ஆந்திர மாநில மடிகா வகுப்பு எம்எல்வாக இருப்பவர் மருத்துவர் உண்டவல்லி ஸ்ரீதேவி. இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மடிகா வகுப்பு ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட வகுப்பு.
ஒய் எஸ் ஆர் ரெட்டியின் நினைவு நாள் விழாவுக்கு சென்ற ஸ்ரீதேவியை அனந்தவரம் கிராம கட்சிக்காரர்கள் அங்கே இருந்த கணேஷ் சதுர்த்தி பந்தலுக்கு அழைத்தார்கள். அங்கு சென்ற ஸ்ரீதேவியை அங்கே இருந்த கொம்மிநேனி சிவய்யா என்ற உயர் சாதி சௌதாரி வகுப்பை சேர்ந்தவர் சாதியை சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார். பிள்ளையார் தீட்டாகி விட்டார். ஏன் இவரை இங்கே அழைத்து இடத்தை மாசு படுத்துகிறீர்கள் என்று சத்தம் போட்டு தகராறு செய்திருக்கிறார்.
அவர் தெலுகு தேசம் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் இதேபோல் சென்ற ஆண்டும் தெலுகு தேசம் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் அவர் கட்சியை சேர்ந்தவராலேயே அவமானப் படுத்தப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
காவல் துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
ஒரு உண்மை தெளிவாகிறது.
தலித்துகள் இன்னும் முழுவதுமாக சாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
சாதி பேதம் பாரோம் என்பதெல்லாம் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
சட்டப்படி சாதி ஒழிப்பு ஒன்றே ஒரே சமுதாயத்தை உருவாக்க முடியும்.
சட்டப்படி ஒழிக்க முடியுமா? ஒழிக்க விடுவார்களா?? யார் அவர்கள்??
This website uses cookies.