மதம்

அய்யப்ப அரசியல் பாஜகவை கரை சேர்க்காது?

Share

அயோத்தி அல்ல சபரிமலை??!!

ராமரை வைத்து அரசியல் செய்து வடமாநிலங்களில் ஆட்சியை பிடித்தது பாஜக.

அதேபோல் சபரிமலையை வைத்து தென்னாட்டை வசப்படுத்த முயற்சிக்கிறார்கள்.   அது ஒரு போதும் நடவாது..

அதிக பட்சம் சிலகாலம் தள்ளிப் போகலாம். ஆனால் அனைத்து வயது பெண்களும் அய்யபனை தரிசிக்கும் காலம் வரத்தான் போகிறது.

இதுவரை பாவப்பட்ட இந்து மக்கள் விடுவிக்கப்பட்ட போதெல்லாம் சனாதனிகள் எதிர்த்தே வந்திருக்கிறார்கள். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களையே தங்கள் கேடயமாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நீங்கள் அடிமை சேவகம் செய்யத்தான் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அவர்களை வைத்தே சொல்ல வைத்த கூட்டம் எதைத்தான் செய்ய மாட்டார்கள்?

நம்பூதிரிகள் சொல்வதை எல்லாம் கேட்டால் இன்னமும் பெண்கள் திறந்த மார்போடுதான் நடமாட முடியும்? தோள் சீலை அணியும் உரிமைக்கு எந்த மாநிலத்தில் போராட வேண்டி வந்தது?

சுவாமி விவேகானந்தரே கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி என்று வர்ணித்தது அங்கு நிலவிய இத்தகைய கொடுமைகளை கண்டுதான்.

அங்குதான் கீழ்சாதி மக்கள் ஒவ்வொருவரும் இத்தனை அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும் என்ற இழிநிலை நிலவியது. அங்குதான் நம்பூதிரிகள் முதல் இரவை யாரோ தாலி கட்டிய பெண்ணுடன் கொண்டாடினார்கள். அதற்கும் ஒரு காரணத்தை சொல்லி ஏற்க வைத்தார்கள். அதனால்தான் பெரியார் வைக்கம் சென்று தெருவில் நடமாடும் உரிமைக்காக போராடினார்.

இப்போது நிலவும் சமத்துவம் சும்மா வந்து விட்டதா?

உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் அய்யபனை தரிசிக்க உரிமை பெற்றவர்கள் என்று தீர்ப்பு சொல்லிய பிறகும் அமுல் படுத்துவதை தடுக்கிறார்களே எந்த தைரியத்தில்?

இடது சாரி ஆட்சியே தீர்ப்பை அமுல்படுத்துவதை தள்ளி வைக்கிறது. தரிசனம் செய்ய வரும் பெண்களை திருப்பி அனுப்புகிறார்கள்.

ஏழு நீதிபதிகள் தீர்ப்பு சொல்லும் வரை நிறுத்தி வைக்கப்படாத தீர்ப்பு அமுலுக்கு வருவதை தடுக்கலாம்.

ஆனால் தள்ளிபோடப்படும் ஒவ்வொரு நாளும் உச்சநீதி மன்றம் இகழப்படுகிறது.

அதற்கு ஒரு கம்யுனிச அரசு துணை போவதுதான் வருத்தம் அளிக்கிறது.

This website uses cookies.