Home Blog Page 88

அரசியல் விபச்சாரி -பசை தடவி போஸ்டர் ஒட்டி; அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் வைகைசெல்வனும் பரஸ்பரம் குற்றச்சாட்டு !!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய பிறகு ஆய்வுக்கு சென்ற மாதிரிகள் குற்றச்சாட்டை நிரூபித்த மாதிரி தெரியவில்லை.

இந்நிலையில் பால் முகவர்கள்  சங்க செயலாளர் பொன்னுசாமியை அவர் ஒரு ப்ரோக்கர் என்று  அமைச்சர் பேசினார்.     குற்றச்சாட்டை நிரூபிக்க வில்லை  என்றால் அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொன்னுசாமி  பேட்டி கொடுக்கிறார்.

விமர்சித்த திமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வனை அவர் ஒரு அரசியல் விபச்சாரி என்றும் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்றும் பேட்டி கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி.

பதிலுக்கு வைகைசெல்வன் ராஜேந்திர பாலாஜி ஒரு பசை தடவி போஸ்டர் ஓட்டும் ஆள் என்றும் இன்னும் அவர் முதிர்ச்சி அடைய வில்லை என்றும் சேறு என்றும் சந்தனமாகாது என்றும் தான் தகுதியில்லாத அவரோடு சண்டையிட தயாராக இல்லை என்றும் திருப்பி சாடுகிறார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று பேட்டியளிக்கும் பா  ஜ க வின் சுப்பிரமணிய சாமி

” அவன் அரசியலுக்கு வரமாட்டான் ”  என்று ஒருமையில் பேசுகிறார்.

தமிழக அரசியலின் தரம் எங்கே போய்கொண்டு இருக்கிறது. ?

நான்காம் தர மேடை  பேச்சாளர்கள் எல்லாம் பெரிய பதவிகளுக்கு வந்த வினை !

முதல்வர் என்று ஒருவர்  இருக்கிறாரா?    அவருக்கு  தன் அமைச்சர்களை கண்டிக்கும் தைரியம் வரவே வராதா?

அரி என்ற பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையை கண்டிக்கிறார்.   வெற்றிவேல் அரியின் மீது பாய்கிறார். உட்கட்சி குழப்பம் எல்லையை தாண்டிக்கொண்டு இருக்கிறது.

எடப்பாடியோ எதையும் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்கு செயல் பட்டு கொண்டிருக்கிறார்.

யார் கட்டுப் பாட்டிலும் யாரும் இல்லை என்ற நிலை இங்கே .     அவர்கள் கையில் ஆட்சி  இருக்கிறது.       மக்களுக்கு யார் பாதுகாப்பு?

முதல்வர் பழனிசாமி மௌனம்  கலைக்கட்டும்??!!

பாஸ்போர்ட்டில் இந்தி சேர்ப்பு; தமிழிலும் கொடு !!!

பாஸ்போர்ட்டில் இனி இந்தியும் இடம் பேரும் என்று வெளிஉறவு த்துறை அறிவித்துள்ளது.

அதாவது  குடிமக்கள் குறித்த ஆங்கில விபரங்களுக்கு அருகில் தங்கள் விபரங்களை தேவநாகரி வடிவிலும் இடம் பெற செய்யலாம் என அறிவித்துள்ளது.

தேவநாகரி என்று இந்தியை மட்டும் ஏன் சேர்க்க வேண்டும்?   இந்தியை சேர்க்க முடியும் என்றால் மற்ற மொழிகளையும் சேர்க்க முடியும்தானே?

குறைந்த பட்சம் அந்தந்த மாநில மக்களுக்கு அவரவர் மொழிகளில் கூடுதல் விபரங்களை சேர்க்கும் வாய்ப்பை அளிப்பது அவசியம்.   அதுதான் இந்தியம்.    மறுத்தால் ஹிந்தியம்.

ஆங்கிலம் மட்டும் போதாது என்று மத்திய அரசு கருதினால்     22   இந்திய மொழிகளையும் இணைக்கட்டும். ஆனால் அது இந்தி மட்டும்தான் என்றால் மற்ற மொழிக்காரர்கள் இரண்டாம் தர குடிமக்களா என்ற கேள்வி எழுவதை  தடுக்க முடியாது.

இந்தியை எல்லா வகையிலும் திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.

கொடுமை என்னவென்றால் ஆந்திராவின் வெங்கையாவும் இந்தி  கற்காமல் வளர்ச்சி இல்லை என்று பேசுகிறார்.

மும்மொழிக் கொள்கை என்பது காகிதத்தில்தான்  இதுவரை இருந்து வருகிறது.   எந்த வட மாநில மக்களும் எந்த தென்னிந்திய மொழியையும் கற்றதாக  தெரியவில்லை.

இந்தித் திணிப்பு குற்றங்களை மத்திய அரசு கூட்டிக் கொண்டே போகிறது.

விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கு வலு கூட்டுவதாக அமையாது என்பதை இவர்கள் உணரும் காலம் வந்தே தீரும் . !!!

உள்ளூர் முஸ்லிம் டி எஸ் பியை அடித்தே கொன்ற காஷ்மிரி முஸ்லிம்கள்?!

காஷ்மீர் –  எரிந்து கொண்டிருக்கும் குளிர்ப்பிரதேசம் .

ஹுரியத் அமைப்பின் இரண்டு பிரிவுகள் சையது அலி ஷா ஜீலானி மற்றும் மிர்வாயிஸ் உமர்  பாருக் தலைமைகளில்.   யாசின் மாலிக்கின் ஜெ கே எல் எப் மூன்றாவது சக்தி.   எந்த தீவிரவாதி  கொல்லப்பட்டாலும் பந்த் அறிவிப்பது இவர்கள் வழக்கம்.

பாகிஸ்தானின் தூண்டுதலில் செயல்படும் சக்திகள் எப்போதும் தீவிர மாகவே இயங்கி வருகிறது.

மக்கள் இந்தியா பக்கம் இருக்கிறார்களா?      தங்களை இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்களா?

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி.  எனவே அதில் வசிக்கும் மக்கள் இந்தியர்களே.   அவர்கள்  இந்துக்களோ முஸ்லிம்களோ அது கணக்கல்ல.

தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆரம்பிக்கப் பட்டதேசிய மாநாட்டுக் கட்சி வாக்குரிமை தீர்மானிக்கட்டும் என்கிறது.

இடையில் பாகிஸ்தான் தன்  ஆயுதக்  குழுக்களை அனுப்பி சண்டையை வளர்த்து வருகிறது.

ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை நடத்த முடியவில்லை தேர்தல் கமிஷனால்.

ஐந்து முதல் பத்து சதம் மக்கள்தான் ஓட்டுப போட வருகிறார்கள்.

பிரிவினை சக்திகள் எந்தளவு வளர்ந்திருக்கிறார்கள் ?

முஹமத் அயூப் பண்டித் உள்ளுர்காரர்.    டி எஸ் பி யாக பணிபுரிகிறார்.   புகழ் பெற்ற ஜாமியா மசூதியின் பாதுகாப்பிற்கு சென்றார்.   கூட இருந்து பாதுகாவலர்களை  அனுப்பி விட்டு இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களை படம் பிடிக்கிறார்.    உடனே அங்கே இருந்த கூட்டம் அவரை உடையை களைந்து விட்டு கற்களாலும் தடிகளாலும்  தாக்கத் துவங்கு கிறார்கள்.     சாகும் வரை அடிக்கிறார்கள்.   அப்போது மசூதியின் உள்ளே குருவின்  உரை நடந்து கொண்டிருக்கிறது .

ஆக உள்ளூர் மக்களே அவரை இந்திய அரசின் பிரதிநிதியாக பார்கிறார்கள்.      தங்களை இந்தியர்களாக பாவிக்க மறுக்கிறார்கள். அவரும் முஸ்லிம்தானே என்ற உணர்வுகூட அவர்களிடம் அவரிடத்து பரிதாப உணர்வை தரவில்லை.

சட்டமும் ராணுவமும் இன்னும் எத்தனை காலம் அவர்களை கட்டுப் படுத்த முடியும்?

தாராள நிதியுதவி- பன்மடங்கு அரசின் உதவியுடன் எல்லாம் சகாய விலையில். – ஹுரியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு என்று எத்தனை உதவி செய்தாலும்  மக்களின் மனங்கள்  ஏன் இந்தியாவுடன் இணைய மறுக்கின்றன.

காவல் துறைக்கு  ஆள் எடுத்தால் மனுப்போட்டு குவிகிறார்கள் காஷ்மீர் இளைஞர்கள் .

இந்திய காவல் படைகள் மீது கல்லெறிவது என்பது ஒரு காஷ்மிரிய  பண்பாடு என்று ஆகிவிட்டது.   அவர்களுக்கு பணம் கொடுத்து கல்லெறிய அனுப்புகிறார்கள் என்பது குற்ற சாட்டு.

மக்களின் மனங்களை இணைக்கும் வழிகளை இந்திய அரசு ஆராய வேண்டும்.       துப்பாக்கி தோட்டாக்கள் மட்டுமே அமைதியை கொண்டு வந்து விட முடியாது.

இத்தனை நடந்த பிறகும் ஒரு பொதுமக்கள் கிளர்ச்சி  வெடித்திருக்க வேண்டுமே .      எல்லாம்  அமைதி  காக்கிறார்கள் ///

உள்ளூர்க்காரனை ,    இந்திய அரசின் பிரதிநிதியை   அடித்துக் கொன்றதை  நியாயப் படுத்தும் மக்கள்       எப்படி இந்தியர்கள் ஆவார்கள்? .

\                        என்ன செய்யப் போகிறது இந்திய அரசு?

 

 

 

 

தமிழன் தலையில் மிளகாய் அரைக்க தயாராகிறார் ரஜினி ! கைக்கூலிகளும் தயார்!!!

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று இருபத்தி ஐந்து ஆண்டுகளாக கேள்வியை மட்டுமே எழுப்ப வைத்து கலைத்துறையில் சுப்பர் ஸ்டாராக வலம் வந்தது போதும் உண்மையிலேயே வந்து பார்த்தல் என்ன என்று சிந்திக்க த்துவங்கி விட்டார் அவர்.

அமித் ஷா சொல்றார் ரஜினி செய்றார் என்று புது வசனம் எழுத வேண்டியதுதான்.

தமிழருவி மணியன்  அர்ஜுன் சம்பத்  போன்ற புல்லுருவிகள் நீண்டு கொண்டே போகிறது. அதில் திருமாவும் சேர்ந்தால் கூட  ஆச்சரியமில்லை.

தலித் ஆதரவாளர் என்ற உருவாக்கம் கபாலி படம் முதல் உருவாகி விட்டது.

தலித், உயர் சாதி இந்துத்துவ சக்திகளின் ஆதரவு மற்றும் சிதறிக் கிடக்கும் அதிமுக  உதிரிகள் என்ற மூன்றின் கட்டமைப்பு வெற்றியைக் கொடுக்கும் என்ற திட்டம் உருவாகியிருக்கிறது .

எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை என்றாலும் மத்தியில் பா ஜ க ஆட்சியில் இன்னும் சில காலம் மோடியின் செல்வாக்கு குறையாது என்ற  மதிப்பீடு மற்ற பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.

முதல்வர் இல்லாவிட்டாலும் ராஜ்ய சபா உறுப்பினர் மத்திய அமைச்சர் என்று உத்தரவாதம் அளிக்க கூடும்.    ரஜினி மயங்க கூடும்.

விலைபோகும் அ தி மு க அணிகள்!!! திராவிட இயக்க தொண்டனே வெளியே வா !!!

எடப்பாடி அணி  தினகரன் அணி  அதற்குள் திவாகரன் அணி  ஓ   பி எஸ் அணி      தீபா அணி என்று எத்தனை அணிகள் திரண்டாலும் அத்தனை பேரும் ஒன்றில் மட்டும் வாய் பேசா மௌனிகளாகவே மாறிப் போகிறார்கள்.

அது பா ஜ க வுக்கு ஆமாம் சாமி போடுவது.    காலில் விழுந்து கிடப்பது. ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருப்பது.

மொத்தத்தில் அடித்தாலும் அழாமல் இருப்பது.

இந்த அடிமைகளில் யார் நல்லவர்கள் என்று ஏன் பார்க்க வேண்டும்?

எல்லாருமே  ஏதோ ஒரு வகையில் மத்திய அரசின் கழுகுப் பார்வையில் இருக்கிறார்கள்.

சி பி ஐ  வருமான வரித்துறை அமலாக்கத் துறை என்ற மூன்றும் பா ஜ க வின் அரசியல் வியூகங்களை அமுல் படுத்தும் அதிகார மையங்கள்.  எல்லாருமே இவற்றிற்கு அஞ்சுகிறவர்கள்.

இந்த நிலை நீடிப்பது நல்லதல்ல.

சட்ட மன்றத்தில் ஒட்டு வாங்க பண பேரம் பேசியதாக வந்த வழக்கில் வழக்கு  பதிவு செய்ய தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை அமுல் படுத்த வில்லை.

தானாகவே அடித்துக் கொண்டு அழியப் போகும் ஆதாயக் கட்சியாக அ தி மு க மாறி விட்டது.

அது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ நல்லது.

கொஞ்ச நஞ்சம் அந்த கட்சியில் ஒட்டிக கொண்டிருக்கும் திராவிட இயக்க பற்றாளர்கள் மறு பரிசீலனை செய்யுங்கள்.   இன்னும் ஏன் ஒட்டிக கொண்டிருக்க வேண்டும்.    எங்கே போக வேண்டுமோ அங்கே போகலாமே!!

காலம் தாழ்த்துவது கூட நாட்டிற்கு செய்யும் கேடு என்பதை உணருங்கள்.

ஓட்டுப்போட பணம் வாங்கியதாக எம் எல் ஏக்கள் மீது குற்றச்சாட்டு!! விசாரணை அவசியம் வேண்டும் !!!

இதுவரை இல்லாத வகையில் சசிகலா அணி அமைச்சரவை  மீது நம்பிக்கை வாக்கு பெற வேண்டிய சூழ்நிலையில் கூவத்துரில் தங்க வைக்கப் படுவதற்கு முன் எம் எல் ஏக்களுக்கு  இரண்டு முதல் பத்து கோடி வரை பேரம் பேசப் பட்டதாக இரண்டு எம் எல் ;ஏக்கள் பேசுவதாக இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் என்ற நடவடிக்கை வெளிப்படுத்தியது.

இன்று சட்ட மன்றம் கூடியபோது இது பற்றி விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.

அ தி மு க தரப்பு அமைதியாக அமர்ந்திருக்க தி மு க மட்டும் விவாதம் நடத்த கேட்டு போராடியது.

வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி சபாநாயகர் அனுமதி மறுத்தார்.      ஏன் அவர்களிடம் ஒரு வாக்குமூலம் பெறுவதைகூட தடுக்க வேண்டும்?

மூன்று அணியாக அ தி மு  க  மாறிய பிறகு அதன் ஸ்திரத் தன்மை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

பா ஜ க வின் கைப்பாவையாக மாறிவிட்ட அ தி மு க அரசு எப்போது  வேண்டுமானாலும் கவிழலாம்.

கவிழ்கிறதோ ஆள்கிறதோ  பண ப்  பேரம் விசாரிக்கப் பட்டே ஆக  வேண்டும்.

அமித் ஷாவின் திமிர்ப்பெச்சு ! காந்தியடிகள் சாதுரிய பனியாவாம் ??!!

தேசத்தந்தை என்று நாடே போற்றினாலும் ஆளும் பா ஜ க வுக்கும் அதன் குரு ஆர் எஸ் எஸ் க்கும் அவர் என்றுமே ஆகாதவர்தான்.

கோட்சே இந்து  மத வெறியர் என்பதும் அதனால் ஆர் எஸ் எஸ் அமைப்பு அவர் மீது கரிசனம் கொள்வதும் இயற்கை.   இந்து மகா சபை வேறு நாங்கள் வேறு என்று எவ்வளவுதான் மறுத்தாலும் நம்புவதற்குத்தான் ஆள் இல்லை.

ரூபாய் நோட்டில் காந்தியடிகள் படத்துடன் இந்து மத குறியீடாக எதை புகுத்தலாம் என்பதுதான் இவர்கள் சிந்தனை.

சட்டிஸ்கர் நகரில் ஒரு விழாவில் பேசும்போது அமித் ஷா காந்தியடிகள் பற்றி குறிப்பிட்டார்.   வெறும் சுதந்திரம் பெறுவதற்காக மட்டுமே காந்தி உருவாக்கியதுதான் காங்கிரஸ் என்ற அமித் ஷா மேலும் பேசும்போது காந்திஜி ஒரு சாதுர்யமான பனியா என்று குறிப்பிட்டார்.

பனியா என்பது குஜராத்தில் ஒரு வணிக சாதிப்பெயர்.    தமிழ்நாட்டில் செட்டியார் என்பது மாதிரி .  நாடே போற்றி வணங்கும் ஒரு தலைவரை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதை திமிர் வாதம் என்பதா? அதிகார போதை தந்த திமிர் என்பதா?

சாதி பெயரை சொல்லி காந்தியடிகளை இழிவு படுத்துகிறார்கள்.      அவர் தலைவர் அல்ல. ஒரு சாதாரண வியாபார சமூக பிரமுகர் என்பது அவர்கள்  எண்ணம் .

பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அமித் ஷா வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார்.

நாடு முழுதும் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றன.    ஆனால் அமித் ஷாக்கள் திருந்த மாட்டார்கள்.

சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களால் காந்தி இழிவு படுத்தப் படுவது  இதுதான் முதல் முறை.

காங்கிரசை கலைக்க சொன்னார் காந்தி என்று சொல்லி விட்டு காங்கிரசை விமர்சிக்க ஒரு கருவியாக காந்தியை பயன்படுத்துவது மிக மோசமான நடத்தை.

காந்தியடிகளை பற்றி பா ஜ க கொண்டிருக்கும் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் .   அவரை இழிவுபடுத்தும் உரிமயை யார் அவர்களுக்கு கொடுத்தது. ?

அமித் ஷா போன்றவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.   சங்கப் பரிவாரங்கள் எல்லாமே இப்படித்தான்.      மறைந்திருக்கும் உள் நோக்கத்தை வெளிக்காட்டாமல் செயல்படுவதில் வல்லவர்கள்.

அம்பேத்கரை போற்றிக் கொண்டே தலித்  சமூகத்தை எப்படி அடிமைப் படுத்திக் கொண்டே அவர்களை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதை ஒரு கலையாகவே நடத்தி வருபவர்கள் ஆயிற்றே .

சுய ரூபத்தை வெளிப்படுத்திய வரை அமித் ஷாவிற்கு நன்றி .      அடையாளம் கண்டு கொள்ள மக்களுக்கு ஒரு வாய்ப்பு.

 

 

 

இந்திய அரசின் அறிவுரை இல்லாமல் மலேசியா வைகோவை திருப்பி அனுப்பி இருக்குமா?

விசா பெற்று ஒரு திருமண விழாவிற்கு சென்ற வைகோவை மலேசியா அரசு துணை பிரதமர் அலுவலக உத்தரவு என்று சொல்லி அனுமதிக்க மறுத்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.

ஒரு இந்தியருக்கு இழைக்கப் பட்ட அநீதியாக இந்திய அரசு நினைத்தால் உடனே நடவடிக்கை எடுத்திருக்கும்.

தமிழர்கள் அதிலும் ஈழ ஆதரவு தமிழர்கள் என்றாலே மோடியின் அரசுக்கு இரண்டாம் தர இந்தியராகத்தான் தெரிகிறது.

ஸ்டாலின் ,திருநாவுக்கரசு உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள் .

மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.    இலங்கையில் வழக்கு இருக்கிறது என்றால் ஏன் விசா வழங்க வேண்டும்?    அப்போது தெரியாதா வழக்கு இருப்பது?

இந்திய அரசு  தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்ல முடியுமா?

இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆகி வருகிறார்கள் என்ற உணர்வு வலுவாகிக் கொண்டிருக்கிறது.

ஆமாம்.   தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதே??!! எங்கே அது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக வை மிரட்டி பணிய வைக்கும் பா ஜ க ???!!!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா ஜ க வுக்கு வெறும் 22000 வாக்குகள் மட்டுமே தேவைப் படுகிற நிலையில் அ தி மு க வசம் உள்ள  59000 வாக்குகளை மிரட்டி வாங்க நினைக்கிறது பா ஜ க .

அதனால்தான் அ தி மு க  எங்களுக்கே வாக்களிக்கும் என்று பொன் ராதாகிருஷ்ணனும் இல. கணேசனும் பேட்டி கொடுக்கிறார்கள்.     அதி மு க தரப்பில் மறுப்பதற்கு கூட ஆளில்லை.

பா ஜ க யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவை கோரலாம்.   அது உரிமை.    அ தி  மு க கூட அதை பரிசீலிக்கலாம்.    ஏனென்றால் ஏற்கெனெவே தி  மு  க காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறலாம்.   ஆனால் இந்தியாவின் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ள ஒரு கட்சியை தன் தலைமை யாரிடம் உள்ளது என்பது தொடர்பாக பிரச்னையாக இருக்கும்போது பா ஜ க முந்திக் கொண்டு அவர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் என்றால் அவர்கள் எங்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்று பா ஜ க அறிவிக்கிறது என்றுதானே பொருள்.

நமது கவலையெல்லாம் நீ யாருக்காவது ஆதரவு தந்து விட்டுப் போ.

இந்தப் போக்கு சரிதானா?     இதே நிலை நீடித்தால் அ தி மு க அரசு அறிவிக்க வேண்டிய அனைத்தையும் பா ஜ க வே அறிவிக்கும் சூழ்நிலை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம். ?

நடப்பது பா ஜ க வின் அடிமைகளின் ஆட்சி என்பது போல் தோற்றம் உருவாகி விட்டது.

தமிழர்களின் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் உருவாகி விட்டது.

உட்கட்சி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அதி மு க தலைவர்களில் இது பற்றி சிந்திக்க ஒருவர் கூடவா இருக்க மாட்டார்?

நமக்கு கிடைத்த அடிமைகள் நல்லவர்கள் . வாயைத் திறந்து பேச மாட்டார்கள் என்ற கர்வத்தில் இருக்கிறது பா ஜ க .

போதாதற்கு பா ஜ க என்ன தீண்டத் தகாத கட்சியா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்கிறார்.    ஆக பாதை விரிக்க தயாராகி விட்டார்கள்.

நமக்குத்தான் அச்சமாக இருக்கிறது.     இன்னும் என்னவெல்லாம் பறிபோகுமோ ?

கடன் தள்ளுபடியும் நியாய விலையும் கேட்ட 5 விவசாயிகள் சுட்டுக் கொலை??!! பா ஜ க அரசின் பரிசு!!

” கூலி  உயர்வு கேட்டான்  அத்தான் – குண்டடி பட்டு செத்தான் அத்தான் ” என்று அந்தக் காலத்தில் கலைஞர்  எழுப்பிய திராவிட இயக்க வாசகம் இன்றும் பொருந்துகிறதே !

ம பி மாநில மாண்ட்சார் மாவட்டத்தில் விவசாய  விளைபொருள் களுக்கு லாப விலையும் கடன் தள்ளுபடியும் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.    எந்த அரசியல் சார்பும் இல்லாத போராட்டம்.

அதை சாதுர்யமாக கையாள தெரியாத பா ஜ க அரசு கண்மூடித் தனமாக சுட்டதில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டு நூற்றுக் கணக்கானவர் காயமடைந்து தீவைப்பு கொள்ளை வன்முறை என்று கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அரசியல் தலைவர்கள் வருகைக்கு தடை போட்டும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் அளித்தும்  நிலைமையை சமாளிக்க சிவராஜ் சிங் அரசு முயற்சிக்கிறது.

உற்பத்தி செலவுக்கு மேல் லாப விலை நிர்ணயித்தால் எந்த விவசாயியும் நட்ட மடைய வாய்ப்பே இல்லை.

உ பி யில் முப்பத்தி ஆறாயிரம் கோடி நிவாரணம் அளித்துள்ள நிலையில் ம பி யிலும் அதே போன்ற அணுகு முறையை விவசாயிகள் எதிபார்த்திருக்கலாம் .

நாடு தழுவிய அளவில் மாநிலங்கள் தோறும விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

விளைபொருளுக்கு  லாப விலையும் அர்த்தமுள்ள காப்பீட்டு திட்டமும் மட்டுமே  விவசாயிகளை காப்பாற்றும் என்ற உணர்வு மத்திய மாநில அரசுகளுக்கு  வரும் நாளே பொன்னாள்!

என்று வரும் அந்நாள் ?