Home Blog Page 73

பூரி ஆலயத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவமதிக்கப் பட்டாரா?

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு மனைவியுடன் சாமி கும்பிட சென்றிருக்கிறார்.

அங்கே ஆலய பணி செய்பவர்கள் அவரது பாதையை மறித்து நின்றும் அவரது மனைவியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்தும் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் அலுவலகம் தனது கடுமையான ஆட்சேபணையை  தெரிவித்து கடிதம் எழுதியது.

பிரச்னை பெரிதானதும் இப்போது அப்படி ஒரு கடிதம் எழுதப் படவே இல்லை என்று மறுக்கிறது.

குடியரசுத் தலைவர் ஒரு  தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாம் என்பதுதான் எழுதப் படாத சட்டம்.

இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஏன் மகாத்மா காந்தி கூட இப்படியே இந்தக் கோவிலில் அவமதிக்கப்  பட்டிருக்கின்றனர்.

களங்கம் ராம்நாத் கோவிந்துக்கு அல்ல.     கோவில் நிர்வாகத்துக்கே அவமானம்.

இந்து மதம் என்று அழைக்கப் படும் பார்ப்பன சமயத்தில் சமத்துவம் நிலவ இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்?

கி.மு – கி.பி போய் பொ.மு – பொ.பி வந்தது! மத அடையாளம் மறையட்டும்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன் – கிறிஸ்து பிறப்பிற்கு பின்  என்று

B.C.  ( Before Christ ) – A.D.( Anno Domini)   என்று ஆண்டுகளை கணக்கிடுவதற்கு பள்ளிப் பாடத்தில் கற்றுக் கொடுக்கப் பட்டது.    அதாவது  2018   என்றால்  ஏசு கிறிஸ்து பிறந்து  அத்தனை ஆண்டுகள் ஆகின என்று பொருள்.

பொது ஆண்டை குறிப்பதற்கு ஏன் கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க வேண்டும் என்று பல தரப்பினர் ஆட்சேபித்துக் கொண்டுதான் இருந்தனர்.

முஸ்லிம் கள் முஹம்மது நபி மெக்காவை விட்டு மெதினாவுக்கு புறப்பட்ட  நிகழ்வை குறிக்கும் வகையில்  தங்கள் ஆண்டை குறியீடாக வைத்திருக்கிறார்கள்.   ஹிஜ்ரி ஆண்டும் முஸ்லிம் மாதங்களும் தனி.

தமிழர்கள்  திருவள்ளுவர் ஆண்டை தங்கள் ஆண்டாக கொள்கிறார்கள்.  அதாவது தற்போதைய ஆண்டான 2018 +31 = 2049 தான் தமிழர் ஆண்டு.

யூதர்களும் கிறிஸ்தவ ஆண்டை ஏற்றுக் கொள்வதில்லை.   ஏனென்றால் கிறிஸ்துவின் பிறப்பையும் அவர் ஆண்டவனின் குமாரர் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.    இத்தனைக்கும் ஏசு கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தவர்.

பல ஆண்டுகளாகவே பொது   ஆண்டை கணக்கிடும் போது மத அடிப்படை இருக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்து கொண்டே  இருந்தது.

இங்கிலாந்து நாட்டின்பி பி சி ஒலிபரப்பு நிறுவனம் இனி தாங்கள்  ஆண்டை குறிக்க  B.C.E. – C.E. ( Before Common Era- Common Era ) என்ற பதங்களையே பயன் படுத்தப் போவதாக அறிவித்தது.             அதற்கும் அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் எழுப்பியது வேறு.

ஆக அந்த அமைப்புகளின்? முடிவை ஓட்டி தமிழ்நாட்டு பாடப் புத்தகங்களிலும் பொ.ஆ.மு. – பொ.மு. என்று இடம் பெற்றிருப்பது வரவேற்கத் தக்கதே.

இந்த பொது ஆண்டின் பெயர்தான் மாறுகிறதே தவிர  ஆண்டை மாற்ற  வில்லை.

கிறிஸ்து பிறப்பை ஓட்டி நிர்ணயிக்கப் பட்ட ஆண்டாக இருந்தாலும் அதை பொது ஆண்டாக பெயர் வைத்தால் கிறிஸ்தவர் அல்லாதோர் ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா?

மத அடையாளங்கள் மெல்ல மெல்ல மறையட்டும்.

கி .வீரமணி பேரன் திருமணம் ஆடம்பரம், அழைப்பிதழ் இல்லாமல் தாலி கட்டி நடந்தது!! வாழ்த்துக்கள்?

ஐயா ஆசிரியர் கி வீரமணி அவர்கள் தன் பேரன் கபிலன்- மகாலட்சுமி திருமணத்தை பெரியார் திடலில் நடத்தி வைத்தார்.

அழைப்பிதழ் இல்லை.   ஆடம்பரங்கள் இல்லை.  வாய் மொழியாகவே கூறி விருந்தினர்களை வரவழைத்து சிக்கனமாக நடத்தி வைத்திருக்கிறார்.

எதை சொல்கிறோமோ அதை நடைமுறையில் செய்து காட்டும் நோக்கத்தில் இந்த திருமணம் நடந்ததாக அவரே செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

மணமக்களை உறுதிமொழி ஏற்கக் செய்து நடந்ததா என்பது தெரியவில்லை.

ஆனால் வலைத் தளங்களில் ஆசிரியர் வீரமணி தன் கையால் மங்கல நாணை எடுத்து மணமகன் கையில் கொடுத்து மணமகள் கழுத்தில் கட்ட வைக்கிறார் என்பதை போல் காட்டியிருந்தார்கள்.

சீர்திருத்த முறை திருமணத்தை வலியுறுத்தும் கலைஞர் தாலி கட்டுவதை மட்டும் எதிர்த்ததில்லை.

அது சம்பிரதாயமான ஒன்றாக பின்பற்றப் படுவதால் இங்கு சுயமரியாதைக்கு எந்த வகையிலும் பங்கம் விளைவிக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தாலி கட்ட வைத்தார் என்பதற்காக  வீரமணி அவர்களை குற்றம் சொல்லுவதை  சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாது.   மணமக்கள் வீட்டாரும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்றல்லவா அது.

வாழ்க மணமக்கள்.

சிபிஎஸ்இ- ன் மொழி வெறி முடிவுகளுக்கு எப்படி முடிவு கட்டுவது?

நீட் தேர்வு நடத்தும் போது சி பி எஸ் இ கடைப் பிடிக்கும் நடைமுறைகள் மாநில மொழி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பது குறித்து கண்டனக் குரல்கள் எழுந்தபோதும் அது திருந்திய பாடில்லை.

சமீபத்தில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தேசிய அளவில் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு உள்பட இருபது மொழிகளில் எழுதும் வசதியை,  ஏதோ ஒரு நீதிமன்றம் நான்கு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் , 17  பிராந்திய மொழிகளை நீக்கி விட்டு இந்தி ஆங்கிலம் சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுத சி பி எஸ் இ உத்தரவிட்டது.

நாடெங்கும் பெருத்த எதிர்ப்பு எழுந்த சூழலில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலையிட்டு எப்போதும் போல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் தேர்வை எழுத உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

எல்லாம் சரி.   இந்த முக்கிய முடிவை எடுக்கும் முன்பு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று சி பி எஸ் இ அறிவிக்காதது ஏன்?

இதேபோல் தான் தோன்றித் தனமாக சி பி எஸ் இ எடுக்கும் முடிவுகள் நாடெங்கும் சிக்கல்களை உருவாக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

இப்படி தவறான நடவடிக்கை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள்.

இல்லையென்றால் இதற்கும் மத்திய அரசு உடந்தை என்றுதான் பொருள் கொள்ளப்படும்.

இவர்கள் மொழி வெறித் தாக்குதல் களை நிறுத்த மாட்டார்கள்.  இப்போதைக்கு பின் வாங்கியிருக்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் தாக்குதல்களை தொடர்வார்கள் என்பதே வெகுமக்களின் சந்தேகம்.

போக்குவது ஆட்சியாளர்களின் கடமை.

மிரட்டும் ஆளுநர், எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், துதி பாடும் ஆளும் கட்சி; என்னவாகும் மாநில சுயாட்சி?

ஆளுனரை பற்றி விவாதிக்கக்கூட விதிகளில் இடமில்லை என சபாநாயகர் அனுமதி அளிக்க சட்டமன்றத்தில் மறுக்கிறார்.

வேறு எங்குதான் விவாதிப்பது. ?

அதுவும் ஆளுநர் மிரட்டுகிறார்; பிரிவு 124  இ த ச படி என்னை செயல் பட விடாமல் தடுத்தால் ஏழு ஆண்டுகள் சிறை என்று மிரட்டுகிறார்.

ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டா இல்லையா என்றால் இதுவரை இல்லை என்பதுவே பதிலாக இருந்தது. வேறு யாரும் இப்படி ஆய்வு செய்ய சென்றதில்லை.

வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடக்க வில்லை. ஏன் பா ஜ க ஆளும் மாநிலங்களில் கூட இப்படி நடக்க வில்லை.  ஏன் இங்கு மட்டும் நடக்க வேண்டும்?

ஆளும் கட்சியில் போட்டி போட்டுக் கொண்டு இதில் ஒன்றும் தவறு இல்லை என்கிறார்கள்.    முதல் அமைச்சர், பான்டியாராஜன், வேலுமணி, செல்லூர் ராஜு , ஓ எஸ் மணியன், ஜெயக்குமார் என்று பட்டியல் நீள்கிறது.

இ த ச பிரிவு ஆளுநர் மீது தாக்குதல் நடத்துவதை பற்றி பேசுகிறது.   யார் இங்கு ஆளுனரை தாக்க முயற்சித்தது.?

இவர்தான் ஆய்வை தொடர்வேன் என்று மிரட்டுகிறார்.    தி மு  க வை பொறுத்த வரை நாங்கள் அவர் ஆய்வுக்கு சென்றால் நாங்கள் கண்டித்து ஆர்பாட்டம் செய்வோம் என்கிறார்கள்.

இது எங்கு போய் முடியும்?

ஏற்கெனெவே ஆர்ப்பாட்டம் நடத்திய 1111  திமுகவினர்  மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடக்கவில்லை.  இங்கு மட்டும் ஏன் நடக்க வேண்டும்?

ஆளுனரைபோல் குடியரசுத் தலைவரும் நானும் மாநிலம் தோறும் ஆய்வு செய்யப் போகிறேன் என்றால் மோடி ஒத்துக் கொள்வாரா?     அத்தகைய குடியரசுத் இப்போது  இல்லை  என்பது வேறு.

மொத்தத்தில் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய முறையை ஆளுநர் தேர்ந்தெடுத்தது ஏன்  ?

தன் மீதான குற்றச்சாட்டு  பிரச்னையை திசை திருப்பவா?  நாளை பா ஜ க கூட்டணி அமைக்க அடித்தளம் போடுகிறாரா?   குடியரசுத் தலைவர்  ஆட்சிக்கு முன்னோடியா?

எப்படி இருந்தாலும் ஆளுநர் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அரசியல் செய்கிறாரா ஆளுநர் பன்வாரிலால் ?!

ஆளுநரைச் சொல்லி குற்றமில்லை.

அவர் பா ஜ க வால் நியமிக்கப் பட்டவர்.    பா ஜ க வின் அரசியல் திட்டங்களுக்கு முட்டுக் கொடுப்பது அவர் கடமை.

அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துவோர் அவரது கொள்கைகளுக்கு வலு சேர்க்க வேண்டாமோ?

ஆட்டுக்குத் தாடி போன்று நாட்டுக்குத் தேவையில்லை ஆளுநர் என்பது அண்ணாவின் கூற்று.

ஆளவந்தோர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதை தடுத்திருக்க வேண்டும்.   ஆட்சேபித்து இருக்க வேண்டும்.

இவர்களால் முடியாது.    எனவேதான் எதிர்க்கட்சி அந்த வேலையை செய்கிறது.

மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுகிறார்கள்.

நாமக்கல்லில் கறுப்புக் கொடி காட்டியோர்  293  பேர் கைது செய்யப்பட்டு  சிறைக்கு அனுப்பப் பட்டிருக் கிறார்கள்.

எனவே இந்த அடக்கு முறையை கண்டித்து இன்று ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி இருக்கிறார்.

அவர் கைதானதால் மாநிலம் முழுதும் தி மு க வினர் கைதாகி இருக்கிறார்கள்.

தூய்மை பணியை நாமக்கல் பஸ் நிலையத்தில் தொடங்க இருந்த ஆளுனர் எல்லா இடங்களிலும் சுத்தப் படுத்தி விட்டு இவர் சுத்தப் படுத்துவதற்காக  கொஞ்சம் இடத்தை குப்பையாக வைத்திருந்ததை கவனித்து விட்டு தொடங்காமலே திரும்ப வந்திருக்கிறார்.

இந்த போலித்தனம் தேவையா?

நாட்டில் எத்தனை மாநிலங்களில் ஆளுநர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்?

ஆளுமை வாய்ந்த முதல் அமைச்சர் இருக்கும் பட்சத்தில் ஒரு ஆளுநர் இப்படி அதிகாரம் செலுத்துவாரா?

சட்டப்படி ஆளுநர் செய்வது சரியில்லை என்பதுதான் உண்மை.

ஆளும் கட்சியே அமைதியாக இருக்கும் போது மற்றவர்கள் ஆட்சேபிக்கலாமா?   வேறு வழி?  உரிமையை விட்டுக் கொடுத்து விடலாமா?

மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்வதை கொச்சை படுத்தும் வகையில் மறைமுகமாக யார் ஆள திட்டமிட்டாலும் அதை முறியடித்தே தீரவேண்டும்.

ஆளுனரை திரும்ப அழைத்துக்  கொள்ள வேண்டும் மத்திய அரசு.  பா ஜ க அதை செய்யாது.

பாலியல் புகாரில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி இன்னும் சிறையில்.    ஆளுநர் பெயர் அதில் அடிபட்டதே உண்மை என்ன?

பல்கலை கழகங்கள் நிர்வாகத்தில் ஆளுநர் வேந்தர் அடிப்படையில் தலையிடுவதில் கூட வரையறை இருக்க வேண்டும்.

பதவிக்கு பெருமை சேர்க்க வேண்டும் பன்வாரிலால்.     ஆனால் இதுவரை அப்படி  இல்லை.  இனியாவது சுய பரிசோதனை செய்வாரா?

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மாண்புமிகு நீதியரசர் அவர்களே !

18 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என  மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கேள்வியெழுப்பி காவல்துறை அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளார்.

வரவேற்க வேண்டியதுதான்.    நீதிமன்ற மாண்பு காக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

தங்க தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி ஒரு வழக்கறிஞர் முறையிட அதற்கும் விசாரணை வரலாம்.    விசாரிக்கட்டும்.   அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும்.

இந்த விசாரணை மற்றொரு கோணத்திலும் வரவேற்கப் பட வேண்டிய ஒன்று.

எல்லா பாமர மக்களுக்கும் ஏற்பட்ட சந்தேகம் இன்னும் தீர்க்கப் படவில்லை.

கொறடா உத்தரவை மீறி அரசை எதிர்த்து வாக்களித்த ஓ பன்னீர்செல்வம் அமைச்சராக அதே அமைச்சரவையில் தொடர்கிறார்.

முதல் அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த 19   எம் எல் ஏக்களில்    ஒருவர்   பின் வாங்கியதால் அவர் மட்டும் மன்னிக்கப் பட்டு மற்ற  18 பேரும் தகுதி இழக்கிறார்கள் என்று ஒரு தீர்ப்பு வருகிறது.

ஓ பி எஸ் உள்ளிட்டவர்களின் தீர்ப்பு வந்த போதே இந்த தீர்ப்பும் வந்திருக்கலாம்.    அது முதலில் வருகிறது.       தீர்ப்புக்கு ஒதுக்கப் பட்ட நாளில் இருந்து ஏறத்தாழ  ஐந்தரை மாதங்கள் கழித்து இந்த தீர்ப்பு வருகிறது.

இரண்டு தரப்பிலும் மெத்தப் படித்த வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்த  தீர்ப்பு இது.

தாமதித்து தீர்ப்பு வழங்கியதால் ஏற்பட்ட இழப்புகள் எத்தனை எத்தனை.   அதை யார் ஈடு கட்டுவது.?

அது நீதிமன்றங்களின் தனி உரிமை.     தாமதத்தை யாரும் கேள்வி கேட்க கூடாது.   நீதி மன்ற அவமதிப்பாகிவிடும்.    வேலைப் பளு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.  அந்த இழப்புகளை  பொதுமக்களும் சம்பந்தப் பட்ட வர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவாக நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது வேறு.     தீர்ப்பு சொன்ன பிறகு குறிப்பிட்ட நீதிபதி மீது உள்ளர்த்தம் கற்பித்து குற்றம் சுமத்துவது என்பது வேறு.

உணர்ச்சிப் பெருக்கில் குற்றம் சுமத்துவது சரியல்ல.    நீதிபதிகளை சந்தேகிப்பதும் உள்ளர்த்தம் கற்பித்து குற்றம் சாட்டுவதும் குற்றமே.   தங்க தமிழ்ச் செல்வன் கூறியது பற்றி அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.    ஆதாரமில்லாமல் , வழங்கப் பட்ட தீர்ப்பல்ல.  வாங்கப்பட்ட தீர்ப்பு என்றெல்லாம் பேசுவது தவறு.   அதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்.

அதற்காக ஊடகங்களில் கருத்து சொல்வோர் விவாதிப்போர் மீதெல்லாம் நடவடிக்கை என்று தொடங்கினால் கருத்து சுதந்திரம் என்ன வாகும் என்பதையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ள  வேண்டும்.

விமர்சனம் செய்வோரை பாதுகாக்கும் கடமை கொண்ட நீதிபதி ஒருவரே இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதே நேரத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு நீதிபதிகளை அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

இந்த வழக்கில் மறைந்திருக்கும் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப் பட வில்லை.

இரண்டு  நீதிபதிகள்  கருத்து  மாறுபடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?   மாறுபட்ட பார்வை தானே?

மூன்றாவது நீதிபதி யின் பார்வைதான் இறுதி செய்யும்.  கட்டுப் படுத்தும்.

அதற்கும் மேலே உச்ச நீதி மன்றம் என்ன சொல்லப் போகிறதோ? எப்போது இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு  வருமோ?     அதற்குள் இந்த ஆட்சி தன் காலத்தை ஒட்டி விடும் என்பதுதானே நிதர்சனம்.

தாமதிக்கப் பட்ட நீதிகள் விமர்சனத்துக்கு உள்ளாகத்தான் செய்யும்.  அந்த விமர்சனம் நியாயமாக இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் நீதி மன்றங்கள் தான் பாமர மக்களுக்கு கடைசி புகலிடம்.    அதை நாமும் மறக்கக் கூடாது.  நீதிமன்றங்களும் மறக்கக் கூடாது.

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தை சுருட்டிய தினகரன் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு?

கோபத்தில்தான் உண்மை வெளிவரும்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி சர்ச்சை பேச்சுக்களை அள்ளித் தெளிப்பவர்.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்றார்.

பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார்.

இப்போது வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை தினகரன் சுருட்டிக் கொண்டு ஸ்டாலினை  முதல் அமைச்சர் ஆக்கவும் தான் துணை முதல்வர் ஆகவும் திட்டம் இடுவதாக பேசியிருக்கிறார்.

இதன் மூலம் ஜெயலலிதா கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்ட அமைச்சர் என்ற புகழையும் பெறுகிறார்.

சீனிவாசன் இன்னும் கொஞ்சம் மனம் திறந்து பேசினால் இன்னும் என்னவெல்லாம் வெளிச்சத்துக்கு வருமோ?

மன்சூர் அலி கான் கைதும் பியுஷ் மானுஷ் கைதும் ஒன்றா ??!!

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்யச் சென்ற நடிகர் மன்சூர் அலி கான் ‘ மக்கள் எதிர்ப்பை மீறி பசுமை வழிச்சாலையை அமைத்தால் எட்டு பேரை  வெட்டிக் கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வேன் ‘ என்று ஆவேசமாக பேசியதால் கைது செய்ய பட்டு  13 நாள் காவலில் சிறையில் இருக்கிறார்.

அப்படி பேசினாரா எண்ணம் இருந்ததா வெறும் ஆவேசத்தில் பேசியதா என்பதெல்லாம் விசாரணைக்கு உரியது.   எனவே அவரது கைதை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.

ஒன்று மட்டும் கேட்டார்கள்.    எஸ் வி சேகரை மட்டும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

இன்று எஸ் வி சேகர் நீதிமன்ற அழைப்பாணை ப்படி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் .    பிணை கிடைப்பதில் சலுகை காட்டக் கூடும்.

மன்சூர் அல் கானைப் பொறுத்த வரை உணர்ச்சி வசப் படுபவர்.   அதற்காக வார்த்தைகளை பொறுப்பின்றி உதிர்க்கக் கூடாது.

ஆனால் பியுஸ் மானுசைப் பொறுத்த வரையில் அவர் மக்களை திரட்டி போராடுபவர் மட்டும் தான்.   வன்முறைக்கு வித்திடுபவர் அல்ல.  அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?

மக்களை திரட்டுவது குற்றமா?    கருத்து  சுதந்திரம் பறிக்கப் படுவது நல்லதல்ல.

அதேபோல் கல்லூரி மாணவி வளர்மதியும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

இதை நீதிமன்றம் தட்டிக் கேட்காதா?

அரச பயங்கரவாதம் என்பது இதுதானோ?

மக்கள் போராட்டங்களை அடக்கும் எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை.

7 ஆயுள் கைதிகள் விடுவிப்பில் மத்திய அரசு காட்டும் வஞ்சனை! மாநில அரசு காட்டும் கையாலாகாத்தனம்??

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகள் ஏழு பேரை  27  ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகும் விடுவிப்பதில் மத்திய மாநில அரசுகள் காட்டும் ஓரவஞ்சனையும் பாரபட்சமும் கையாலாகத் தனமும் எவரையும் துயரத்தில் தள்ளும் .

மத்திய புலனாய்வு நிறுவங்களால் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை விடுவிக்கும் முன்பு மத்திய அரசிடம் தகவல் தர வேண்டும் என்பதுதான் சட்டமே தவிர ஒப்புதல் பெற அவசியமில்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்தது.   இருக்கிறது.

ஆனால்  கு.ந ,சட்டம் பிரிவு  161  ன் படி முடிவு எடுப்பதற்கு அந்த அவசியம் கூட கிடையாது.

மாநில அரசே முடிவு எடுத்து அமுல் படுத்தலாம்.

இத்தனை ஆண்டு காலமாக விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருந்தது எல்லாம் மத்திய அரசிடம் தகவலா ஒப்புதலா என்ற பிரச்னைதான்.

ஜெயலலிதா சட்ட மன்றத்திலேயே வீராவேசமாக ஒப்புதல் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும்  விடுதலை செய்வேன் என்று தேவை இல்லாமல் அறிவித்து மத்திய அரசு உச்ச நீதி மன்றம் சென்று தடை வாங்க உதவி செய்தார்.     அதாவது ஜெயலலிதாவுக்கு உண்மையில் அவர்களை விடுவிக்க மனம் இல்லை.

இருந்திருந்தால் பிரிவு 161ன் படி விடுதலை செய்து விட்டு வருவதை எதிர்கொள்ள தயாராகி இருப்பார்.

எல்லாம் நாடகம்.    இப்போதும் கூட மத்திய அரசிடம் மாநில அரசு விளக்கம் கேட்க  மத்திய அரசு தேவை இல்லாமல்  குடியரசுத் தலைவரிடம் கருத்து கேட்க அவர் மூலமாக மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்து தகவல் அளித்திருக்கிறதுமத்திய அரசு.

இதற்கு என் மகனை கருணை கொலை செய்து விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நாட்டில் நீதி எல்லாருக்கும் சமமும் இல்லை.        வஞ்சகத்தில் யாரும் சளைத்தவர்களும் இல்லை.

அவர்கள் அப்படி இருப்பதில்  வியப்பில்லை.  நம்மிலே இத்தனை அடிமைகளா?