவிரவாதியை கூட அடையாளம் காட்ட அரசால முடியவில்லை?

குண்டடி பட்டவர்களுக்கு இருபது லட்சம் நிவாரணம் அளித்தால் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று தானே பொருள்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கர வாதிகள் ஊடுறுவினார்கள் என்று போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வேலையை பா ஜ க கைவிட வேண்டும்.

அரசியல் இலக்கை வைத்து பொய் குற்றச்சாட்டு வைப்பதும் குற்றமே.

அதை மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு பொன். ராதாகிருஷ்ணன் செய்யக் கூடாது.

ஆதாரம் இருந்தால் அரசிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கட்டும் .

அதை விடுத்து வேற்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தால் மக்கள் உங்களிடம் வைத்திருக்கும் மரியாதை போயே போய்விடும்.

ஸ்டாலின் நெற்றியில் இடப்பட்ட பொட்டை அழித்து தெய்வத்தை அவமதித்தாரா?

மு. க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக  செல்கிறார்.    அங்கே அவருக்கு திருவரங்க நாதருக்கு அணிவிக்கப் பட்ட மாலைகள் பிரசாதங்கள் அவருக்கு பட்டர்களால் அணிவிக்கப் படுகிறது.    அதை வைக்கும்போது ஸ்டாலின் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொள்கிறார்.   பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நெற்றிப் பொட்டை அழித்து விடுகிறார்.

எனவே ஸ்டாலின் தெய்வத்தை அவமதித்து விட்டார் என்றும் இனி அவரை கோவில்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதே கட்சியை சேர்ந்த தமிழிசை ஸ்டாலினுக்கு மத நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுவதாக கூறியிருக்கிறார்.

இதுதான் இந்து என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலை.

பெரியார் கூட குன்றக் குடி  அடிகள் திருநீறு  அணிவித்த போது அழிக்க வில்லை என்றால் பின்னர் அழித்திருப்பார்.

முஸ்லிம் விழாவுக்கு போனால் அங்கே குல்லா அணிவிப்பார்கள்.   சிறிது நேரம் கழித்து எடுத்து விடுவோம்.   அவமரியாதை செய்வதாக அர்த்தமா?

பொட்டு இடப்பட்ட போது ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டதே ஒரு மரியாதைதான்.

கோவிலுக்குள் அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு மன்னிப்புக் கேள் என்றெல்லாம் பேசுவது ஒரு மத்திய அமைச்சருக்கு அழகல்ல.

யாராலும்  யாரையும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க  முடியாது.

இறைவனை நம்புகிறேன் ஆனால் சமய புறசின்னங்களை அணிவதை  தவிர்க்கிறேன் .  அதற்கு எனக்கு உரிமையுண்டு.    யாரால் தடுக்க  முடியும்.     சிறுபிள்ளைத்தனமாகவும் பொறுப்பில்லாத் தனமாகவும்  பொன்னாரின் பேச்சு இருக்கிறது.

இதற்கிடையில்   மருத்துவர் ராமதாஸ்  பொட்டை அழித்து விட்டால் கோவிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா கிடைக்காதா என்று பகுத்தறிவு வாதிகள் சொன்னால் பரவாயில்லை என்று கிண்டல் அடித்திருக்கிறார்.

அப்படி ஒரு யாகம் நடந்ததாக  தகவல் இல்லை.   எதை வைத்து அவர் இப்படி சொன்னார் என்பதும் தெரியவில்லை.

ஸ்டாலின் பேரை ச்சொல்லி வேறு யாராவது யாகம் செய்தார்களா என்று தெரியவில்லை. செய்தாலும்  அதற்கு ஸ்டாலின் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?

ஸ்டாலின் செய்ததில் தவறே இல்லை.

‘ சர்கார்’ விஜய் புகை பிடிக்கும் காட்சி நியாயமா?

பொது இடத்தில் புகைப்பது குற்றம்.  ஆனாலும் சிகரட் விற்பனைக்கு தடை ஏதும் இல்லை.     இதுவே  முரண்.

உன் தனி இடத்தில் உன்னை கெடுத்துக் கொள் . அதற்கு உரிமை உண்டு.   ஆனால் அதை பொது இடத்தில் செய்து மற்றவர்களை தூண்டாதே !

இதுவே செய்தி.

ரஜினிகாந்த்  கூட இப்போது புகைக்கும் காட்சிகளில் தோன்றுவது இல்லை.

அருவாளை காட்டலாம்.   கத்தியை காட்டலாம்.   சிகரெட்டை மட்டும் காட்டக் கூடாதா?

விஜய் மீது வழக்கு தொடரப் போவதாக புகையிலை கட்டுப்பாடு இயக்கம் அறிவித்திருக்கிறது .

மருத்துவர் ராமதாசும் அன்புமணியும் இந்தக் காட்சியை உடனே நீக்க குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ரஜினி, கமல்  போல விஜயும் அரசியல் கனவுகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறார் என்பது அவரது சமீப கால நடவடிக்கை கள் மூலம் தெரிய வரும்.

அவர் தன் இமேஜை நல்ல விதம் வளர்ப்பது நல்லது.

ரசிகர் மன்றங்கள் தடை செய்யப் பட வேண்டும் .     அதனால்தான் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருகிறது.     எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை  இது.

நடிப்பை ரசிக்கும் ரசிகனை ஒன்றிணைப்பது  அரசியலுக்கு மூலதனம் என்றாகி விட்டது.

மெர்சல் மூலம் நல்ல பெயர் எடுத்திருக்கும் விஜய் பேரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.