கிபி 642 – 654 ஆண்டுகளில் வாதாபியை வெற்றி கொண்டு ஆண்ட முதலாம் நரசிம்ம பல்லவன் அங்கிருந்து கொண்டு வந்த கடவுள் தான் கணபதி என்று வரலாறு சொல்கிறது.
இதற்கு முத்துசாமி தீட்சிதர் பாடிய வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடலையும் சான்றாக காட்டுகிறார்கள்.
இன்னும் எத்தனையோ கதைகள் பிள்ளையாரை சுற்றி.
பார்வதியின் அழுக்கில் இருந்து பிறந்தவர். அவரை சிவன் கொல்ல பின்னர் சிவனே அவருக்கு யானைத் தலையை கொடுத்தார். இது ஒரு புராணம்.
அடுத்த புராணம் – யானை உருக்கொண்டு சிவ பார்வதி கலந்து பிறந்தவர்.
எது எப்படியோ அறுவகை சமயங்களும் பிள்ளையாரை ஏற்றுக்கொண்டு விட்டன.
இதற்கெல்லாம் அறிவு தேவை இல்லை. நம்பிக்கை மட்டுமே போதும்.
அறிவால் கடவுள் நம்பிக்கையை அளக்க முடியவே முடியாது.
கேள்வி கேட்காமல் நம்புவதுதான் மதம் என்றாகி விட்டது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
ஊரோடு ஓட்ட வாழ் என்று எல்லாரும் செய்வதை நாமும் செய்வதே நல்லது என்றாகி விட்டது.
இன்று பிள்ளையார் ஒரு அரசியல் ஆயுதம்.
மாற்று மதத்தினருக்கு சவால் விட ஒரு தேவை.
எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள் என்று இன்று சாக்ரடிஸ் பிறந்து வந்து சொன்னாலும் கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
நம்பிக்கையையும் அறிவால் அளப்போம் என்று சொல்லும் நாள் வருமா??