தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல் முருகன் முதன் முதலில் சென்ற இடம் காஞ்சியில் உள்ள சங்கர மாதம்.
அருந்ததியர் ஒருவரை மாநில தலைவராக நியமித்ததன் நோக்கமே நாங்கள் சாதி பார்க்க மாட்டோம் என்று உலகுக்கு சொல்லிக் கொள்ளத்தான் .
அங்கே நடந்தது என்ன? விஜயேந்திரர் நாற்காலியை எடுக்கச் சொல்லி விட்டு தரையில் உட்கார்ந்து கொண்டாராம். இல்லையென்றால் முருகனையும் உட்கார சொல்ல வேண்டுமே?
உள்ளே வந்த முருகனை நிற்க வைத்தே ஆசீர்வாதம் தந்து அனுப்பி விட்டாராம் .
சுப்பிரமணியசாமி பார்ப்பனர் என்பதால் ஜெயந்திரர் சமமாக உட்கார வைத்து பேசி அனுப்பிய படங்கள் வெளி வந்தன.
எல் .முருகன் ஏன் சங்கர மேடம் மட்டும் போக வேண்டும்?
திராவிட இயக்கங்களில் பதவி வந்தால் பெரியார் அண்ணா சமாதிகளுக்கு சென்று வணக்கம் செலுத்துவார்கள். பாஜக மாநிலத்தலைவர் பார்ப்பனர்களுக்கு தலைவராக உள்ள விஜயேந்திரரை சென்று பார்த்து வந்தால் என்ன பொருள்? இவர் பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொண்டவர் என்பதுதானே ?
பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் எப்படி சமத்துவத்துக்கு போராடுவார்?
எப்படி வளரும் இங்கே பாஜக?
This website uses cookies.