இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் பகவான் நந்து .கனகம்பாளையத்தில் கடை வைத்திருக்கிறார்.
இந்து முஸ்லிம் கலவரம் உருவாக்க திட்டமிட்டோ கட்சியில் பெயர் வாங்கவோ திட்டம் தீட்டி இருக்கிறார். அதன் படி காவல் துறையில் ஒரு புகார் கொடுக்கிறார். தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்து தன்னை முதுகிலும் இரண்டு கைகளிலும் ஆயுதங்களால் வெட்டி விட்டதாக புகார் கொடுக்கிறார். காவல் துறை தீவிரமாக விசாரித்ததில் அந்த நபரே தனது கார் ஓட்டுனரை உதவிக்கு வைத்துக் கொண்டு இந்த தீய திட்டத்தை நிறைவேற்றியது அம்பலத்துக்கு வந்தது.
அதாவது இவரது ஓட்டுனர் கத்தியால் இவரது முதுகில் காயப் படுத்த இவரே கத்தியால் தனது இரண்டு கைகளிலும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டாராம்.
விசாரணையில் இவரது ஒட்டுனர் ருத்ரமூர்த்கி வட்டாட்சியரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அர்ஜூன் சம்பத் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்? காவல் துறை மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்ததாக கூறுவாரோ ?