கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகள் ஒழிப்புக் சட்டம் அமுலில் இருக்கிறது.
இருந்தும் உடுப்பி நாகரிக சமிதியினர் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்விக்க திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வழங்கி ஏற்பாடு செய்திருக்கிராகள்.
ஆண் பெண் தவளைகளை ஒரு கூண்டுகளில் அடைக்கப்பட்டு சைக்கிள் ரிக்சாவில் ஊர்வலமாக அழைத்து வந்து ஒரு புரோகிதரை அழைத்து மந்த்ரம் ஓத வைத்து தவளைகள் மீது அட்சதை தூவ வைத்து திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் மீது மூட நம்பிக்கையை வளர்த்த குற்றத்துக்காக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.
இதை விட மூடநம்பிக்கை வேறு இருக்க முடியுமா?
புரோகிதன் தவளையிடம் தாலி எடுத்துக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை.
இப்படி மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்களாகத்தான் புரோகிதர்கள் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களே மூட நம்பிக்கையை வைத்துத்தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் என்னதான் சட்டம் போட்டாலும் மூட நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
பொதுமக்களாக புத்தியை பயன்படுத்தி தடுத்தால்தான் உண்டு.