Home Blog Page 93

கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியைப் பிடித்த பா ஜ க !!!

கட்சித் தாவலில் சாதனையே படைத்து விட்டது அருணாச்சல பிரதேசம்.

முதலில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது 42 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் .      அத்தனை பேரும் விலகி அருணாச்சல மக்கள் கட்சியில் சேர்ந்து பேமா கண்டு என்பவர் தலைமையில் ஆட்சியை அமைத்தார்கள்.

அந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தது.     அருணாச்சல மக்கள்  கட்சி தேசிய  ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சி தகம் பாரியோ என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்ததும் பா ஜ க திட்டமிட்டு தற்போதைய முதல்வர் பேமா கண்டுவை தன் பக்கம் இழுத்து அவருடன்  33  உறுப்பினர்களையும்  பா ஜ க வில் சேர்த்துக் கொண்டு  இப்போது பா ஜ க அரசாக மாறி விட்டது.

வட கிழக்கு மாநிலங்கள் எழில் இப்போது பா ஜ க அசாமிலும் அருணாச்சல பிரதேசத்திலும் ஆட்சியில் நேரடியாக  இருக்கிறது.     நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது.

தங்கள் உறுப்பினர்களை பா ஜ க கடத்தி சென்று விட்டதாக அருணாச்சல மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

2019 தேர்தலில் தங்களது நேரிடையான ஆட்சியை நிலை நாட்ட பாடுபட போவதாகவும் அறிவித்துள்ளது.

அரசியலில் நேர்மை என்று தம்பட்டம் அடிக்கும் பா ஜ க கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியைப் பிடித்தது அதன் நம்பகத் தன்மையை குறைக்கவே செய்யும்.

அப்போல்லோ மருத்துவ மனை தெளிவு படுத்தட்டும் !

ஜெயலலிதா  மரணத்தில் மர்மம் இருப்பதாக பல முனைகளில் இருந்து கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஏன் மாரடைப்பு வந்ததை தடுக்க வில்லை என்பதை தவிர எல்லா கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள்?

இதற்கான விடையை அப்போலோ மருத்துவமனை இன்னும் காலம் தாழ்த்துவதில் நியாயம் இல்லை.

சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து விலக்கப் பட்ட ராஜ்ய சபை உறுப்பினர்.        ஜெயலலிதாவை குற்றம் சுமத்தி பாராளுமன்றத்திலேயே பேசியவர்.

அவர் வழக்குப் போட்டிருக்கிறார் பொதுசெயலாளர் தேர்தலை நிறுத்தி வைக்க.       நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.

தொடர்ந்து மரணத்தில்  மர்மம் இருப்பதாக பேசி வருகிறார்.

நடிகை கௌதமி இதில் பிரதமர் தலையிட்டு விளக்கம் தர வேண்டும் என்று கோரி அவருக்கே கடிதம் எழுதினர்.    நினைவூட்டலும் எழுதினர்.   பதில்தான் இல்லை.

சோவின் இடத்துக்கு வந்திருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியும் தன் பங்குக்கு  கேள்விகளை எழுப்பி வருகிறார்.     சசிகலா விலக வேண்டும் என்றும் அப்போதுதான் அ தி மு க பாதுகாக்கப் படும் என்றும் அ தி மு க உறுப்பினர் போலவே எழுதுகிறார்.   தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி அ தி மு க என்றும் இந்த மாற்றத்தை எம்ஜியாரும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொண்டு வந்தனர் என்று எழுதுகிறார்.   எப்போது அ தி மு க திராவிட கட்சி இல்லை என்று ஆனது என்பதை அவர் விளக்கவில்லை.      பெரியாரையும் அண்ணாவையும் தலைவர்களாக வழிகாட்டிகளாக ஏற்றுகொண்டுதான் இன்றும் அ தி மு க இயங்கி வருகிறது.         திராவிட இயக்க கொள்கைகளை பொறுத்த வரையில் இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கிகள்தான்.

ஹுசைனி என்ற கராத்தே வீரர் பல சலுகைகளை ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றவர்.    தன் இரத்தத்தால் ஜெயலலிதா உருவத்தை உருவாக்கி அவரிடம் பாராட்டு பெற்றவர்.    அவர் ஜெயலலிதா கொலை செய்யப்பட நடராஜன் பின்னணியில் இருந்து சதி செய்ததாக பேட்டி கொடுக்கிறார்.

இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விடுமுறை கால நீதிபதியான  வைத்தியநாதன் பெஞ்ச் முன்பாக வந்தபோது  எனக்கும் தனிப்பட்ட முறையில் இது சம்பந்தமாக சந்தேகம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.     தன்னிடம் இந்த  வழக்கு முன்பே வந்திருந்தால் வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பேன் என்றும் சொல்லி அ தி மு க தொண்டர்கள் மத்தியில் பெருத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்.    தேவைபட்டால் உடலை தோண்டி எடுத்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடுவேன் என்றும் சொல்லியிருக் கிறார்.

நக்கீரன் இதழ் ஜெயலலிதாவின் கால்களை காணோம் என்று புது செய்தி வெளியிடுகிறது.

பொதுமக்களை குழப்பத்தில்  ஆழ்த்தத் தான் இவை பயன்படும்.

ஜெயலலிதாவின் வாரிசு தீபா தான் என்று கருத்தாக்கத்தை உருவாக்க  தினமலர்  போன்ற பத்திரிக்கைகள் தீவிரமாக முயற்சிக் கிறார்கள்.      எல்லாம் தோற்றுப் போய் இன்று சசிகலா அ தி மு க பொதுக் குழுவில் ஏக மனதாக பொதுசெயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.    அது வேறு.

நாம் குறிப்பிட விரும்புவது ஜெயலலிதா எழுபத்தி ஐந்து நாட்கள் அப்பலோ மருத்துவ மனையில் சிகிச்சை  பலனின்றி இறந்திருக்கிறார்.      அது தொடர்பாக பலரும் பல வித சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.   அதை விளக்கி சந்தேகத்தை போக்க வேண்டியது அப்போலோவின் கடமையா இல்லையா???

ஏய்ம்ஸ் மருத்துவர்கள் ,    லண்டன் மருத்துவர்கள்  ,   இங்கேயே பதினேழு மருத்துவர்கள் கொண்ட குழு,      பதினெட்டு  செவிலியர்கள் குழு என்று ஒரு படையே ஜெயலலிதாவை கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்திருக் கிறார்கள்.

ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த நான்கு துளைகள் போன்ற குறிகள் அவர் உடல் கெட்டு போகாமல் இருக்க எம்பாமிங் என்ற வகை  மருத்துவம் செய்ததால் வந்தது.   அவர்  இறந்தது முன்பே.    அறிவித்தது பின்பு என்றும் வேறு சொல்கிறார்கள்.

குற்றம் சுமத்துபவர்கள் உண்மையில் மருத்துவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்.   ஏதோ அவர்கள் ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததைப்போல.    எனவே விளக்கம் தர வேண்டியவர்கள் மருத்துவர்களும் மருத்துவ மனையும் தான்.

இன்று  வெங்கையா  நாயுடு எல்லாம் சரியாகத்தான் நடந்தது இதில் மர்மம் ஒன்றும் இல்லை என்று பேசியிருக்கிறார் .

ஒரு புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை?   ஏன் யாரையும் நேரில் அல்லது தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்க வில்லை இந்த இரண்டு கேள்விகள்தான் விடை தர அல்லது பெற வேண்டிய கேள்விகள்.

இரண்டிற்கும் வேறு யாரும் விடை தர முடியாது.    மருத்துவ மனைதான் தர வேண்டும்.      நீதிமன்றம் கேட்டால்தான் கொடுப்போம்  அல்லது நாங்கள் ஏன் விடை தர வேண்டும் என்று பதில் சொல்வதெல்லாம் பிரச்னையை வளர்க்கத் தான் பயன்படும்.

அப்போலோ மருத்துவமனை விளக்கம் தரட்டும்.

 

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் குற்றம்- மோடி அரசின் துக்ளக் தர்பார் சட்டம் ??!!

மார்ச் 31,2017 வரை செல்லாத ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு இப்போது அவசர சட்டம் மூலம் செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் நான்கு வருட சிறை தண்டணை என்று துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

உலகில் எங்காவது இப்படி ஒரு அறிவுக்கு பொருத்தமில்லாத சட்டம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

செல்லாத நோட்டு குப்பை காகிதம்.     அதை பயன்படுத்த  முடியாத  போது வைத்திருப்பது மட்டுமே எப்படி குற்றமாகும். ?     பத்து நோட்டுகளை வைத்திருக்கலாம்  நினைவுச் சின்னமாக என்று அரசு அனுமதிக்கிறது.

அதிகம் இருந்தால் அழித்து விடுங்கள் என்று அரசு சொல்கிறதா?    அப்படி வைத்திருப்பதில் எந்த பயனும் யாருக்கும் இல்லை.   யாருக்கும் நட்டமும் இல்லை.    யாருக்கும் நட்டமிழைக்க முடியாத நோட்டுகளால் என்ன ஆபத்து வந்து விடும்.      அப்படி வைத்திருக்க யாருக்கும் எந்த காரணமும் இல்லை.

தேவையே இல்லாமல் ஒரு சட்டத்தை போடுவதால் இந்த அரசு என்ன சொல்ல நினைக்கிறது. ?

கருப்பு பண ஒழிப்பு, கள்ள பண ஒழிப்பு , தீவிரவாத குழுக்கள் ஒழிப்பு  எல்லாம் போய் இப்போது பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய கோஷத்தை தூக்கிப் பிடிக்கிறது மோடி அரசு .

எதையும் யாரும் எதிர்க்க வில்லை.   திட்டமில்லாமல் பொதுமக்களை  வாட்டி வதைக்கும் இந்தசெல்லாத நோட்டு திட்டத்திற்கும்     பணமில்லா பரிவர்தனைக்கும் என்ன தொடர்பு?

கானா, நைஜீரியா , மியான்மர், சோவியத்யூனியன் ,      ஸைரே, ஜிம்பாப்வே, வட கொரியா, வெனிசூலா, போன்ற நாடுகள் இதே மாதிரி நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமால் தோல்வியடைந்தன.

ஐரோப்பா யூனியன் நாடுகள் பனிரெண்டு ஒன்று சேர்ந்து புதிய யுரோ நோட்டுகளை மூன்றாண்டுகள் திட்டமிட்டு அமுல்படுதியபோது அது வெற்றி யடைந்தது.    அதுமாதிரியான திட்டமிடல் இங்கு இல்லை.

பாகிஸ்தான் அடுத்த ஆண்டு முதல்  பழைய நோட்டுகளுக்கு பதில்  புதிய நோட்டுகளை  அச்சடித்து வைத்துக் கொண்டு அறிமுக படுத்த  இருக்கிறது.

கருப்பு பணம் ஒழிக்கவே முடியாத ஒன்று.        பழைய ஆயிரம் ரூபாய் கருப்பு பணம் இனி மேல் இரண்டாயிரம்  ரூபாய் கருப்பு  பணமாக மாறும்.

கள்ளப் பணமும் இனி இரண்டாயிரம் நோட்டுகளாக வரும்.     தொடர்ந்து போராடி அவைகளை ஒழிக்க முயற்சிப்பதே ஒரே வழி.

மொத்தம் 15.4  லட்சம் கோடி ஆயிரம் ஐநூறு நோட்டுகளில் இப்போது வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டிருப்பது   14  லட்சம் கோடி என்றால் மிச்சம் 1.4 லட்சம் கோடிதான் வரவேண்டும்.    வரலாம் அல்லது வராமல் போகலாம்.

வந்திருப்பதில் எவ்வளவு வெள்ளை பணம் எவ்வளவு  கருப்பு பணம் என்பதை எல்லா கணக்குகளையும் ஆராந்தால்தான் தெரியும் .

வருமான வரி சட்டத்திலேயே பெரிய துகைகள் கொண்ட பரிவர்த்தனைகளை காசோலை அல்லது வங்கி ஓலை மூலமாகவே மட்டுமே செய்ய முடியும் என்ற உள்ளதை அமுல் படுத்தினாலே இந்த செல்லாத நோட்டு அறிவுப்புக்கு தேவையே இருந்திருக்காது.

காபி குடிக்கவும் பூ வாங்கவும் பஸ் ரயில் டிக்கட்எடுக்கவும் கார்டு மூலமாக செய்ய என்ன அவசியம் இருக்கிறது. ?

போகிற போக்கை பார்த்தால் ஒரு நிலையில் மோடி அரசு தொடர்ந்து கேட்ட பெயர் வாங்கி கொண்டு  இருக்கிற நிலையில் ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை அவர் அமுல்படுத்தினாலும் ஆச்சரியப் பட முடியாது.

ஒருவேளை உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டதை போல் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில்  இறங்கினால் அரசியல் நெருக்கடி  நிலையை அமுல் படுத்த கூட மோடி தயங்க மாட்டார்.

மக்கள் படும் துயரங்களை உணர முடியாத அல்லது உணர விரும்பாத பிரதமரை நாம் பெற்றிருப்பது காலத்தின் கோலம.

 

அ.தி.மு.க வை மிரட்டுகிறதா மோடி அரசு? ராம் மோகன் ராவின் பேட்டி தரும் பொருள் என்ன?

வருமானத் வரித்  துறையின் நடவடிக்கைக்கு ஆளாகி இன்று பதவி இழந்து நிற்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று கொடுத்திருக்கும் பேட்டி தமிழக அரசியலில் ஒரு திருப்பம்.

ஸ்டாலின் சொன்னது போல் இதில் ஏதோ பெரிய மர்மம் இருப்பதைப்போல்தான் தெரிகிறது.

முப்பது லட்சம் பணம் ரொக்கம் தங்கக் கட்டிகள் என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு மாறாக இன்று ராம் மோகன் ராவ் தனது வீட்டில் கைப்பற்றியது வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான் என்றும் மனைவி அணிந்திருந்த நகைகள் மட்டும்தான் என்றும் சொல்லியிருப்பது சரியா என்று தமிழக மக்கள் குழம்பி இருக்கிறார்கள்.

ஓ பி எஸ் யும் மத்திய அரசையும் நேரடியாகவே வம்புக்கு இழுத்திருக்கிறார்.

தலைமை செயலாளரின் அறையில் நடந்த சோதனையை தடுத்து நிறுத்த அரசுக்கு தைரியம் வர வில்லை என்றும் என்னை இட மாற்றம் செய்யும் தைரியம் கூட மத்திய அரசுக்கு இல்லை என்றும் தெளிவாக சவால் விடுகிறார்.

நாளை ஓ பி எஸ் மற்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய  அளவில் இவரது  பேட்டி இருக்கிறது.

நாளை  மறுநாள் சசிகலா அ தி மு க பொது செயலாளராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்களை கொண்ட கட்சி ,  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு , ஏதோ அனாதையாக கிடப்பதைப் போலவும் அதை ஏதாவது செய்து ஆதாயம் அடைய முடியுமா என்று தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பா ஜ க திட்டமிட்டு செயலாற்றி  வருகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்ற அவரது கூற்று உண்மையாக இருந்தாலும் அதை இவர் இப்போது சொல்வதற்கு காரணம் வேறு.      தன்  தவறுகளுக்கு அவரையும் கூட்டு சேர்க்கிறார்.

சசிகலா அனுமதி பெற்று பேசியிருப்பாரா அல்லது தானே தனது முடிவாக பேசினாரா என்பது தெரியவில்லை.

அரசியலுக்கு வரும் எண்ணமும் இருக்கும்போல்  தெரிகிறது.

எப்படி இருந்தாலும் ஓ  பி எஸ் சும் வருமான   வரித்துறையும் விளக்கம் கொடுக்காமல் இந்தப் பிரச்சினை  தீரப்  போவதில்லை.

முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

வரும் நாட்களில்  வாணவேடிக்கை கோலோச்சும்.     அதில் தோலுரியப் போவது மத்திய அரசா அல்லது சசிகலாவின் அ தி மு கவா  என்பதும்  வெளிச்சமாகும் .

 

பார்ப்பனீய ஆதிக்க ஆபத்து அதிகரிப்பு! இந்து கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டனர்- குருமூர்த்தி சொல்கிறார்??!!

பார்ப்பனீய ஆதிக்க ஆபத்து அதிகரிப்பு! இந்து கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டனர்-   குருமூர்த்தி சொல்கிறார்??!!

செல்வாக்கு இல்லாவிட்டாலும் தன் எடுபடாத கொள்கைகளை சொல்லிக்கொண்டே இருப்பது பார்பனீயம்.    என்றாவது வெல்வோம் என்ற நம்பிக்கையில்.

அதைப்போல் தான் சோ வுக்குப் பின் துக்ளக் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி எடுபடாத வாதங்களை நம்புகிற மாதிரி முன் வைக்கிறார்.

ஒரு கோடி பேர் சபரிமலைக்கு செல்கிறார்களாம்.   மாதம் இரண்டரை லட்சம் பேர் பழனி போகிறார்களாம். மேல்மருவத்துருக்கு முப்பது லட்சம் பேர் செல்கிறார்களாம்.    இந்த இந்துக் கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டார்களாம். தலைவர்களை விட கடவுள்களை தான் மக்கள் நம்புகிறார்கள். கடவுளைத்தான் தலைவராக பார்கிறார்கள். தலைவரை கடவுளாக பார்க்கவில்லை.   இதுதான் குருமூர்த்தியின் மதிப்பீடு.

குருமூர்த்தி சொல்லும் பக்தர்களில் எத்தனை பேர் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை குருமூர்த்தி சொல்வாரா?

வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?     பக்தர்களிடம் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பை நடத்த தயாரா?

தன் துன்பங்களில் இருந்து விடுபட  அப்பாவி பக்தன் வேறு வழியின்றி பார்ப்பான்  மணியாட்டி இறைத்தொண்டு செய்வதை ஏற்றுக் கொள்கிறானே தவிர மனப்பூர்வமாக அல்ல.

மாற்றங்களை கொண்டுவர அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவர்கள் தான் அனைவரும்.

ஒரு சத விகிதம் கூட பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒப்புக் கொள்பவர்கள் அல்ல.  சம்பிரதாயம் ,விதி என்று கட்டாயப் படுத்தப் பட்டே பார்ப்பனீய ஆதிக்கம் திணிக்கப் படுகிறது.

இதை வைத்து மீண்டும் அரசியல் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர்கள் திட்ட மிடுகிறார்கள்.

ராம் மோகன் ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு இருக்கிறார். கிலோ கணக்கில் தங்கம் கோடிகோடியாக பணம் கைப்பற்றப் பட்டிருக்கிறது.  விசாரணை செய்து சிறையில் போடட்டும்.    ஆனால் தினமலர் அவரை பற்றி செய்தி வெளியிடும் போது அவன் இவன் என்று எழுதுகிறதே  எந்த பார்பானாவது மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனால் அப்போது அவனை அவன் இவன் என்று எழுதுவாயா?       காஞ்சி சங்கராச்சாரியார் கொலைக குற்றச்சாட்டில் சிறைக்குப் போனபோது அவன் இவன் என்று எழுதினாயா?

எப்போதையும் விட இப்போதுதான் பெரியார் தேவைப் படுகிறார்.    அவரது சிந்தனை தேவைப்  படுகிறது.

பெரியார் மற்றும் எம் ஜி ஆர்  நினைவு நாளான இன்று பார்ப்பனீய ஆதிக்கம் மீண்டும் வேருரான்றமல் விழிப்புடன் செயலாற்ற சூளுரைப்போம்.

 

ஷரியத் கவுன்சில் சட்ட விரோதம் என்ற உயர் நீதி மன்ற தீர்ப்பு சரியா?

ஷரியத் கவுன்சில் சட்ட விரோதம் என்ற உயர் நீதி மன்ற தீர்ப்பு சரியா?

முஸ்லிம்கள் தங்கள் சொத்து ,திருமண , பாக உரிமை போன்ற சிவில்  உரிமைகளை பொறுத்த வரை தங்கள் முஸ்லிம் சட்டப்படி நடந்து கொள்ளும் உரிமைபடைத் தவர்கள்.

இது தொடர்பான பிரச்னை வரும்போது மசூதிகளில் இயங்கும் ஷரியத் கவுன்சில் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

அப்துல் ரஹ்மான என்பவர்  தொடுத்த வழக்கில் தனது மனைவியை அண்ணா சாலை மசூதி ஷரியத் கவுன்சில் விவாக ரத்து செய்து மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வழக்கு தொடுத்தார்.

விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மசூதிக்குள் சட்ட விரோத நீதிமன்றம் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று  சொல்லி விட்டு காவல் துறைக்கு நடவடிக்கை உத்தரவிட்டது.

காவல் துறையோ கவுன்சில் மசூதிக்குள் செயல் படுவதால் உள்ளே சென்று நடவடிக்கைஎடுக்க முடிய வில்லை என்று தெரிவித்தது.

வழிபாட்டு தலங்களில் வழிபாடுதான் நடக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் தனிச்சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருப்பதை அவர்கள் எப்படி நிறைவேற்றிகொள்ளுவார்கள்?

மசூதிக்கு வெளியேதான் ஷரியத்  கவுன்சில்  செயல்பட வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா?

தனிச்சட்டம் என்ன சொல்கிறது என்பதை விளக்கும் ஒரு அமைப்பு செயல்படுவதை எப்படி எதிர்க்க முடியும்?

தனிச்சட்டம்  கூடாது என்பது வேறு  அதை அமுல் படுத்தும் அமைப்பு மசூதிக்குள் செயல் படக் கூடாது என்பது வேறு.

தனிச்சட்டம் தொடர்கிறவரையில் ஷரியத் கவுன்சில் செயல்படுவதை தடுக்க முனைவது சரியல்ல.

ஷரியத் கவுன்சில் எப்படி  எங்கே செயல்பட வேண்டும் அதற்கு  மேல்முறையீடு உண்டா என்பதை முஸ்லிம்களே தீர்மானத்துக் கொள்ள விட்டு விடலாம்.

வழக்கு தொடர்கிறது.    எனவே விளக்கம் வேண்டும்.      தமிழக அரசு தெளிவு படுத்த கடமைப் பட்டிருக்கிறது.

பாதிரியார் கன்னியாஸ்திரி சம்பள வருமான வரி விலக்கு சரியா?

வெள்ளைக்காரன் காலத்தில்   1944 ல் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் வருமான வரி விலக்கு பெறும் விதத்தில் உத்தரவிடப்பட்டது.   அதை தொடர்ந்து  1977 ம் ஆண்டில் வரி  விதிப்பு வாரிய செயலாளர் ஒரு சுற்றரிக்கையும் வெளியிட்டார்.

காரணம் அவர்கள் வாழ்நாள் முழுதும் இறைபணிக்காக அர்பணித்து வாழ்பவர்கள்.    அவர்கள் சொத்து வாங்கவும் முடியாது.  வாங்கினாலும் பின்னர் தானாக திருச்சபைக்கு சொந்தமாகிவிடும் .     ஊதியத்தை கூட முழுவதையும் பயன் படுத்திக் கொள்ள முடியாது என்றெல்லாம் காரணம் சொல்லப் பட்டது.

அதை மீறி விலக்குப் பெற்றவர்கள் பட்டியலில் இவர்கள் இல்லை என்ற காரணம் காட்டி வரி விதித்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் சுற்றறிக்கையை முதன்மை ஆணையர் மதித்து நடக்க வேண்டும் என்றும் வரி விதிப்பு ஆணையை  ரத்து செய்வதாகவும்   உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவு எல்லா மதங்களுக்கும் பொருந்துமா என்பது விளக்கப் படவில்லை.

எல்லா மதங்களிலும் தங்கள் வாழ் நாட்களை இறைப்பணி க்கு அர்ப்பணிப்பவர்கள்  இருக்கிறார்கள்.

தங்கள் சொத்துக்களை தங்களுக்கு பிறகு இறைப்பணிக்கு கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.    அவர்கள் வருமானத்திற்கு விலக்கு உண்டா?

எல்லா மதங்களையும் நாங்கள் சமமாக நடத்துகிறோம்  என்று அரசு சிந்திக்க  வேண்டும்.

வரைமுறைகளை வகுக்க வேண்டும்.

அது சரி .   இரண்டரை லட்சம் வரை இப்போது வருமான வரி கிடையாது. அதாவது மாதம் இருபதாயிரம்.    அதற்கும் மேலா பாதிரியார்கள் சம்பளம் பெறுகிறார்கள்?

பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.    அவர்கள் தேவைகளை தேவாலயமே ஏற்க வேண்டும் .

புத்த மதத்திலும் இதுபோலவே பிட்சுக்களின்  தேவைகளை மடமே ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

எந்த சட்டமும் மதங்களுக்கிடையே பார பட்சம் காட்டக் கூடாது.   அரசு விரிவான அறிக்கை தர வேண்டும்.  குழப்பத்தை தீர்க்க வேண்டும்.

நாத்திகத்தையும் மனித நேயத்தையும் வளர்க்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் அமைப்புகளுக்கும் தொண்டர்களுக்கும் இந்த விலக்கு உண்டா என்பதையும் தெளிவு  படுத்தினால் நலம் .

நிரந்தர நதி நீர் தீர்ப்பாயம் – மோடி அரசின் மற்றுமொரு மாய்மாலம் ??!!

நிரந்தர நதி நீர்  தீர்ப்பாயம் அமைக்க திட்டமிடுகிறது மோடி அரசு.

மூன்றாண்டுகளுக்குள் தீர்வைக்காண அது உதவும் என்று அரசு நம்புகிறது

ஆனால் கடந்த கால அனுபவம் எதையும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்பதையே இது காட்டுகிறது.

காவிரி நதி நீரைப் பெற்றுத் தருவதில் மத்திய அரசு காட்டி வரும் அருவருக்கத் தக்க அரசியல் இவர்கள் எதையும் செய்வார்கள் என்ற உருவத்தை ஏற்படுத்தி விட்டதே?

இன்று வரை கர்நாடகா  109 டி எம் சி நீர் தரவேண்டும் இறுதி தீர்ப்பின்  படி.      அது கிடைத்தால் இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் பிழைத்துக் கொள்வார்கள்.       இன்று பயிர் காய்ந்து போய் செத்து மடிகிறார்கள்.

தீர்ப்பை அமுல்படுத்த மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பதில் மத்திய அரசு காட்டி வரும் தில்லு முல்லு தயக்கம் எதை காட்டுகிறது?     அரசியல் லாபம்தான் அவர்களுக்கு  முக்கியம் என்பதை  காட்ட வில்லையா?

இப்போது இருக்கும் எட்டு தீர்பாயங்கள் எல்லாம் நிரந்தர தீர்வை தந்து விட்டனவா?

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் இது வரையிலான அனுபவம்.

ஒப்புக்கொள்ளப் பட்ட தீர்ப்புகளையே ஒவ்வொரு பத்து அல்லாத இருபது ஆண்டுகளுக்கு பிறகு மறு பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.

எல்லாம் சரி.     மோடி அரசுக்கு நல்ல எண்ணம்தான் உள்ளது என்றால் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து விட்டு எப்போது வேண்டுமானாலும் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கட்டும்.

மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்க இதை ஒரு சாக்காக பயன் படுத்தும் முயற்சியை ஒரு போதும் ஏற்க முடியாது.

நிரந்தர அமைப்பு அமைய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகுமென்றால் அது வரை இறுதி தீர்ப்பை பெற்றவர்கள் பொறுத்திருக்க வேண்டுமா?

தேசிய நதிநீர் கட்டமைப்பு மசோதா 2016,   National Water Framework Bill 2016   , தேசிய நதிநீர் கொள்கை   National Water Policy 2012    ஆகிய முயற்சிகளின் மூலம் நதிகளை தனியார்  மயமாக்கி மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து பன்னாட்டு கம்பெனிகளிடம் கொடுக்க திட்டமிடுகிறது மத்திய  அரசு.

மாநிலங்களின் அதிகார பறிப்பு,  மத்திய அதிகார குவிப்பு , பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைப்பு – இதுதான் மத்திய அரசின் நீண்டகால திட்டம்.

ஆட்சிமாறினால் தவிர காட்சி மாறாது.

 

சசிகலாவின் ஆளுமைத் திறன் – சாதிப்பாரா சறுக்குவாரா???!!!

சசிகலா-

ஜெயலலிதாவின் தோழி- கூடவே இருப்பவர்- கணவரை பிரிந்து  தோழியுடன் வாழ்பவர்- கிரிமினல் வழக்குகளில் ஜெயலலிதாவுடன் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்- இதுவரை பொதுமேடைகளில் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளாதவர்-.

இவர் தகுதி என்ன என்பதை அ தி முக  தொண்டன் தான் தீர்மானிக்க் வேண்டும்.

மற்றவர்களுக்கு இவர் வேண்டும் வேண்டாம் என்று சொல்ல உரிமை இல்லை.

ஆனால் ராமதாஸ் சொல்வது போல் சட்டத்துக்கு  புறம்பான சக்தியாக அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வேண்டும் என்றால் சட்டப் படியான அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயல் படலாம் .   அப்போதுதான் இவர் தகுதியாவர்தானா அல்லவா என்பது தெரியும்.

அதற்குள் பார்ப்பனீய சக்திகள் அவருக்கு எதிரான அம்புகளை ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைதான் அவர்களின் அடிவருடிகளாக வாழ்ந்து வந்தாலும் அவர்களின் அதிகார  ;மையத்தை தடம் மாற்றி விட முனைந்தால் எதிர்ப்பார்கள்.    அதுதான் அவர்கள் குணம்.

ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி எல்லா வகையான கற்பனை கதை கட்டுரைகளையும் இவர்கள் புனைந்து வருகிறார்கள்.

ஆளுநர், மத்திய அரசு, அப்போல்லோ மருத்துவ மனை  நிபுணர்கள், லண்டன் மருத்துவர், ஏய்ம்ஸ் மருத்துவர்கள் எல்லார் மீதும் கரை பூசும் முயற்சி இது.

கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க  முனைந்து முடியாது என்று தெரிந்ததும் இப்போது வேறு எல்லா வகைகளிலும் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழ் நாட்டைமைனாரிட்டிகள் தான் ஆள வேண்டும் என்பது விதியா என்ன?

ஓ பி எஸ் தன் ஆளுமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைதிருக்கிறது.    எப்படி இயங்க போகிறார்  என்பது தெரியவில்லை.

இதுவரை தன்னை நிருபிக்காதவர் சசிகலா!

நிரூபிக்க வாய்ப்பு தரும் முன்பே தகுயில்லாதவர் என்று சான்றளிப்பது சரியல்ல.

சசிகலா வரட்டும்- தன்னை நிரூபிக்கட்டும்!!!   அதுவரை பொறுத்திருப்போம்!!!!

 

பிராமணீயத்தின் பிரதிநிதி சோ காலமானார்!!?? ஆன்ம சாந்தி கிடைக்கட்டும்!!!

சோ- ராமசாமி!

சிரிப்பு நடிகர் அறிமுகம்-   அப்போதே சமூக மாற்றங்களை கொண்டு வந்த திராவிட பிரதிநிதி களை கிண்டல் செய்வதையே முக்கிய கொள்கையாக கொண்டவர்.

சமூக நீதிக்கு எதிரான கொள்கை களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் தொடர்ந்து செயல் பட்டவர்.

கொஞ்சம் கூட வெட்கப் படாமல் சமூக நீதிக்கு  எதிராக தன் சமூகம் செய்த கொடுமைகளை   எப்போதுமே கண்டு கொண்டு கொண்டதில்லை.

வெற்றி கண்ட எல்லாரையும் சாதி அடையாளத்தோடு குறிப்பிட்டு விட்டு தான் சார்ந்த பார்ப்பன சாதனையாளர்களை விட்டு விடுவது.

அவர் எதையாவது  பாராட்டினால் உடனே முடிவுக்கு வந்து விடலாம் அது பிற்பட்ட தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரானது என்று.

வேண்டுமேன்றே தமிழ் மரபுக்கு எதிராக ஜ ஸ ஷ போன்ற வடசொற்களை பிடிவாதமாக துக்ளக்கில் பயன் படுத்தி வந்தவர்.

கலைஞரை வசை பாடிக்கொண்டே நட்பும் வைத்திருந்தவர்

தான் யாருக்கு எதிராக செயல்படுகிராரோ அவர்களில் சிலரை தன் ஆதரவாளராக மாற்றிக்கொள்ளும் திறன்  படைத்தவர்.

ஜெயலலிதாவின் வேண்டப் பட்ட நண்பர்.

யார் இறந்தாலும் அவரது நல்ல பண்புகளை மட்டுமே கொண்டு மற்றவற்றை மறப்பது தள்ளுவது தமிழ் மரபு என்ற  வகையில் அவரது துணிவு, நகைச்சுவை உணர்வு ,வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி.