சின்மயி தாயார் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு தேவதாசி முறையை ஆதரித்து பேசியிருக்கிறார்.
இணையத்தில் உலவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது ஆவது;
“தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச் சிறந்த சிஸ்டம். அதை சிதைத்ததால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்.“
சின்மயி தன் தாயார் கருத்தோடு உடன்படவில்லையாம். இவரைக் கேட்காமல் பேசிவீட்டாரோ?
எவ்வளவு அனுபவம் இருந்தால் சின்மயி தாயார் தன் கருத்தை ஆழமாக பதிவிட்டிருப்பார்.
தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியதால் பெரியார் மீது அவருக்கு இருக்கும் கோபம் நியாயமாகத்தான் தெரிகிறது.
எங்க அம்மா கருத்துக்களால என்னை தேவதாசி ஆகு என்று சொல்வது நியாயமும் இல்லை என்று வேறு சின்மயி கூறுகிறார்.
அம்மாவின் கருத்து பெண்ணிற்கு இத்தனை நாள் தெரியாமலா இருந்திருக்கும் ?
ஆனாலும் அம்மா கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறாராம். அது ஏன் ?
அம்மா கருத்துக்கு இவர் எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?
தேவதாஸ் என்பது ஆண்பால். இறைவனின் அடிமை என்று பொருள்.
தேவதாசி என்பது பெண்பால். இறைவனின் அடிமை என்றுதான் பொருள்
அது எப்படி ஆண்பாலில் சொன்னால் தப்பில்லை. பெண்பாலில் சொன்னால் தப்பா?
இறைவனுக்கு தன்னையே ஒப்புக் கொடுத்த தேவதாஸ் ஆண் பக்தன். அதையே ஓர் பெண் தன்னை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் தேவதாசி. ஆனால் ஒழுக்கக் கேடானவளா?
எனவே இறைவனுக்கு தன்னையே ஒப்புக் கொடுத்த ஆண்டாள் வழிபடத்தக்க இடத்தில் தானே இருந்திருக்க வேண்டும். அந்த பொருளில் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்ட தேவதாசி மரபினர் என்று சொன்னதை மேற்கோள் காட்டியதையே பொருத்துக் கொள்ள முடியாமல் வைரமுத்துவின் மீது அவதூறு பரப்புகிறீர்களே அதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
பின்னால் அந்த சிஸ்டம் பாழ்பட்டுப் போனது என்றால் அதற்கும் எல்லாரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
குன்றின் மீது விழும் எச்சங்களால் குன்று அழுக்குப்பட்டுப் போவதில்லை.
அதைப்போல் தான் எத்தனை அவதூறுகளை நீங்கள் திட்டமிட்டுப் பரப்பினாலும் குன்றைப்போல் நிமிர்ந்து நிற்கிறார் வைரமுத்து.
காவல் துறை புகார் கூட செய்யாமல் பார்ப்பன ஊடக பலம் இருப்பதால் சின்மயி உள் நோக்கத்துடன் புகார் பரப்புகிறார் என்றுதான் எண்ணினோம். ஏன் இப்படியெல்லாம் பிதற்றுகிறார் என்று காரணம் தெரியாமல் இருந்தது. இப்போதுதான் புரிகிறது அவரின் தாயாரின் கூற்றில் இருந்து.
ஓ அவளா நீ?