தமிழர் சமயம் ஆரியத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிரானது என்ற
மாணிக்கவாசகர் கூற்றை மேற்கோள் காட்டிய
நல்லூர் சரவணனுக்கு கொலை மிரட்டல்???!!!
கல்வெட்டு ஆராய்ச்சியாளரான முனைவர் பத்மாவதி எழுதிய
“திருவாசகம் அருளிய மாணிக்க வாசகரின் காலமும் கருத்தும்”
என்று நூலை சைவ சித்தாந்த பெருமன்றத்தின் மூலம் நல்லூர் சரவணன் வெளியிட்டிருக்கிறார்.
அவர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையின் தலைவர்.
பல நூல்களை எழுதி இருக்கிறார்.
அவரைப் போய் ரவுடி என்று குறிப்பிட்டு
பாஜக செயலாளர் ஹெச் ராஜா பேசியிருக்கிறார்
நல்லூர் சரவணனை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொண்டு சிலர் சென்னை பல்கலைகழகத்தை முற்றுகை இட்டு இருக்கிறார்கள் .
ஆராய்ச்சிக் கட்டுரையில் தவறு என்றால் அதை எடுத்துச் சொல்லி மறு புத்தகம் வெளியிடு. அதை விட்டுவிட்டு ஆராய்ச்சியே செய்யக்கூடாது என்கிறார்களா ?
பார்ப்பனியத்தை எதிர்த்து யாரும் பேசக்கூடாது .
ஆராய்ச்சியாளர் பத்மாவதி மாணிக்கவாசகர் பற்றி பல செய்திகளை சொல்கிறார் .
புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில்
மற்ற சிவன் கோயில்களில் இருப்பதைப்போல் லிங்க வழிபாடு இல்லை.
அங்கு உருவமற்ற சிவனையே வழிபடுகின்றனர்.
ஆரிய வேத கருத்துகளுக்கு எதிராக சைவ சமயத்தை சேர்ந்த மாணிக்கவாசகர் சொன்ன கருத்துகளை மேற்கோளாக வைத்து
வேத மதத்திற்கும் சைவ சமயத்திற்கும் இடையிலான போராட்டம் பற்றி நல்லூர் சரவணன் பேசியிருக்கிறார்.
அதுதான் அவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.
அவர்கள் அந்த புத்தகத்தை படித்தார்களா என்பது கூட தெரியவில்லை.
30 வருடமாக 30க்கும் மேற்பட்ட சைவ சமய நூல்களை
நல்லூர் சரவணன் எழுதி இருக்கிறார் .
நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி அனைத்திலும்
சைவ சமய மேன்மை பற்றி பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இதிலென்ன அவதூறு இருக்கிறது?
இந்து அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டு
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அடி பணிந்து போகிறவர்களாக
சில தமிழர்கள் செயல்படுவது வருந்தத்தக்கது
அதில் முதன்மையானவர் அர்ஜுன் சம்பத்
அவர்களால் ஓரங்கட்டப் பட்டு தனி கட்சி கண்டவர்
தமிழர்கள் சார்பில் பேசுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?
பக்தர்கள் சார்பிலும் இவர்கள் பேச முடியாது .
மாறுபட்ட கருத்துடைய பக்தர்கள் இருக்கக் கூடாதா?
இத்தகைய அச்சுறுத்தும் பிரச்சாரத்திற்கு ஆட்சியாளர்கள் அடிபணியக் கூடாது.
இரண்டு மாறுபட்ட கருத்துக்களை உடைய
இந்துக்களுக்கு இடையே ஆன பிரச்சினைகளை அவர்களே
தீர்த்துக் கொள்ளும் படி அரசு விட்டு விட வேண்டுமே தவிர
ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவது கூடாது.
இந்து தமிழர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படும் வரை
இத்தகைய போலி இந்துக்களின் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம்
பார்ப்பனிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவே அமையும்
நல்லூர் சரவணனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கொலை மிரட்டல்களை பற்றி
தமிழக ஊடகங்கள் விவாதிக்க வில்லையே ஏன்?
செய்தித்தாள்கள் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுப்பது நல்லதல்ல.
அரசியல் கட்சிகளும் கூட இதுபற்றி நிலை எடுக்க வேண்டும்.
கண்டும் காணாமலும் செல்வாக்குள்ள கட்சிகள் இருப்பதினால்தான்
இவர்களின் கொட்டம் அதிகரிக்கிறது.
காவல் துறை சரவணனுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழர் சமயம் பார்ப்பனீயம் அல்ல அல்லவே அல்ல
விவாதிப்போம் தெளிவு படுத்துவோம் வாருங்கள் !!!