Home Blog Page 80

ஆண்டாள் சர்ச்சை; பார்ப்பன சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத முட்டாள் தமிழர்கள் !!!???

மத உணர்ச்சியை தூண்டி தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதில் பா ஜ க வை வளர்க்க வேண்டும். இதுதான் எச் ராஜாவின் சூழ்ச்சி.    அது பலித்துக் கொண்டிருக்கிறது.

மருத்துவர் ராமதாஸ் வைரமுத்து பத்தாயிரம் முறை சிந்தித்து ஆண்டாளை பற்றி எழுதி இருக்க வேண்டும் என்கிறார்.   ஒரு வார்த்தையாவது வைரமுத்துவை தாசி மகன் என்றும் அவரது தலையை வெட்டுவோம் என்றும் பேசிய ராஜாவை கடுமையாக எச்சரிக்க வில்லை.

நயினார் நாகேந்திரன் வைரமுத்துவை கொல்ல  வேண்டுமா வேண்டாமா என்று கேட்டு அவரது நாக்கை வெட்டி வருவோருக்கு பத்து கோடி அல்லது பத்து லட்சம் என்று விலை  வைக்கிறார்.     அதிமுகவிலிருந்து பா ஜ க விருக்கு வந்து மாநில துணை தலைவர் பொறுப்பை  வாங்கிக்கொண்டு  மத்திய ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன் படுத்தும் திட்டத்தோடு இருக்கும் இவர் எப்போது இவர் இந்து தத்துவங்களை ஆராய்ந்திருக்கிறார்.  ?

தமிழ் எழுத்தாளார்கள் கூட்டமைப்பு வைரமுத்துவை மிரட்டுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்  என்று அறிக்கை.

எல்லா ஊடகங்களிலும் யார் மீது தவறு என்று விவாதங்கள்.

ஜீயர் ஒருவர் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்.    காவல் துறை தலையிட்டு ஒத்தி வைத்து விட்டு காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் என்று மிரட்டுகிறார்.

முடிந்த ஊர்களில் எல்லாம் பா ஜ க   வி எச் பி , இந்து முன்னணி அமைப்புகள் தூண்டுதலில் ஆர்ப்பாட்டங்கள் என்று கலவரத்தை தூண்ட முயற்சி.

பாரதிராஜா எங்களை ஆயுதம் தூக்க தூண்டாதே என்று எச்சரிக்கிறார்.   குற்ற பரம்பரை என்று சாதி அடையாளத்தை ஏன் குறிப்பிட வேண்டும்.?       இது சாதிப் பிரச்னையா/மதப் பிரச்னையா?

யாரும்  பிரச்னையின் மூலம் என்ன என்பதை பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.

வைரமுத்துவின் கட்டுரை மூலமா?    அதற்கு எச் ராஜா கொலை மிரட்டல் விடுத்தது மூலமா?

கட்டுரையையும் கொலைமிரட்டலையும் ஒன்றாக பார்க்கலாமா?

பெரியார் எழுதியது அத்தனையும் பார்ப்பனீயத்தை எதிர்த்துதான்.     இன்று   குல்பர்கியை கொலை செய்தது போல் அன்று அவர்களால் அதை செய்ய முடியவில்லை.  இன்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அத்தனை புத்தகங்களையும் ஒழித்து விட முடியுமா உங்களால்?

வைரமுத்து கட்டுரையை வெளியிட்டது தினமணி நாளிதழ் .   பார்ப்பன நிர்வாகம் தான் என்பதால் உடனே மன்னிப்பு கேட்டு கட்டுரையை தன் வெப் சைட்டில் இருந்து எடுத்து விட்டது.

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று கேட்டு விட்டு வைரமுத்து வருத்தம் கேட்டு விட்டதால் அப்படியே விட்டு விட வேண்டியது தான் என்கிறார்.

தளபதி ஸ்டாலின் ராஜாவின் பேச்சை கண்டித்திருக்கிறார்.   கம்யுனிஸ்டுகள் கண்டிக்கிறார்கள்.      வைரமுத்து  மீது  வழக்குகள் , ராஜா மீது வழக்குகள் என்று எதை அவர்கள் எதிர்பார்த்தார்களோ அது நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு பிரச்னை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.    வைரமுத்துவின் கட்டுரையில் என்ன தவறு என்று ஆராயும்.  தீர்ப்புக்கு காத்திருப்போம்.

எப்போது பார்ப்பனர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள்?      தமிழர்கள் பிரச்னை எதற்காவது வந்திருக்கிறார்களா?

கொடுமை என்ன?      ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எல்லாரையும் வேதம் சொன்னது என்று வர்ண பேதத்தை ஏற்படுத்தி பெரும்பாலானவர்களை அடிமைப் படுத்தி வந்த ஒரு கூட்டம்  சாதி ரீதியாகவும் எல்லாரையும் பிரித்து வைத்து என்று சேர விடாமல் பார்த்துக் கொண்டு இன்னமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு அடித்துக் கொள்ள வைக்கிறானே என்று  சிந்திக்க தமிழனுக்கு அறிவே இல்லையா?

ஆண்டாள் என் தாயைப் போன்றவர் . அவரை நான் தவறாக பேசுவேனா என்ற வைரமுத்துவின் சமீப கருத்து பிரச்னையை தீர்க்குமா?

இந்து என்பவன் யார் ? இந்து மதம் என்ற ஒன்றே இல்லாதபோது எப்படி இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்?    எல்லாருக்கும் ஒரு அடையாளம் வேண்டி இருக்கிறது.      அறுவித நம்பிக்கைகளை  ஒன்றாக்கி இந்து என்றாக்கியிருக்கிறார்கள் .

நமக்கும் இதனால் பெரும்பான்மை என்ற பலம் கொடுப்பதால் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை.  ஆனால் ஒரு சிறுபான்மை அதிகாரம் செலுத்தி கொண்டிருக்கிறது.

தமிழர்கள் புத்தியை பயன் படுத்தி தங்களுக்குள் வன்முறையில் ஈடுபடாமல் அறிவாயுதம் ஏந்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏமாந்தது போதும்.    அரசியல் ஆதாயத்துக்காக காட்டிக்  கொடுக்கும் கருங்காலிகள் உருவாகாமல் இருக்க அந்த இறைவனே நல்வழி காட்ட வேண்டும்.

ஆம்.  அந்த இறைவன் அருவ உருவமற்றவன். சாஸ்திர சம்பிரதாயங்களுக்குள் அடங்காதவன்.  எந்தப் பெயரும் அவனுக்கு இல்லை.  இத்தகைய நம்பிக்கை கொண்ட நான்கூட இந்துதான்.    இல்லையென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை .

அந்த உரிமையில் சொல்கிறேன்.    தமிழர்களே பார்ப்பனீய சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்!!!

 

 

 

அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி மரண விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் தலையீடு இருந்ததா ?

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சி பி ஐ நீதிமன்ற நீதிபதி லோயா 48 வயதில் திடீர் என இறந்தார்.       அவருக்குப் பின் வந்த நீதிபதி அமித் ஷா வையும் மற்றவர்களையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.      அது  லோயாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்தியது.

நீதிபதி மரணம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக வழக்கத்துக்கு மாறாக இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றியது குறித்து  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நான்கு நீதிபதிகள்  வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பத்திரிகைகளை கூட்டி பேட்டி கொடுத்தார்கள்.

நீதிபதிகள் சலமேச்வர், ரஞ்சன கோகாய், மதன் லாகூர் ,குரியன் ஜோசப் ஆகிய நால்வரும், தலைமை நீதிபதியின் தன்னிச்சையான போக்கு நல்லதல்ல என்றும், லோயா சம்பத்தப் பட்ட வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றியது குறித்து தாங்கள் அவரிடம் பேசியது பலன் அளிக்க வில்லை என்றும் எனவே நாட்டுக்கு உண்மை நிலவரத்தை தெரிய படுத்த வேண்டி பேட்டி கொடுப்பதாகவும் கூறினார்கள்.

இதில் பல பிரச்னைகள் அடங்கி இருக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.        செல்வாக்கு பயன் படுத்தப் படுகிறது.  எனவே என்னென்ன வழக்குகளில் இந்த செல்வாக்கு தவறாக பயன் படுத்தப் பட்டது என்பது ஊகங்களுக்கு உட்பட்டது.

அவர்களுக்குள் வழக்கறிஞர்கள் சங்கம் பேசி சமாதானம் செய்யலாம்.    ஆனால் உச்ச நீதிமன்றத்தின் நம்பகத் தன்மை அசைக்கப் பட்டு விட்டது.

எந்தெந்த வழக்குகளில் என்னென்ன நடந்ததோ என்று மக்கள் ஆராய வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்.?

இந்த நான்கு நீதிபதிகளும் போற்றுதலுக்கு உரியவர்கள்.   மனசாட்சிப் படி நடந்திருக்கிறார்கள் .

இப்படி நாலு பேர் இருப்பதால்தான் இன்னும் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது.

ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதியது தவறா?

தினமணி பத்திரிகையில் கவிப்பேரரசு வைரமுத்து ‘ தமிழை ஆண்டாள் ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தாராம்.

ஆண்டாளின் தமிழ் ஆளுமையை பல விதங்களில் போற்றி எழுதப் பட்ட கட்டுரையாம் அது.

எச் ராஜா , பா ஜ கவின் செயலாளர் வைரமுத்து தாசிக்குப் பிறந்தவன் , அவன் தலையை எடுக்க வேண்டும் என்று பேசி அது  யு டுபில் செய்தியாக  வந்த பிறகுதான் அவர் எழுதிய கட்டுரை வெளிச்சத்துக்கு வந்தது.

மத்தியில் ஆட்சி அதிகாரம் .   மாநிலத்தில் அடிமைகள் ஆட்சி.    எனவே எது வேண்டுமானாலும் பேசலாம் என்று தைரியம்.

கட்டுரையில் தவறு இருந்தால் மறுத்து கட்டுரை எழுதலாம்.   கண்டிக்கலாம்.    இத்தனைக்கும் தான் தனிப்பட்ட முறையில் ஆண்டாளை  குறித்து எதுவும் கருத்து சொல்ல வில்லை என்றும் பல்கலைக்கழக கட்டுரையில் இருந்ததை எடுத்து குறிப்பிட்டதால் யார் மனதாவது புண் பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் செய்தி வெளியிட்டு விட்டார்.

கொடுமை என்னவென்றால் அதில் என்னதான் இருக்கிறது என்று தினமணி பத்திரிகையை வெப் சயிட்டில் பார்க்கப் போனால் அது எடுக்கப் பட்டிருந்தது.    இருந்தால் தானே அதில் தவறு இருக்கிறதா என்று கருத்து சொல்ல முடியும்.?   இவ்வளவுதானா தினமணியின் நடுநிலை?

அமெரிக்காவின் இந்தியானா பல்கலை கழக சுபாஷ் சந்திரா மாலிக்  என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.   அதில் ஆண்டாள் தேவதாசி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்று குறிப்பு இருக்கிறதாம்.   அதாவது இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட வாழ்க்கை.

ஆண்டாள் பனிரெண்டு ஆழ்வார்களில் ஒரு பெண் ஆழ்வார்.  திருப்பாவை தந்தவர்.   மார்கழியில் அவரது பாடல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பாடப் படுகிறது.

எவரையும் நிந்திக்கிறவர் அல்ல வைரமுத்து.   ஆண்டாளை நிந்திக்கும் நோக்கம் இருக்க எந்த காரணமும் இல்லை.

அதே நேரத்தில் சமணர்கள் இன்றும் தங்கள் குடும்பத்து பெண்களை துறவிகள் ஆக்குகிறார்கள்.    அதை பாக்கியமாக கருதுகிறார்கள்.

ஆந்திரா-தெலுங்கானா வில் எண்பதாயிரம் தேவதாசிகளும் அகில இந்திய  அளவில் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பேரும் தேவதாசிகளாக இருப்பதாக தேசிய மனித உரிமை கமிஷன் சொல்கிறது.    அதில் பெரும்பாலோனோர் தலித்துகள்.

ஒரு பக்கம் இறை தொண்டு ஆற்ற அர்ப்பணிக்கப் பட்டவர்கள்.  மறு பக்கம் விலை மாதர் வாழ்க்கை.    இரண்டும் கடவுளின் பெயரால்.

எது எப்படி இருந்தாலும் எவரையும் புண் படுத்தும் நோக்கம் யாருக்கும் இருக்க கூடாது.     அதற்காக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.

வைரமுத்துவை கண்டிப்பவர்கள் எச் ராஜாவையும் கண்டிக்க வேண்டும் அல்லவா?

எல்லை மீறி பேசியது ராஜாதான்.   வன்முறைக்கு வித்திட்டிருக்கிறார் எச் ராஜா.

பொறுமை காத்து பெருமை சேர்க்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.

நீட் தேர்வு எழுதும்போது தாலி அணியக் கூடாது என்று தடை விதிப்பது எதற்காக ?

நீட் தேர்வு என்பதே சூது மதியாளர்களின் தந்திரம்.      நடுத்தர மக்கள் உயர் நிலைக்கு வந்து  விடாமல்  எப்படியாவது தடுப்பதே நோக்கம்.

மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வுமையங்களில் தங்கம் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப் பட்டதால் தாலியை கழற்றி விட்டு பெண் டாக்டர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

நீட் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் , ப்ளுடூத் , நோட்புக் ,பேனா ,கைப்பை  உள்ளிட்ட எதையும் எடுத்து வரக்கூடாது. கம்மல், வாட்ச், பிரேஸ்லெட் ,பெல்ட் அணிந்து வரக்கூடாது என்ற கட்டுப் பாடுகள் எதற்காக என்பது புரியவில்லை.

காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக என்றால் எதில் சாத்தியம் இருக்கிறதோ அதை தடை செய்தால் தவறில்லை. கம்மல், தாலி போன்றவற்றில் என்ன காப்பி அடிக்க சாத்தியம் இருக்கிறது. ?

தேர்வு எழுத வருபவர்களின் மனநிலையை தடுமாற செய்து அவர்களை நிலை குலைய வைக்க வேண்டும். அதனால் அவர்கள் மதிப்பெண்கள்  குறைவாக எடுக்க வேண்டும் என்ற திட்டம் அதில் இருப்பதாக சந்தேகம் வலுவடைகிறதே?

சென்ற ஆண்டு ஆட்சேபித்த போது  இனி தாலி அணிய தடை  இருக்காது  என்றவர்கள் இந்த ஆண்டும் மீண்டும் தடை விதிக்கிறார்கள் .

இப்படி அலைக்கழிக்கிறவர்களுக்கு என்ன தண்டணை?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அடுத்து வருகிறார் பார்ப்பனீயத்தின் பிரதிநிதி ரஜினி!!

வென்று வருகிறது பார்ப்பனீயம் !

அலையென வந்த திராவிட சுயமரியாதை  இயக்க வெற்றிகளுக்குப் பின் கலைஞர் ஒருவர்தான் கொள்கைகளை அடகு வைக்காமல் அரசியல் வெற்றிகளை பெற்று வந்தார்.

அவருக்கும் எம்ஜியாருக்கும் வந்த தனிப்பட்ட போட்டியில் எம்ஜியாருக்கு பார்ப்பனீயம் வெண்சாமரம் வீசியது.      கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வந்தாரே  தவிர பெரியாரையோ சுயமரியாதை கருத்துக்களையோ புறந்தள்ளி அவர் அரசியல் செய்யவில்லை.      ஆனால் சுயமரியாதை கருத்துகளை அதிகம் வலியுறுத்தாமல் பார்ப்பனர்களின் நம்பிக்கையை பெற்றவர் அவர்.

அவருக்கு அடுத்து வந்த ஜெயலலிதா தான் பாப்பாத்தி என்று சட்ட மன்றத்திலேயே தன் அடையாளத்தை வெளிப்படுத்தியவர்.    பஞ்சாங்கம் பார்த்து அரசியல் செய்த அவர் பார்ப்பனீயத்தின் பிரதிநிதியாகவே நடந்து  கொண்டார்.   ஆனால் அதே சமயம் தான் பெரியாரின் பிறந்த நாளுக்கு மாலை இடுவதை மட்டும் நிறுத்த வில்லை.   அதாவது சுமரியாதை இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்தால் போதும் எதிர்த்தால் எதிர்ப்பு உருவாகும் என்று பயந்தார்.

ஆக கலைஞருக்குப் பின் எம்ஜியாரையும் ஜெயலலிதாவையும் வைத்து தங்கள் கொள்கைகளை நிறைவேற்றிக்  கொண்ட பார்ப்பனீயம் அடுத்து யாரை கொண்டு வருவது என்று திட்டமிட்டு தேர்ந்தெடுத்தது கமல் அல்லது ரஜினி .

எப்பாடு பட்டாவது ஸ்டாலின் வருவதை தடுப்பது.  அன்புமணி, சீமான் , தினகரன்   போன்றவர்கள் வரமுடியாது.   ஓ பி எஸ் -இ பி எஸ் இருவரும் காகிதப் புலிகள்.   ஆண்மையற்ற தலைவர்கள் என்று குருமூர்த்தி அவர்களை இழிவு படுத்தியதை கண்டு மற்றவர்கள் கொதித்தார்களே தவிர அவர்களுக்கு சொரணையே இல்லை.

வெற்றிடம் உள்ளது.   அதை தங்கள் பிரதிநிதி நிரப்ப வேண்டும் என்ற பார்ப்பனீயத்தின் வெளிப்பாடே ரஜினியின் அரசியல் அறிவிப்பு.

கமல் அறிவிப்புகள் அவ்வளவாக போது மக்களை ஈர்க்க வில்லை.  இருவரும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

மன்றத்தை மட்டும்  பலப்படுத்த தனி கணினி வசதி.

ரஜினிக்கு அடுத்த ஆள் யாரும் அடையாள படுத்தப் படவில்லை.

புல்லுருவி மணியன், அர்ஜுன் சம்பத் போன்ற பெயர் தெரிந்த சிலர் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.

ஒரு தனி மனிதனை நம்பி , அதாவது தன்னை மட்டும் நம்பி , ஆட்சியை கொடுங்கள் என்று கேட்கிறார்.

ஆன்மிக அரசியல் என்கிறார்.   அதே சமயம் சாதி மத வேறுபாடு பார்க்க மாட்டேன் என்கிறார்.     பாராளுமன்ற தேர்தலில்  அப்போது சொல்வாராம்.   சட்ட மன்ற தேர்தலில்    234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியாம்.

பகவத் கீதையை மேற்கொள் காட்டியவருக்கு திருக்குறள்  தெரியவில்லை.

நல்லதையே நினைத்து நல்லதையே சிந்தித்து நல்லதையே திட்டமிட்டு செயல்பட்டால் நல்லதே நடக்கும்.    அதுதான் இவர் கொள்கையாம்.  எல்லா சாமியார்களும் சொல்லும் வாக்கியம் தானே.

மூன்று ஆண்டுகள் கழித்து வரப்போகும் சட்ட மன்ற தேர்தல் முன்கூட்டியே வராது என்பது இவருக்குதெரியுமா?        பெரும்பான்மை இல்லாமல் நடக்கும் ஆட்சிக்கு எந்த பங்கமும் வராது என்ற உத்தரவாதத்தை யார் இவருக்கு அளித்தார்கள்?

எந்த காரணத்தை கொண்டும் பா ஜ க வுடன் ஓட்டோ உறவோ கொள்ள மாட்டேன் என்று அறிவிக்க தயாரா?

சீமான் சொல்வது போல் மராட்டியர்கள் முன்பு படை எடுத்து வந்து வெற்றி பெற்று நம்மை ஆண்டார்கள்.   இப்போது படம் எடுத்து புகழ் பெற்று ஆள திட்டம் இடுகிறார்கள்.   அதற்கு பார்ப்பனீயம் தூபம் காட்டுகிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.  அந்த உரிமை ரஜினிக்கும் இருக்கிறது.    ஆனால் அது சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும்.    யாருடைய அம்பாகவோ செயல் பட கூடாது.

மூன்று ஆண்டுகள் இவர் எந்த பிரச்னை குறித்தும் எதுவும் பேச மாட்டார்.   பேசினால்தான் யார் என்று தெரிந்து விடுமே.

இதுவரை எல்லாராலும் நேசிக்கப்  பட்ட ரஜினி இனி எதிரிகளையே சந்திப்பார்.

அதாவது இவர் யார் பக்கம் என்று தெரியும் வரை.   நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் வாங்கிய கட்சியுடன் வெளிப்படையாக உறவு வைத்து தன் சுய ரூபத்தை காட்ட மாட்டார்.      மாறாக மறைந்திருந்து தாக்குவார்.

தமிழர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீபாவும் மாதவனும் கட்சி ஆரம்பித்த போது  கூட எல்லா ஊர்களிலும் பிளக்ஸ் போர்டு வைத்து ஆராதித்த தமிழர்கள் ஏராளமானவர்கள்  இருந்தார்களே!

சிஸ்டம் சரியில்லை என்று இவர் எதை சொல்கிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை.

ஓ பி எஸ் – இ பி எஸ் மற்றும் பா ஜ க கட்சிகளுடன் இவர் உடன்பாடு  செய்து  கொள்வார் என்பதே இப்போதைய அனுமானம்.

ரசிகர் மன்றங்களுக்கு இடம் கொடுத்த தவறுக்கு தமிழகம் இன்னும் எத்தனை விலை கொடுக்க வேண்டி இருக்கும். ?

வருகிறவன் எல்லாம் ஆளத்தான் விரும்புகிறான்.

நல்லது செய்ய விரும்புகிறவன் வேறு வகையில் செய்யவே முடியாதா?      நல்லதை சொல்லு நல்லவனை தேர்ந்தெடு நல்லவனுக்கு ஆதரவு கொடு அவனை ஆய்வு செய்யும் உரிமையை நீயே வைத்துக் கொள். இப்படி சிந்தித்தால் நீ நல்லவன்.

நான் மட்டுமே நல்லவன் என் பின்னால் எல்லாரும் வாருங்கள் என்பவன் அயோக்கியன்.

ரஜினி நல்லவரா? அயோக்கியரா?

2G வழக்கின் தீர்ப்பில் கிழிந்த சி பி ஐ ன் முகத்திரை ??!!

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி  இழப்பு ஏற்படுத்தியதாக ஆ ராசா  மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19  பேரின் மீதான மூன்று வழக்குகளிலும் சி பி ஐ தனி நீதிமன்றம்  அனைவரையும் விடுதலை செய்தது.

வழக்கமாக ஒரு வழக்கில் விசாரணைக்கு முன்பே தண்டிக்கப் படுவது இதிலும் நடந்திருக்கிறது.     ராசா ஒரு வருடமும் கனிமொழி ஆறு மாதங்களும் சிறையில் இருந்திருக்கிறார்கள்.     இன்று அவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு.      அனுபவித்த தண்டனைக்கு என்ன ஈடு?

இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 122  உரிமங்களை ரத்து செய்ததுடன் கோடிக்கணக்கில்  பலருக்கு அபராதமும் விதித்தது.  போதிய விசாரணைக்கு இத்தகைய தண்டனையை உச்சநீதி மன்றம் தந்தது சரியா தவறா என்பதும் இன்று விவாதத்துக்கு உள்ளாகிறது.

இதில் ஆதாயம் அடைத்து பா ஜ க வும் அதி மு க வும் தான்.      தேர்தல் பிரசாரங்களில் 2G கொள்ளையர்கள் என்பதுதான் பிரச்சாரமாக இருந்தது.   அது தி மு க வின் வெற்றி வாய்ப்பை தமிழகத்திலும் காங்கிரசுக்கு மற்ற மாநிலங்களிலும் பறித்தது.

பல வகைகளில் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.      1553  பக்க தீர்ப்பில் நீதிபதி  ஓ பி சைனி தான் உரிய சாட்சி ஆவணங்களுக்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்ததாகவும் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.     சாட்சியங்களை  அடிப்படையாக வைத்து ஆவணங்களை புறந்தள்ளி குற்றப் பத்திரிகை புனையப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் மீது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விமர்சனங்கள் கவலைக்குரியவை. இப்படியுமா இருப்பார்கள் அதிகாரிகள்?

கலைஞர் தொலைக்காட்சிக்கு தரப்பட்ட 200  கோடி ரூபாய் உரிமம் தொடர்புடைய ஊழல் என்று ஏன் ஒரு கேள்வி கூட எந்த சாட்சியிடமும் கேட்கப் படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வெறும் முப்பதாயிரம் கோடிக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து விட்டு அதற்கும் ஆவண அடிப்படை இல்லாமல் எப்படி குற்றபத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது?.    அதுவும் உச்சநீதி மன்றத்தின்  மேற்பார்வையில்.

மத்திய கணக்காயர் அறிக்கையில் ஆண்டுதோறும் பல துறைகளின் மீது இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை வெளியிடுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ஒன்று.    அதை அடுத்து நிகழாமல் பார்த்து சரி செய்து கொள்ளட்டும் என்பதே எதிர்பார்ப்பு.

 வரலாற்றில் கணக்காயர் அறிக்கையின் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட ஒரே வழக்கு 2G அலைவரிசை வழக்குதான். 

அதிலும் ஆ ரா சா குற்றவாளியாக இருந்து கொண்டே தானும் ஒரு சாட்சியாக விசாரித்துக் கொண்டது வழக்கத்தில் இல்லாதது.    பதினைந்து நாட்கள் அவரை குறுக்கு விசாரணை செய்தார்கள்.     என்னென்ன தவறுகள் அவர் செய்தார் என்பதை குறுக்கு விசாரணையில் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது.      வழக்கமாக குற்றவாளிகள் தங்களை சாட்சியாக விசாரித்துக் கொள்வது இல்லை.   அசைக்க முடியாத நம்பிக்கை தன்னிடம் இருந்ததால்தான் ராசா தன்னை சாட்சியாக விசாரித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

தங்களுக்குள்  ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஒரு சிலரிடம் இருந்த உரிமையை 122 பேருக்கு பிரித்துக் கொடுத்ததின் மூலம் அழைப்புக் கட்டணம் பாதியாக குறைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டு இருந்தாலும் மோடி அரசு வந்தபின் தானே விசாரணை நடந்தது.     ஏன் முறையாக நடத்தவில்லை ?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது சி பி ஐ என்ற நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதித்திருக்கிறது.

சி பி ஐ யோ அமலாக்கத் துறையோ மேன்முறையீடு செய்தாலும்கூட இனிமேல் குற்ற பத்திரிகையை மாற்ற முடியுமா என்ன?

அரசியல் அரங்க விளையாட்டுகளை கட்சிகள் செய்யலாம்.

அதற்கு அரசு நிறுவனங்கள் , குறிப்பாக சி பி ஐ ,  அமலாக்கத்துறை , வருமான வரித்துறை  போன்றவை பகடைக் காய்களாக செயல் படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுவாகி வருகிறது.     இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா வீடியோ??!!

அப்போல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது சசிகலா எடுத்த ஜெயலலிதாவின் வீடியோ பதிவை தினகரன் அணியை சேர்ந்த எம் எல் ஏ வெற்றிவேல்  நேற்று வெளியிட்டார்.

அதில் ஜெயலலிதா படுக்கையில் இருந்தபடி இடது கையால் ஜூஸ் சாப்பிடுகிறார்.   வலது கையில் மருத்துவர்கள் பொருத்திய சாதனம் சுற்றப் பட்டிருக்கிறது.   டெலிவிஷன் பார்க்கிறார்.        கால்கள் இரண்டும் தெரிகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்து மாற்றப் பட்டு சாதாரண அறையில் இருந்தபோது எடுத்தது என்றால் அவர் நல்ல நிலையில் தான் இருந்தார் என்பது வெளிச்சமாகிறது

இதை ஏன் சசிகலா இத்தனை நாள் மறைக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

இது ஒன்றும் ஜெயலலிதாவின் கௌரவத்தை குலைப்பதாக அமையவில்லை.     எல்லாருக்கும் வரும் சிகிச்சை நேர தோற்றம்தான் தெரிகிறதே தவிர இதில் என்ன தவறு இருக்கிறது.

ஒப்பனையுடன் மட்டுமே வெளியில் தெரிந்த ஜெயலலிதாவின் சிகிச்சை தோற்றம் மக்களுக்கு தெரியக் கூடாது என்று சசிகலா நினைத்திருந்தால் அது தவறு.

எத்தனை வதந்திகளை அது தவிர்த்திருக்கும்.     இன்னும் சொல்லப் போனால் கட்சி உடைவதற்கே அது ஒரு காரணமாக இருந்திருக்க முடியாது.

மறைக்க மறைக்கத்தான் அதில் ஏதோ இன்னும் இருக்கிறது என்ற சந்தேகம் அதிகரிக்கும்.

இன்னும் பல விடியோக்கள் இருக்கின்றன என்கிறார்கள்.   அவைகளை அவர்கள் தாமாகவே முன்வந்து விசாரணை  கமிஷன் முன் சமர்ப்பித்து அவைகளை ஆவணப் படுத்துவதே முறையானது.

ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை இரட்டை இலையை பெறுவதற்கு  பயன்படுத்தப பட்டது இன்னும் நிலைமையை சிக்கலாகி இருக்கிறது.    ஒத்துப் போகாவிட்டால் அது பல ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்.    பலரும் தண்டனை  பெரும் நிலையும் உருவாகும்.

சாட்சி சொன்ன டாக்டர் பாலாஜி மாட்டலாம்.

தேர்தல் ஆணையம் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தது.     தேர்தல் விதியை மீறிய செயலாம்.       நூறு  கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டதை தடுக்க முடியவில்லை    இந்த  தேர்தல் ஆணையத்தால்.

இதற்கிடையே இளவரசியின் மகள் கிரிஷ்ணபிரியா வெற்றிவேல் செய்தது தவறு என்கிறார்.   குடும்பத்துக்குள்ளே கருத்து வேறுபாடு.

வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறதாம்.   இதற்கும் இடைத் தேர்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கும்?    இது எப்படி ஒரு பிரச்சாரம் ஆகும்?    தேர்தல் ஆணைய நீதியே தனி??!!

எப்படி இருந்தாலும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஜெயலலிதா சிகிச்சை பற்றிய ஒரு புதிய உண்மையை மக்களுக்கு தெரியப் படுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.

இன்னும் முழு உண்மைகளையும் மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டியது அதை வைத்திருப்பவர்களின் கடமை.

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலையில் ராஜஸ்தான் போலீஸ் குழப்படி செய்கிறதா?

கொளத்தூர் நகை கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் நாதுராம் கும்பலை பிடிக்க தமிழ் நாட்டு காவல் துறையின் ஐந்து நபர் குழு அவர்களை நள்ளிரவு இரண்டு மணிக்கு பிடிக்க முற்பட்டபோது துப்பாக்கியால் சுடப் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்திருக்கிறார் .

பெரிய பாண்டியன் அல்லது ஆய்வாளர்  முனிசேகர் ஆகிய இருவரது துப்பாக்கி களில் ஒன்றில் இருந்த குண்டுதான் பெரிய பாண்டியனின் உயிரை பறித்துள்ளது .

தவறி விழுந்த துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் தான் பெரியபாண்டியனை சுட்டார்கள் என்றுதான் முதல் தகவல்கள் தெரிவித்தன.

முதல் முறை சென்று  சிலரை கைது செய்து அழைத்து வந்த தமிழ்நாட்டு போலீஸ்  உள்ளூர் போலீசின் உதவியை நாடிபெற்று  செயல் பட்டிருந்தது.       என்ன நினைத்தார்களோ இரண்டாம் முறை சென்றபோது உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்காமலேயே நாதுராமை பிடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.     உள்ளூர் போலீஸ் தகவல் கொடுத்து விடும் என்ற சந்தேகமா?

இப்போது திடுக்கிடும் வகையில் ராஜஸ்தான் போலீஸ் பெரிய பாண்டியனை கொன்றது முனி சேகர் துப்பாக்கியில் இருந்த குண்டுதான் என்று சொல்லி முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த திடுக்கிடும் தகவலை ராஜஸ்தான் மாநில போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவா தெரிவிக்கிறார்.

ஆனால் இதுபற்றி தமிழக போலீஸ் ஏன் இதுவரை அறிக்கை எதையும் தாக்கல் செய்ய வில்லை.?

எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து என்ற அடிப்படையில் விசாரணை சென்றால் கொலைக்குற்றத்தில் இருந்து நாதுராம் தப்பிக்க வழி ஏற்பட்டு விடும்.

இரண்டு மாநிலம் சம்பந்தப் பட்ட வழக்கில் இரு மாநில காவல் துறையினர் இடையே இருக்க வேண்டிய இணக்கம் இருந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக எழுந்திருப்பது கவலைக்குரியது.

அதாவது தப்பிக்கும்போது முனி சேகர் நாதுராமை நோக்கி சுட்ட போது குறி தவறி பெரிய பாண்டியனை குண்டு தாக்கி இறந்தார் என்றால் இதில் நாதுராம் தப்பிக்க வழி இருக்கிறதா இல்லையா?

ஒரு காவல் ஆய்வாளர் துணிச்சலுடன் கொள்ளையன் ஒருவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்ட போது எல்லாரும் ஒன்றிணைந்து செயல் பட்டிருக்க வேண்டும்.     போதிய ஆயுதங்களும் போதிய ஆட்களும் இல்லாமல் வெளி மாநிலம் ஒன்றில் இரவு நேரத்தில் தமிழக போலீசை இயக்கியது யார்?

நடந்து விட்ட குளறுபடிக்கு தமிழக காவல் துறையும் ஒரு வகையில் பொறுப்பாகிறது.

பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு அரசு அளித்திருக்கும் உதவித்துகை இரண்டு கோடி.    பொதுமக்களும் உதவ வங்கி கணக்கு துவங்க அனுமதி அளித்திருக்கிறார்கள் .

என்ன செய்தாலும் ஈடு கட்ட முடியாத இழப்பு அவரது மரணம்.

நாதுராம் தங்கியிருந்த இடம் ராஜஸ்தான் போலீசுக்கு தெரிந்த பின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ?

வடநாட்டு கொள்ளைக்காரர்கள் தான் இங்கு வந்து அக்கிரமம் செய்கிறார்கள் என்றால் அங்குள்ள காவல் துறையுமா பொறுப்பற்று இருக்கும்?

தவறு எங்கு நிகழ்ந்தது  யார் அதற்கு காரணம் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க தமிழக காவல் துறைக்கு கடமை இருக்கிறது.

உண்மையை மறைத்தோம் ; அப்போல்லோ பிரதாப் ரெட்டி -மருத்துவர்கள் பொய் சொன்னால் என்ன தண்டனை ?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் புதிய பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் சொன்னார்.

ஜெயலலிதாவின் கை ரேகைகளில் ரேகைகளை காணோம் வெறும் புள்ளிகளாக இருக்கின்றன என்று மருத்துவர் சரவணன் குற்றம் சாட்டி ஜெயிலில் வைத்த ரேகை யை ஒப்பிட முயன்றபோது உச்ச நீதி மன்றம் தடை விதிக்கிறது.  இறந்தவர் ரேகைகளில் தான் ரேகை இருக்காது என்கிறார்கள்.

அரசு அமைத்த மருத்துவர் குழு ஐந்து பேர்.   அவர்கள் பார்த்தார்களா இல்லையா?   பார்க்க வில்லை என்று இப்போது அவர்கள் சொன்னால் அவர்களுக்கு என்ன தண்டணை?

விசாரணை கமிஷன் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்து விடும் என்று எதிர் பார்க்க முடியாது.

ஆனால் குற்றம் நடந்திருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியும்.

யார் யார் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்ட முடியும்.

அதன் பிறகு குற்ற விசாரணை நடந்து குற்றவாளிகள் மீது குற்ற பத்திரிகை தாக்கல்  செய்து விசாரணை  நடந்து அதன் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்.

அதற்காக நாம் கமிஷனின் அறிக்கைகாக காத்திருக்க வேண்டியதுதான்.

அதற்குள் அப்போல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டி இன்று அளித்திருக்கும் பேட்டி அதிர்ச்சி தரக் கூடியது.

”   ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை மருத்துவ மனைக்கு கொண்டு வந்தார்கள். அன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டிருந்தோம் . மக்கள் அச்சப் படக்கூடாது என்பதற்காகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் உண்மை நிலையை தெரிவிக்க வில்லை ”   இதுதான் ரெட்டியின் பேட்டி.

அப்படி செய்வதற்கு எந்த மருத்துவ மனை நிர்வாகிக்காவது உரிமை இருக்கிறதா?

சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை.    அரசிடம் உண்மையை கூறி அவர்கள் சொல்லியபடி உண்மையை மறைத்தாரா?     அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

அவரிடம் உண்மையை சொன்னாரா இல்லையா?

இவரும் சசிகலா சொல்லித்தான் அப்படி  நடந்து  கொண்டோம் என்று சொல்லப் போகிறாரா?

இன்னும் எத்தனை மருத்துவர்கள் தான் அப்படி சொல்லப் போகிறார்கள்.?

வெளிநாட்டு மருத்துவர்களும் ஏய்ம்ஸ் மருத்துவர்களும் என்ன சொல்லப் போகிறார்கள்?

மருத்துவர்கள் பொய் சொன்னால் தண்டனை  இல்லையா?

உண்மை தெரிந்தே ஆக வேண்டும்.

5 மாதங்களில் ரூ 8000 கோடி நன்கொடை பா ஜ க வுக்கு வந்தது எப்படி ? அன்னா ஹசாரே கேள்வி?

பா ஜ க வுக்கு கடந்த ஐந்து மாதங்களில் 8000 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்திருப்பதாக போபர்ஸ் பத்திரிகை ஆய்வு செய்து தகவல் வெளியிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஊழலில் இந்தியா முதல்  இடத்தில் இருக்கிறது.   மோடி அரசில் லஞ்சம் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

லஞ்ச ஊழல்  அற்ற அரசை நடத்திக்  கொண்டு இருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு  இருக்கும் நிலையில் இப்படி  ஒரு குற்றச்சாட்டை பொறுப்பான தலைவர் ஒருவர் கூறுகிறார்.

ஒன்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது உண்மையை விளக்க வேண்டும்.

கார்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே மோடி அரசு  செயல் படுகிறது என்பதுதான் எல்லாருடைய குற்றச்சாட்டும்.

இந்த நிலையில் அவர்களிடம் நன்கொடை வாங்கி தேர்தல் செலவு செய்து வெற்றி பெறுவதற்கு திறமை தேவையில்லை.

விளக்கம் தர வேண்டும் பா ஜ க .