தமிழில் குடமுழுக்கு செய்ய முடியாது. பாரம்பரியப்படி சமச்கிரிதத்தில்தான் செய்வோம் என்று அடம் பிடித்தவர்கள் இன்று தமிழிலும் சமஸ்கிரிததிலும் செய்வோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.
உயர்நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் அரசு தவறான தகவல்களை சொல்லி இருக்கிறது.
” பூஜை நேரங்களில் திருமுறை ஓதுவதற்காக ஓதுவார்கள் நிரந்தரமாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். எல்லா பூஜையின் போதும் திருமுறை ஓதப்படுகிறது.” என்று தேவஸ்தான உதவி கமிஷனர் கூறுகிறார். இது உண்மையா? பெரிய கோயிலுக்கு போகும் எத்தனை பேர் ஓதுவார்கள் பாடுவதை கேட்டிருக்கிறார்கள்.? ஒருவேளை கணக்கில் எழுதி வைத்திருக்கிரார்களோ என்னவோ?
நிரந்தர ஓதுவார்கள் யார் யார் ? அவர்கள் எப்போது பணி அமர்த்தப்பட்டார்கள்? அவர்களது சம்பளம் என்ன? எல்லா சன்னிதிகளிலும் ஓதுவார்கள் பணி அமர்த்தப் பட்டிருக்கிறார்களா ?
யாகசாலையில் திருமுறைகள் படிக்கப்படும் என்றும் அதற்கு 13 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறும் உதவி கமிஷனர் ராஜராஜன் நியமித்த 48 ஓதுவார்கள் எங்கே என்று கூறுவாரா?
கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். அதையும் பூணூல் போட்ட அர்ச்சகரோடு சேர்ந்து பூணூல் போடாத அர்ச்சகரும் தமிழ் மறை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த நாளே இறைவனுக்கு உகந்த நாள்.
தமிழில் அர்ச்சனை செய் என்று கேட்காமலே செய்ய வேண்டும். வேண்டும் என்பவர்கள் சமஸ்க்ரிதத்தில் வேண்டும் என்று கேட்கட்டும்.
இங்கு சமஸ்கிரிததிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று வேண்டுமானால் விளம்பரம் வைக்கலாம்.
குடமுழுக்கை தமிழில் நடத்தினால் போதாது. நாள் தோறும் அர்ச்சனை தமிழில் நடக்க வேண்டும்.
தஞ்சையில் எழுந்திருக்கும் இந்த புரட்சி நாடெங்கும் வெடிக்கட்டும்.