இந்தியா ஒரு மத சார்பில்லா நாடு.
அதன் அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை, செகுலர், கோட்பாடாக இணைக்கப் பட்டுள்ளது.
அதை இந்து ராஷ்ற்றமாக மாற்றும் முயற்சியில் பாஜக அரசு இறங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆர் எஸ் எஸ் இன் கொள்கை இந்து ராஷ்ற்றம். எனவே பாஜகவுக்கும் அதே கொள்கைதானே?
சீனக் குடியரசு கம்யுநிச்டுகளின் ஆட்சியில் இருக்கிறது.
பௌத்தர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரசில் மதத்தை புகுத்த முடியாது.
ஒரே கட்சி சீன கம்யுனிஸ்டு கட்சி பல கட்சிகள் இருக்கின்றன. எல்லாம் கம்யுனிஸ்டு கட்சிக்கு ஆலோசனை கூறும் கட்சிகளே தவிர நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் எதிர் கட்சிகள் அல்ல. அதுதான் சீனாவின் தனித்துவம் .
அத்தகைய நாட்டின் அதிபர் இந்தியாவுக்கு வரும்போது அவருக்கு எத்தகைய வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதை அவர்களுடன் கலந்து முடிவு செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் இந்த நாட்டின் அடையாளம் இந்து மதம் என்று கூறுபவர்கள் ஆயிற்றே. அதனால் நாங்கள் எங்கள் மத ரீதியில் வரவேற்கிறோம் என்று உலகுக்கு காட்ட எண்ணி மயிலாப்பூர் கோவில் அர்ச்சகர்களை வரவழைத்து பூரண கும்ப மரியாதை கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அது பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்ட மத சடங்கு. அப்படி செய்தே தீர வேண்டும் என்றால் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்களையும் வைத்து வரவேற்பு கொடுங்களேன். எல்லாருக்கும் அரசின் நடவடிக்கைகளில் பங்கு இருக்க வேண்டும்.
அதை சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்க்கும் படி கூறிவிட்டதால் அதிபருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட வில்லை. அர்ச்சகர்கள் வேறு வழியின்றி திருப்பி அனுப்பப் பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன அரசு தன் அலுவல்களில் மத சடங்குகளை தவிர்க்கிறதா இல்லையா?
தங்கள் கொள்கையை வலியுறுத்திய சீன அதிகாரிகளுக்கு பாராட்டு.
அரசே தவிர்த்திருக்க வேண்டிய சம்பவம் இது.
எதிர்காலத்தில் ஆவது அரசு முகத்தில் கரியை பூசிக்கொள்ள வேண்டாம் என்பதே பொதுமக்களின் விருப்பம்.