Home Blog Page 77

ஆளுநரின் சங் பரிவார் பாசம்; சட்ட பல்கலை கழக துணை வேந்தர் நியமனத்தில் அத்துமீறல் ?!!

ஆளுநரின் அத்துமீறலை ஆளும் அடிமை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவரது அத்துமீறல் தொடர்கிறது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த சென்றார்.    மாநில அரசு கண்டு கொள்ள வில்லை.

வரப்போகும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு இப்போதே ஆளுநர் ஒத்திகை பார்க்கிறாரா என்ற குற்றச்சாட்டு எழுந்த போதும் கூட மாநில அரசு மௌனியாக இருந்தது.

விளைவு.  இப்போது டாக்டர் அம்பேத்கர் சட்டப்  பல்கலைக்  கழக துணை வேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்த நபர்களை புறந்தள்ளி ஆந்திராவை சேர்ந்த தம்மா சூரிய நாராயண சாஸ்திரியை துணை வேந்தராக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்  நியமனம் செய்துள்ளார்.

இவர் முன்பு இதே பல்கலை கழகத்தில் பணி  புரிந்த போதே ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்.    இப்போது துணை வேந்தர்.      ஆக அதிகாரம் இருந்தால் இவர்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை உதாசீனப் படுத்தி விட்டு ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

தமிழகத்தில் தகுதி உள்ள பலர் மனுச் செய்திருக்கும் போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இத்தகைய முறைகேடுகளும் ஒரு வகையில் ஊழல்தான்.

மத்திய அரசின் தமிழர் விரோத போக்கின் மற்றும் ஒரு சான்று  இது.

39இந்தியர்கள் ஐ எஸ் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை ; அறிவிக்க 4 ஆண்டுகளா ?

ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை நிர்மாணிக்க இராக்கிலும் சிரியாவிலும் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் அமெரிக்காவும் ரஷியாவும் இடையில் புகுந்து எண்ணெய்க்காக இரு தரப்பினரையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை.

ஆனால் பிழைப்புக்காக தொழிலாளர்களாக சென்ற  இந்தியர்களை ஐ  எஸ் தீவிரவாதிகள் சென்ற  2014 ம் ஆண்டு பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.    இந்தியாவுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை  என்பதால் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என எதிர் பார்க்கப் பட்ட நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள்  என்று வெளி உறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தி ருக்கிறார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் குடும்பத்தினருக்கு இந்திய அரசு தகுந்த இழப்பீடு தர வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கி ன்றன.

இத்தனை ஆண்டுகளாக அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று  இந்திய அரசு சொல்லி வந்தது.

உறுதிப் படுத்தும் வரை  அவர்கள் இறப்பை எப்படி  நாங்கள் சொல்ல முடியும் என்று அமைச்சர் கூறுவது பொறுப்பில்லாத பதில்.

ஐ எஸ் தீவிரவாதிகள் எவ்வளவு  கொடூரமானவர்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

அதை விட இந்திய அரசு எவ்வளவு பலவீனமான  உளவுத் துறையை கொண்டிருக்கிறது என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது.

ம.நடராசன் மறைவு; தமிழர் பண்பாட்டை காலில் போட்டு மிதித்து அஞ்சலி செலுத்த மறுத்த இ பி எஸ் – ஓ பி எஸ் கும்பல்?!

எம் என் . என அழைக்கப் பட்ட எம் நடராசன் சசிகலாவின் கணவர்.

தஞ்சையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன் நின்றவர்- தமிழரசி-புதிய பார்வை இதழ்களின் ஆசிரியர்- திராவிட இயக்க பார்வை கொண்டவர்- ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்து பின் சசிகலாவின் பின்னால் இருந்து இயக்கியவர்-   ஈழப் போராளிகளின் ஆதரவாளர் – முள்ளி வாய்க்கால் முற்றம் அமைக்க பழ. நெடுமாறனுக்கு உதவியவர் என்று  பல முகங்கள் கொண்டவர்.

எனக்கு தனிப்பட்ட முறையில் நாற்பதாண்டு நட்புடையவர்.    அவருக்காக   ஷா  விசாரணை கமிஷனில்  வழக்கறிஞர் என்ற முறையில் ஆஜராகியவன் நான்.    எண்ணற்ற திருமண விழாக்களிலும் அவருடன் கலந்து கொண்டிருக்கிறேன்.   ஈழப் போராளிகளுக்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் மற்றும் அவரைத்தொடர்ந்து தீயில் கருகிய தியாகிகள் பலரது இரங்கல் நிகழ்ச்சிகளில் பழ. நெடுமாறனுடன் நான் கலந்து கொண்டபோது எல்லாம் நடராசன் வர தவறியது இல்லை.

அவருக்கு எனது இதயம் நிறைந்த அஞ்சலி.  அவரது ஆன்மா இறைவனில் சங்கமிக்க பிரார்த்திக்கிறேன்.

திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து   கட்சி தலைவர்களும் கட்சி அரசியல் தாண்டி தமிழர் பண்பாட்டு அடிப்படையில் அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இவரால் பதவி பெற்றவர்கள்   , ஆட்சியில் இருப்பவர்கள், இ பி எஸ் -ஓ பி எஸ் கம்பெனியில் இருந்து ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை.   கொடுமை என்னவென்றால் அதன் குரலாக செயல்படும் ஜெயக்குமார்  தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று சொன்னதுதான்.     எந்த தொண்டன் தமிழர் பண்பாட்டை கடைப் பிடிக்க வேண்டாம் என்று சொல்லுவான்?      இவர்கள் எல்லாம் அமைச்சர்கள்?

சீமான் சொன்னது போல் இவர்கள் கீழே வாழ்வதே அச்சமாக இருக்கிறது.

விலங்குகள் கூட  குறைந்த பட்ச தர்மத்தை கடைப் பிடிக்கும்.      மனித உருவில்     வாழும் இவர்கள்?

தினகரனுக்கு குக்கர் சின்னம்; தனி கட்சி பெயரும் உறுதி; டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு !!!

தினகரன் இனி தனி கட்சி பெயரோடு இயங்குவார். அவருக்கு குக்கர் சின்னத்தை உறுதி செய்து தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

அதிமுக வாக்குகள் சிதறுவது உறுதியாகி இருக்கிறது.

இதனால் யாருக்கு லாபம்?

திமுக வாக்கு வங்கி யாருக்கும் போகாது.    கமல் – ரஜினி இருவரும் குறி வைப்பது அதிமுக வாக்குவங்கியைத்தான்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மோடிக்கு இ பி எஸ் – ஓ பி எஸ் இருவரும் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றி யாக வேண்டும் .    அது தேர்தல் கூட்டணி சம்பந்தமாகவே இருக்க வேண்டும்.

இப்படித்தானே வட கிழக்கில் கட்சிகளை உடைத்து பிரித்து ஆட்சிக்கு வந்தது  பா ஜ  க.

இந்த தந்திரம் தமிழகத்தில் பலிக்குமா?

பெரியார் மீது கையை வைத்து விட்டு அசிங்கப் பட்டுப் போன எச் ராஜா தனது முயற்சிகளை கைவிடப் போவதில்லை.     ஏனென்றால்   திராவிட இயக்க செல்வாக்கை குறைக்க வேண்டும் என்றால் பெரியாரை அவரது புகழை மாசு படுத்தினால் தான் முடியும்.

இப்போது தினகரனுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தால் பாதிக்கப் படப் போவது அதிமுக தான்.

நல்லது  நடக்கட்டும்.

லவ் ஜிஹாத்! மதம் மாறி ஹாதியா செய்த திருமணம் செல்லும்: உச்ச நீதி மன்றம்!

தன் மகள் அகிலாவை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி விட்டார்கள்.   அவளை ஐ எஸ் இயக்கத்துக்கு பாலியல் சேவை செய்ய சிரியா அழைத்து போக திட்டமிட்டு வேலை செய்து விட்டு நீதி மன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஒருவனை தயார் செய்து திருமணம் செய்து விட்டார்கள் . எனவே திருமணத்தை செல்லாது  என்று அறிவிக்க கோரி அகிலாவின் தந்தை அசோகன் வழக்கு தொடுக்கிறார்.

தேசிய புலனாய்வு நிறுவனம் இதில் விசாரணை செய்து அறிக்கை அளித்தது. அதில் அகிலாவை தற்போது ஏமன் நாட்டில் இருக்கும் இஸ்லாத்தின் சலாபி பிரிவை சேர்ந்த ஷிரின் சஹானா , மற்றும் பாசல் முஸ்தாபா இருவரும் மதம் மாற்றி ஹாதியா என பெயர் சூட்டினார்கள். ஹாதியவும் ஏமன் நாட்டிற்கு இஸ்லாத்தை பற்றி மேல் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார் என சொல்லி இருந்தது.

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா -ஷபின் ஜகான் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து ஜகான் சார்ந்த சமூக ஜனநாயக இந்திய கட்சி தனது ஆதரவோடு உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்தது.

உச்சநீதி மன்றம் ஹாதியாவை அழைத்து விசாரித்து அவர் தான் விரும்பித்தான் மதம் மாறியதாகவும் கணவருடன் வாழவே விருப்பம் என்று சொல்லவும் உச்சநீதி மன்றம் இருவரது திருமணத்தையும் செல்லும் என்றும் வயது வந்த இரு குடிமக்கள் தங்களது துணியை தேடிக் கொள்ளும் உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி தீர்ப்பு அளித்ததுடன் தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணை தொடரலாம் எனவும் கூறியிருக்கிறது.

ஓமியோபதி படிக்கும் ஹாதியா  மதங்கள் பற்றி ஆராய்ந்தவர் அல்ல. ஆனால் தான் காதலித்தவர் சார்ந்த மதத்தை தழுவ அவர் தயாராக இருந்திருக்கிறார்.

தந்தை தாயை புறக்கணித்து காதல் பெரிதென செல்லும் உரிமை வயது வந்த யாருக்கும் உண்டு.

ஆனால் அதை திட்டமிட்டு நிறுவன ரீதியில் நடத்துகிறார்களா என்பது தான் விசாரணைக்கு உரியதாக இருக்கிறது.

தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை நடத்தி வரும் சைனாபா என்ற பெண்மணிதான் ஹாதியாவை கட்டாயப் படுத்தி மதம் மாற்றியவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

இது இடைக்கால ஆணைதான். இறுதி ஆணை வர வேண்டும்.

ஹாதியாவின் தந்தை இது ஒரு தந்திரமான திருமணம்.    உண்மையானதல்ல என்று உறுதியாக நம்புகிறார். காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம் அமைப்புகள் இந்த வழக்கை மூத்த வழக்கறிஞர் களை கொண்டு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கிறார்.

உண்மையான காதல் திருமணங்களை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.    ஆனால் அசோகன் ஏன் உண்மையான காதலை எதிர்க்க வேண்டும்.?    மதம் மாறுவது மட்டும்தான் அவருக்கு பிரச்னையா?   தன் பெற்றோர் தனது காதலையும் காதலனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஹாதியா  கூறுகிறார்.

படிப்பை முடித்தவுடன் கேரளாவிலேயே வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 பாதி படிப்பில் காதலில் விழுந்து மதம் மாறி பெற்றோரை மனம்  வருத்தி போராடும் ஹாதியாவை வாழ்த்துவதா நிந்திப்பதா? 

உண்மை வெளிவர வேண்டும்.

தேசிய புலனாய்வு நிறுவனம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் உச்சநீதி மன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

ஐஸ் ஐஸ் இயக்கத்தின் சதி இதில் இருக்கிறதா என்பதை பற்றி அரிய பொது  மக்களுக்கு உரிமை இருக்கிறது.

அதைப்பற்றி உச்சநீதி  மன்றம் இதுவரை எதுவும் சொல்லாதது ஒரு குறையாகத்தான்  பார்க்கப் படும். .

ரஜினியீன் மண்டையில் இருக்கிறது வெற்றிடம் ?? பித்தலாட்டம் அம்பலம்.??!!

ரஜினியின் பித்தலாட்ட  அரசியல் அம்பலம் ஆகி யிருக்கிறது.

பெரியார் சிலையை உடைத்ததை பற்றி  கேட்ட  போது அது காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்து விட்டு கிளம்பி விட்டார்.

பிரச்சினை கிளம்பி தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது உடனே விமர்சிக்க அவருக்கு நேரமில்லை.

இரண்டு நாள் கழித்து விமர்சிக்கும் போது கூட அதை தூண்டிவிட்ட எச் ராஜாவை ஏன் கண்டிக்க வில்லை.?       ராஜா பேசாமல் அவன் உடைத்து விட்டானா?    யார் உண்மைக் குற்றவாளி ?

கமல் என்னவென்றால் எல்லா சிலைகளையும் அகற்றினால் இதையும் பரிசீலிப்போம் என்றார்.     உன் உள் ஆசையை வெளிப் படுத்துகிறாய் அப்படித்தானே?

அதேபோல் ரஜினியும் உடைப்போம் என்று  சொன்னவரை விமர்சிக்காமல் உடைத் தவரை மட்டும் விமர்சித்து விட்டு கிளம்பி விட்டார்.

எம்ஜியார் சிலை திறப்பின் போது  ரஜினி பேசிய அனைத்தும் அபத்தம்.

நாட்டு பிரச்னைகளை பற்றி ஏதாவது பேசுவார் என்று பார்த்தால் அவருக்கும் எம்ஜியாருக்கும் இருந்த நெருக்கம் பற்றி பேசுகிறார்.   அதில் யாருக்கு என்ன பயன்?    எம்ஜியார் ரசிகர்களை இழுக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று சொல்லி விட்டு ஒரு சினிமா சிரிப்பை மேடையில் உதிர்க்கிறார்.    இது என்ன படப் பிடிப்பா?

தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும்  என்ற அரிய கண்டுபிடிப்பை எரிச்சலூட்டும் வகையில் உளறுகிறார்.

தமிழனுக்கு எல்லா வளங்களையும் தந்து அவன் மொழியை ஒழிக்க நினைக்கும் கூட்டம் தான் இப்படி எல்லாம் பேசும்.

அந்தக் கூட்டத்தை சேர்ந்தவன் நான் என்பதை சொல்லாமல்  சொல்லி விட்டார் ரஜினி.

ஏனென்றால் அவர் தமிழர் இல்லையே?    நான் பச்சைத் தமிழன் என்று சொன்ன ரஜினி தன் அடுத்த நகர்வுகளில்  தமிழர்களின் உணர்வுகளை வெளிக்காட்ட வில்லையே?

தமிழின் தனித் தன்மையை கட்டிக் காப்போம் என்று தமிழர்கள் சூளுரைத்து உழைத்துக் கொண்டிருக்கையில்  அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு சகல வசதிகளையும் செய்து தருகிறோம் எல்லாரும் ஆங்கிலம் இந்தி மட்டும் படியுங்கள் பேசுங்கள் என்று ஒருவன் சொன்னால் அவனைப் பற்றி என்ன சொல்லுவோம்.?

அந்தப் பட்டியலில் இருக்கிறார் ரஜினி.             வீட்டில்  ஆங்கிலத்தில் பேசி திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.   அதாவது வீட்டில் தமிழில் பேசுவது தேவையில்லை.   அப்படித்தானே ?

யாருடைய ஏஜெண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.     ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிக்கு சான்றிதழ் வழங்கினால் ரஜினி யாருடைய ஏஜெண்டு என்பதற்கு சான்றிதழ் வேண்டுமா என்ன?

தமிழர்கள் சந்திக்கும் ஒரு பிரச்னை பற்றியாவது விளக்கமாக தனது கருத்தை ரஜினி பிரதிபலித்திருக்கிறாரா?

மண்டையில் இருந்தால்தானே வெளியில் வரும்.  எனவே வெற்றிடம் அங்கே இருக்கிறது ரஜினி.   அதை நிரப்பி விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வாருங்கள்.

எம்ஜியார் செய்ததை இவர் செய்வாராம்.   அவர் எத்தனை வருடங்கள் அரசியலில் கழித்தவர்.    அதில்    நூறில் ஒரு பங்கு இவர் செய்திருப்பாரா?

ஸ்டாலின், எடப்பாடி, ஓ பி எஸ், தினகரன், வைகோ, முத்தரசன் ,பாலகிருஷ்ணன் , திருமாவளவன் , சீமான், வாசன், திருநாவுக்கரசர், தமிழிசை, எல்லாருமே ஜீரோக்கள்.     இவர் ஒருவரே ஹீரோ.

இதுவரை எதிரிகளே இல்லாத ஹீரோ வாக  இருந்த ரஜினி இப்படியா எல்லாருடைய வெறுப்பையும் சம்பாதிப்பது?

இமயமலையில் இருக்கும் பாபா கூட இவரை  மன்னிக்க மாட்டார்.   பற்றற்ற     பாபா பக்தர் என்று ரஜினிக்கு கிடைத்த மரியாதை இனிகிடைக்காது.

ஏதோ ஒரு கட்டத்தில் கமலும் இவரும் பா ஜ க வினால் ஒன்றிணைக்கப் படுவார்கள்.    அப்போது உங்கள் சுய ரூபம் வெளிப்பட்டே தீரும்.

எம்ஜியார் ஜானகி என்ற பார்ப்பனரால் வளைக்கப் பட்டார்.  ரஜினி லதாவால் வளைக்கப்  பட்டார்.    மறைமுகமான இலக்கு ,  இருவரும் பார்ப்பநீயத்துகு எதிராக இயங்க மாட்டார்கள் அல்லவா?

ரஜினியின் மண்டையில் இருக்கும் வெற்றிடம் இனி ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டே இருக்கும்.

   படத்தை ஓட வைப்பவர்கள் என்பதால் தானே இந்த இருவருக்கும் மரியாதை. அது அவர்களுடைய கலைத்திறமைக்கு நாம் கொடுத்த அங்கீகாரம்.     அதை வைத்து  இவர்கள் இப்போது நம்மை  விலை பேசுகிறார்கள். 

தமிழன் ஏமாந்தவன் இல்லை என்பதை இந்த இருவருக்கும் எப்படி உணர்த்துவது என்பதை தமிழ் சமூகம் சிந்திக்கட்டும்.

 

 

 

 

பெரியார் தமிழுக்கு எதிரானவர் என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா? சதியின்வெளிப்பாடு ?

பெரியார் சிலையை உடைப்பேன் என்று வீராவேசம் பேசிவிட்டு தமிழகம் கொந்தளித்த பிறகு அடங்கிப் போன எச் ராஜா மீண்டும் தனது சில்லறை  புத்தியை காட்டும் வகையில் பெரியார் தமிழை எதிர்த்தார் என்றும் அவர் தமிழுக்கு எதிரானவர் என்றும் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

எல்லாரையும் மதத்தின் பேரால் நம்பிக்கையின் பேரால் அடக்கி ஆண்டு கொண்டு மற்றவர்களை அதே ஆயுதத்தை பயன் படுத்தி வீழ்த்தப் பார்ப்பது பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி.

வடகிழக்கு மாநிலங்களில் கோடரிக் காம்புகளை பயன்படுத்தி தான் மாநில உரிமை கோருவோரை வீழ்த்தினார்கள்.

 தமிழகம் மட்டும்தான் அவர்களுக்கு அடங்க மறுக்கிறது.    அதற்கு காரணம் பெரியார்.  பெரியார்தான் தமிழரின் தன்மானத்தின் வலுவான அடித்தளம்.     அந்த அடித்தளத்தை அசைக்கப் பார்க்கிறார்கள். 

அவர் அடிப்படையில் சாதி ஒழிப்பு கிளர்ச்சிக்காரர்.    அவரை சாதி வெறியர் என்று பட்டம் சூட்டுகிறார்கள்.

சாதிகள் தமிழர்களை பிரிக்கிறது.   சாதிக்கு மூலம் மதம். மதத்தின் கரு கடவுள்.   எனவே கடவுளை மறுத்தால் தான் சாதிகளை ஒழிக்க முடியும் என்ற காரணத்தினால் தான் அவர் கடவுளை எதிர்த்தார்.

எல்லா பார்ப்பனர்களும் ராஜாவுக்கு ஆதரவு என்றாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

அதனால்தான் பிராமணர் சங்க தலைவர் ராஜாவை கண்டித்து அறிக்கை  விட்டார்.

பார்ப்பனர்களின் பூணூலை அறுக்கும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்த வுடன் எங்களை மிரட்ட முடியாது என்று நாராயணன் பேசுகிறார்.   அப்போது கூட வருத்தம்  தெரிவித்து விட்டதால் பிரச்னையை அப்படியே விட்டு விடலாம் என்கிறார்.

அமித் ஷா ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்கிறார். அப்படியானால் ராஜா பேசியதை அங்கீகரிக்கிறார்கள் என்றுதானே பொருள்.     பிரதமர் மோடி சிலை  உடைப்பை கண்டித்து அறிக்கை விட்டதாக சொல்கிறார்கள்.  எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.   நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.  ஆனால் ஒப்புக்கு மறுப்பார்கள்.

இவர்கள் நிறுத்தப் போவதில்லை.   பெரியாரியம் உயிர்ப்போடு இருக்கும் வரை யாராலும் தமிழர்களை அடிமைப் படுத்த முடியாது என்பதால் அவர்களது தாக்குதல் பல்வேறு வகைகளில் நிச்சயம் தொடரும்.

சரியான அடி கொடுத்தால் தவிர  இவர்கள் திருந்த மாட்டார்கள்.

வன்முறை மீது நமக்கு நம்பிக்கை இல்லை.  ஆனால் அவர்கள் வன்முறையை அதிகாரம் வரும்போது மட்டும் பயன் படுத்து வார்கள்.

எனவே எச்சரிக்கையாவே இருப்போம்.

காளிக்கு ரத்த அபிஷேகம்; முயற்சியை தடுத்தார் கேரள அமைச்சர்!

மூட நம்பிக்கை கள் அதிகம் கொண்ட கேரள மாநிலத்தை இந்தியாவின் பைத்தியக்கார விடுதி என்று சுவாமி விவேகானந்தர்  வர்ணித்தார்.

ஸ்ரீ வித்வாரி வைத்யநாத கோவிலில் மகா காளி யக்னம் நடக்க இருக்கிறது.

அதில் நடக்க இருக்கும் நெருப்பு யாகத்தில் பயன்  படுத்த  பக்தர்களிடம் ஊசி மூலம் எடுக்கும் ரத்த மாதிரிகளை கோவில் நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.

அந்த ரத்த மாதிரிகளை சேர்த்து காளிக்கு அபிஷேகம் செய்வார்களாம்.  அதன் மூலம் பல நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாம்.

நோய் பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்கும்போது இதற்கும் எடுத்தால் என்ன என்று கேள்வி வேறு கேட்கிறார்கள் நிர்வாகிகள்.

இரண்டும் ஒன்றா?    மனித ரத்தம் பூஜைக்கு பயன்படுத்தலாம் என்றால் பின்னர் அது நரபலிக்கு வித்திடாதா?

அந்த காட்டுமிராண்டி தனத்திற்கு பெயர் பிரார்த்தனையா?

எதை ஒழிக்க இத்தனை ஆண்டுகள் போராடினோமோ அதை தக்க வைக்க இன்னனும் அலைகிறார்களே?

கேரள அமைச்சர்  கடகம்பள்ளி சுரேந்திரன் இதை தடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

போதாது.   தண்டனை  நடவடிக்கை வேண்டும்.

இந்த ரத்தம் வேதங்களில் சொல்லியபடி யாகத்தில் தெளிக்கப் படுமாம்.  ஆக வேதம் என்பதே நரபலியை  ஊக்குவிக்கிறதாகத்தான் பொருள் படுகிறது.

இடதுசாரிகள் ஆளும் மாநிலத்திலேயே இத்தகைய மத வெறியர்கள் மூடநம்பிக்கையை வளர்க்க முற்படுகிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்?

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற எச் ராஜா மீது அடிமைகளின் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?

பார்ப்பனர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

ஏறி மிதிப்பார்கள்.  எதிரிகளை அழிக்க முயற்சிப்பார்கள்.

அதைத்தான் எச் ராஜா செய்தார்.   வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி கிடைத்தவுடன் திரிபுராவில்  லெனின் சிலையை தகர்த்தார்கள்.      இ கம்யுனிஸ்டுகளை தாக்கினார்கள்.   கலவரங்களை உருவாக்கினார்கள்.    25   ஆண்டுக்கால இடது சாரி ஆட்சியை அகற்றிய வெறி .     ஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் வெறியாட்டம் ஆடினார்கள்.

உ பி யில் ஒரு அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டது.   கலவரம் உருவானது.

இங்கே இருக்கும் ராஜாவுக்கும் ஒரு நப்பாசை.     நாமும் இங்கே திராவிட ஆட்சியை தகர்க்க முடியாதா?

அங்கே லெனின் சிலை.   இங்கே பெரியார் சிலை என்று செய்தி போட்டு கலவரத்தை உருவாக்கினார்.

தமிழாக்கம் எங்கும் போராட்டம் வெடித்தது. ராஜாவின் கொடும்பாவிகள் எரிக்கப் பட்டன.

பா ஜ க விலேயே உட்கட்சி மோதல்கள் வெளிவந்தன.    தமிழிசையும் பொன் ராதாகிருஷ்ணனும் அரசகுமாரும் இது  தவறு என்று சொல்ல அங்கே இருக்கும் மயிலை நாராயணன் கே டி ராகவன்  எஸ் ஆர் சேகர் போன்றவர்கள் ராஜாவை ஆதரிக்க அங்கேயும் பார்ப்பனர் பார்பனர் அல்லாதார் மோதல் வெளியே வந்தது.

போதாதற்கு கமல் ஹாசன் தனது பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தினார்.    கண்டிப்பதற்கு பதிலாக எல்லா சிலைகளையும் அப்புறப் படுத்த அவர் உறுதி அளித்தால் நாம் நம் முன்னோர் பெரியார் சிலையை அகற்றலாம் என்றார்.    ஏனென்றால் இருப்பது எல்லாம் பெரியார் அண்ணா, எம்ஜியார், தேவர், அம்பேத்கார், காந்திஜி, காமராஜர்  சிலைகள் தானே.    எல்லாவற்றையும் இதை சாக்காக வைத்து அகற்றினால் நல்லதுதானே என்பது அவாள்களின் ஆசை.

ஒரு பெரியார் சிலை சேதப் படுத்தப் பட்டது.   அரசு  ஒரு  பா ஜ க நிர்வாகியை கைது செய்ய அவரை நீக்கினார் தமிழிசை.   தூண்டி விட்ட ராஜா மீது என்ன நடவடிக்கை?

அநேகமாக எல்லா கட்சிகளும் ராஜாவின் மீது நடவடிக்கை  கோரி அறிக்கை வெளியிட்டார்கள்.

ரஜினி இதுவரை வாய்  திறக்க வில்லை.    பா ஜ க எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களே?

கமலும் ரஜினியும் மத்திய அரசை இது வரை விமர்சிக்க முன்வராத காரணம் பற்றி தமிழர்களுக்கு தெரியாதா?

15  பார்ப்பனர்களின் பூனூல்களை அறுத்ததாக வழக்குகள் பதியப் பட்டன.  சிலர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

ஆக கலவரம் வெடித்து விட்டது.

ஆனால் முதல்வர் வாய் திறக்க வில்லை.   ஒ பி எஸ் வாய் திறக்க வில்லை.

பாஜகவின் செயலாளர் முரளிதர் ராவும் எச் ராஜா வை கண்டிக்க , வேறு வழியில்லாமல்  ராஜா தன் பதிவை நீக்கி விட்டு தனக்குத் தெரியாமல் பதிவிடப் பட்டது என்று யாரும் நம்ப இடமில்லாமல் விளக்கம் கொடுத்து ஒரு வருத்தத்தை பதிவு செய்தார்.

ஆனால் தமிழ் சமூகம் இந்த வருத்தத்தை ஒப்புக் கொள்ளும்  என்று தெரியவில்லை.

ஏனென்றால் போராட்டம் தொடர்கிறது.    தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை ?

வருத்தம் தெரிவித்து விட்டதால் அப்படியே விட்டு விடுங்கள் என்கிறார்களா?

இனிமேல் பெரியார் படத்தை அதிமுகவினர் பயன் படுத்த உரிமையில்லை.

நடந்தது  தற்செயல் அல்ல.    ஒத்திகை.

அவர்களிடம் அதிகாரம் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதன் ஒத்திகை.

சாதி ஒழிப்பை தன் லட்சியமாக கொண்டு  வாழ்ந்த பெரியாரை ஒரு சாதி வெறியர் என்று சொன்ன ராஜாவின் கட்சிதான் சாதி கட்டமைப்பை பயன் படுத்தி ஆட்சியை பிடிக்க சதி திட்டம் தீட்டுகிறது.

எதிர்வினை சட்ட பூர்வமாகவே நடந்திருக்கிறது.

வேறுவகையில்  பரவாமல் இருக்க தமிழக அரசுதான் அவர் மீது நடவடிக்கைஎடுத்து தடுக்க வேண்டும்.

லதா-கவுதமி, ரஜினி-கமல் அரசியல் தோல்விக்கு அடையாள சின்னங்கள்??!!

மனைவி லதா மீது ஏழு கோடி கோச்சடையான் படத்தில் பட்ட  கடனை கட்ட கோர்ட்டு உத்தரவிடுகிறது.    அவரது  ஆஷ்ரம் பள்ளி மீது வாடகை கட்டவில்லை என்று புகார் கோர்ட்டுக்கு  செல்கிறது.    ரஜினி சம்பந்தி தர வேண்டிய கடனுக்கு ரஜினி ஜாமீன் போட்டாரா என்று வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது.

இதெல்லாம் சாதாரணமாக ஒருவர் சந்திக்கிற பிரச்னைகள்தான்.    கோர்ட்டுக்கு ஒருவரை இழுத்து விட்டார்கள் என்பதால் அவர் குற்றவாளியாகி விடமாட்டார்.     இதுவரை அவர் மீது  யாரும்  அந்த குற்றச்சாட்டை வைக்க வில்லை.

ஆனால் அவர் தான் சமுதாயத்தை சீர்திருத்த வருகிறேன் , சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி விட்டு வரும்போது இவைகள் எல்லாம் முன்னே வரும்.     தன் குடும்ப சிஸ்டத்தை முதலில் சரி செய்து விட்டு அரசியலுக்கு வாருங்கள் ரஜினி என்று சொல்லத் தோன்றுகிறதா இல்லையா?

அதேபோல் தான் கமல் கதையும்.   அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை விமர்சனத்துக்கு உள்ளானதில்லை.   ஏன் என்றால் அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

ஆனால் அவர் இந்த சமூகத்தை திருத்த வருகிறேன் என்று வரும்போதுதான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்துக்கு உள்ளாகும்.

அவரும் கவுதமியும் இணைந்து பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியது எல்லாருக்கும் தெரியும்.    யாரும் விமர்சனம் செய்ததில்லையே.

தன் மகள் எதிர்காலம் கருதி கமலை பிரிகிறேன் என்று கவுதமி சொன்னபோது கூட யாரும் விமர்சனம் செய்ததில்லை.

அவருடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர் பிரிந்த பிறகு அவர் எனக்கு சம்பள பாக்கி தரவேண்டும் என்று குற்றம் சாட்டுகிறபோது கமலின் குணம் இங்கே விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

நேராக பதில் கூறாமல் தனது நிறுவனம் பதில் கூறும் என்று கமல் கூறுவது எவ்வளவு மனித தன்மை கொண்டது?

இந்த கவுதமிதான் நேராக பிரதமரை சந்திக்கும் செல்வாக்கு உள்ளவர்.    அந்த செல்வாக்கை கொண்டு தணிக்கை குழு உறுப்பினர் பதவியை பெறும் தகுதி பெற்றவர்.

கவுதமியின் குற்றச்சாட்டை கமல் கையாளும் விதம் அவரது அரசியல் தலைமை பண்பிற்கு உகந்ததாக இல்லை.

கமல் தன்னை ஸ்தாபக தலைவர் என்று தனது லெட்டர் பேடில் அச்சடித்துக் கொண்டது விமர்சனத்துக்கு உள்ளான பிறகு வெறும் தலைவர் என்று மாற்றி  கொண்டது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது.

ஆக , கமல் ரஜினியின் அரசியல் தலைமை பண்பை கவுதமியும் லதாவும் தீர்மானித்து விட்டார்கள்.