Home Blog Page 75

எடியூரப்பா வாக்கெடுப்பை சந்திக்காமலேயே ராஜினாமா?

சமீப காலத்தில் எந்த ஆளுநரும் இப்படி மோசமாக நடந்திருக்க முடியாது.

பெரும்பான்மை காட்டிய காங்கிரஸ் – ம ஜ த கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை முதல்வர் ஆக்கியது- உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்பும் மூத்த உறுப்பினரை சபாநாயகர் ஆக்காமல் பா ஜ க உறுப்பினரை சபாநாயகர்  ஆக்கியது என்று வெறுக்கத் தக்க முறையில் பார பட்சமாக நடந்துகொண்டார் வாஜ்பாய் வாலா.

கடைசியில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு நாள் கெடுவில் ஆட்களை விலைக்கு வாங்க முடியாமலும் , சபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பில் இருந்ததால் முறைகேடுகளில்  ஈடுபட முடியாமலும் வாக்கெடுப்பில் தோல்வியை சந்திக்க  விரும்பாமல் ராஜினாமா முடிவுக்கு வந்தார் எடியூரப்பா.

உச்சநீதி மன்றம் தக்க நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால் கர்நாடகத்தில் ஜனநாயகம் பா ஜ க கைகளில் சிக்கி மாண்டிருக்கும் .

தர்ம நியாயத்தை பற்றி பேச இனி பா ஜ க வுக்கு என்ன  தகுதி மிச்சம் இருக்கிறது.

மோடி வெல்ல முடியாதவர் என்ற பிம்பமும் சாய்க்கப் பட்டிருக்கிறது.

ஆளுநர் என்பவர்  தேவையா என்பதை பற்றியும் அவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றியும் வரையறை செய்ய நேரம் வந்து  விட்டது.

பிரச்னையை தீர்க்க வேண்டியவர்கள் பிரச்னையை உருவாக்கி விடுகிறார்கள்.

தென்னாட்டில் பா ஜ க தலை தூக்க முடியாது என்று  மீண்டும் நிருபிக்கப் பட்டிருக்கிறது.

ஜனநாயகப் படுகொலை இதுதான்! பெரும்பான்மை இல்லாமல் பதவி??!!

கர்நாடகத்தில் நடந்த ஜனநாயக படுகொலை பா ஜ க என்ற பாசிச கட்சி அதிகாரத்தை தக்க வைக்க எத்தகைய மூர்க்கத் தனமான தாக்குதல்களை யும் நடத்தும் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

மோடி என்ற தர்மத்தலைவராக உருவகப் படுத்தப் படும் தலைவர் உண்மையில் இந்தியாவின் ஹிட்லர் என்று உருவகப் படுத்தப் பட வேண்டியவர் என்பதையும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

104  உறுப்பினர்களை கொண்ட பாஜக  பெரும்பான்மைக்கு தேவையான  111  உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமலேயே  ஆளுநரின் பா ஜ க ஆதரவுப் போக்கினால் அழைக்கப் பெற்று எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதில் விவசாயிகள் கடன் ஒரு லட்சம் இருந்தால் தள்ளுபடி என்ற அறிவிப்பு வேறு??

118 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் காங்கிரஸ் -மத சார்பற்ற ஜனதா தள கட்சிகள் ஆதரவு பெற்ற குமாரசாமி முதல்வராகாமல் தடுக்கப் பெற்றிக்கிறார்.

பல தீர்ப்புகள் ,  தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில் ,  முதலில்  தேர்தலுக்கு முன்பான கூட்டணி , பிறகு தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி, அடுத்து தேர்தலுக்கு பிறகான கூட்டணி என்ற வரிசையில் அமைச்சரவை அழைக்க வாய்ப்பு  கொடுக்கப் படலாம் என்று வரையறுத்தாலும்  கோவா  மணிப்பூர் . மேகாலயா போன்ற மாநிலங்களில் இதே பா ஜ க ,,தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தாலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது.

அதே  முறையில்  இப்போது காங்கிரசும் ம ஜ க வும் கூட்டணி வைத்து பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும்போது  தனிப்பெரும் கட்சி என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து கட்சி தாவலை ஊக்குவித்து ஆட்சியை தக்க வைக்க பா ஜ க முயற்சிப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது ஆகும்.

உச்சநீதிமன்றம் இரவில் வழக்கை எடுத்துக் கொண்டு நாளை வரை அவகாசம் கொடுத்து இருக்கிறது.    எடியூரப்ப கொடுத்த கடிதத்தை கேட்டிருக்கிறது.   அதில் அவர் தனக்கு 104  உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.   எங்கே பெரும்பான்மைக்கு தேவையான மீதி உறுப்பினர்கள் என்று நீதிமன்றம் கேட்டால் அவர்கள் காங்கிரசிலும் மஜாகவிலும்  இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நூறு கோடியாம், அமைச்சர் பதவியாம்- கூறு போட்டு விற்கிறார்கள் பதவிகளை.

கட்சி தாவல் சட்டம் காற்றில் பறக்கிறது.    குறுக்கு வழிகள் ஆராயப் பட்டு ராஜினாமா செய்ய வைக்கலாமா  வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள்.

பதவியை தக்க வைக்க இப்படி பட்டப் பகலில் பேரம் பேசுபவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தபின் நியாயமாக நடந்து கொள்வார்கள். ?

மக்கள்  எழுச்சியினால் பதற்றம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு குலையுமானால் யார் பொறுப்பு?

விலைக்கு வாங்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தது எப்படி சரியாகும்?

இரண்டு மூன்று நாளில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று உத்தரவு இட்டிருந்தால் மன்னிக்கலாம்.   பதினைந்து நாட்கள் அவகாசம் தந்து தனது விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் ஆளுநர்.

உச்சநீதி மன்றம் இந்த அவகாசத்தை குறைத்து இரண்டு மூன்று நாளில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றாவது உத்தரவு இடுமா என்ற கேள்விதான் எல்லார்  மனதிலும்.

இடையில் யாராவது விலை போனால் அதற்கு ஆளுநரே காரணம்??!!

குற்றவாளி ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மணிமண்டபம் சட்டப்படி சரியா??!!

சட்ட மன்றத்தில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறப்பதை தடுக்க முடியாத தற்கு அது சபாநாயகரின் தனியுரிமை என்றும் அதில் தலையிட முடியாதென்றும் உயர் நீதி மன்றம் சொன்னது.

இப்போது அரசு செலவில் கடற்கரையில் ரூபாய் 50.8  கோடி மதிப்பீட்டில் அவருக்கு மனிபண்டபம் கட்ட முதல் அமைச்சர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ பி எஸ் ம் கலந்து கொண்டு  அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் தலைவிக்கு பிராமணர்கள்  பூமி பூஜை செய்ய பய பக்தியுடன் முதல்வரும் துணை முதல்வரும் மாலையை போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ய  , அதைக் காண கண் கோடி வேண்டும்??!!

சுயமரியாதை இயக்கம் தலை கவிழ்ந்து நின்றது.

அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டு விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் மண்டபம் அமையுமாம்.

இப்போது உயர் நீதி மன்றம் என்ன சொல்லும்?

சசிகலா சிறையில் இருந்து கொண்டே மகிழ்வார்.

குற்றவாளிகள் அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதை தடை செய்ய சட்டம் ஒன்றும் இல்லை என்று சமீபத்தில் ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதே போல் குற்றவாளிகளுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் அமைப்பதையும் தடை செய்ய சட்டம் ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வருமோ?

தமிழக மாணவன் நீட் தேர்வு எழுத ராஜஸ்தானுக்கு போ; உச்சநீதிமன்றத்தின் அநியாய உத்தரவு??!!

தமிழக மாணவர்கள் நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களை சேர்ந்த சிலருக்கு கேரளா ராஜஸ்தானில் தேர்வு மையங்களை ஒதுக்கி சிபிஎஸ்இ போட்ட உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இட்ட செய்தியை சென்ற ஏப்ரல்  18 ம் தேதி பொதுமேடையில் எழுதி இருந்தோம்.

இந்த உத்தரவை அடுத்து மாணவர்கள் தமிழ் நாட்டில் உள்ள பத்து மையங்களில் ஏதாவது ஒரு இடத்தில தேர்வு எழுத இ பி எஸ் இ ஏற்பாடு செய்திருக்கலாம்.   ஆனால் அதை செய்யாமல்  தேர்வு மையத்தை கணினி தான் தேர்ந்தெடுத்ததாகவும் எனவே மாற்ற முடியாது என்றும் சி பி எஸ் இ பிடிவாதம் பிடித்து கால அவகாசம் இல்லாததால் மாற்ற முடியாது என்றும்  சொல்லிக் கொண்டு உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்தது.

உச்சநீதி மன்றம் அதை ஏற்றுக் கொண்டு கால அவகாசம் இல்லாததால் மாற்ற முடியாது என்றும் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு  செய்ய உத்தரவிட்டு தமிழக மாணவனை ராஜஸ்தான் கேரளா சென்று தேர்வு எழுத உத்தரவிட்டு தீர்ப்பளித்தது .

நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே மற்றும் எல் நாகேஸ்வர ராவ் இருவரும்தான் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

மேன்முறையீடு செய்த அவகாசத்தில் தமிழகத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்திருக்க முடியாதா  என்று உச்சநீதி மன்றம் கேட்கவில்லை.

ஒரு மாணவனாக இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு  சென்று  தேர்வு எழுத கட்டாயப் படுத்துவது நீதிக்கு முரணானது என்பது உச்சநீதி மன்றத்துக்கு தெரியாமல் போனதா?

ஒரு அநியாயத்தை நியாயப் படுத்தியிருக்கிறது உச்சநீதி  மன்றம்.

கல் நெஞ்சுக்காரர்கள் ,  அக்கிரமத்தை நியாயப் படுத்து கிறவர்கள் , நீதியை குழி தோண்டி புதைக்கிறவர்கள் என்று சமுதாயம் தூற்றுமே என்று கூட கவலைப் படாமல் தீர்ப்பு எழுதுகிறவர்கள் இருக்கிறார்களே என்றுதான் நாம் கவலைப் படுகிறோம்.

நீதி தேவதையின் கண்களை  இதற்குத்தான் கட்டி விட்டார்கள் போலும்.

உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்புகள்  அதன் மதிப்பை  நம்பிக்கையை உயர்த்த வேண்டும்.

நாம் வேண்டும் தீர்ப்பு விரும்பாத தீர்ப்பு என்றில்லை.   நியாய ம்  என்றால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால் இந்த தீர்ப்பை நியாயம் என்று ஏற்றுக் கொள்ளவே முடியாது.   அப்படி என்றால் சென்னை உயர் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு தவறானதா?

நியாயம் இருப்பதால் தானே அடுத்த ஆண்டு முதல் தமிழகத்துக்கு உள்ளேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருக்கிறீர்கள்.

இந்த ஆண்டு மட்டும் கொலை செய்து கொள்ளட்டும் என்று அனுமதிப்பது போல் அல்லவா இருக்கிறது தீர்ப்பு.

பல நேரங்களில் நம்பிக்கையை கொடுக்கும்  உச்ச நீதி மன்றம் சில நேரங்களில் இது போன்ற வெறுக்கத் தக்க  தீர்ப்புகளையும் அளிப்பது வருந்தத் தக்கது.

 

 

 

சாமியார் ஆசாராம் சாகும் வரை சிறையில்; சிறுமியை கற்பழித்த வழக்கில்??!!

கடவுள் பேரைச்  சொல்லி காமக் களியாட்டம் ஆடிய      சாமியார்கள் பட்டியலில் ஆசாராமும்  சேர்ந்து கொண்டார்.

சிந்தி வகுப்பு;  பாகிஸ்தானில் இருந்து ஓடி வந்த குடும்பம்.

சிறு வயதிலேயே ஒரு குருவின் பார்வையில் பட்டு சாமியார் ஆகிறார் .

பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் எப்படி மக்களை மயக்கலாம் என்பதற்கு ஆசாராம் ஒரு சிறந்த அடையாளம்.

கடந்த நாற்பதாண்டுகளில் நான்கைந்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும்  நானூறுக்கும் மேற்பட்ட ஆசிரமங்கள்- பத்தாயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் – எல்லாம் அரசியல் கட்சிகளின் ஆதரவோடுதான்.

பாஜக வும் காங்கிரசும்  போட்டி போட்டுக் கொண்டு அவரை வளர்த்திருக்கின்றன.

கடைசியில் தன்னிடம் சீடராக இருந்த குடும்பத்தை சேர்ந்த  பதினாறு வயது பெண்ணை கற்பழித்த வழக்கில் மாட்டிக் கொண்டு ஐந்தாண்டு நடந்த விசாரணைக்குப் பின் சாகும் வரை சிறை தண்டனை பெற்றிருக்கிறார் ஆசாராம்.

மூன்று சாட்சிகளை கொன்று இன்னும் மூன்று  சாட்சிகளை கலைக்க முயன்று தோற்று கடைசியில் நீதி வென்று தண்டனையில் முடிந்திருக்கிறது.

அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேரும் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இன்னும் இரண்டு கற்பழிப்பு  வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கின்றனவாம்.

கடவுள் நம்பிக்கை, கோவில் இதுவெல்லாம் மக்களை மயக்கும் சாதனங்கள்  மட்டுமே என்பது பலகால குற்றச்சாட்டு.   மக்களை நன்னெறிக்கு வழி காட்டுவதற்கு பதிலாக தங்களது ஆடம்பர வாழ்வுக்கு சாதனமாக இவைகளை சுயநலமிகள் பயன் படுத்தி வருகிறார்கள்.

விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தில் இது சாத்தியமா?

அதிலும் குறிப்பாக பார்ப்பனர்கள் அல்லாத சாமியார்கள் விரைவில் மாட்டிக் கொள்கிறார்கள்.

ராம்பால்- கபீர் வழியில்  சத்லோக் ஆசிரமம் நடத்தும் இவர் ஹரியானாவில் பிரபலம் .  ஐந்து பெண்களின் உடல்கள் இவர் ஆசிரமத்தில் கண்டு எடுக்கப்  பட்டனவாம். கொலைக்குற்றத்தின் கீழ் சிறையில்  இருக்கிறார்.   இன்னும் ஆறு வழக்குகள் நிலுவையில் .

குர்மீத் ராம் ரஹீம சிங் – இரண்டு சீடர்களை கற்பழித்த வழக்கில் சிறையில் இருக்கிறார்.  இவரை கைது செய்ய முயன்ற போது கலவரத்தில் முப்பது பேர் இறந்தார்கள்.

நித்யானந்தா-  கற்பழிப்பு மற்றும் இயற்கைக்கு மாறான செக்ஸ் புகாரின்  52  நாட்கள் சிறையில் இருந்தார். இப்போது  பிணையில்.

இச்சாதாரி பீமானந்த் –  இயற்பெயர் ஸ்ரீமுராத் திவிவேதி . மிக நவீன முறையில் செக்ஸ் வியாபாரம் நடத்திய குற்றச்சாட்டில் சிறையில்

சுவாமி விகாசானந்த் – இயற்பெயர் விகாஷ் ஜோஷி- ;   ஜபல்பூர் பகுதியில்  பெண்களை தவறான செக்ஸ் பயன்பாட்டுக்கு ஆட்படுத்தி ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் சிறையில்  இருக்கிறார்.

வீரேந்திர தேவ் தீட்சித்- அத்யாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற பெயரில்   விஜய் விஹார்  ரோகினி பகுதிகளில்  ஆசிரமம் நடத்திக்கொண்டு இருந்தவர் மீது கற்பழிப்பு வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிற நிலையில் தற்போது இருப்பது  தலைமறைவாக.

தமிழ்நாட்டில் பிரேமானந்தா  என்ற சாமியார் சிறு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சியில் சிறையிலேயே காலமானார்.

சாமியார்கள் வணங்கத் தக்கவர் களாக இருந்த காலம் ஒன்று  உண்டு

இன்று

சாமியார் என்றாலே கொஞ்சம் எட்ட நிற்பதே நல்லது.

அதில் என்ன பார்ப்பன சாமியார் பார்ப்பனர் அல்லாத சாமியார் என்கிறீர்களா?

பார்ப்பனர்கள் அவ்வளவு எளிதில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.    உங்களை அறியாமலேயே நீங்கள் அவர்களுக்கு அடிமைகள் ஆவீர்கள்.      சூட்சுமம் அறிந்த கைகாரர்கள்.  பார்ப்பனர்கள் நடத்தும் ஆன்மிக வியாபார தலங்கள்  பற்றி அடுத்து ஆராய்வோம்.

சட்ட மன்றத்தில் குற்றவாளியின் படம் ; தலையிட உயர்நீதி மன்றம் மறுப்பு??

சட்ட மன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தது சட்ட விரோதம் என திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாதாம்.

சட்டப் படியே  நீதிமன்றம் தலையிட முடியாத ஒன்றாகவே இருக்கட்டும்.

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அக்கிரமத்தை சட்ட பூர்வமாக்குவதா?

குற்றவாளி எண் ஒன்று ஜெயலலிதா.    இரண்டு முதல் நான்கு குற்றவாளிகள் சிறையில்.   முதல் குற்றவாளி இறந்துவிட்டதால் அவருக்கு  மணி மண்டபம் கட்டுவோம், சட்ட மன்றத்தில் படத்தை திறப்போம் என்று அதிகாரம் இருக்கிற மமதையில் ஆட்டம் போடுகிறவர்கள் உண்மையில்  உச்ச நீதி  மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள  மாட்டோம் என்று மார் தட்டுகிறவர்கள்..

இதை நாடு ஏற்றுக் கொள்கிறதா?

உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா சீராய்வு மனு போட்டிருக்கிறார்.

அதில் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தால் தாராளமாக எது  வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.

எதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை என்றால் உயிருடன் இருப்பதால் சசிகலா வும்  மற்றவர்களும் சிறையில் ,  இறந்ததால் ஜெயலலிதா அரசால் கொண்டாடப் பட வேண்டியவர் என்ற நிலைப்பாட்டைத்தான்.

இது அநீதியின் காலம்.

தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் நீட் தேர்வை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்!

நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது.

இன்னிலையில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கி சி பி எஸ் இ இட்ட உத்தரவை ரத்த சென்னை உயர்நீதி மன்றம் அவர்களுக்கு தமிழ் நாட்டிலேயே உள்ள பத்து இடங்களில் ஒன்றை ஒதுக்கி உத்தரவிட ஆணை பிறப்பித்தது .

பதினேழு வயது மாணவன் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அந்த தேர்வை எழுத முடியுமா?   அப்படி என்ன அவசியம்?     ஏன் அவர்களுக்கு இந்த மனச்சுமையை தர வேண்டும்?   இந்த அக்கிரம உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்று போராடித்தான் ரத்து செய்ய வேண்டிய நிலைமை இருந்தால் , அதற்கு வழக்கறிஞர்  வைத்து செலவு செய்து வழக்காடி ஒரு தேர்வு மையத்தை நிர்ணயிக்கவே இத்தனை போராட்டமா?

இப்படி விதி வைத்ததை ரத்து செய்தால் மட்டும் போதுமா? அவர்களுக்கு என்ன தண்டனை?

தமிழர்களை வஞ்சிப்பது என்று மோடியின் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை களில் இதுவும் ஒன்று.

தீர்ப்பு எப்போது வரும்? தமிழக அரசியலில் குழப்பங்கள் எப்போது தீரும்? உயர்நீதி மன்றம் தாமதிப்பது ஏன்?

சென்னை உயர் நீதிமன்றம் பதினெட்டு எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தீர்ப்புக்கு என ஒதுக்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.

ஓ பி எஸ் உள்பட பத்து பேர் மீதும் திமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை மீதும் கூட இந்த  தீர்ப்பில் தீர்ப்பு சொல்லப் பட வேண்டும்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது அரசுக்கு எதிராக வாக்கு அளித்தவர்கள் அமைச்சர்கள் ஆக பவனி வருகிறார்கள்.

முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் கொடுத்தவர்கள் தகுதி இழப்புக்கு  ஆளாகி நிற்கிறார்கள்.

என்ன சட்டம் ! என்ன நியதி!  எங்கே நீதி?

அந்த தீர்ப்பு வந்தால் பல முடிச்சுகள் அவிழ்க்கப் படும்.

இன்னும் மூன்று நாட்கள் தான் வேலை நாட்கள்.

கோடை விடுமுறை மே மாதம் கழிந்து ஜுன் மாதம் தான் மீண்டும் நீதி மன்றம் திறக்கும் என்றால் அது வரை தமிழக அரசும் அரசியலும்  காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இது நியாயமா?

எத்தனை குழப்பங்களுக்கு இந்த நீதிமன்ற தாமதம் வழி வகுக்கிறது.

தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.    அதை வைத்து மக்கள் விவாதித்து முடிவெடுக்கட்டும். அதுவரை நீடிக்கும்  குழப்பங்களுக்கு தாங்கள் தான் காரணம் என்று நீதிமன்றம் அறியாதா?

யாரிடம் முறையிடுவது?

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு இழுக்க முயற்சித்த உதவி பேராசிரியர் நிர்மலாதேவி?!

மேலோட்டமாக பார்க்கும்போது தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு உதவி பேராசிரியர் நிர்மலாதேவி இழுக்க முயற்சித்த செய்தி ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் சம்பத்தப் பட்ட குற்றமாக தோன்றினாலும் ஆராய்ந்தால் இதில் ஓர் பெரிய கூட்டமே பல காலமாக இந்த இழி தொழிலில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வரும்.

எனவே குற்றவாளி அவர் மட்டுமல்ல.  பின்னால் இருந்து இயக்கிய அந்த மிருகங்கள் யார் யார்?

கவர்னர் தாத்தா இல்லை என்று அவர் சொல்லும்போது அதற்கு இரண்டு பொருள்.    கவர்னர் தாத்தாவை நான் சொல்லவில்லை என்றும் கவர்னர் ஒன்றும் தாத்தா இல்லை இளைஞர் தான் என்றும் பொருள் கொள்ளலாம்.

கலெக்டர், ரெஜிஸ்ட்ரார் எல்லாம் எவ்வளவு பெரியவர்கள் தெரியுமா என்னும்போது அவர்கள் யார் என்ற கேள்விகள் எழுகின்றன.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப் படுகிறதோ இல்லையோ மக்கள் மன்றத்தில் கல்வி நிலையங்களில் பெண்கள் எப்படி சீரழிக்கப் படும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன என்ற அச்சமூட்டும் உண்மை நிரூபணம் ஆகியிருக்கிறது.

பந்வாரிலால் புரோஹித் இனியும் பதவியில் நீடிக்க வேண்டுமா?

கவர்னர் மீது சந்தேக குற்றச்சாட்டு எழுப்ப பட்டவுடன் தான் சம்பந்தப் படாமல் விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தால் நம்பலாம்.

துணை வேந்தர் நியமித்த ஐந்து நபர் விசாரணை குழுவை கலைத்து தனி நபர் விசாரணை என்கிறார்.   பெண் சம்பந்தப் பட்ட குற்றச்சாட்டு ஒரு பெண் விசாரணையில் இருக்க வேண்டும் என்றால் அதை அந்த தனி நபர் பார்த்துக் கொள்வார் என்கிறார்.

தான் தோன்றித் தனமாக மூன்று துணை வேந்தர்களை வேற்று மாநிலங்களில் இருந்து நியமித்த திமிர் ; அதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அடிமை அரசு; வேறென்ன வேண்டும் அவருக்கு ?

கவர்னர் ஆட்சி நடக்கிறது என்றே மக்கள் கருதினாலும் கவலை இல்லை.

கொடுமை ;     குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லி விளக்கம் அளித்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் செய்தியாளரின் கன்னத்தில் தடவுகிறார்.   அவர் ஆட்சேபித்து தகவல் தந்தவுடன் மன்னிப்பு கோருகிறார்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகிவிட்டதா?

சிபிசி ஐடி விசாரணை நடக்கிறது.   போதாது.   சிபி  ஐ விசாரணை வேண்டும்.   ஏன் என்றால் மாநில அதிகாரிகளே குற்றக் கூண்டில் நிற்கின்றனர்.   மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட விசாரணை உண்மையை வெளிக்கொண்டு வராது.

அப்போது மட்டுமே நிர்மலாதேவியை இதுவரை இயக்கியவர்கள் யார் யார் என்ற உண்மைகள் வெளிவரும்.

ஆளுநர் தானாக போக போகிறாரா ?   அல்லது மத்திய அரசு உத்தரவிட்டு அவமானப் பட்டு  போகப் போகிறாரா?

இவ்வளவு நடக்கிறதே!   அதிகாரத்தில் இருக்கும் இருவர் வாய் திறக்க மறுக்கிறார்களே?

எவ்வளவுதான் தமிழர்களை அவமானப் படுத்துவீர்கள்?

சிம்புவெல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டான்??!!

டி ஆரின் மகன் என்பதால் தமிழர்கள் சிம்பு  மீது ஒருவித அன்பு வைத்திருப்பது உண்மைதான்.

அதற்காக தன்னை ஏதோ அரசியல் வித்தகன் என்று எண்ணிக்கொண்டு தமிழர் -கன்னடர் ஒற்றுமையே காவிரி பிரச்னைக்கு தீர்வு- போராட்டங்கள் தேவை இல்லை என்றெல்லாம் சிம்பு பேசி தமிழர்களை அவமானப் படுத்தி விட்டார்.

போராடுபவர்கள் எல்லாம் அறிவே இல்லாதவர்களா?   ஒற்றுமைக்கு எதிரானவர்களா?

சட்டத்தையும் தீர்ப்பையும் அமுல் படுத்த சொல்லித்தானடா போராட்டம்.

பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம்  என்றால் நதி நீர் தாவா சட்டமே தேவை இல்லையே?

காவிரிக் குடும்பம் அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் பேசித்தான் பார்த்தார்கள். என்ன நடந்தது?

பிரச்சனை தமிழர்-கன்னடர் இடையே இல்லை.    பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கும் கன்னட அரசியல்வாதிகள் தான் பிரச்னை.

போராடி போராடித்தான் நடுவர் மன்றம்  இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு , உச்சநீதி மன்ற தீர்ப்பு எல்லாம் வந்தது.    அதை அமுல்படுத்தினால் பிரச்னை ஓயும்.

அமுல்படுத்த மறுப்பது கன்னட அரசு.

அவர்களிடம் போய் என்ன பேச சொல்லுகிறாய்?   அதுவும் தேர்தல் நேரத்தில்?

சிம்பு உனக்கு நடிக்க வாய்ப்பு இல்லையென்றால்  பு …. என்று ஏதாவது பாட்டு எழுதி பிழைத்துக் கொள்.     அல்லது உன் அப்பனிடம் கேட்டுக் கொண்டாவது அரசியல் பேசு.    அல்லது இப்பொது நீ பேசியதே அவரிடம் கேட்டுக் கொண்டுதானா என்பதையாவது சொல்லி விடு.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியாக இருந்து விட்டுப் போகட்டும்.

எவன் எவனோ அரசியல் பேசுகிறான்.    உனக்கு அரசியல் பேச முழு உரிமை உண்டு.

கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேசியிருந்தால் கொண்டாடலாம்.

குறுக்கு சால் ஒட்டி , விளம்பரம் தேட முயற்சித்து , மண்டை காலி என்று காட்டிக் கொண்டால் உன்னை என்ன செய்வது?

உன் மீது கோபம்  வரவில்லை.  நம்ம பையன் இப்படி இருக்கிறானே என்ற பரிதாபம் தான் வருகிறது.

சிம்பு , உனக்கு அரசியல் வேண்டாம்??!!