பீகார் மாநிலம் அப்துல்லாபூரில் அரசு பள்ளியில் அப்சல் உசைன் தலைமை ஆசிரியர்.
குடியரசு தின பள்ளியில் கொண்டாடப்பட்ட போது தேசிய கீதமும் வந்தே மாதரமும் பாடப்பட்டது.
தேசிய கீதத்துக்கு எழுந்து நின்ற அவர் வந்தே மாதரம் பாடப்பட்ட எழுந்து நிற்கவில்லை.
தனது மதம் வந்தே மாதரம் பாடலில் வரும் பாரத மாதாவை வணங்க சொல்ல வில்லை என்பது அவரது வாதம். அதே நேரத்தில் தேசிய கீதத்தில் அப்படி ஏதும் இல்லாததால் அதற்கு அவருக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை.
எழுந்து நிற்காததற்காகன் அவரை சிலர் உள்ளே புகுந்து அவரை அடித்து உதைத்திருக்கிறாகள்.
முன்பே பலமுறை இந்த பிரச்னை எழுந்து வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம்கள் எழுந்து நிற்க வேண்டியதில் என்று பொது கருத்து இருக்கிறது.
கட்டாயப்படுத்தி பாட வைப்பது எந்த வகையில் நியாயம். ?
அதற்கு அவசியம்தான் என்ன?
ஆசிரியரை அடித்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது .