முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அடம் பிடிக்கிறது. மோடியின் மத்திய அரசு.
முஸ்லிம் பெண்கள் மீது அவ்வளவு அளவு கடந்த பாசம்.
மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை செல்லாது என்று பல இஸ்லாமிய நாடுகளும் சட்டம் போட்டிருக்கின்றன. நமது உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு சொல்லி விட்டது. அப்போது இதுபற்றி ஒரு சட்டம் இயற்றுங்கள் என்று சொன்னதுதான் தப்பாகிவிட்டது.
அதை சாக்காக வைத்து முஸ்லிம் பெண்கள் உரிமை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் முஸ்லிம்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கொடுத்து சட்டம் இயற்றி இருக்கிறது மத்திய அரசு.
முந்தைய முயற்சிகள் போலவே இப்போதும் மேலவையில் நிறுத்தி வைக்கப்படுமா நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாஜக வின் கூட்டணி கட்சிகள் சிலவும் எதிர்ப்பதால் நிறைவேறுவது சிரமம்.
குடும்ப வன்முறை, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் தண்டிக்கப்படும் போது முஸ்லிம்கள் மட்டும் தண்டிக்கப் பாடகக் கூடாதா என்ற கேள்வியை எழுப்பும் பாஜக விவாகத்து பிரச்னையில் வேறு எந்த மதத்தவர் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்வதில்லை.
முஸ்லிம் பிரச்னைகளில் நாங்கள் தலையிடுவோம் அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று முரட்டுத் தனமாக வலியுறுத்து வதுதான் பாஜக வின் நோக்கம்.
இல்லாவிட்டால் செல்லாத விவாகரத்து செய்ததற்கு மூன்றாண்டு தண்டனை தர தேவையில்ல.