கோயில் என்று சொல்லிவிட்டு எதைச் சொன்னாலும் விமர்சிக்கிற ஒரு கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. அதில் சங்கிகளும் இருக்கிறார்கள். சங்கி அடிமைகளும் இருக்கிறார்கள்.
ஜோதிகா தஞ்சாவூர் போயிருக்கிறார். கோயிலுக்கும் போய் வந்தபின் ஒரு மருத்துவமனைக்கும் சென்றிக்கிறார். அங்கே அவர் பல குறைபாடுகளை பார்த்தபின் கோவிலுக்கு செய்வதைவிட மருத்துவமனைகளில் கவனம் செலுத்துவது நல்லது அவசியம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில் என்ன பெரிய தவறை கண்டார்கள்? கோவிலை எங்கே அவர் விமர்சித்தார்? அவர் இந்துவாக வாழ்பவர். கோவிலுக்கு போய் வந்துதான் மருத்துவ மனைகளை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
எதற்கு எடுத்தாலும் மசூதி சர்ச் பற்றி பேசுவீர்களா என்று கேட்பதை நிறுத்துங்கள். இந்து பிரச்னையை மட்டும்தான் இந்து பேசுவான். மற்ற மத பிரச்னைகளை மற்றவர்கள் பேசிக்கொள்வார்கள்.
அதிலும் திரௌபதி இயக்குனர் பெரியகோவில் பற்றி பேசாதீர்கள் என்று மிரட்டுகிறார். புரிந்துதான் பேசினாரா யாரையாவது தாங்கி பிடிக்க பேசினாரா என்று தெரியவில்லை.
சபாஷ் ஜோதிகா ?!
This website uses cookies.