தங்களுக்கு உதவித்துகை வேண்டும் என்று அர்ச்சகர் சங்கம் கேட்டது குறித்து முன்பே எழுதியிருந்தோம்.
அதையே பிராமண சங்கம் கேட்டது. மறுக்க முடியுமா எடப்பாடியால்?
உடனே அறிவித்து விட்டார் அர்ச்சகர்களுக்கு உதவிதுகை ரூ ஆயிரம் என்று. போனால் போகிறது என்று பூசாரிகளுக்கும் உண்டு என்றும் அறிவித்து இருக்கிறார்.
அவர்களுக்கு அரசு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்பதுதான் பொதுமேடையின் கருத்து.
இறைப்பணி செய்யும் கோவில் பணியாளர்களுக்கு தேவையானதை கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.
அதில் பாகுபாடு கூடாது என்பது மட்டுமே கோரிக்கை.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும் அதை எந்த தனியாரும் செய்யலாம் என்றும் அமைச்சர் ஓ எஸ் மணியன் சொன்னார்.
ஹரே க்ரிஷ்ணா இயக்கத்துக்கு ஆளுநர் தனது நிதியில் இருந்து ஐந்து கோடி கொடுத்தது எந்த வகையை சேர்ந்தது என்பதையும் அமைச்சர் விளக்கி இருக்கலாம்.
பள்ளிகளில் மதிய உணவு தரும் அரசுக்கு காலை உணவு தர முடியாதா என்பதையும் அவர் விளக்கி இருக்கலாம்.
எப்படியோ அவா கேட்டா இவா கொடுத்தா ;நல்லாருங்கோ !
இதைப்போல் மற்றவர்கள் கேட்கும்போதும் தந்தால் நல்லது.
This website uses cookies.