அப்படி ஒரு மவுலானா பேசிய காட்சி வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது.
எல்லா முஸ்லிம் நாடுகளும் கொரானாவை எதிர்த்து மருத்துவ ரீதியில் போராடி வருகின்றன.
பேசுபவர் பாலஸ்தீனதை சேர்ந்தவர் போல் தெரிகிறது. சீனா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகள் , அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் மட்டுமல்ல ஷியா பிரிவை சேர்ந்த ஈரானையும் அவர் சேர்த்துக் கொள்கிறார். அங்கெல்லாம் கொரானாவை ஓர் ஆயுதமாக அல்லா அனுப்பி இருக்கிறான் என்று அவர் பேசி இருக்கிறார். இஸ்ரெலையும் அவர் விட்டு வைக்க வில்லை.
சிறிது நேரத்தில் காஜாவிலும் கொரானா தொற்றால் ஏழு பேர் பாதிக்கபட்டதை ஒருவர் விமர்சிக்கிறார்.
இதுவரை நோய்த்தோற்றால் பாதிக்கப்படாத முஸ்லிம் நாடுகள் என்று ஏதும் இல்லை.
அடுத்து எதிரிகள் மீது நோயை இறைவன் அனுப்புவான் என்று கூறுவது அந்த இறைவனையே அவமதிப்பது ஆகாதா ?
பாகிஸ்தானில் சில மசூதிகளில் தொழுகையை ரத்து செய்ய வில்லை ஆனால் அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
மலய்சியாவில் சுமார் 16000 பேர் கூடிய கூட்டத்தை இதே தபிலிகி ஜமாஅத் கூட்டி இருக்கிறது. அதனால் 600 பேர் பாசிடிவ் ஆக இருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லீம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல விதிக்கப் பட்டுள்ள ஹஜ் யாத்திரையை இந்த ஆண்டு ஒத்தி வையுங்கள் என்று சவுதி அரேபியா அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அல்லாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அளவு அந்த மவுலானாவின் மனம் வெறுப்பால் நிரம்பிக் கிடக்கிறது. அவர் உண்மையில் இஸ்ரேல் உடன் ஆனா போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத வேண்டி இருக்கிறது.
இறைவன் அந்த மவுலானாவிற்கு நல்லறிவையும் சாந்தியையும் அருள்வானாக !