மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு பகுதி 62 கிராமங்களை உள்ளடக்கியது.
அதன் காவல் தெய்வங்களாக ஏழை காத்த அம்மன், வல்லடிகாரர் கோவில் போன்றவை உள்ளன.
அவற்றை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சி செய்தது.
இந்த முயற்சியை முறியடிக்க மக்கள் ஒன்றுசேர்ந்து போராட தீர்மானித்தனர்.
கடைகளை அடைத்து விட்டு ஊர்வலமாக சென்று மதுரை செல்ல தீர்மானித்தனர்.
பிரச்சனையை பெரிதாக்க விரும்பாத உதவி ஆணையர் எம்எல்ஏ மற்றும் காவல் துறை அதிகாரிகள் அங்கே வந்து கையகப் படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் முன்பு போலவே கிராம மக்களே நிர்வகிக்கலாம் எனவும் தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
கேள்வி; ஏன் அறநிலையத்துறை முன்பே மக்கள் கருத்தறிந்து நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது?
யாரோ சொல்லி மக்களை கலந்து கொள்ளாமல் ஏன் இந்த முயற்சியில் இறங்க வேண்டும்.?
சமீபத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவில் நிர்வாகத்தையும் அற நிலையத் துறை கைப்பற்ற முயற்சி செய்தது.
கிராமக் கோவில்களை பொறுத்த வரை பாரம்பரியமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கங்களை மாற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது. அப்படி ஏதேனும் புகார் வந்தால் மக்களை விசாரணை செய்து அதன் பின் முடிவெடுக்க வேண்டுமே தவிர அதிகாரிகள் தாங்களே முடிவு எடுப்பது சரியல்ல.