முன்னாள் எல்ஐசி முகவர் விஜயகுமார் இந்நாள் கல்கி பகவான். இவர் மனைவி அம்மா பகவான்.
ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் ரூபாய் 93 கோடி அளவுக்கு சிக்கியது . அதில் ரொக்கம் 62 கோடி , தங்கம் வைரம் 31 கோடி நகைகளும் அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப் பட்டிருக்கின்றன.
அவருக்கும் அவர் மகனுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என்கிறார்கள். அவர் மனைவியும் தானும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்வது கூடுதல் தந்திரம்.
ஆன்மிக வியாபாரம் எப்படி நாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது பாருங்கள்.
எல்லாம் நடுத்தர மேல்தட்டு மக்களின் பணம். நம்பிக்கையை விதைத்து ஆசையை தூண்டி மக்களின் தேவைகளை காசாக்கிக் கொள்ளும் தந்திரம்.
இது இந்திய தண்டனை சட்டத்தின் எந்த பிரிவு பொருந்தும் என்பது காவல் துறைக்குதான் வெளிச்சம்.
மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை தாங்களாகவே விரும்பி ஏமாறும் நிலைக்கு தள்ளுவது தண்டிக்கத்தக்க குற்றமா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு , ஆந்திரா . கர்நாடகா என்று மாநிலம் மட்டுமல்ல அகில உலகத்திலும் இவர்கள் ஆசிரமம் அமைத்து அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளர்கள் .
சென்ற ஐந்தாண்டுகளில் ஐநூறு கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவே இல்லை என்பது வருமான வரித்துறையின் குற்றச்சாட்டு.
நமது கவலை வருமான வரி மட்டும்தான் பிரச்னையா?
மக்களை ஏமாற்றுவது தண்டிக்கப் படத்தக்க குற்றம் அல்லவா? அதற்கு யாரும் புகார் கொடுத்தால்தான் விசாரணை நடவடிக்கை எல்லாம் இருக்குமா?
தானாக முன்வந்து இந்த குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமே இல்லையா?
நான் சட்டப்படி ஏமாற்றுகிறேன் என்னை சட்டம் தண்டிக்க முடியாது என்பதுதான் இவர்களின் நிலை.
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று நாம் பாடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
இந்த செய்திகளை பார்த்தாவது மக்கள் அங்கு செல்வதை நிறுத்துவார்களா?!
This website uses cookies.