Home மதம் பார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம்! பிரபு பாதா சொன்னது இதுதான்!

பார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம்! பிரபு பாதா சொன்னது இதுதான்!

பார்ப்பனீயத்தை பரப்பவே கிருஷ்ண இயக்கம்! பிரபு பாதா சொன்னது இதுதான்!
prabhupada

பார்ப்பனீயம் இந்தியாவில் செய்த நால்வர்ண அயோக்கியத் தனத்தை இங்கே இனி இது செல்லுபடியாகாது என்று தெரிந்து கொண்டு உலக முழுவதும் அதே கொள்கையை வேறு விதமாக பரப்ப தோன்றியதுதான் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்.

அதன் தலைவர் பிரபு பாதர் தனது இயக்க கோட்பாடுகளை விளக்கி சொன்னதை அந்த இயக்கம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறுகிறார்.

“ தற்போது பிராமணர்கள் ( ஆன்ம வழிகாட்டிகள் ) சத்திரியர்கள் ( ஆட்சியாளர்கள் ) மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளபடியலும் உலகம் முழுவதும் சூத்திரர்கள் அதாவது கையால் தொழில் செய்யும் வர்க்கத்தினரால் ஆளப்படுவதாலும் சமுதாயத்தில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த முரண்பாடுகளை எல்லாம் களைவதற் காகவே  நாம் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை துவக்கி உள்ளோம். பிராம்மணத் தன்மையினர் மீண்டும் ஏற்படுத்த பட்டால் மற்ற சமுதாய நலன்கள் தாமாகவே ஏற்படும். இது மூளை சரியாக இருந்தால் உடலின் மற்றப பகுதிகளான கை கால் வயிறு போன்ற உறுப்புகள் சரியாக இயங்குவதை போன்றது.“

மேலும் இந்த இயக்கம் இந்து மத பிரச்சாரத்திற்காக ஏற்பட்டதல்ல என்றும் வாழ்வின் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கக் கூடிய ஆன்மிகப் பண்பை நாம் வழங்குகிறோம் என்பதால்தான் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்.

அடப்பாவிகளா ஏன் இந்த ப்ரசாரத்தை இங்கே செய்யக் கூடாது. உலகம் முழுவதும் பிறப்பால் அல்லாமல் பிராமணத் தன்மை உடையவர்களை உருவாக்கலாம் இங்கே மட்டும் கூடாது என்றால் அது என்ன நியாயம்?

கையால் தொழில் செய்யும் வர்க்கத்தினர் ஆளக்கூடாது என்பதும் இவர்களின் கொள்கையாக இருக்கிறது என்பதும் தெரிகிறது. அதனால் பல முரண்பாடுகள் ஏற்படுமாம். இப்படி பிறப்பின் வழி பேதம் கற்பிக்கிற வர்களை அயோக்கியர்கள் என்று சொல்வது எப்படி தவறாகும். ?

பார்ப்பான் தன் தொழில் நன்றாக நடக்க எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடுவான் என்பதற்கு இந்த இயக்கமே நல்ல உதாரணம். தலைமை பீடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அமர்வது தகுதியின் அடிப்படையிலா? சாதி அடிப்படையிலா ? இதை மட்டும் விரிவாக பேசமாட்டார்கள். அதிக பட்சம் தங்கள் கைப்பாவையாக ஆடும் சிலரை அடையாளம் காட்டி இல்லையே நாங்களும் பிறருக்கு இடம் கொடுத் திருக்கிறோமே என்று ஏமாற்றப் பார்ப்பார்கள்.

ஏமாறுவதற்கு போட்டி போடும் சமுதாயத்தில் மட்டுமே இவர்களின் புரட்டுகள் எடுபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here