Home Blog Page 91

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் இருக்கலாமா?

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு மரணமடைந்ததால் தண்டனை  காலத்தை சிறையில் கழிக்க வாய்ப்பில்லாமல் போனவர்.   ஆனால் அவருக்கு விதிக்கப்  பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தையும் அவரது சொத்துக்களில் இருந்து அரசு வசூலிக்கும்.

அவருக்குத் துணையாக இருந்தததற்காகத்தான் சசிகலாவும் இளவரசியும் ,சுதாகரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா பத்து கோடி அபராதம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு  அனைவரையும் கட்டுப்படுத்தும்.   குறிப்பாக அரசைக் கட்டுப படுத்தும்.   இந்நிலையில் அவரது பிறந்த நாளை அரசு செலவில் கொண்டாடலாமா?

இதைத்தான் சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சுட்டிக்  காட்டி ஆட்சேபித் திருக்கிறார்.

அதிமுக வினர் தங்கள் கட்சி நிகழ்ச்சியிலோ வீட்டு  நிகழச்சியிலோ ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவது அவர்கள் விருப்பம் உரிமை.   அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ஓர் குற்றவாளியின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் மக்களே நம்பாதீர்கள் என்று வேண்டுமானால் பிரச்சாரம் செய்யலாமே தவிர படத்தை பயன்படுத்துவதை ஆட்சேபிக்க முடியாது.

ஆனால் அரசு விழா  அப்படியல்ல.      அதேநேரம் ஜெயலலிதா என்பவர் முன்னாள் முதல்வர் என்பது வரலாற்று உண்மை.    அதை மறைக்கவோ மறக்கவோ  முடியாது.

நீதிமன்றம் சொல்லித்தான் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு வர வேண்டும் என்பதே தவறு.

ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி இனி  எப்படித்தான் அரசியல் செய்வார்கள் என்பதை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது.

ஒருபக்கம் ஓ பன்னீர்செல்வம் நீதி கேட்டு பயணமாம்.      யாரிடமிருந்து என்பதை அவர் விளக்க வில்லை.       மறுபக்கம் தீபா ‘ எம்ஜியார் அம்மா தீபா பேரவை ஆரம்பித்து ஜெயலலிதா வழியில் அரசியல் பயணம் தொடங்கி விட்டார்.    முதல் நாளே தன் கார் டிரைவரை தலைவராக நியமித்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்  .   அவர் பொறுப்புகள் வாங்கித் தருவதாக பலரிடம் வசூல் செய்திருக்கிறார்.    முதல் கோணல் முற்றும்  கோணலாகும் வாய்ப்புகள் நிறையவே அதிகம்.

ஜெயலலிதா தன் ஆட்சிக்  காலத்தில் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றினார் என்பதை மறுக்க முடியாது.   அதை  கொண்டாடும் சாக்கில் அவரது தொண்டர்கள் அபிமானிகள்  தங்கள் கைகளில் அரசு இருக்கிறது என்பதற்காக அவரைக் கொண்டாடி அவரது  பேரைச்சொல்லி  மக்களிக்க வாக்குகளை வாங்கி விட முடியும் என்ற நிலை இனி வராது.                    .

ஜெயலலிதா பெயரை சொல்லி  இனி மக்களிடம்  வாக்கு வாங்கும் எண்ணமே இனி யாருக்கும் இருக்காது.

இருக்கக்  கூடாது.

 

அரசு செலவில் நேர்த்திக்கடன் செலுத்திய தெலுங்கானா முதல்வர்?!!!

தெலுங்கானா மாநிலம் அமைந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவ தாக சந்திரசேகர ராவ் வேண்டிகொண்டிருந்தார் .

திருப்பதி வேங்கடாச்சலபதி சுவாமி மீது நம்பிக்கை வைப்பதோ நேர்த்திக்கடன் செலுத்துவதோ அனைவரின் தனிப்பட்ட உரிமை.   அதில் தவறேதும் இல்லை.

ஆனால் முதல்வரானபின் அரசு  செலவில் ஐந்து கோடி செலவில் நகைகளை சுவாமிக்கு செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தியிருக்கிறார் ராவ்.

சுவாமி தனக்கு சாலிகிராம ஹாரம் வேண்டும் என்றோ கண்டே ஹாரம் வேண்டும் என்றோ கேட்கவில்லை.     இவர் தன் கோரிக்கையை வைத்தார். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

அதற்கு அரசு கஜானாவில் இருந்து செலவு செய்வது சரியா என்ற கேள்வியை முதல்வரின் செயல் எழுப்பி யிருக்கிறது.

இடது சாரிகளும் இந்த கேள்வியை  எழுப்பி இருக்கிறார்கள்.

சந்திரசேகர ராவ் முன்பே பல கோடி செலவில் யாகங்கள் செய்திருக்கிறார்.    கடவுள் கோடிகணக்கில் யாகங்களை செய்பவருகுத்தான் அருள் பாலிப்பார் என்றால் எத்தனை பேர் செய்ய முடியம்.?

அதேபோல் வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசையும் அர்ப்பணம் செய்திருக்கிறார்.    வாழ்க நம்பிக்கை.  இதேபோல் மக்களது நல்வாழ்விற்கும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கும் வேண்டிக்கொண்டால் நல்லது.   அப்படியாவது மக்கள்  பிரச்னைகள் தீரட்டுமே .

சொந்த நம்பிக்கைகளை அரசு நிர்வாகத்தில் புகுத்தும் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடிக்கு மத்திய அரசு அனுமதி!!!

1993  ல் மத்திய அரசின் பெட்ரோலிய இயற்கை எரிவாயு அமைச்சரவையின் கீழ்  Directorate General of hydro Carbon என்ற அமைப்பு  ஏற்படுத்தப் பட்டது.

அது எண்ணெய் எரிவாயுவிற்கு மாற்றாக இதர காற்று எரிவாயு கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கத்தை கொண்டது.

முன்பே மீத்தேன் , ஷெல் வாயு திட்டங்களை அமுல் படுத்த திட்டமிட்ட போது போது மக்களின் எதிர்ப்பால் அந்த திட்டங்கள் கைவிடப் படுவதாக அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார்.

இப்போது எதிர்ப்புகளை திசை திருப்பி  வேறு பெயர்களில் அதே திட்டத்தை அமுல் படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது.

புதுக்கோட்டை நெடுவாசல் , காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இந்த விவசாயிகளை வேரறுக்கும் திட்டம் நடைமுறைப் படுத்த இருந்தது.

மண் எண்ணெய் எடுக்கிறோம் அதன் பின்  நிலம் உங்களுக்கே என்று  ஆசை வார்த்தை காட்டி ஏதுமறியா விவசாயிகளிடம் நிலங்களை கையகப் படுத்தி விட்டு இப்போது அதன் விளைவாக நிலங்கள் கருக ஆரம்பித்ததும் விவசாயிகள் விழித்துக் கொண்டு எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.

2000 அடிக்கும் மேலே குழாய் தோண்டி நீரை உறிஞ்சி எடுத்ததன் விளைவாக நிலங்கள் காயத் தொடங்கின.     நீர் மட்டம் குறைந்தது.   முன்பு ஓ ஏன் ஜி  சி செய்த வேலையை இப்போது ரிலையன்ஸ் கம்பெனி செய்ய இருக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் கர்நாடகாவை சேர்ந்த பா ஜ க பிரமுகர் ஒருவருக்கு கொடுக்கப்  பட்டிருக்கிறதாம்.

இப்போது புதுக்கோட்டை மாவட்ட மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்க்கின்றன.   மாநில அரசின் ஆட்சேபணையை மீறி  மத்திய அரசு செயல்பட முடியுமா என்ன?   ஆனால் காரைக்கால் பகுதியில் குழாய் தோண்ட புதுச்சேரி அரசின் அனுமதி பெறப பட வில்லை  என்று  அதன் முதல்வர் கூறுகிறார்.    என்ன நடக்கிறது இங்கே?

பெற்றோலிய எரிபொருட்கள் கிடைப்பது பாலைவன பகுதிகள் கொண்ட நாடுகளில்.   அங்கு விவசாயம்  பாதிக்கும் என்ற கேள்வியே எழவில்லை.    ஆனால் இங்கு அதுவா நிலைமை.

எந்த திட்டமாக இருந்தாலும் அது அந்த பகுதி  மக்களை எந்த வகையிலாவது பாதிப்பதாக இருந்தால் அமுல் படுத்தக் கூடாது.    ஆனால் மறைமுகமாகவும் ரகசியமாகவும் இந்த திட்டத்தை பெருமுதலாளிகள் லாபமடையும்வகையில்  செயல் படுத்த மத்திய அரசு முனைகிறது.

தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தவிர வாழ முடியாது என்ற நிலையை அரசே ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்.?

இது மட்டுமல்ல.   தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் எண்ணெய் கிணறுகளின் செயல்பாடுகள் பற்றியும் மத்திய அரசு வெளிப்படையான புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே கூடங்குளம் அணு மின் திட்டம் அந்த பகுதி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு  கட்டாயமாக நடைமுறைப் படுத்தி கொண்டு இருக்கிறது.

அதேபோல் பல பகுதிகளில் ஓ ஏன் ஜி சி நிறுவனம் எண்ணெய் வளத்தை சுரண்டிக்கொண்டிருகிறது.

அதனால் விளையும் நீண்ட கால பாதிப்புகள் பற்றி விவசாயிகள் அறியாமல் இருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டாலே தர மறுக்கிறார்கள்.    மக்களை அறியாமையில்  தள்ளி அவர்களுக்கு நல்லது  செய்கிறோம் என்று எந்த அரசு சொன்னாலும் அது மோசடிதான்.

உடனடியாக மத்திய அரசு தமிழகத்தில் எந்த இடத்திலும் நீர் கரிம வாயு எனப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மாட்டோம் என்று அறிவித்து மக்கள் போராட்டங்களை தவிர்க்க உதவ வேண்டும்.

தவறினால்     ,போராட்டம் வெடித்தால்  அது மத்திய அரசின்  மீதான நிரந்தர வெறுப்பாக மாறிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் நல்லது.

முஸ்லிம்களை விலக்கி ஆட்சியை பிடிக்க திட்டமிடும் பா ஜ க !!???

பொதுத் தேர்தல் நடைபெறும் உ பி யில் முஸ்லிகள் சராசரியாக இருபது சதம் இருக்கிறார்கள்.

மொத்த இடங்கள் 403.         சென்ற பாராளுமன்ற தேர்தலில்  எண்பது இடங்களில் எழுபத்து மூன்று இடங்களை வென்று  பா ஜ க வரலாறு படைத்தது.    வரலாறு வென்றதில்  மட்டுமல்ல.   ஒரு இடத்தில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை அது நிறுத்தவில்லை.

அந்த அனுபவம் சட்ட மன்ற தேர்தலிலும் வெளிப்படுகிறது.

முஸ்லிம் வேட்பாளர் இல்லாமலேயே சட்ட மன்ற தேர்தலிலும் வென்று விட முடியும் என்று அது நம்புகிறது .

இந்துக்கள் வாக்குகளை மட்டுமே குறி வைக்கும் பா ஜ க முஸ்லிம் வேட்பாளர்கள் வேண்டாம் என்று ஒதுக்குவதன் மூலம் ஒரு செய்தியை உரக்க சொல்கிறது.

முஸ்லிம்கள் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு வகிக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்து கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்பதுதான் அது.

இப்படி மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி நிரந்தரமாக ஒரு செயற்கைப் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் ஒன்று சேரவே முடியாத நிலையை பா ஜ க உறுதிப்படுத்துகிறது.

இத்தகைய செயற்கைப் பிளவுகள்  தான் எதிர்காலத்தில் பிரிவினை க் குரலுக்கு வித்திடும் என்பதை மறந்து விடக் கூடாது.

நிரந்தரமாக ஒரு பிரிவினரை அடக்கி  ஆண்டு விட முடியாது.

மாயாவதியின் பி எஸ் பி யும் அகிலேஷின் சமாஜ்வாதியும் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு இடங்கள் வழங்கி இருக்கிறார்கள்.

ஒரு பா ஜ க தலைவர் இது தொடர்பாக கூறும்போது ” தகுந்த வேட்பாளர் கிடைக்காத தால்தான் நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வில்லை”  என்று சமாதானம் கூறுகிறார்.

ஏற்கத் தக்கதா இந்த விளக்கம்.      மக்களிடயே பிளவு  மனப்   பான்மையை திட்டமிட்டு வளர்க்கும் பா ஜ க தான் இந்திய ஒற்றுமைக்கு மிகப் பெரிய ஆபத்து.

சபாநாயகரின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் – தி மு க வின் அடுத்த ஆயுதம்!

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஒப்புதல்  கேட்டு அவரிடமே மனு கொடுத் திருக்கிறது  திமுக.

ரகசிய வாக்கெடுப்பிற்கு  ஒப்புதல் தராமல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசை வெற்றி பெற வைத்ததுடன் இல்லாமல் தி மு  க மீது சாதி சார்ந்த குற்றச்சாட்டையும் சுமத்தியதால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கிறது.

அவரை அகற்றுவது மட்டுமல்ல நோக்கம்.     இந்த தீர்மானம் சபையில் விவாதத்துக்கு வரும்.   அப்போது எடப்பாடி ஆதரவு உறுப்பினர்கள் சபைக்கு வந்துதானே ஆகவேண்டும்.

இப்போதே தொகுதிக்கு செல்ல  முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை சட்ட மன்றத்துக்கு உள்ளேயே நடத்த தயாராக வேண்டும்.

அப்போது என்னவெல்லாம் நடக்குமோ?

விவாதத்தை துணை சபாநாயகர் தலைமை தாங்கி நடத்த வேண்டும்.    அதற்குள் சபை நடவடிக்கைகளை தொலை காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்.    இல்லாவிட்டால் அரசின் அனுமதி  பெற்று ஒரு தொலைகாட்சி மட்டும் வெளியிடும் காட்சிகளை மற்றவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள்.

அதற்குள் யாரோ சில உறுப்பினர்களுக்கு மனமாற்றம் வந்து மாறி வாக்களித்தால் அது அரசின் மீதான நம்பிக்கையின்மையாக கருதப் படும்.

கட்டுப்பெட்டியான உறுப்பினர்கள் ஆதரவு நிலைத்தன்மை கொண்டதல்ல.

உள்ளாட்சி தேர்தல்கள் வேறு மே மாதத்திற்குள் நடத்தி முடிப்பதாக அரசு நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஊருக்குப் போக முடியாத அல்லது தன்னம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள் என்றைக்கு வேண்டுமானாலும் மாறுவார்கள்.

உண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அடுத்த கண்டம்தான் .

 

முதல்வர் எடப்பாடி பழிநிசாமி அரசின் முதல் ஐந்து அறிவிப்புகள் !

எடப்பாடி பழனிசாமி பதிவிஏற்று முதல் முறையாக ஐந்து அறிவுப்புகளை வெளியிட்டு ஆணைகளை பிறப்பித்துள்ளார்.

ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஆண்டொன்றிற்கு ஐம்பது சதம் மானியம் அல்லது இருபதாயிரம் ரூபாய் இரு சக்கர வாகனம் வாங்க வழங்கப்படும்.  செலவு இருநூறு கோடி.

ஆண்டொன்றிற்கு ஆறு லட்சம் தாய்மார்கள் பயனடையும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பனிரெண்டாயிரத்திலிருந்து பதிநெட்டாயிரமாக உயர்வு.   செலவு 360 கோடி.

மீனவர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் செலவில் ஐந்தாயிரம் வீடுகள்.  செலவு  85 கோடி.

வேலை வாய்ப்பற்று இருக்கும் இளைஞர் களுக்கு மாதந்திர உதவித்தொகை உயர்வு.  இது தற்போது

55228 பேருக்கு வழங்கப் பட்டு வருகிறது. செலவு 31  கோடி .

மதுவிலக்கை அமுல்படுத்தும் நோக்கில் மேலும் ஐநூறு மதுக்கடைகள் மூடல்.

இன்று அறிவிக்கப் பட்ட திட்டங்களின் மூலம் அரசிற்கு மேலும் 676 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகும்.

ஏற்கனெவே  நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

வரவேற்கத் திட்டங்கள் என்றாலும் திணறிக் கொண்டிருக்கும் அரசாகவே எடப்பாடியின் அரசு மதிக்கப் படுகிறது.

சட்ட மன்ற உறுப்பினர்கள் விடுதியில் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.   ஏன் அவர்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க தயங்குகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

கொரடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய தயக்கம் காட்டுகிற அரசு பலவீனமான அரசாகவே கருதப் படும்.     செய்தால் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.   இப்போது வெறும் ஆறு வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று ஆட்சி செய்து வரும் இந்த அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தொடர்ந்து எத்தனை பேர் ஆதரவை நீட்டிப்பார்கள்?    இடையில் எத்தனை பேர் அணி மாறுவார்கள்? உறுதியான கொள்கை முடிவுகளை இந்த அரசால் எடுக்க  முடியுமா?

முதல்வர் பழனிசாமி முதல் கையெழுத்தை இட்டு விட்டு நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.

முதல்வர் தன் தகுதியை நிரூபிக்க வேண்டும்.      எந்த பிரச்னை என்றாலும் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றி விளக்கமாக கூற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அமைச்சரவை கூட்டுப் பொறுப்பில் இயங்குகிறதா?   சிறையில் இருக்கும் சசிகலாவின் இயக்கத்தில்  இயங்குகிறதா என்ற கேள்வியை புறந்தள்ளி  விட முடியாது.

வரும் நாட்கள் தமிழர்களுக்கு சோதனை  நாட்களே.     ஏனெனில்  தன் முயற்சியில் தோல்வியடைந்த மோடி அரசு இவர்களை நிம்மதியாக ஆள விடும் என்று தோன்றவில்லை.

 

வாக்கு எண்ணிக்கை சரியே !!! தவறான செய்திகளால் குழப்பம்!!!

தவறான செய்திகளால் சில நேரங்களில் தவறான விமர்சனங்கள் எழுகின்றன.

சட்டமன்ற வாக்கெடுப்பில் உறுப்பினர் ஆறுமுகம் சிகிச்சையில் இருந்ததால் வரவில்லை என செய்திகள் பரவின.    ஆனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகி சபையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்.   அவர் வாக்களித்த செய்தி ஊடகங்களில் வரவில்லை.

அதேபோல் மோத்த அ தி முக எண்ணிக்கை 134  என்ற செய்தியும் மாலைமலர் பத்திரிகையில் வந்தது.   உண்மையில்  அது  135 ஆக இருக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவினால்  233  ஆக குறைந்த  மொத்த உறுப்பினர்களில் கலைஞர் வரவில்லை.

232

வெளியேறிய திமுக காங்கிரஸ் முஸ்லிம் லீக்  உறுப்பினர்கள்  97  .

மீதம் உள்ள  135  உறுப்பினர்களில்

பன்னீர்செல்வம் அணியில் எதிர்த்து வாக்களித்தோர்    11

வாக்களிக்காத   சபாநாயகரும் கோவை அருண்குமாரும்        2

மீதமுள்ள    122  அ திமுக உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தவறான செய்திகள் வெளியாவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் .     ஏனென்றால் அது தவறான விமர்சனங்களுக்கு வித்திடுகின்றன.

எச்சரிக்கை  ! எச்சரிக்கை !

 

கட்சி மாறி வாக்களித்தது யார்?

122      வாக்குகள் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார் என்றார் சபாநாயகர்.

எண்ணிக்கை  இடிக்கிறதே?

அ இ அ தி முக வாக்குகள் 134  – ஜெயலலிதா 1 =   133

ஓ பி  எஸ் அணி வாக்குகள்                             11

கோவை வடக்கு அருண்குமார்                 1

சபாநாயகர்                                                                1

சிகிச்சை பெற்றுவரும் ஆறுமுகம்                 1

கூடுதல்                                                14

133-14=119  ஆக பெற்று இருக்க வேண்டிய அ தி மு க வின் பழனிச்சாமியின் அணி 122 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.

கூடுதல் வாக்குகள் மூன்று யார் போட்டது.?

காங்கிரஸ் கட்சி தி  மு க வோடு வெளியேறிவிட்டது என்றால் கூடுதல் மூன்று  ஒட்டு யார் போட்டது. ?

இரண்டாவது முறை நம்பிக்கை வாக்கு கோரியது செல்லாது என்றும் அதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பும் செல்லாது என்றும் நீதிமன்றத்தை நாட தி  மு க தயாராகி  வருகிறது.

தற்காலிக பொதுசெயலாளர் என்ற பதவியே அ தி மு க வில் இல்லை என்றும் அப்படி தற்காலிக      பொதுசெயலாளர் ஆக நியமிக்கப் பட்ட சசிகலாவின் நிமனமும் செல்லாது என்றும் கொடுக்கப்  பட்ட மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இடைப்பட்ட காலத்தில் , சட்ட மன்றத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக    அறிக்கை தரக் கோரி சட்டசபை செயலாளரை  ஆளுநர் கேட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில்   சொல்லப் பட்ட விபரங்களை வைத்து மத்திய அரசு மாநில அரசை கலைக்கவும் வாய்ப்பிருக்கிறது .

இந்தக் குழப்பங்களின் சூத்திரதாரி மத்திய அரசு .   தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டார்கள் .     வாய்ப்புக்காக காத்திருந்து  கலைப்பார்கள்.

இந்தக் குழப்பங்கள் எப்போது ஓய்வது? எப்போது இவர்கள் ஆட்சி  நடத்த துவங்குவார்கள்  என்று

மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

 

 

 

 

 

வென்றால் போதுமா? எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்குமா?

122 வாக்குகளை பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்று  பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக்  கொண்டார்.   தற்காலிகமாக.

சபாநாயகர் தனபால் ஏன் ரகசிய வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை ?

அப்படி நடத்தினால் கூவத்தூரில் இருந்து பத்திரமாக அழைத்து வந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் மாறி வாக்களிப்பார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

ஓ  பி  எஸ் அணியில் பதினோரு பேருக்கு மேல் தேறவில்லை.

மத்திய அரசின் , மோடி அரசின் , தோல்விதான் இது.      அவர்களால் அதற்கு மேல் ஓ பி எஸ் அணிக்கு ஆள் சேர்க்க முடியவில்லை.

ஸ்டாலின் நடத்திய போராட்டம் அவருக்கானது அல்ல.     பழனிச்சாமி தோற்றால் திமுக ஆட்சிக்கு வந்து விடுமா என்ன?

ஆனால் சசிகலா ஜெயிலில் இருந்து ஆட்சி செய்வார் என்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இது பெருமை  தரக் தக்கதா?

கவுண்டர் ஒருவர் தமிழக முதல்வராக ஆக முடிந்தது  வேண்டுமானால் சாதனையாக பேசப் படலாம்.

அவர் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பது முக்கியம் அல்லவா?

ஊழல் குற்றவாளி என்று உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப்  பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியை  தொடர்வேன் என்கிறார் அவர்.

சசிகலா அணியாக இருந்தாலும் ஓ  பி எஸ் அணியாக இருந்தாலும் எல்லாரும் ஊழல் அணிதானே?

வரும் மாதங்களில் பழனிசாமி எடுக்கும் நடவடிக்கைகள் அவரது ஆட்சி தொடர வேண்டுமா அல்லது உடனே முடிக்கப் பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.

பழி வாங்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் வாய்ப்பை பயன் படுத்தி கொஞ்சமாவது நல்ல பெயர் வாங்க முயற்சித்தால் வரவேற்கலாம்.

அள்ளிக் குவித்தவர்கள் எப்படி உடனே நிறுத்துவார்கள்?

ஜானகி தோற்றபின் அரசியலை விட்டே ஒதுங்கினார்.     ஓ பி எஸ் ஒதுங்குவாரா?    கூட இருப்பவர்கள் ஒதுங்க விடுவார்களா?

ஓ பி எஸ் -தீபா கூட்டணி பெரிதும் சாதிக்கும் என்று சொல்லி திரிபவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான் .

 

 

 

சட்டமன்ற வாக்கெடுப்பு சாதிக்கப் போவதென்ன?

எடப்பாடி  பழனிசாமி முதல்வராக நீடிப்பது இன்று நடக்கும் சட்ட மன்ற வாக்கெடுப்பில் தெளிவாகிவிடும்.

திமுக காங்கிரஸ் அணியின் 98  வாக்குகளும் ஓ பி  எஸ் அணியின்    11 வாக்குகளும் சேர்த்தும் கூட நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிக்க தேவையான   117 வரவில்லையே?

வெற்றி பெற்றாலும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் முழு காலமும் பழநிசாமியால் ஆட்சி நடத்தி விட முடியுமா?

சசிகலா சிறையில் இருந்தவாறே ஆட்சி நடத்தி விட முடியாது.     பொதுச்செயலாளராக கூட தொடர்ந்திட சட்டம் இடம் தராது.

உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி இன்று தீர்ப்பளிக்கப் பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தையோ பெயரையோ இனி அரசால் அதிகாரபூர்வமாக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த முடியுமா?

ஜெயலலிதா வின் ஆட்சியை தொடர்வோம் என்று  சொல்பவர்கள் அவரது ஊழல் ஆட்சியை தொடர்வோம் என்று சொல்வதாகதானே பொருள்?

மீளாய்வு மனுவிலோ சீராய்வு மனுவிலோ தீர்ப்பு திருத்தப் பட்டால் தவிர ஜெயலலிதா என்பவர் ஊழல் குற்றவாளி.  அவருக்குத் துணை நின்றோர்தான் இன்று சிறையில்.     எனவே மூலக்  குற்றவாளியை விட துணை  நின்றோர் தான் அதிக குற்றம்  இழைத்தவர்கள்  என்று சொல்லி தப்பி விட முடியாது.

தோற்றால் எந்தக் கட்சியாலும் நிலையான ஆட்சியை தர முடியா நிலையில்  சட்ட மன்றத்தை கலைக்காமல் செயலற்ற நிலையில் வைத்து விட்டு தற்காலிகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்த மத்திய அரசு தயாராகும்.

அந்தக் கால கட்டத்தில் பா ஜ க ஏதோ ஒரு அ தி மு க அணியை கூட்டாக கொண்டு இங்கே காலூன்ற முயற்சிக்கும்.

ஓ பி எஸ் அறிவித்த வாக்காளர் கண்டன பேரணி எங்கும் நடைபெற்றதாக தெரியவில்லை. அவரது வீட்டிலும் கூட்டம் குறைந்து விட்டது.

தீபா   ஓ பி எஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு அளித்ததும் அவரது  வீட்டிலும் கூட்டம் குறைந்து விட்டது.    அவரை வைத்து அரசியல் செய்யலாம்  என்று நினைத்தவர்கள் ஒதுங்கி இருக்கலாம்.

சட்ட மன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாலும்  ஊழல் ஆட்சி நடத்தியவரின்   ஆட்சி நீடிப்பதாகத்தான் பொருள்.

தோற்றாலும் தற்காலிக குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற நிலையில் ,

செலவைப் பார்க்காமல் மீண்டும் தேர்தல் நடத்தி ஒரு நிலையான அரசை அமைக்க ஏன் முயற்சிக்கக் கூடாது?

இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடாக திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்து அதிமுக அதிருப்தியாளர்கள் வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டும்.

செய்வார்களா?   செய்வார்களா?