உலகமே கொராணா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஐஎஸ் கொலைகார கும்பல் ஆப்கானிஸ்தானில் காபூலில் ஹர் சாய் சாஹிப் என்ற குருதுவாராவில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களை நோக்கி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் பெண்கள். இவர்கள் செய்த தவறு என்ன? ஏன் கொன்றார்கள்?
இதை நடத்தியதாக ஐ எஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவர்கள் வாழத் தகுதியான மனிதர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
வெறி பிடித்த நாய்களுக்கும் இவர்களுக்கும் என் வேறுபாடு ?
இந்தியா இந்த தாக்குதலை கண்டித்து கோழைத்தனமானது என்று விமர்சிப்பதோடு நிறுத்திக் கொண்டது.
தலிபான்கள், அல் குவைதா போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளே ஏற்காத அமைப்பு ஐஎஸ்.
இஸ்லாமிக் ஸ்டேட்டை உருவாக்குவதுதான் அவர்களின் லட்சியம் என்றால் அதற்கு தடையாக இருப்பது யார்? இஸ்லாமியர்கள்தானே?
உலகின் எந்த நாடேனும் நாங்கள் இஸ்லாத்தின் படி வாழ்வோம் என்றால் அதை யார் மறுக்கப் போகிறார்கள் ?
அதாவது இன்று தங்கள் நாட்டின் மதம் இஸ்லாம் என்று அறிவித்திருக்கும் பல நாடுகள் இஸ்லாத்தை கடைப்பிடிப்பது இல்லை என்று ஆகிறது. அதற்கு மற்றவர்கள் எப்படி பொறுப்பு ஆவார்கள் ?
ஐ எஸ் பயங்கரவாதிகள் இஸ்லாத்தின் பேரைச் சொல்லவோ நபிகள் நாயகத்தின் பேரைச் சொல்லவோ உரிமை அற்றவர்கள்.
புனிதமான இஸ்லாத்திற்கு இவர்கள் களங்கம் கற்பிப்பதை சகிக்க முடியவில்லை.
அல்லாவே இவர்களை மன்னிக்க மாட்டான்.
யாரை யார் ஒழிப்பது ?
வழிபாடு செய்யும் இடத்தில் கொலை செய்யும் எந்த மனிதனும் வாழத் தகுதி அற்றவன். உலகமே ஒன்று சேர்ந்து அவர்களை அழிக்க வேண்டும்.
மதங்களின் பேரைச் சொல்லுகிற பெரும்பாலோர் சாரைத் துப்பி சக்கையை உண்கிறார்கள்.
அவர்களில் முதன்மையானவர்கள் ஐ எஸ் பயங்கரவாதிகள்.