ஆசிரமம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்புகள் .
யார் பயங்கரவாதிகள்? இந்து அமைப்பபுகள் இகாற்கு விடைஅளித்திருக்கின்றன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியும் இந்து அமைப்புகளும் பல்வேறு வகைகளில் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த எதிர்ப்பு பக்தர்களின் தன்னெழுச்சியா அல்லது தூண்டிவிடப்பட்ட வன்முறையா இதுதான் கேள்வி. ஆட்சேபணை செய்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறலாம். அதற்காக சட்டப்படி மக்கள் ஆதரவை திரட்ட சட்டப்படி எதிர்ப்புகளை காட்டலாம். ஆனால் நடந்தது என்ன?
மத வன்முறையை தூண்டி விட்டு அரசியல் லாபம் அடைவது ஒன்று தான் பாரதிய ஜனதா கட்சி லட்சியம் என்பதை நிரூபித்து விட்டார்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களை கைது செய்வதை எதிர்த்து நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமித்ஷா எச்சரிக்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கேரளாவில் உள்ள பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. பெண்கள் மட்டும்தான் போராடுகிறார்களா? ஏற்பாடு செய்தது யார் ?
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா? அதை சங்க பரிவாரங்கள் அனுமதிக்கின்ற்னவா? கேரளாவை சேர்ந்த சாமியார் சந்தீபானந்தா வெளிப்படையாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த நிலைப்பாட்டை விளக்கி கூறி வருகிறார். அவருக்கு ஐயப்ப பக்தர்களும் சில இந்து அமைப்புகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சாமியார் சந்தீபானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கி ஆசிரமத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கும் தீ வைத்திருக்கிறார்கள்.
அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் சொல்லியிருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியையும் சங்பரிவார் அமைப்புகளை அடையாளம் கண்டு கொள்வதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக விளங்குகிறது. மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய எதிர்க்க வேண்டிய சக்தி இந்து அமைப்புகள்தான் என்பதை இந்த சம்பவம் மேலும் உறுதிப்படுத்துகிறது.