இத்தாலிக்கு அடுத்தபடி அமெரிக்கா தான் கொரானாவால் பாதிக்கப்பட்ட நாடு.
அந்த நாட்டில் இருக்கும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்கள். எல்லா மாநிலங்களும் கடும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கையில் ஒரு சில மாநிலங்களில் சில யூதர்களும் கிறிஸ்தவர்களும் சமூக விலகலுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார்கள்.
வரும் ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகை வருகிறது. கான்சாஸ் மாநிலத்தில் எண்ணிக்கையை குறைத்து ஈஸ்டர் பண்டிகையை அனுமதிக்கலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.
உண்மையான கிறிஸ்தவர்கள் சர்ச்சில் இருக்கும்போது கொரானாவால் உயிர் இழந்தால் கவலைப் பட மாட்டார்கள் என்று லூசியானா நகர பாஸ்டர் ஒருவர் கூறினாராம்.
இதைப்போல் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் இப்படியே தங்கள் மதத்தை பின் பற்றி கூட்டம் கூடினால் நோயை பரவாமல் தடுப்பது எப்படி?
மரணம் தாக்கியபின்னும் மதவெறி மாயவில்லையே ?!