கையை வெட்டுங்கள் என்று பேசிய பாஜக மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே பதவியில் தொடர முடிகிறது.
ஏன் என்றால் அவர் வெட்ட சொன்னது இந்துப் பெண்களை தொட்டவர்களின் கைகளை. நடப்பது பாஜக ஆட்சி. பேசியவர் பார்ப்பனர். தைரியத்துக்கு என்ன குறைச்சல்.
இதை சாதாரணமான ஒரு மத வெறியாளர் சொன்னால் புரிந்து கொள்ளலாம். ஒரு தவறு நடக்கிறது என்றால் அதற்கு ஒரு அமைச்சர் சொல்லும் தீர்வு இதுதானா?
சபரிமலைக்கு போன பெண்கள் குடகில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்று வேறு பேசியிருக்கிறார்.
இப்படிப்பட்டவர்கள் தான் பாஜக அமைச்சர்கள். அதேநேரம் இரட்டை வேடத்திலும் தேர்ந்தவர்கள். உடனே பாஜக செய்தி தொடர்பாளர் மதுசூதன் ஹெக்தேவின் கருத்துக்கும் பாஜக வுக்கும் தொடர்பு இல்லை என்கிறார்.
பின் அமைச்சராக தொடர்வது எப்படி?
This website uses cookies.