கொரானாவால் இறந்த கிறிஸ்துவ மருத்துவருக்கு அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் இந்து மயானத்தில் அடக்கம் செய்த அவலம் சென்னையில் நடந்துள்ளது.
அந்த மருத்துவர் கொரொனா வார்டில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். கொரொனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர். அவரது உடலை கீழ்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவித்து கலவரம் செய்து தாக்குதல் நடத்தி பணியாளர்களை காயப் படுத்தி அராஜகம் செய்திருக்கிறார்கள்.
காவல் துறை சமாதானம் செய்ய முடியாமல் பக்கத்து இந்து மயானத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அவரது மனைவியின் முறையீட்டின் பேரில் இப்போது மறை மாவட்ட பேராயர் தலையீடு செய்து கல்லறையில் அடக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதுவரை 13 மருத்துவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கலவரம் செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடக்கிறது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை வேண்டும்.
இந்த அராஜகம் அனுமதிக்கப்பட்டால் கொரொனாவை வெல்ல முடியாது.
ஆனால் இதற்கும் மத சாயம் பூச ஒரு கூட்டம் அலைகிறது. கலவரம் செய்தவர்கள் அறியாமையால், அச்சத்தால், விரோதத்தால், எதனால் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது விசாரணையில் தெரிந்து விடும்.
ஆனால் இதில் காவல் துறையின் இயலா தன்மை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு நூறு கலவரக்காரர்களை அடக்க முடியாத நிலையிலா காவல் துறை இருக்கிறது.
பின்னர் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து விட்டோம் என்பது முன்பு தடுக்க தவறிய இயலாமையை மறைத்து விடுமா?
அரசை குற்றம் சொன்னால் அது அரசியல் என்று பொருள் அல்ல. இனி இந்த தவறு நடக்கக் கூடாது என்ற அக்கறை.;
This website uses cookies.