Home Blog Page 84

மதங்களைத் தடை செய்து கடவுளைக் காப்போம்!!!

மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள் தமிழில் உண்டு.

எல்லா மதங்களும் வெறியைத்தான் தூண்டுகின்றன.   அப்படித்தான் அந்தந்த மதங்களை சேர்ந்த மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள்.

அநேகமாக  உலகில் நடக்கும் பெரும்பான்மையான போர்கள் மதங்களை அடிப்படையாக கொண்டே நடக்கின்றன.

கடவுள் நம்பிக்கைக்கும் மதம் என்று சொல்லிக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.?

ஏசுவை நம்பு . அவர் போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடி.  யாரும் தடுக்க முடியாது. எந்த சட்டமும் தடுக்காது.  பைபிள் உன் வாழ்க்கைக்கு துணையாக இருக்கட்டும்.   அதற்கு உன்னை நீ ஏன் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்?    கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்ளாவிட்டால் நீ கிறிஸ்தவன் ஆக மாட்டாயா?

நீ அல்லாவை  நம்பு.  குரான் தந்திருக்கும் ஐம்பெரும் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்று. இறைவன் எவரையும் வெறுக்க கட்டளை இட்டிருக்க மாட்டார். அன்பையும் கருணையையும் வாழ்வில் கடைப்பிடிக்கும் எவரையும் அல்லா கைவிட மாட்டார்.  ஆனால் அதற்கு உன்னை நீ முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமா?    முஸ்லிம் என்று  சொல்லிக் கொள்ளாமல் குரான் காட்டும் வழியில் பிறழாது வாழும் எந்த மனிதனை அல்லா ஏற்றுக் கொள்ள மறுப்பார்?

இந்து என்பது மதமே இல்லை.   பின் ஏன் உன்னை இந்து என்று சொல்லி கொள்ள வேண்டும்?  வேதம், அதை விளக்க வந்த ஸ்மிருதிகள் , புராணங்கள் என்று சமஸ்க்ரிதத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் கதைகள்  நம்பிக்கைகள் ஆகட்டும் பிற மொழிகளில் வழங்கும் கடவுள்  சம்பந்தமான ஆயிரமாயிரம் நம்பிக்கைகள் கதைகள் ஆகட்டும் எதிலாவது இந்து என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதா?    நீ எந்தக் கடவுளை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வணங்கு ,பிரார்த்தி  , எந்த சடங்குகளை வேண்டுமானாலும் கடைப்பிடி  எவர் உன்னை தடுக்க முடியும்?      முஸ்லிம் கிறிஸ்தவன் அல்லாதவன் எல்லாம் இந்து என்று ஏன் கூட்டம் சேர்க்கிறாய்?   மற்றவர்களோடு சண்டை போடவா?

கடவுள் பாவம் எல்லாவற்றையும் கடந்தவர்.  அவரா அவளா அதுவா என்பது கூட புதிர்.   கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதுதானே உண்மை.   எல்லா மதங்களின் அறிஞர்களையும் கூட்டி பல ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி எதிலும் முழு உண்மை இல்லை என்று கண்டறிந்து அறிவித்தாரா இல்லையா மாமன்னர் அக்பர். ?

எல்லா மதங்களும் ஒரே இறைவனையே இறுதியில் கொண்டு சேர்க்கின்றன என்பதை ஒப்புக் கொண்ட பின்  ஏன் தங்கள்  மதங்களில் ஆட்களை சேர்க்க அலைகிறீர்கள்?

யூதம், பௌத்தம் , சமணம் சீக்கியம் , இன்னும் சீனாவில் ஜப்பானில் ஆப்பிரிக்காவில் பின்பற்றப் படும் எல்லா மதங்களும் அநேகமாக ஒரே இறைவனையே அடைய வழி காட்டுகின்றன.

மதங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள், மற்றவர்களை அடிமைகள் ஆக்கி அவர்களின் செல்வங்களை கொள்ளை அடிக்க நினைப்பவர்கள், வேலையே செய்யாமல்  பிழைக்க நினைப்பவர்கள் , இவர்கள்தான் மக்களை மடையர்கள் ஆக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பத்து கடவுள் வாழ்த்து பாடிய வள்ளுவர் எந்த கடவுளின் பெயரையும்  சொல்ல  வில்லை.   ஏன் ராமனை கதாநாயகனாக வைத்து  ராமாயணம் இயற்றிய கம்பர் கூட கடவுள் வாழ்த்தில் கடவுள் பெயரை குறிப்பிட வில்லை.   தமிழன் கடவுளை நம்பினான்.   முன்னோர்களை மட்டுமே கடவுளின் வடிவமாக உருவகப் படுத்தி  மரியாதை செலுத்தினான்.

கடவுள் மனிதனிடம்  எதிர்பார்ப்பது எதையும் இல்லை.    எதை செய்தால் கடவுள் மகிழ்வாரோ அதை செய்வது மட்டுமே மனிதர்களின் கடமை.

சட்டத்தால் மதங்களை தடை செய்ய முடியாது.    மனிதர்களால் முடியும்.   உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதர்களால் மட்டுமே முடியும்.

அரசு , நிறுவனங்கள்,    உறவுகள் , என்று எதிலும் மதம் என்ன கேள்விக்கு மதத்தை  சொல்லாமல் நான் தமிழன்  நான் மலையாளி, நான் தெலுங்கன், நான் இந்திக்காரன், மராட்டியன் என்று மொழியை மட்டுமே யார் குறிப்பிடுகிறார்களோ அவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்ற புது மரபு உருவாகட்டுமே!!!

தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால் எந்த மதமும் இல்லை என்று குறிப்பிட ஒரு இடம் கொடுக்கட்டுமே?   அவன் கடவுள் நம்பிக்கையாளன்.   ஆனால் மதத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்று பொருள் .

நாத்திகன் இல்லை என்பதையும் ஆனால் மதம் சாராதவன் என்பதையும் குறிக்கும் தகுந்த வேறு சொல் கிடைத்தால் அதையும் பயன் படுத்தலாம்.

எப்படியோ ,

மனிதர்களை மாய்க்கும் மதங்களை ஒதுக்குவோம்.

கடவுளைக் காப்போம்!!!

எந்த மாநிலத்தில் பிற மொழிக்காரன் முதல் அமைச்சராக வர முடிந்திருக்கிறது? ஏமாந்தவன் தமிழன்தானா???!!

தமிழை தாய் மொழியாக கொண்டோர் மட்டுமே தமிழ் நாட்டில் முதல் அமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது?

மற்ற யாரும் வேறு எந்த பொறுப்புக்கும்  வரட்டும் . மக்கள் பணி புரியட்டும்.     முதல்வராக மட்டுமே வருவேன் என்று பிற மொழிக்காரார்கள் முயல்வது நியாயம்தானா?      ஏன் வேறு பொறுப்புகளில் அமர்ந்து பணி செய்யக் கூடாது?

பல மாநிலங்களில் பிற மொழிக்காரர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகி இருக்கிறார்கள்.

ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.    ஏன் அமைச்சர்கள் கூட ஆகி இருக்கிறார்கள்.    முதல் அமைச்சர் ஆகி இருக்கிறார்களா?

ஏன் தமிழ் நாட்டில் மட்டும் ஆக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது?

அவர்கள் நடிகர்கள் ஆகட்டும்.    அரசியல்வாதிகள் ஆகட்டும்.   விஞ்ஞானிகள் ஆகட்டும்.   ஆகச்சிறந்த நிபுணர்கள் ஆகட்டும்.   தமிழர்களை  முதல்வராக ஆள்வதற்கு அந்த தகுதி மட்டும் போதுமா?

போதும் என்கிறது.    அரசியல் சட்டம்.     யாரும் அரசியலுக்கு வரலாம்.    மக்களின் நம்பிக்கையை பெறலாம்.  நம்பிக்கையைப் பெற்றால் ஆளலாம்.    ஆண்டு வந்திருக்கிறார்கள்.          எம்ஜியார்   ஜெயலலிதா தமிழர்களா இல்லையா என்ற விவாதத்தை தள்ளி வைப்போம்.    அவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.    ஆண்டார்கள்.

எம்ஜியார் பெரியார் உருவாக்கிய திராவிட கொள்கையை நீர்த்துப் போக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஆனால் ஜெயலலிதா திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கிக் கொண்டே  அதன் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க அத்தனையும் செய்தார்.     கலைஞர் மீதான எதிர்ப்பு அதிகம் இருந்த அந்த தொண்டர்களுக்கு  தலைமை தாங்கி திராவிட இயக்க கொள்கைகளை மழுங்க செய்த அவரின் செயல்பாடுகளை விமர்சிக்க யாருக்கும் அங்கே தைரியம் இருக்க வில்லை.

வெற்றி தந்த ஆட்சி, ஆட்சி தந்த வசதிகள்  கொள்கைகளை மரத்துப் போகச் செய்து விட்டன.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க பிரச்சாரம் செய்யும் எந்த அதிமுக தொண்டரையாவது எங்காவது இன்று காண  முடியுமா?

திமுக தொண்டர்களே ஆன்மிக பாதைக்கு திரும்பி விட்டார்கள் என்ற பிரச்சாரம் இப்போது தீவிரமாகி விட்டது.    அதில் உண்மை இருக்கிறதா என்பது வேறு?

ரஜினியையும் கமலையும் எப்படி பயன் படுத்தி மீண்டும் திராவிட இயக்கத்தை பாழ் படுத்துவது என்று படு தீவிரமாக சதி திட்டம் உருவாகி வருகிறது.

தமிழர்  மட்டுமே ஆளவேண்டும் என்றே இருக்கட்டும்.     யார் தமிழர் என்பதில் அடுத்த விவாதத்தை எதிர்பார்த்து நாற்பது ஆண்டுகள் இங்கே வாழ்ந்து மக்களோடு ஒன்றி வாழ்ந்து புகழோடு இருப்பவர்கள்  தமிழர்கள் இல்லையா என்று கேட்பார்கள்?    கேட்டாரே  ரஜினி?    பச்சைத் தமிழன் என்றாரே?

தமிழ் பேசினால் மட்டும் போதாது.     நான் தமிழன் என்ற உணர்வு உனக்கு இருக்கிறதா?   தமிழின் தனித் தன்மையை கட்டிக்  காக்க வேண்டும் என்ற உணர்வு உன் ரத்தத்தில் ஊறி இருக்கிறதா ?   தமிழர் தன்மையை   கட்டிக் காக்க வேண்டும் என்ற கடமை இருப்பதாக உணர்கிறாயா?   தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று உளமார நம்புகிறாயா?    நீ தமிழன். 

                         தமிழ் பேசுபவன் மட்டுமே தமிழன் என்றால் அதே அளவுகோல் எல்லா மாநிலங்களுக்கும் இருக்க வேண்டும் அல்லவா?

எந்த மாநிலத்தில் பிற மொழி பேசுபவர்கள் என்ன செல்வாக்கு இருந்தாலும் முதல் அமைச்சராக அனுமதிக்கிறார்கள் ?     சிந்திக்கக் கூட முடியுமா?

இந்தக் கேள்விக்கு பதில் காண்பதில் தமிழர் தலைவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.     ஏன் அவர்கள் இந்த கேள்வியை கேட்பதும் இல்லை.    பதில் சொல்வதும் இல்லை.     அவர்கள் தகுதியில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதா?

எவரும் தமிழர் தலைவர்களாக இல்லை என்பதும் எல்லாரும் ஏதாவது ஒரு சாதி தலைவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

ஆக தமிழர்களாக ஒன்று படுவதில் அல்லது ஒன்று படுத்துவதில் சாதி குறுக்கே நிற்கிறது.

தமிழர்கள் ஒன்று படுவது எப்படி  , சாதி ஒழிப்பது அல்லது பேதம் ஒழிப்பது எப்படி , இடையில் வரலாற்று உண்மையாக உருவாகும் கோடரிக் காம்புகளை எதிர் கொள்வது எப்படி என்று உடனடியாக விடை கிடைக்க முடியாத பல கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.

அவைகளுக்கெல்லாம் நிதானமாக  பதற்றமில்லாமல் பொறுமையாக பேசி முடிவு கண்டே ஆக வேண்டும்.

அதுவரை எந்தக் காரணம் கொண்டும்,

தமிழை தாய் மொழியாக கொண்டிராத எவரையும் ,

தமிழக முதல்வராக வர அனுமதிக்க மாட்டோம் ,

என்ற உறுதியை  உளமார உறுதி செய்வோம்.

அந்த நிலை உருவானால் தடுக்க எல்லா வகையிலும்

ஜனநாயக முறைப்படி போராடி தடுப்போம் ! வெல்வோம்!

 

 

நோட்டீஸ் விநியோகித்தால் கைது செய்யும் அரசை எப்படி தண்டிப்பது? பொய் வழக்குப் போடும் போலீசை எப்படி தண்டிப்பது?

சேலத்தில் நீட் தேர்வை எதிர்த்து நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரன் ஆதரவாளர்கள் மீது
வழக்குப் பதிவு செய்யப் பட்டு மூன்று பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

நோட்டீஸில்கண்டது வன்முறையை தூண்டியதாக இருந்தால் நியாயப்படுத்தலாம். ஆனால் மத்திய பா ஜ க
அரசின் வஞ்சகத்தையும் மாநில அரசின் கையால் ஆகாத்தனத்தையும் மக்கள் மத்தியில் பரப்பினால்
எப்படி குற்றம் ஆகும்?
ஏற்கெனெவே நீட் தேர்வை கண்டித்து பொது கூட்டம் கூட்ட தடை போட்ட திருச்சி காவல் துறையின் உத்தரவை

நீதிமன்றம் மூலம் தகர்த்து கூட்டம் நடத்தினார்கl.

ஆக அரசை விமர்சித்து பொதுக்கூட்டம் போடக்கூட நீதிமன்றம் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டிய

அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

மே பதினேழு இயக்க திருமுருகன் மத்திய பா ஜ க அரசை விமர்சிக்கிறார் என்பதற்காகவே அவர் மீது
காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. குண்டர் சட்டம் பாய்கிறது . நீதிமன்றம் உடைக்கிறது.

காவல்துறை இப்படியெல்லாம் சட்டத்துக்கு புறம்பாக வன்முறையை ஜனநாயக முறையில் நடைபெறும்

போராட்டங்கள் மீது கட்டவிழ்த்து விட வேண்டிய அவசியம் என்ன?
போராட்டங்கள்தான் மக்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கிறது.
மக்களை அடிமைகளாக நடத்த விரும்பும் அரசியல்வாதிகள்தான் காவல்துறை மூலம் போராட்டங்களை நசுக்க முயற்சிக்கிறார்கள்.
பொய் வழக்கு போட்டால் தண்டனை உண்டு என்ற நிலை உருவாக வேண்டும் .
முதல் தகவல் அறிக்கை பெற்று கைதுக்கு கொண்டு வரும்போதே நீதிபதிக்கு இது குற்றமா இல்லையா

என்பது தெரியாதா? பின் ஏன் ரிமாண்ட் செய்ய வேண்டும்? மேல் எழுந்த வாரியாக பார்க்கும் போதே இது குற்றம் அல்ல

என்றால் விடுதலை செய்வதுதானே முறை?

வேறு ஒரு கண்ணோட்டத்தில் இதில் அநேகமான எல்லா கட்சிகளும் பாதிக்கப் படுகிறார்கள். ஏன் அனைவரும் சேர்ந்து

இந்த சட்ட முறைகேட்டை , எதிர்த்து தக்க நடவடிக்கை எடுத்து வெற்றி பெற முடியவில்லை.
யார் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்துக்கு முரணாக அடக்கு முறையை பயன் படுத்த முடியாத நிலையை உருவாக்குவதில்தான்

ஜனநாயகத்தின் வெற்றி இருக்கிறது.

சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளுக்கு பணிய வேண்டிய அவசியம் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்ற ஜெயப்ரகாஷ் நாராயணன்

முன்னெடுத்த முழுப் புரட்சி அமுலுக்கு வந்தே ஆக வேண்டும்.

இல்லையென்றால் தகுதி இல்லாத சுயநல மிக்க அரசியல்வாதிகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவே முடியாது.
அனைத்துக் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்தி முடிவு காண வேண்டிய அவசர பிரச்சினை இது.

 

சுயமரியாதை திருமணங்கள் நடப்பதை சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டாமல் சதி செய்வது யார்?

தமிழ்நாட்டில்  1967  ல் இருந்து இந்து சுயமரியாதை திருமணங்கள் சட்ட பூர்வமாக்கப் பட்டு விட்டன.    அறிஞர் அண்ணா செய்த அரும்புரட்சி அது.

அது முதல் தமிழ் நாட்டில் நடைபெறும் திருமணங்களில் ஐம்பது சதத்துக்கு மேல் சுயமரியாதை திருமணங்கள் தான் நடை பெற்று வருகின்றன.

புரோகிதர்கள் சொல்லும் சமஸ்க்ரித மந்திரங்களின் பொருள் என்னவென்றே தெரியாமல் கண் மூடித்தனமாக சொல்வதை செய்து கடமையே என்று தாலி கட்டி திருமணம் செய்வதுதான் தமிழர் திருமணம் என்று கேவலமாக சொல்லிக்  கொண்டிருந்தனர்.

அந்த கேவலத்தை மாற்றியவர்கள்  பெரியாரும் அண்ணாவும்.

தமிழர் திருமணம் நடத்துவது எப்படி என்று  1937  லேயே மறைமலை அடிகள் வரையறை செய்து மணமக்கள் பெரியோர் முன்பு இறை நம்பிக்கையோடு உறுதி மொழி எடுத்துக் கொண்டு  மணமகன் மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவிப்பதை அமுல் படுத்தினார்கள்.

இன்று நாட்டிலேயே மாலை மாற்றிக்கொண்டு, மோதிரம் மாற்றிக்கொண்டு , உறுதி மொழி எடுத்துக் கொண்டு , தாலி கட்டிக்கொண்டு, என்று ஏதாவது ஒரு முறையில் சாட்சிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டால் சட்டப் படி செல்லும் என்று  சட்டம் இருப்பது தமிழ் நாட்டில் மட்டுமே.

சுயமரியாதை திருமணங்கள் என்பன நாத்திக திருமணங்கள் அல்ல.      இறை நம்பிக்கையோடு அவரவர் குடும்ப சடங்குகளை நடத்திக் கொண்டு முறையாக மங்கல நாண் அணிவித்து திருமணம் செய்வதுதான் தமிழர் திருமணம்.      எல்லா சாதிகளுக்கும் பொருந்தும் விதத்தில் ஒரு மண முறையை வகுத்துக் கொடுப்பது தமிழ் அறிஞர்களின்  தலையாய பணி.       அத்தகைய ஒரு அரசியல் , சாதி  சமயம் சாரா  பொது தமிழ் அறிஞர் அமைப்பை ஏற்படுத்துவது மிக மிக மிக அவசரம் அவசியம்.

இதே  சட்டத்தை நாடு முழுதும் அமுல் படுத்தும் முயற்சிகளை தி மு க தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

பழந்தமிழர்கள்   தங்கள் வீடுகளிலேயே உறவினர்கள் முன்னிலையில் மங்கல நாண் அணிவித்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததை ஆரியர்கள் எப்படியோ மாற்றி விட்டார்கள்.

அதிலிருந்து மீண்டு மானமுள்ள மண முறைக்கு தமிழர் மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

நாம் கேட்கும் கேள்வி .    நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சுயமரியாதை நடை முறையை ஏன் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்ட மறுக்கிறீர்கள்?      யார் தடுப்பது?     சதியா?   அறியாமையா?

இயக்குனர்களுக்கு நாட்டில் நடப்பது தெரியாதா?

தவிரவும் சுயமரியாதை திருமணங்களை எள்ளி நகையாடும் விதத்தில் கேவலமாக சித்தரிப்பதும் நடக்கும்.    அது நடந்தால் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்?

இயக்குனர்கள் சிந்திக்கட்டும்!!!

 

புதிய ஆளுநர் அமித் ஷா முடிவை மீறி செயல் படுவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா?

பன்வாரிலால் புரோஹித் புதிய ஆளுநர் சட்ட பூர்வமாக செயல்பட்டு  தமிழ் நாட்டில் நிலவும் அசிங்கங்களை களைய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதும் வேண்டுவதும் மரபாக இருப்பதால்  திமுக செயல் தலைவர் தளபதி   அன்புமணி ராமதாஸ் உள்பட எல்லாரும் வேண்டுகோள் வைத்து விட்டனர்.

வித்யா சாகர் என்ன செய்தாரோ அதையே பன்வாரிலால் புரோஹித் செய்யப் போகிறார்.

தொடக்க முதலே சசிகலா-தினகரன் எதிர்ப்பு நிலையை அமித்ஷா-மோடி கூட்டணி எடுத்து விட்டது.

ஓ பி எஸ் -இ பி எஸ் இருவரும் போதும் . அவர்களிடம் ஐம்பது சதம் பேரம் பேசி இடம் வாங்கி காலூன்றி விடலாம் என்ற திட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும்  இல்லை.    சென்னையின் அறிவுஜீவி  ஆலோசனை தான் அங்கே ஒப்புக்கொள்ளப் பட்டு இங்கே இந்த அடிமைகளால் அமுல் படுத்தப் பட்டு வருகிறது .

எதிர்பாராத விதமாக தினகரன் இருவருக்கும் போட்டியாக ஒரு சமபலத்துடன் கூடிய அமைப்பை உருவாக்கி விடுவார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம்.      ஐ டி   சி பி ஐ  என்று மிரட்டி அடக்கி விடலாம் என்ற நம்பிக்கை  இன்னமும்  அவர்கள் நடவடிக்கை களில் நன்றாக  தெரிகிறது.

நீதிமன்றம் ஒன்றே நம்பிக்கை தரும் அமைப்பாக இருந்தது.     அது நாளை என்ன செய்யும் என்று தெரிய வில்லையே?

தகுதி நீக்கம் ரத்து செய்யப் பட வேண்டும்.   அது உச்ச நீதி மன்றம் வரை செல்லும்..   திமுக உறுப்பினர்களின் உரிமைக்குழு முடிவு வேறு இருக்கிறது.

பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசு வெட்கமே இல்லாமல் சட்ட ஓட்டைகளை சாக்கு சொல்லி பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருந்து கொண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்று   ஆண்டவர்கள் உண்டு.       அதை சட்ட மன்றத்தில் நிருபித்து விட்டால் பிரச்னையே இல்லையே?    ஏன் தயங்குகிறீர்கள்?       சட்ட மன்றத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்காமல் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்த சிறுபான்மை  அரசு ஏதாவது உண்டா?

ஒரு கட்டத்தில் தி மு க – காங்கிரஸ்- முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்    98  பேரும் ராஜினாமா செய்தால்தான் சட்ட மன்ற மாண்பு காப்பாற்றப் படும் என்றால் அதையும் செய்ய அவர்கள் தயங்க  கூடாது. 

அப்போதும் கூட இந்த வெட்கம் கெட்ட அரசு பதவியில் எப்படியாவது ஓட்டிகொண்டிருக்க முயல்வார்கள்!

ஒன்று நீதிமன்றம் நியாயமான தீர்வை சொல்ல வேண்டும்.

அந்த நீதி மன்ற நீதி கிடைக்க காத்திருக்கும் காலம்தான் இந்த ஆட்சிக் கொள்ளையர்களுக்கு வேண்டும்.  அதை தவிர்ப்பது இயலாது.

அல்லது மக்கள் போராட்டம் நடத்தி  இனி பொது தேர்தல் நடத்தி தான் ஆள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இரண்டில் எது நடந்தாலும் அது விரைவில் நடக்க வேண்டும்.

                                  

 

பொய் சொன்னோம் என்று ஒப்புக் கொள்ளும் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக நீடிக்கலாமா?

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பேசிய பேச்சு இது :

” அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள் சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம்.  ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்க வில்லை . இதுதான் உண்மை.”

” நம்முடைய கட்சியின் ரகசியம் வெளியே பொய் விடக் கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம். இதுதான்  உண்மை.”

இது மாதிரியான ஆட்களை அமைச்சர்களாக வைத்திருக்கும் நாடு எப்படி உருப்படும்?

நேற்று பேசியது பொய் என்று இன்று பேசும் ஆள்   இன்று பேசியது பொய் என்று நாளை சொல்ல மாட்டார்  என்பது என்ன நிச்சயம்?

நாங்கள் பார்த்தால் ஜெயலலிதா உண்மையை சொல்லி விடுவார் என்று மறைத்தார்கள் என்று சொல்லும் சீனிவாசன்,  வார்டு பாய்கள், நர்சுகள்,    உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்கள் என்று பலரையும் ஜெயலலிதா பார்த்தபோது ஏன் சொல்லியிருக்க கூடாது என்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.?

சி பி ஐ விசாரிக்கட்டும்.    உண்மை வெளிவரட்டும் என்று பலரும் எதிர் பார்க்கிறார்கள்.

சந்தேகங்கள்  பல தீர்க்கப் பட வேண்டியது உள்ளது.    அது வேறு.   ஆனால் கூட இருந்தே அதிகாரத்தில் இருந்த பன்னீர்செல்வமும் , எடப்பாடியும்  மற்றவர்களும் தங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியுமா?

மிரட்டி பணிய வைத்தார்கள் என்றால் நீங்கள் மிரட்டல்களுக்கு  அஞ்சுபவர்கள் என்று ஆகிறது.    இன்று எந்த மிரட்டலுக்கு அஞ்சுகிறீர்களோ?   மிரட்டும் ஆட்கள் தான் மாறி இருப்பார்கள்.    அது பா ஜ க என்று வெளிச்சமாகி விட்டதே?

மொத்தத்தில் ஆளும் அருகதை அற்றவர்கள் நீங்கள் என்பது நிருபிக்கப்  பட்டு  விட்டது.

 

 

திராவிடத்தை நீர்த்துப் போகச்செய்ய கமலை விட்டு ஆழம் பார்க்கும் பார்ப்பனீயம் ??!!

திராவிட இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது பார்ப்பனீயம் .

ரஜினிகாந்த் அதில் ஒரு பங்கு.    லதாவை திருமணம் செய்து பாதி பார்ப்பனர் ஆனவர் அவர்.    என்றைக்கும் திராவிட இயக்க கொள்கைகளை ஆதரித்து பேசியவர் அல்ல.      சினிமாவில்  கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில்  நீடிப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருந்ததில்லை.     ரசிப்போம். கொண்டாடுவோம்.

ஜெயலலிதாவுக்கு எதிராக 1996  ல் குரல் கொடுத்தபோது ஊழலுக்கு எதிரான குரலாக இருந்ததால் எல்லாரும் வரவேற்றார்கள்.    அதற்கும் மேலே எந்த கொள்கைக்கும் சொந்தக்காரராக அவர் தன்னை அடையாளப் படுத்தவில்லை.

தமிழ்நாடு சார்ந்த காவிரி போன்ற பிரச்னைகளிலும் பெரிதாக குரல் கொடுத்ததில்லை.

இப்போது திடீரென்று அரசியல் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.    போர் வந்தால் பார்ப்போம் என்கிறார்.

அடுத்தது கமல்ஹாசன்.

இன்று அவர் உதிர்த்த முத்துக்கள் இவை.

”  ‘   அரசியலுக்கு வந்து விட்டேன்.  கட்சியின் பெயர் முன்பே ஆலோசித்து இருக்கிறேன்.”

‘   திட்டங்கள் கொள்கைகள் குறித்து உடனே சொல்வதற்கு விரும்பவில்லை. இது  ஒரு சிறிய விஷயம்.”

”   முதல் அமைச்சர் ஆக தயாராகவே இருக்கிறேன். கஜானாவை காலியாக வைத்துள்ளனர். மக்கள் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஊழலுக்கு மக்களே பொறுப்பு.”

”   இப்போது தேர்தல் வந்தால் நானும் அதில்  களம் இறங்குவேன்.     ”

”    காவி எனது நிறம் அல்ல.   கருப்புக்குள் காவியும் அடக்கம். ‘

”     நான் பசு வதை எதிர்ப்பாளர்களுக்கு எதிரானவன்.”

”     நான் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவன்.    ஆனால் எந்த மதத்துக்கும் கடவுளுக்கும் எதிரானவன் அல்ல.   நல்லது செய்தால் காவி கட்சிகளுடன் கூட பேசுவேன். ”

”  மோடி நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பண மதிப்பு ஒழிப்பு திட்டம் சிறந்த திட்டம்தான். நான் பொருளாதார நிபுணன் அல்ல. எனவே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ”

இப்படி பேசுபவர் பற்றி என்ன முடிவுக்கு மக்கள் வர முடியும். ?

சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் நிலையை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவர் தான் இப்படி  பேச முடியும்.

பா ஜ க கமலை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வதெல்லாம் நாடகம் என்பதை மக்கள்  அறிய மாட்டார்களா என்ன?

எம் ஜி யார் , ஜெயலலிதா, என்று பார்ப்பன ஆதரவாளர்களிடம் ஆட்சியை கொடுத்து                  திராவிட இயக்கத்தை பாதி ஒழித்து விட்டார்கள்.    மீதி இருப்பதை ரஜினி  , கமல்  என்று புகுத்தி ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

கமல் ஒரு தமிழ் பார்ப்பனர் என்பதால் மட்டும் நாம் இந்த கருத்தை சொல்ல வில்லை.   கமல் என்றாவது சாதி ஒழிப்பை பற்றி பேசி இருக்கிறாரா?      நாத்திகர் என்று சொல்லிக் கொள்கிறார் .  மகிழ்ச்சி.   அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?     மதத்தில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?     இந்து மதத்தில் சமநீதி வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?        பேசட்டும் . வரவேற்போம்?

கொள்கையையே சொல்லாமல் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்கிறாரே என்ன  கொடுமை இது?      வெறும் சினிமா மோகத்தில்  தமிழ் முட்டாள்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கைதானே?

ஏற்கனெவே அதிமுக என்ற திராவிட இயக்கத்தை பா ஜ க ஊழல்  சிபிஐ. ஐடி  என்றெல்லாம் மிரட்டி பணிய வைத்திருக்கிறது.

இடது சாரி இயக்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கட்சியில் பிராமணர்  ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு  இருக்கிறதா இல்லையா?

தமிழ் நாட்டை தமிழர் தலைவர்களை  ஆள விடக்கூடாது என்று பார்ப்பனீயம் பல வித வேடங்களில் பாடு பட்டுக் கொண்டிருக்கிறது ?

அதற்குத் தகுந்தாற்போல் தகுதியான தமிழர் தலைவர்கள் உருவாக வில்லையே?     யாரை நொந்து கொள்வது?   அவர்களைப் பற்றி அடுத்துப்  பேசுவோம்.

நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் நற்பணி மன்றம் என்று ஊருக்கு ஊர் போர்டு வைத்து கொண்டாடும் இளைஞர் களை பெற்றோர் அடக்கி வைக்கும் நாள் வந்தே ஆக வேண்டும்.

தமிழர்களே கமலை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.!!!

 

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களோடு மகாபுஷ்கர நீராடல்??!!

எடப்பாடி பழனிசாமி தன் அமைச்சரவை சகாக்களுடன் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடினார்.

சிதம்பரம் தியாகப்பா தீட்சிதர் வேதமந்திரங்கள் சொல்ல அதை இவர் திருப்பி சொல்ல ஆற்றில் இறங்கி புனித  நீராடினர்.    ஓ எஸ் மணியன் சம்பத்  கொறடா ராஜேந்திரன்  குடந்தை ராமநாதன் எல்லாரும் சேர்ந்து புனித நீராடினர்.

மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் புனித நீராடிவிட்டு  அ தன்பின் நடந்த  அரசியல் அலங்கோலங்கள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

விசேஷமாக காஞ்சி ஜெயேந்திரர் விழா மலரை வெளியிட இவர்கள் பய பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் யாரும் விதி விலக்கல்ல.  சபாநாயகர் தனபால் ,செங்கோட்டையன், வேலுமணி  காமராஜ் சேவூர் ராமச்சந்திரன், எல்லாரும் புனித நீராடி இருக்கிறார்கள்.

நீங்கள் பாவத்தை தொலைப்பதில் முனைப்பாக இருப்பதில் வியப்பில்லை.

இறைவன் அருள் உங்களுக்கு சித்திக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

ஒரே ஒரு வேண்டுகோள்.

உங்கள் கட்சி பேனர்கள்  துண்டு அறிக்கைகள், விளம்பரங்கள்  கட்சியின் கொள்கை விளக்க குறிப்புகள் இவற்றில்

பெரியாரின் படத்தை தயவு செய்து எடுத்து விடுங்கள்.

தினகரனுக்கு திருச்சியில் கூடிய கூட்டம்!!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தினகரன் திருச்சியில் ஒரு  பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்.

அதிமுக ஆட்சியாளர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு உருப்படியாக  எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , அனிதாவின் மரணம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தினகரன் நன்றாக  பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அனிதா தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.     அவர் மரணம் எல்லா சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளையும் பாதித்திருக்கிறது .       முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் , நாடார் , முத்தரையர் என்று சாதி வித்தியாசம் பாராமல்  அனிதாவின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து போராடி வருவது சாதி ஒழிப்பில் மாணவர்கள் நினைத்தால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது .

அது மட்டும் அல்ல.     இ பி எஸ் -ஓ பி எஸ்  இவர்களை இணைத்தால் போதும் இவர்களை வைத்து மிரட்டி பாதி இடங்களை வாங்கி கூட்டு வைத்து தமிழகத்தில் கால் ஊன்றி  விடலாம் என்ற ம் பா ஜ க வின் கனவு தினகரனால் சிதைக்கப் பட்டு விட்டது.

அ தி மு க வில் ஒரு பலமான நிர்வாகிகளை கொண்ட ஒரு கட்டமைப்பை தினகரன் உருவாக்கி விட்டார்.

இனி இவர்களை தவிர்த்து அ தி  மு  க என்ற கட்சி வலுவுடன் இயங்குவது கடினம்.

எப்படியோ பா ஜ  க வின் கனவு தகர்ந்தால் நல்லதுதானே!

 

ஆளுநர் துணையோடு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்வது அநீதியின் வெறியாட்டம் ?!

பெரும்பான்மை இழந்த எடப்பாடியின் ஆட்சி தொடர்வது மிகப் பெரிய அநீதி!

எப்படி இது சாத்தியம்?

பா ஜ க வின் ஆசியும் ஆளுநரின் தந்திரமும் இதை சாத்தியமாக்கி இருக்கிறது.

தினகரனின் ஆதரவாளர்கள் பதினெட்டு பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்  தெரிந்தே இந்த தவறை செய்திருக்கிறார்.

சபாநாயகர் பதவி பாதி நீதிபதிக்கு சமம்.    கால அவகாசம்  கேட்டு வழக்கறிஞர் மூலம் முறையிட்டும் கூட அவகாசம் அளிக்காமல் அவசரம் அவசரமாக தகுதி நீக்கம் செய்ய என்ன காரணம்?

அவர்கள் கட்சி மாறினார்களா?    சட்ட மன்றத்தில் கொறடா உத்தரவை மீறி மாறி                            வாக்களித்தார்களா ?

திமுக உறுப்பினர்கள்  21  பேர் மீது குட்கா கொண்டு வந்த பிரச்னையில் உரிமை மீறல் காரணம் காட்டி பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்க தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது.

அதேபோல் தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் பதினெட்டு பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க தடை கேட்டும் வழக்கு இருக்கிறது.  தலைவரை மாற்ற கோரி மனு கொடுப்பது தகுதி இழப்புக்கு காரணம் ஆகாது என்று தீர்ப்பு இருக்கிறது.

இந்த  39  பேரையும் பதவி நீக்கம் செய்து விட்டு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை காட்டி  ஆட்சியல் தொடர திட்டமிட்ட  எடப்பாடியின் கனவு வாக்கெடுப்பு நடத்தக் கூடாது  என்ற நீதி மன்ற உத்தரவால் தகர்ந்து போய் இருக்கிறது.

இப்படி எல்லாம் மோசடிசெய்து பதவியில் நீடிக்க வேண்டுமா என்ன?

வெட்க உணர்வு மரத்துப் போய் விட்டதா?     நம்பிக்கை இருந்தால் தங்கள் மீது உள்ள நியாயத்தை சட்ட மன்றத்தில் வைத்து விவாதித்து வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்வது மட்டுமே நாணயமானவர்கள் செய்ய வேண்டிய வேலை.

எடப்பாடி யும் பன்னீர்செல்வமும் அதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் பதவியில் ஒட்டிக் கொள்ள எதையும் செய்யும்  மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

டெல்லி எஜமானர்கள் கதை வசனம் எழுதி நடத்தும் நாடகத்தில் ஒழுங்காக நடித்துக் கொண்டிருப்பது மட்டுமே இன்று இவர்கள் செய்யும் வேலை.

இவர்கள் கையில்  தமிழகம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை.    தங்களையே விற்றவர்கள் நாட்டையா விற்க மாட்டார்கள்?

எஸ் ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் எப்போதெல்லாம் ஆட்சி பெரும்பான்மை இழக்கிறதோ அப்போதெல்லாம் சட்ட மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபித்து விட்டு மட்டுமே ஆட்சியில் தொடர வேண்டும் என்ற தீர்ப்பு இறுதியானது.

அந்த தீர்ப்பையே இன்று கேலிக் கூத்தாக்கு கிறார்கள்.

சட்ட மன்றத்தில் உடனடி நீதி  கிடைக்காது.

நீதிமன்றத்தில் நீதி கிடைக்க மாதக் கணக்கில் காத்துக் கிடைக்க வேண்டும்.

மக்கள்  புரட்சி ஒன்றே உடனடி மாற்றத்திற்கு வழி கிடைக்கலாம்.

வெடிக்குமா புரட்சி?